10 நாள்களுக்குமுன் Zoho அலுவலகம் சென்றதைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது அவர்களது திட்டமான Zoho University பற்றிக் கேள்விப்பட்டேன்.
பொதுவாகவே மென்பொருள் நிறுவனங்களுக்கு உள்ள பிரச்னை இது. இந்தியாவில் திரும்பிய திசை எல்லாம் மென்பொருள் நிறுவனங்கள். இதில் ஃபைவ் ஸ்டார் நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல், காக்னசண்ட், ஆக்சென்ச்சர் ஆகியவை தொடங்கி அதிகம் சத்தம் போடாமல் நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கேப்டிவ் பேக் ஆஃபீஸ் நிறுவனங்கள் வரை பலவும் உண்டு. இவை அனைத்துக்கும் பிராண்ட் பெயர் உண்டு. எனவே பொதுவாக வேலை தேடும் இளைஞர்கள் இந்த நிறுவனங்களுக்கு வரிசையில் சென்று நிற்பார்கள்.
இன்ஃபோசிஸின் மோகன்தாஸ் பாய் சொல்வதைப் பாருங்கள்: எங்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. அதில் 35,000 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறோம். அதில் பாதி பேர் சில மாதங்களிலேயே தாங்களாகவே விலகிவிடுகிறார்கள் (அதிகச் சம்பளத்துக்கு மற்றொரு கம்பெனி) அல்லது எங்களால் வெளியேற்றப்படுகிறார்கள். ஆக 18,000 பேர் மட்டுமே நெடுநாள்கள் வேலை செய்கிறார்கள்.
இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் நல்ல பொறியியல் கல்லூரிகளுக்குப் போய் திறமையான ஆட்களை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இதுபோன்ற நிலையில் Zoho-வின் முயற்சி சுவாரசியமானது. அவர்களும் கிடைக்கும் எல்லா இடத்திலும் ஆட்களை வேலைக்குச் சேர்த்தாலும், ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் ‘சராசரிக்கும் சற்றே அதிகமான திறன் கொண்ட’ மென்பொருளாளர் ஆக்கலாம் என்பதுதான் Zoho-வின் நம்பிக்கை. ஆனால் நான்கு ஆண்டுகள் நம்மூர் பொறியியல் கல்லூரிகளில் என்ன நடக்கிறது? உருப்படியாக ஒன்றும் இல்லை. மாணவர்கள் தத்தம் துறைகளில் ஒன்றையும் கற்றுக்கொள்வதில்லை. Soft Skills என்று ஒன்றும் கிடையாது. ஆனால் லட்சக்கணக்கில் காசு கொடுத்துப் படித்த ஒரே காரணத்தால் எக்கச்சக்கமாக சம்பளம் வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்கிறார்கள்.
Zoho, நேராக 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறது. ஆனா இந்தக் காலத்தில் யார்தான் 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தப் பார்க்கிறார்கள்? நாட்டில் இருக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அல்லவா படையெடுக்கிறார்கள்?
ஏழைக் குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட பின்னணியில் வந்தவர்கள் மட்டுமே விதிவிலக்கு. அவர்களால் மேற்கொண்டு படிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களை சோதித்து, அவர்களைப் பயிற்சிக்கு எடுக்கிறது Zoho University. அங்கே அவர்களுக்கு உதவித் தொகை கொடுக்கப்பட்டு, அடிப்படைக் கணிதம், ஆங்கிலம், கணினி அல்காரிதம் ஆகியவற்றில் பயிற்சி தரப்படுகிறது. அத்தனையும் தமிழில்! இதனால் மாணவர்கள் பயப்படவேண்டியதில்லை.
வெறும் 18 மாதங்களில் இந்த மாணவர்களை மென்பொருள் எழுதும் திறன் கொண்டவர்களாக ஆக்கிவிடுகிறோம் என்கிறார் டீன் ராஜேந்திரன். ஊக்கம் கொண்ட பயிற்சியாளர்களை நான் சந்தித்துப் பேசினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கல்லூரிப் படிப்பு என்பது முக்கியமானது. அங்கே கிடைக்கும் அனுபவம் முக்கியமானது. ஆனால் இன்றைய கல்லூரிகள் இருக்கும் நிலையில், மிகச் சில கேம்பஸ்கள் தவிர்த்து மீதி இடங்களில் கல்வி என்று எதுவும் கற்றுத்தரப்படுவதே இல்லை.
ஆனால் மாறாக Zoho University போன்ற இடங்களில் நிச்சயமாக நல்ல தரமான கல்வி கற்றுத்தரப்படுகிறது என்பது உறுதி. ஏனெனில் அவர்கள் கைக்காசைச் செல்வழித்து, உதவித்தொகை கொடுத்து கல்வி கற்றுத்தருகிறார்கள். அந்தக் கல்வியைப் பெற்ற மாணவர்களை அவர்கள் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள்களை உருவாக்குவதில் ஈடுபடுத்தப்போகிறார்கள். எனவே ஏனோதானோவென்று கற்றுத்தந்தால் பிரயோஜனம் இல்லை.
Infosys கூட மைசூரில் மாபெரும் பயிற்சி மையம் அமைத்துள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். இன்ஃபோசிஸ் பொறியியல் படித்தவர்களை மட்டுமே பெரும்பாலும் பயிற்சிக்குச் சேர்க்கிறது. குறைந்தது பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும். காக்னசண்ட் போன்ற இடங்களில் பி.எஸ்சி இயல்பியல், கணிதம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் யாருமே 12-ம் வகுப்பு போதும் என்று யோசித்ததில்லை. அதுவும் Zoho தமிழகத்தின் கிராமப்புறங்கள் வரை சென்று பின்தங்கிய வகுப்பு மாணவர்களைத் தேடிப் பிடிக்கிறார்கள்.
12-ம் வகுப்பு முடித்துள்ளவரா? மேற்கொண்டு படிக்க உங்கள் சூழ்நிலை உதவவில்லையா? இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: univ@zohocorp.com
கவளம்
8 hours ago
நான் இதை, என்னுடைய மின்னஞ்சல் குழுமத்துடன்
ReplyDeleteபகிர்ந்துள்ளேன்,
மிக்க நன்றி பத்ரி, இதை வெளிக்கொணர்ந்தது,
சஹ்ரிதயன்
மிக மிக உபயோகமான பதிவு
ReplyDeleteஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல மறந்துவிட்டேன். Zoho University-ல் கணிதம் சொல்லித்தருபவர் ஐஐடி மெட்ராஸில் எலெக்ட்ரானிக்ஸ் படித்து, பின் அமெரிக்காவில் கணிதத்தில் பிஎச்.டி செய்துவிட்டு, அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் சில ஆண்டுகள் கணிதம் கற்றுத் தந்துவிட்டு இந்தியா வந்துள்ளவர்.
ReplyDeleteமாணவர்கள் அனைவருக்கும் தனித்தனி கியூபிகிள், ஆளுக்கு ஒரு கம்ப்யூட்டர்!
Badri: Thanks for both the blog posts about Zoho! It was a pleasure meeting you & Satya.
ReplyDeleteNASSCOM recognized our Zoho University effort by giving us a Process Innovation Award recently - http://bit.ly/aCx2Pt
மிக்க நன்றி! ஒரு சிறு திருத்தம்.
ReplyDelete"அத்தனையும் தமிழில்!" என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பாடங்களை கற்பிக்கிறோம்.
ஆங்கிலமும் பேச, எழுத சொல்லித் தருகிறோம்.
D.Rajendran From Zoho University.
உபயோகமான செய்தி!
ReplyDeleteபயனுள்ள பதிவு. நன்றி.
ReplyDeleteஇந்த தகவலை முகப்புத்தகத்தில் இணைத்த செல்வா அவர்களுக்கும் நன்றி.
ராஜேந்திரன்,
ReplyDeleteநன்றி,
1. எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்,
2. மேற்படிப்பிற்கான அனுமதி மற்றும் வழி உள்ளதா?
3. கோர்ஸ் பாடத்திட்டம் பிடிஃப் பகிர முடியுமா?
சஹ்ரிதயன்
மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சி...
ReplyDeleteபல்கலைகழகங்களும், கல்வியாளர்களும் 'Zoho'வைப் பார்த்து திருந்தி, இன்றைய தொழிற் சூழலுக்கேற்ற கல்விமுறையை உருவாக்குவது பற்றி சிந்திதால் நன்றாக இருக்கும்
பகிர்ந்ததற்கு நன்றி பத்ரி.
சஹ்ரிதயன்: மாணவர்கள் கட்டணம் ஏதும் செலுத்துவதில்லை! மாறாக Zoho-தான் மாணவர்களுக்கு மாதா மாதம் உதவித்தொகை கொடுக்கிறார்கள்! மேலே படிப்பது, கோர்ஸ் மெடீரியல் போன்றவை பற்றி Zoho University-யைச் சேர்ந்தவர்களே பதில் சொல்லக்கூடும். எனக்கு அவ்வளவாகத் தெரியாது.
ReplyDeleteபல முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்கள், "இங்குள்ள வேலையை செய்ய +2 படிப்பு போதும். பொறியியல் படித்திருக்கத் தேவை இல்லை" என்பார்கள்.. அதை உண்மையாக்குவது போல் இருக்கிறது சோகோவின் அணுகுமுறை. அவர்களின் துணிவுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஅவர்கள் செய்வது ஒருவகையில் நல்ல முயற்சிதான். ஆனால் இது முட்டைக்காக வளர்க்கப்படும் லகான் கோழிகள் போல் இருக்கிறதே?
இவர்களின் வாழ்க்கையின் பாதைகள் சுருக்கப்பட்டுவிடுகிறது. (விரிந்த பாதையில் என்னத்தைக் கண்டார்கள் , வேலையே இல்லை என்று சொன்னால் நல்ல வாதமாக இருக்குமே தவிர நல்ல பாதையைக் காட்டாது)
கல்வி என்பது வேலையை நோக்கிய ஒன்று அல்ல. குறைந்த பட்சம் அறிவியல் கணிதம், வரலாறு, அரசியல், பொது வாழ்க்கை என்று குறைந்தது 4 வருடங்கள் ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டும்.
அதற்குப்பின் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த அந்த வேலைக்கான 2 வருட பட்டயப்படிப்பு மேற்கொள்ளலாம். இந்த இடத்தில் Zoho பொருந்தினால் நல்லது
வேலை நிச்சயம் தேவை ஆனால் கல்வி என்பது கணனி அறிவியல் மட்டும் அல்லவே?
அது போல இவர்கள் குறைந்தபட்சம் அரசு அங்கீகாரம் பெற்ற ஒன்றாக இருந்தால் நல்லது.
**
20 பேர் கொண்ட ஒரு நல்ல கல்லூரியை கிராமத்தில் தொடங்க அரசு அனுமத்திதால் (அரசு அங்கீகாரம் என்பது முக்கியம்) 5 வருடத்தில் நல்ல குடிமகன்களையும் சமூக சிந்தனை உள்ளவர்களையும் அதே சமயம் அறிவியல்,வரலாறு தெரிந்தவர்களாகவும் கொண்டுவர முடியும். 10 வருடங்கள் கழித்து இதை சோதித்துப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். பணம் மற்றும் நேரப் பிரச்சனை. :-(((
**
I can't disagree with கல்வெட்டு. I can't also help but be sadly reminded of the bonded labour system that many textile manufacturing companies practice in Tirupur area. As you may know, they recruit very young girls from extremely poor families in backward districts with the promise of a lump sum salary at the end of 3-5 years and a few sovereigns of gold that purportedly go towards the marriage expenses for the girl. I am told the deal is implemented fair and square, with the girls allowed to discontinue mid-way if they wish to and are treated reasonably well with safe accommodation and three meals a day. The argument for it is that for the girls there is nothing better anyway.
ReplyDeleteHi badri...
ReplyDeleteநான் தற்செயலாக உங்கள் blog'அய் பார்க்க நேர்ந்தது... மிகவும் மகிழ்ச்சி.......
நானும் ZOHO' வில் 2.3 ஆண்டுகள் வேலை செய்து இருக்கிறேன் என்பதை நினைத்தால் இன்னும் அதிகமாக....
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...
- அருண்குமார்...
I am B.Rajendran, a faculty at Zoho University(ZU) who has seen the students in close quarters.
ReplyDeleteZU is an experiment in progress in the field of education. Before discussing the methodology of the experiment, the people on whom this experiment is conducted must be considered. Are they scape goats?
The students are trained not only in web technology, but in critical areas in Mathematics to discipline their mind.
English newspapers are regularly studied for them so that they are trained to observe the developments in the world in a neutral way without being biased.
They watch English movies and develop the habit of critical thinking on them.
This increases their general awareness, their English language skill and as a consequence of both and their employability and earning potential, their self confidence increases.
In case they leave zoho and go anywhere, they can very easily impress wherever they are and come up in life. One primary purpose of education is to improve clear thinking and self confidence and that is definitely achieved at Zoho University.
After a period of 30 months, the students are permitted to do distance education program. The experience they have gained during this period helps them understand whatever they read thouroughly and exprience has shown that the examinations in the distance education are just cake walks for them. BCA, BBA, BA (Corporate), MCA, MBA, MA (Sociology) MA(Political science) are some of the disciplines in which they will very easily get their degrees.
Individual's progress at Zoho is not based on his degree, but only on his performance. Put otherwise real merit is only recognized.
So, at the end of 7 and a half year, after leaving plus two, the students would have got a post-graduate degree and a 7 years experience at a senior software engineer level in a major concern if only they want to and strive for it.
Even if the students discontinue at the end of one year, they would have gained enough confidence to face the world, another major purpose of education.
There are lots of virtual universities in the web to offer 'recognized' degrees.
Since the monthly stipend is Rs.4k along with free lunch, dinner, coffee, snacks etc. their family is also substantially helped by them. Free from family worries, and examination worries, they pursue their education,in rhe right sense of the term, happily.
Not a single day, they hate to come to the University training. This is mostly because, examination in the usual sense is absent at ZU. ZU recognises that the learning skills are different to different students and they are permitted to learn at their own pace. Teachers and the environment are only facilitators and the students learn most of the time on their own. The desire to learn is in every mind and ZU teachers are able to experience the feelings in the minds of the students as they progress. They write code much better than even the teachers, in a short span of an year. Most of the time, a very sincere student will surpass his teacher, and therein lies the happiness of the teacher.
I wish more doubts are posted here, so that they can be cleared. Every body should subject themselves for criticism. Any criticism is for improvement. ZU is no exception and is well aware of it.
During early 1990 Titan did the similar thing. I heard mixed comments about it. Based on your description, ZU's training is more broader than Titan. So it may be better than Titan.
ReplyDeleteInstead of looking at the experiment just as a training methodology, I wish that it is looked upon as an alternative to the current Higher education along with its associated evil, 'Examinatiion'.
ReplyDeleteToday's examination caters to rot memory, cramming of subjects, if it is assignment or project - plagiarism, disinterestedness.
Whereas, this experiment sponsors 'learning by doing', motivation and kindling the desire to learn, rather than just testing for the sake of testing, encouragement rather than dominance, developing self confidence rather than demotivating.
There are many other successful experiments like 'one subject a full month' and so on.
I wish it is an eye opener to the academic councils and boards of examiners of those citadels of education with their lavish expenditures and associated costs.
The earlier comment is from me, B.Rajendran.
ReplyDeleteI am continuing.
All this 'training'/'education' is without any agreement or binding. The students continue their course on their own accord and continue to serve the industry at their own will. They can leave the course or the industry at any time and no compensation is claimed. 80% of the students completely undergo the course and 100% of those who join the industry, happily continue to serve here. Everyday you can find them coming to work happily, face challenging assignments confidently and walk out in the evening, not tired, but only exhausted of their own wish.
One of the students, who was on an assignment at Tokyo, was offered a lucrative job at a level 1 company, but coolly rejected it! this too of his own choice.
சில வாரங்களுக்கு முன் யவகிருஷ்ணா எங்களுக்கு இதுபற்றி ஒரு கட்டுரை அனுப்பினார். ஒரு சந்தேகத்தின் காரணமாக அது hold்ல் போடப்பட்டுள்ளது. சந்தேகம் இதுதான்.ஏன் இவர்கள் தங்களை யுனிவர்சிட்டி என்று அழைத்துக் கொள்கிறார்கள்? உங்கள் கட்டுரையைப் பார்த்தால் இது ஏதோ NIIT, ஆப்டெக் போல ஒரு instituteபோல தெரிகிறது. யாராவது விளக்க முடியுமா?
ReplyDeleteமாலன்
மாலன்: ஸ்ரீதரிடம் பேசினேன். யுனிவர்சிடி என்பதற்கு பதில் அகாடெமி என்று போட்டுக்கொள்ளலாம் என்றார். யு.ஜி.சி போன்ற எந்த அமைப்பிடமும் எத அங்கீகாரமும் பெற்ற அமைப்பல்ல இது. பொதுவாக யுனிவர்சிடி என்றால் கல்விக்கூடம் என்ற பொருளில் மட்டுமே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
ReplyDeleteமாலன் / பத்ரி,
ReplyDelete’ஆரக்கிள் யுனிவர்சிடி’ 'SAP யுனிவர்சிடி’ என்பதுபோல் நிறைய இருக்கிறதே. ஜோஹோ தனது கல்விக்கூடத்தை யுனிவர்சிடி என்று அழைத்தால் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
- என். சொக்கன்,
பெங்களூரு.
This is the month of May - admission time at our University. We made a marathon attempt to select students, more than 6000 students tested, 500 students interviewed 60 students given admit card, 18 students joined.
ReplyDeleteRemember world class training at an industry with stipend, live projects, guaranteed success to get a job with a sincere effort, but 42 students rejected the offer in favour of 'recognised degree'.
Resources are available for 48 students more. Contact: Uma : 9840746320
self: B.Rajendran: 9840927681
50 days training gone for those 18 students and all of them are very happy for having joined here, actively participating in all the activity, one such activity, giving a presentation of their choice to the Japanese team, who in turn would give a presentation of their choice. They are trying to make cultural exchanges.