பா.ராகவனின் முன்னுரை
ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்
3 hours ago
இந்திரா பார்த்தசாரதியின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு, இரு பாகங்களாக வெளியானது. ஒவ்வொன்றும் விலை ரூ. 300/- வெளியானவுடன் டாக் செண்டரில் வைத்த நிகழ்ச்சியில், இரு தொகுதிகளும் சேர்ந்து ரூ. 150/-க்கு அதிரடி விலையில் வழங்கப்பட்டது! கிட்டத்தட்ட 300 பிரதிகள் (இரு தொகுதிகளும் சேர்ந்து) அன்று விற்றது என்று நினைக்கிறேன். பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் 50 பிரதிகள் வாங்கிச் சென்றார். முழுத் தொகுதிகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஒட்டுமொத்தமாக ஓர் எழுத்தாளரின் முழுப் பங்களிப்பை, அவரது எழுத்தில் உள்ள மாற்றத்தைக் காண முழுத்தொகுதி அவசியம். விலை எப்போதுமே சிக்கலானது. (கடந்த ஓராண்டில் காகித விலை 20%-க்கும் மேல் ஏறியுள்ளது என்பது இந்தத் தொழிலில் இருப்போருக்குத் தெரிந்த ஒன்று.) இந்தக் காரணத்தால்தான் இரு தொகுதிகளாக அச்சிட்டோம்.
ஜெயமோகனின் மூன்று புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவருகிறோம். இரண்டு மீள்பதிப்புகள். ஏழாம் உலகம் (நான் கடவுள் சினிமாவுக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்) தமிழினி வெளியீடாக வந்து அச்சில் இல்லாமல் போனது. அதை ஆண்டின் இடையில் கொண்டுவந்திருந்தோம். விசும்பு என்ற அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு எனி இந்தியன் பதிப்பக வெளியிடாக வந்திருந்தது. அதுவும் இப்போது கிழக்கு மீள்பதிப்பாக வெளியாகிறது. இறுதியாக உலோகம், ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியாகி, பரபரப்புடன் பேசப்பட்டது. அதனை பல்ப் ஃபிக்ஷன் வெளியீடுபோல, கிரவுன் 1/8 அளவில், அட்டையில் தங்க முலாம் எல்லாம் பூசிக் கொண்டுவருகிறோம். விறுவிறுவெனச் செல்லும் சாகசக் கதை.
வெகு நாள்களாகக் கையில் இருந்த மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து என்ற புதினம் இந்த ஆண்டின் இடையில் வெளியானது. தமிழாக்கியவர், மலையாள மனோரமாவில் வேலை செய்யும் ராமன்.
கதையாக அன்றி, அனுபவக் கட்டுரைகளாக, ஆனால் சிறுகதைக்கு உரிய சுவாரசியத்தை இழக்காமல் இருப்பது அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். அவரது இணையத்தளம், பல பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து நாங்கள் கொண்டுவரும் புத்தகம் அமெரிக்க உளவாளி.
சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்த சில புத்தகங்கள் மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்தன. முதலாவது ராமன் ராஜா மொழிபெயர்த்த, பல்லவி அய்யரின் சீனா பற்றிய புத்தகம்: சீனா: விலகும் திரை. இதைப் படித்த அனைவரும், ஏதோ தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தைப் படித்ததுபோலவே இருந்தது என்றார்கள். இரண்டாவது புத்தகம்: இலங்கை இறுதி யுத்தம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, இதில் பெருமளவு வெற்றி கண்டது என்றாலும் இன்னும் சில இடங்களில் கொஞ்சம் தட்டிச் சரி செய்யவேண்டிய வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு வெளியாகும் பாகம் 2, இந்தப் பிரச்னைகளைக் கடந்துவிட்டது என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டு வெளியான சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகமும் திருப்தி தரக்கூடியதே.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூன்று புத்தகங்கள் இந்த வரிசையில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒன்று அவர் அதிபராவதற்குப் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்ட Dreams From My Father. இதற்கான மொழிமாற்ற உரிமை அவரிடமே இருந்தது. அவரது ஏஜெண்ட் மூலம் இதனைப் பெற்றோம். அடுத்த இரண்டு புத்தகங்களின் ஒன்று அவர் தன்னை அதிபர் பதவிக்கான பிரைமரி வேட்பாளராக முன்வைத்தபோது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Audacity of Hope). மற்றொன்று அவரது பிரெசிடென்ஷியல் கேம்பெய்ன்போது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Change We can Believe in). இந்த இரண்டு புத்தகங்களும் Random House வெளியீடு. கடைசி இரண்டு புத்தகங்களையும் தமிழாக்கி வெளியிடுவதன் பயன், அவற்றை யார் வாங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இருந்தும் செய்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தோம். அவை மிகவும் கடினமான மொழிபெயர்ப்புகள்கூட. அக்களூர் ரவி, நாகூர் ரூமி, அருண் மகாதேவன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் அவை முறையே என் கதை, நம்மால் முடியும், மாற்றம் என்றொரு மந்திரம் என்று வெளியாகியுள்ளன.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த மூத்தவரான நாராயண மூர்த்தி, பல பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களிலும் இன்னபிற இடங்களிலும் அளித்த சொற்பொழிவுகளின் தொகுப்பை பெங்குவின் A Better India, A Better World என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. அதன் தமிழாக்கத்தை அக்களூர் ரவி செய்ய, அதனை புதிய கனவுகள், புதிய இந்தியா என்ற பெயரில் வெளியிடுகிறோம். உங்களில் பலர் இந்தப் புத்தகத்தை சீரியலாக புதிய தலைமுறை இதழில் படித்து வரக்கூடும். அந்தப் புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
யோசித்துப் பார்த்தால் இரு உலகப்போர்களும் நடந்திருக்கவே கூடாது என்றுதான் தோன்றும். இன்றெல்லாம் எந்த நாடும் சில்லறை விஷயத்துக்கெல்லாம் முணுக் என்று கோபித்துக்கொள்வதில்லை. போர் என்றால் எக்கச்சக்க உயிரிழப்பு என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது. முடியாட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளும் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் ஓர் ஆசாமி முடிவெடுத்தால் உடனே போர் என்பதெல்லாம் சாத்தியமல்ல.
சென்ற புத்தகக் கண்காட்சியில்தான் முதன்முதலாக சுஜாதாவின் சில புத்தகங்களைப் பதிப்பித்து விற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஐந்து புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தோம். ஆஸ்டின் இல்லம், தீண்டும் இன்பம், மீண்டும் ஜீனோ, நில்லுங்கள் ராஜாவே, நிறமற்ற வானவில்.
பியர்சனிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட தொடர் புத்தகங்களைத்தான் முதலில் மொழிமாற்றத் தொடங்கினோம். The Rules of Work (வேலை விதிகள்), The Rules of Management (நிர்வாக விதிகள்), The Rules of Wealth (செல்வம் சேர்க்கும் விதிகள்), The Rules of Life (வாழ்க்கை விதிகள்) என்ற நான்கு புத்தகங்கள் அவை. ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இவை பார்க்க சுவாரசியமான சுய முன்னேற்ற வகைப் புத்தகங்கள். சுருக்கமான சூத்திரங்கள், ஒவ்வொன்றும் இரண்டு பக்கம் வரக்கூடிய அளவில் விவரித்து எழுதப்பட்டிருக்கும். ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் பல இருக்கும். ஆசிரியர் வென்ற இடங்கள் மட்டுமல்ல, தோற்ற இடங்களும் இருக்கும். உங்களுக்கு அருகில் நெருங்கி வரக்கூடிய புத்தகங்கள் இவை. இதை எழுதியவர் தன் சொந்தப் பெயரில் எழுதவில்லை. கணவன், மனைவி ஜோடி சேர்ந்து எழுதிய புத்தகங்கள் இவை. பின்னர் கணவர் இறந்தபின்னும் மனைவியின் எழுத்தில் ஆனால் ரிச்சர்ட் டெம்ப்ளர் என்ற பெயரில் மேலும் நான்கு புத்தகங்கள் வந்துள்ளன: The Rules of Parenting (பெற்றோருக்கான விதிகள்), The Rules of Love (காதல் விதிகள்), How to Spend Less without Being Miserable (செலவைக் குறைப்பது எப்படி), How to Get Things Done without Trying Too Hard (நினைப்பதை செய்துமுடிப்பது எப்படி). இவற்றையும் தமிழில் கொண்டுவந்துள்ளோம்.
இந்தப் புத்தகங்கள் எல்லாமே co-publishing என்ற முறையில் கொண்டுவரப்படுபவை. பியர்சன், கிழக்கு என இரு பிராண்ட்களும் இணைந்து பதிப்பிக்கும் புத்தகங்கள் இவை. இந்தியாவின் எந்த மொழியுடன் ஒப்பிட்டாலும், தமிழில் மட்டும்தான் இந்த அளவுக்கு பியர்சனால் புத்தகங்களைக் கொண்டுவர முடிந்துள்ளது. இதே உறவின் அடிப்படையில் மேலும் சில புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அதில் மிக முக்கியமானது டோனி பூஸானின் புத்தகங்கள். மன வரைபடம் (Mindmap) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த பூஸான், ஒவ்வொரு மனிதனும் தன் மூளையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்கிறார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையனாக இருக்கட்டும், வேலையில் ஈடுபடும் பெரியவராக இருக்கட்டும், ஞாபக சக்தியைக் கட்டவிழ்த்துவிட, பலதரப்பட்ட விஷயங்களுக்கு இடையேயான தொடர்புகளை வேகமாகப் புரிந்துகொண்டு நினைவகத்தில் சேமித்துவைக்க மன வரைபடம் என்ற உத்தியைக் கையாளலாம் என்கிறார் இவர். அதன் அடிப்படையில் அவர் எழுதியுள்ள இரு புத்தகங்களைத் தமிழாக்கம் செய்துள்ளோம்: Use Your Head (மூளையை முழுதாகப் பயன்படுத்து), The Mind Map Book (மன வரைபடம்). இவை இரண்டுமே பள்ளிக்கூட ஆசிரியர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்பேன் நான்.Responding to the Ambassador's query about Lashkar-e-Taiba's activities in the region and immediate threat to India, Gandhi said there was evidence of some support for the group among certain elements in India's indigenous Muslim community. However, Gandhi warned, the bigger threat may be the growth of radicalized Hindu groups, which create religious tensions and political confrontations with the Muslim community.
புத்தகங்களுக்கு அப்படி எல்லாம் ஆவதில்லை. ஏதோ 100, 200 பிரதிகள் சடசடவென விற்றாலேயே பதிப்பாளர்கள் அகம் குளிர்ந்துவிடுவார்கள். புத்தகத்துக்கு விளம்பரம் தரும் அளவுக்கு எந்தப் பதிப்பகமும் காசு பார்ப்பதில்லை. விகடன் பிரசுரம் போன்றவர்கள் தங்களிடம் உள்ள சொந்த மீடியாவில் நன்றாக விளம்பரம் செய்யமுடிகிறது. கிழக்கு உட்பட, வேறு யாருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பு கிடையாது. புத்தகங்களுக்கு தமிழில் ரிவ்யூவே ஒழுங்காக வருவதில்லை. இதில் ஒரு புதிய புத்தகம் வந்துள்ளது என்பது எப்படி மக்களுக்குத் தெரியவரும்? அப்புறம் எப்படி ஒரு புத்தகம் சூப்பர் செல்லர் ஆவது?
ரஜினியின் பன்ச் தந்திரம், Rajini's Punch Tantra என்ற இந்தப் புத்தகம் ரிலீஸ் ஆனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். 12 டிசம்பர் 2010, ரஜினியின் பிறந்தநாள் அன்று. முதலில் இந்தப் புத்தகத்துக்கு என்று ரிலீஸ் நிகழ்ச்சி எதுவும் வைப்பதாக இல்லை. கடைசி நேரத்தில்தான் முடிவானது. ஒடிஸி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி. கே.பாலசந்தரும் ராதிகா சரத்குமாரும் வந்திருந்தனர். ரஜினியின் மகள் வந்திருந்தார். நானும் சத்யாவும் ஊரிலேயே இல்லை. வேறு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஒப்புக்கொண்டிருந்ததால் சென்னையில் அன்று இருக்கமுடியவில்லை.இந்திய-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தங்கள்: $1.1 பில்லியன்ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.“பாகிஸ்தான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் எதிராக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.”
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள்: $10 பில்லியன்ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.“பயங்கரவாத வலைப்பின்னல்கள், முக்கியமாக லஷ்கர்-ஈ-தோய்பா, தோற்கடிக்கப்படவேண்டும். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் தண்டிக்கவேண்டும்.”
இந்திய-பிரான்ஸ் வர்த்தக ஒப்பந்தங்கள்: யூரோ 7 பில்லியன்ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.“அண்டை நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது அனுமதிக்கமுடியாதது. பயங்கரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தான் தன் முயற்சிகளை அதிகப்படுத்தவேண்டும்.”
இந்திய-சீன வர்த்தக ஒப்பந்தங்கள்: $16 பில்லியன்ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பேச்சு ஏதுமில்லைபாகிஸ்தான் பற்றி: பேச்சு ஏதுமில்லை. இரு நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன என்று கூட்டு அறிக்கை மட்டுமே.
இந்திய-ரஷ்ய வர்த்தக ஒப்பந்தங்கள்: $30 பில்லியன்ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும்.“பயங்கரவாதத்துக்கு உதவும், தூண்டிவிடும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரும் நாடுகள், பயங்கரவாதச் செயல்களைப் புரிவோர் அளவுக்கே குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டோருக்கு பாகிஸ்தான் தண்டனை அளிக்கவேண்டும்.”


அப்போது பேசும்போது தான் மீண்டும் தில்லி வருவது பற்றிச் சொன்னார். உடனே அரங்கிலிருந்து ‘பத்மஸ்ரீ விருது பெறவா?’ என்று கேட்டார்கள் என்று ஞாபகம். ‘ஏன்? பாரத ரத்னா விருது வாங்கக்கூடாதோ?’ என்று நாஞ்சில் எதிர்க்கேள்வி கேட்டதாக ஞாபகம். (கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருந்தது. ஞாபகமறதி அதிகமாகிவிட்டது!) அப்போது சாகித்ய அகாதெமி விருதுபற்றி நாஞ்சில் நாடனுக்கு தகவல் தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.
நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை இந்தச் சுட்டியில் காணலாம். அதிலிருந்து எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்துவந்துள்ளோம் என்று தெரியும்.
ஒருமாதிரியாக இன்றோடு முடிந்தது. ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் ஆரம்பித்தது கிட்டத்தட்ட 30 மாதங்களுக்கு முன்பு. இது முடிவதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று அப்போது நினைத்தும் பார்த்திருக்கவில்லை. முதலில் புத்தகத்தை இரண்டு பாகங்களாக உடைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தோம்.
இந்தியாவின் கதை என்ன அற்புதமான கதை! இந்தியா என்றொரு தேசம் சாத்தியமே இல்லை என்று அனைவரும் ஆரூடம் கூறியபின், எப்படி அத்தனை எதிர்மறைக் கருத்துகளையும் தாண்டி இந்தியா என்ற தேசம் சாத்தியமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது குஹாவின் எழுத்து.