நேற்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரயான் விண்கலம் பற்றி மிக எளிமையான ஒரு பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் ஒன்றைக் கொடுத்தேன். அதன்பின் கேள்வி-பதில்கள் இருந்தன. இப்போதைக்கு இந்த காட்சிவிளக்கத்தை மட்டும் பதிவேற்றுகிறேன். ஆடியோ கிடைத்தால், அதை இத்துடன் இணைக்கிறேன்.
சுமார் 30-35 பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. மக்களுக்கு மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நிறையக் கேள்விகளைக் கேட்டனர்.
Nice one...I heard that US helped in this project. Is it true? Is this a indigenous technology? Or are we borrowed some technologies from developed countries?
ReplyDelete//நேற்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரயான் விண்கலம் பற்றி மிக எளிமையான ஒரு பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் ஒன்றைக் கொடுத்தேன்.//
ReplyDeleteபத்ரி! இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் வலைப்பதிவில் முன்னறிவ்விப்பு வெளியிடலாம்! வீட்டில் பைத்தியம் பிடித்து பாயைப் பிராண்டுவதை விட உபயோகமாய் நாலு விஷயம் தெரிந்து கொள்வோம்!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
TOI has reported that "Chinese media has some doubts regarding the orbital distance and other things about Chandraayan".
ReplyDeleteராகேஷ்: நீங்கள் இந்தச் சுட்டியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?
ReplyDeletehttp://timesofindia.indiatimes.com/World/Chinese_media_questions_Chandrayaan/articleshow/3665791.cms
இந்தியா முதலில் செலுத்தும்போது, 22,866 கி.மீ. தொலைவு நிலையைத்தான் அடைந்தது. அந்தச் சுற்றில், ஒரு முறை சுற்றிவர 6 மணி நேரம்தான் ஆகும்.
கடைசி பூமிச் சுற்று மாற்றம் இன்றோ நாளையோ நடைபெறும். அதன்பின்னரே மிகவும் கடுமையான, lunar insertion maneuver நடைபெறும். அதில் வெற்றிகண்டால்தான், மொத்த மிஷனும் வெற்றிகண்டதற்கு ஒப்பாகும்.
இது நடக்க இன்னமும் 4-5 நாள்கள் ஆகும். அதன் பின்னரும்கூட, சந்திரனைச் சுற்றும் பாதையில் பல மாற்றங்களைச் செய்து, 100 கிமீ பாதைக்கு வரவேண்டும்.
இதற்கிடையில் இதை வெற்றி என்றோ தோல்வி என்றோ சொல்வது தவறாகும். எனவே முழு வெற்றிக்கு நவம்பர் 14-15 வரை பொறுத்திருக்கவேண்டும்.
Thanks Badri.
ReplyDeleteஎளிமையாகவும் விவரமாகவும் இருக்கு.
ReplyDelete