Wednesday, March 02, 2011

கொசுத்தொல்லை தாங்க முடியல! (ஸ்பெக்ட்ரம்)

மொபைல் போன் நிறுவனங்கள் அனைத்தைம் ஓர் ஆண்டில் பெறும் வருமானம் என்ன? துபாயில் பணிபுரியும் சிவகுமார் என்ற பொறியாளர் துரோகம் 1, 2, 3 என்று பட்டியல் போட்டுள்ளார். தான் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தால் அடித்து நொறுக்கி இன்னும் துல்லியமாகக் கணக்கு போட்டுக் காண்பிப்பதாகவும் அவர் சவால் விடுகிறார். இந்த துரோகப் பட்டியல் விகடனில் வெளியானது என்று நினைக்கிறேன். பிறகு மின்னஞ்சலில் எனக்கு இதுவரை பத்து முறைக்கும் மேலாக யார் யாராலோ அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படைக் கணக்கு இதுதான். இந்தியாவில் 60 கோடி கைபேசிகளாம். ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 நிமிடங்கள் செல்பேசியைப் பயன்படுத்தினால் (Local calls only-யாம்!), நிமிடத்துக்கு 40 பைசா என்ற கணக்கு வீதம் (யார் கொடுத்த கணக்கு?), நாள் ஒன்றுக்குக் கட்டும் கட்டணம் = 15*0.4 = 6 ரூபாய். மாதத்துக்கு 6*30 = 180 ரூபாய்.

மாத மொத்த மொபைல் போன் வருமானம் = 60 கோடி * 180 = 10,800 கோடி ரூபாய்
ஆண்டு மொத்த வருமானம் = 12 * 10,800 கோடி = 1,29,600 கோடி ரூபாய்
இரண்டு ஆண்டுகளுக்கு = 2,59,200 கோடி ரூபாய்.

அடுத்து அவர் ஒரு ஜம்ப் விடுகிறார். இத்தனை பணமும் அரசுக்குக் கிடைத்திருக்கவேண்டுமாம். அதனை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றனவாம்.

லோக்கல் காலுக்கே இப்படி என்றால், எஸ்டிடி, ஐஎஸ்டி, டேட்டா, அது இது என்று என்ன ஆவது? இதுதான் துபாய் எஞ்சினியரின் கேள்வி.

***

2010-11 நிதி ஆண்டு இன்னமும் முடிவடையவில்லை. ஆனால் 2009-10 நிதி ஆண்டின் வரவு செலவுக் கணக்கை எடுத்துக்கொள்வோம்.

இந்தியாவின் முதன்மை கைபேசி நிறுவனம் பார்த்தி ஏர்டெல். 2009-10 ஆண்டுக்கான அதன் மொத்த வருமானம் (மொபைல், லோக்கல் கால், எஸ்டிடி, ஐஎஸ்டி, பிராட்பேண்ட் இணையம், விசாட் என அனைத்தையும் சேர்த்து!) ரூ. 41,829 கோடி. இதில் அனைத்துச் செலவுகளும் போக, வரி கட்டியது போகக் கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? ரூ. 9,163 கோடி. இந்திய மொபைல் போன் நிறுவனங்களிலேயே மிகவும் செயல்திறன் மிக்கது பார்த்தி. பிற நிறுவனங்கள் ஒரு படி கீழேதான். பார்த்தியிடம் அந்தக் கட்டத்தில் இருந்தது 21.8% மார்க்கெட் ஷேர். அதாவது மொத்த செல்பேசி கஸ்டமர்களில் ஐந்தில் ஒருவர் பார்த்தியின் சேவையைப் பெற்றனர்.

அடுத்து பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல் என்ற அரசு அமைப்பைப் பார்ப்போம்.

எம்.டி.என்.எல் மொத்த வருமானம்: 3,781 கோடி; தொழிலிலிருந்து அடைந்த நஷ்டம்: 4694.5 கோடி ரூபாய்! இந்தக் கொடுமையைப் பாருங்கள். எம்.டி.என்.எல்லின் மொத்த வருமானமே ரூ. 3,781 கோடி. ஆனால் அது தன் ஊழியர்களுக்கு 2009-10-ம் ஆண்டில் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? 4,966.25 கோடி! இது விளையாட்டல்ல. அவர்களுடைய ஆன்னுவல் ரிப்போர்ட்டில் பாருங்கள். அல்லது nse-india.com தளத்துக்குச் சென்று MTNL என்ற குறியீட்டை இட்டு, தகவல்களைச் சேகரியுங்கள்.

சரி, பி.எஸ்.என்.எல் கதை என்ன? மொத்த வருமானம் 32,045 கோடி ரூபாய். நஷ்டம் 1,823 கோடி ரூபாய்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸை எடுத்துக்கொள்வோம். இங்கும் மொபைல் சேவைக்கு மேலாக இணையம் முதற்கொண்டு பல சேவைகள் உள்ளன. அப்படியே மொத்தமாக எடுத்துப் பார்த்தால், மொத்த வருமானம்: 12,511.72 கோடி ரூபாய். வரிக்குப் பிறகான லாபம்? வெறும் 478.93 கோடி ரூபாய்தான். இதுவே ஓராண்டுக்கு முன்பு (2008-09) 4,802 கோடி ரூபாயாக இருந்தது.

ஐடியா செல்லுலார் 2009-10 ஆண்டின் மொத்த வருமானம் 11,896 கோடி ரூபாய். வரிக்குப் பிறகான லாபம் 1,054 கோடி ரூபாய்.

வோடஃபோன் நிறுவனத்தின் தாய் கம்பெனி பிரிட்டனில் உள்ளது. அதன் ஆன்னுவல் ரிப்போர்ட்டில் தேடிப் பார்த்ததில் 2009-10 வருமானம் சுமார் 22,500 கோடி. EBIDTA என்பது 5800 கோடி ரூபாயாக இருந்தாலும், நிகர நஷ்டம் 266 கோடி.

மேலே சொன்ன கம்பெனிகள் கையில்தான் சுமார் 85% சந்தை உள்ளது. மிச்சம் துண்டு துக்கடா கம்பெனிகளை மறந்துவிட்டு மேலே சொன்னவற்றைப் பட்டியலிட்டால்:

நிறுவனம்வருமானம்
(கோடி ரூ)
லாபம்/நஷ்டம்
(கோடி ரூ)
பார்த்தி ஏர்டெல்41,8299163
வோடஃபோன்22,500-266
ரிலையன்ஸ்12,512479
ஐடியா11,8961,054
பி.எஸ்.என்.எல்32,045-1,823
எம்.டி.என்.எல்3,781-4,695

வெறும் கால்குலேட்டர் கையில் இருந்தால், தட்டித் தட்டியே பலவிதமான எண்ணிக்கைகளைக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் உண்மைக் கதை என்ன என்பதை ஆராய, வேண்டிய தரவுகள் கூகிள் வழியாகவே கிடைக்கும். அவற்றைப் பெற இந்தியா வரவேண்டிய அவசியமே இல்லை, துபாயிலோ லிபியாவிலோ இருந்தால்கூடப் போதுமானது!

இப்போது சிந்தியுங்கள். வருமானத்தை பெற ஒரு நிறுவனம் எத்தனை செலவழிக்கவேண்டும்? எனவே வருமானத்தைப் பற்றிப் பேசவேண்டுமா அல்லது லாபத்தைப் பற்றிப் பேசவேண்டுமா? தொலைதொடர்புத் துறையில் லாபம் எப்படி இருக்கிறது? அரசு நிறுவனங்கள் எந்தவிதமான லாபத்தை அடைகின்றன? எல்லா ஸ்பெக்ட்ரத்தையும் அரசே வைத்துக்கொண்டு சேவை அளித்தால் லாபம் பெறவேண்டுமானாலும் அரசு என்ன கட்டணத்தை உங்களிடமிருந்து வசூலிக்கும்? OYT, N-OYT போன்ற அற்புதமான சேவைகள் உங்களில் எவருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா? ஒரு தொலைபேசி இணைப்பு வாங்க எத்தனை சிங்கி அடிக்கவேண்டியிருந்தது என்று ஞாபகம் இருக்கிறதா?

இப்போது நாம் அனைவரும் நிஜமாகவே கவலைப்படவேண்டிய விஷயம், எப்படி பி.எஸ்.என்.எல்லையும் எம்.டி.என்.எல்லையும் காப்பாற்றப் போகிறோம் என்பதுதான்! அவை அடையும் நஷ்டத்துக்கு இன்று யார் காரணம்? விரைவில் மற்றுமொரு ஏர் இந்தியாவை எதிர்பாருங்கள்!

30 comments:

  1. துப்பறிந்த சிங்கம்:Wed Mar 02, 06:39:00 PM GMT+5:30

    மதுரையில் டீக் கடை வைக்க மாநகராட்சி உரிமக் கட்டணம் வருடத்திற்கு ரூ5000. மதுரையில் 5000 டீக்கடைகளுக்கும் மேலே இருக்கின்றன.
    கடைகளில் ஒரு டீ விலை ரூ7, வடை-ரூ5, சிகரட்-ரூ5.
    டீக்கடைகளின் வேலை நேரம்-காலை 5 முதல் இரவு 11வரை.
    ஒரு கடையில் நான் துப்பறிந்த 15நிமிடத்தில் 30டீ, 20வடைகள், 20சிகரட்டுகள் விற்பனையானது,
    எனவே 1மணி நேர வருமானம் (30*4=)120டீ * ரூ7 ==ரூ840 +
    (20*4)=80வடை*ரூ5==ரூ400, +
    (20*4)=80சிகரட்*ரூ5==ரூ400
    ஆக மொத்தம்=ரூ1,640.
    காலை 5முதல் இரவு 11வரை 18மணி நேரத்திற்கு 18*ரூ1,640==ரூ29,520,
    எனவே ஒரு டீக்கடையின் ஒரு வருட நிகர வருமானம் 365*29,520==ரூ1,07,74,800 - ஒரு வருடத்திற்கு மாநகராட்சி உரிமக் கட்டணம் ரூ5000 == ரூ1,07,69,800 (1கோடிக்கும் மேலே).
    வெறும் ரூ5000-ஐ அரசுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு டீக்கடையில் 1கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் படுகிறது,
    எனவே 5000கடைகளில் 5000*ரூ1,07,69,800==ரூ5384,90,00,000 (அதாவது 5384 கோடிரூ) கொள்ளையடிக்கப் படுகிறது.
    தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நகரங்கள் உள்ளன, அவற்றில் ஒரு வருடத்தில் கொள்ளையடிக்கப்படுவது எத்தனை கோடிகள்?
    என்ன அநியாயம்?, என்ன அக்கிரமம்?
    அய்யா! இதயெல்லாம் தட்டிக் கேக்க இங்க யாருமே இல்லையா?

    ReplyDelete
  2. Well said Badhri.

    ReplyDelete
  3. There are couple of reasons for the BSNL performance. You can see that from this article. http://www.dnaindia.com/money/report_bsnl-runs-into-loss-for-the-first-time_1417128

    Couple of the issues are temporary. Like wage revision and paying it as 3 year arrears. And charges for 3G spectrum. Drop in fixed line connection. Tariff reduction.

    Barring some elements, BSNL is highly competitive and hope it will survive the competition.

    Regarding private players, they are the ones to blame for their revenue. If more money goes into the CEO's pocket and Sachin Tendulkars pocket, then they are the ones to be blamed for their strategy. Airtel for instance has spent so much money for a inverted Videocon symbol.

    I tried this with calculator. 20% for market share for Airtel turns out to be 20% of 1,29,600 crores which is 25920 crores. This is much less than the 41,829 crores quoted as revenue for Bharathi Airtel. Accepted they have other operations too.

    I understand this may seem like a leftist ideology. For a country like India which thrives on saravana stores model(low cost high volume) you can achieve better profits without paying Sachin Tendulkar and A.R.Rahmans. You dont need a Sachin or Rahman to vouch for your product to say that your service is cheap. Quality cannot be advertised. It needs to be realized by the users. 20% market share is a result of their quality in the past and not because of Sachin's are Rahmans endorsements.

    Even after everything you yourselves have mentioned that the profit for Airtel is Rs.9000 crores. That is 1year profit. Whereas a single license is sold at the rate of less than Rs 2000 crore. I agree that there should not be any direct relationship between revenue and license fee, given that Bharthi has other business too.
    But for a company which is having a Rs 9000 crore as profit, i dont think they will mind paying more than Rs.2000 crore for a single license for a 2G.

    Believe the License is a one time fee which has a validity for 20 years. Given that the sector is growing rapidly, the profit is supposed to only grow. So I feel that Rs 2000 crore as fee for license is very less.

    May be I am missing something. Please clarify.

    ReplyDelete
  4. Bharti has paid a tax of Rs. 2,300 crore during that year! They have paid spectrum charges in the form of revenue share as 375 crore (as per the revenue share deal).

    On the one hand, we have a government run BSNL and MTNL running huge losses and we explain away the reason as 'increased salary bill', arrears and 3G spectrum charges. Here we have Bharti offering a similar service at a similar cost, also paying 3G license fee, paying its employees top salary, and also paying people like Tendulkar, and still making decent profits. And now they are the culprits? And BSNL/MTNL saints?

    Bharti may have paid a 'low' license fee for 2G. For BSNL/MTNL, there was not even that fee, it was given away to them free as part of the deal in allowing private sector there. Both paid similar monies for 3G.

    What shall we make the 2G license fee/spectrum fee to be? Annually at 20,000 crore rs per license? What is the fair amount in your opinion?

    I disagree with you that the growth in the sector results in rapidly increasing profits. Check out Reliance profits over the last two years.

    ReplyDelete
  5. Badri,
    Are you saying that there was no fraud and no one made money?
    OR other wise.

    we dont need to bring in the actual amount, which no one knows and will never know

    ReplyDelete
  6. Spectrum 1 .75 lakh கோடி ஊழல் . இஸ்ரோ 2 லட்சம் கோடி ஊழல் .ஒரு நியூஸ் வந்தவுடனே பலரும் அதை நம்பிவிடுகின்றனர். அல்லது பலருக்கு பரப்புகின்றனர் . கேட்டால் பேப்பரில் அப்படித்தானே போட்டிருக்கிறார்கள் . டிவி யில் சொன்னார்கள் என பதில் வருகிறது. ஆனால் உண்மை நிலையை யாரும் அறிய முற்படுவதில்லை. பின்பு படித்தவனுக்கும் படிகதவனுக்கும் என்ன வேறுபாடு? உண்மையை எடுத்து கூறினால் , " நீங்கள் DMK வா?" என்று பதில் கேள்வி .
    துரோகம் 1, 2, 3 யை நானும் படித்தேன் . அன்றே உங்களிடம் இருந்து பதில் வரும் என எதிர் பார்த்தேன்.

    Uninor ஐ , பலரும் லெட்டர் பாடு கம்பெனி என சொல்கிறார்கள் .
    இவர்கள் பார்வையில் டெலிபோன் கம்பெனி என்றால் tower எல்லாம் நட்டு , சிம் எல்லாம் கடைகளுக்கு விநியோகம் செய்த பின்பு தான் license Apply செய்ய வேண்டும் போல் உள்ளது.


    யாரும் ஊழலே நடக்கவில்லை என்று சொல்லவில்லை .

    இவ்வளவு நடந்திருக்காது என்று தான் கூறுகிறோம்

    ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனி யில் ஷேர் வாங்கியதையும் இவர்கள் தப்பு என்கிறார்கள் . இவர்களுக்கு basic எகானமி தெரியாததே காரணம் என நினைக்கிறேன்.

    1 + 1 = 2 என தெரியாதவர்களுக்கு (A +B)2 Formulavai விளக்கினால் , விளக்குபவனே முட்டாள் .

    ----- ஆனாலும் இந்த விளக்கங்களை விரும்பி படிக்கும் வாசகன் ---iambalamurugan

    ReplyDelete
  7. டாடா டெலிகாம் பற்றிய தகவல்களை நான் சேகரிக்கவில்லை. அவர்களது மகாராஷ்டிர வட்டம் மட்டும் ஒரு லிஸ்டட் கம்பெனி. அதன் தகவல் கிடைக்கும். ஆனால் பிற இடங்கள் ஒரு பிரைவேட் கம்பெனியாக உள்ளது. கூடவே வி.எஸ்.என்.எல் ஒரு பப்ளிக் கம்பெனி. அவற்றை எல்லாம் ஒன்று சேர்க்க முடியாது என்பதால் கொடுக்கவில்லை.

    ReplyDelete
  8. பேசிக்கொள்ளும்போது எண்களுக்கும் தொகைகளுக்கும் புள்ளியியலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் நடைமுறை வாழ்வில் கருத்துக்கோ, கொள்கைகளுக்கோ கொடுக்க முயல்வதில்லை. எவ்வளவு பெரிய ஊழல் என்பதில் தான் கேள்வி இருக்கிறதே அன்றி ஊழல் இருக்கலாமா.. என்பதைப் பற்றிய போர்க்குணம் கொண்ட கருத்துக்கள் இல்லை. அந்நியன் படத்தில்
    வரும் வசனத்தைப் போல, 'தவறில் சிறியது பெரியது என்ற வித்தியாசம் இல்லை, விளைவுகள் எல்லாமே பெரியவை தான்!' ... ஆனால், பேசும் போது தனக்கு எல்லாம் தெரியும் எனக்காட்டிக்கொள்ள முயலும் நபரிடம்/குழுவிடம் எவ்வாறு அடிப்படை
    வேறுபாடுகளை விளக்குவது?

    ஆனால் வணிகவியலோ, சந்தைப்பொருளாதாரமோ, வியாபார நுணுக்கமோ அறியாத என்னைப் போன்றோரின் கேள்வியானது... 'லாபமில்லாத தொழிலுக்கு ஏன் பல கொடிகளை இறைக்கப் போகின்றன இந்தத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்?'

    இன்றிருக்கும் பல பெரிய லாபகரமான நிறுவனங்கள் முதலில் நட்டக்கணக்கு காட்டித்தானே இந்தியாவில் தொழில் தொடங்கினார்கள்?!

    கடந்த ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுக் கணக்குகளைக் கொண்டு விளக்குகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிடைக்கப் போகும் வருமான/லாபம் குறித்த எதிர்பார்ப்பு/விளக்கம்/அனுமானம் இல்லை.

    லாபம் மட்டுமே கொள்கையை உள்ள பெரிய நிறுவனங்கள் எனக்கு தெரிந்த வகையில் நிச்சயம் நட்டத்திற்காக முதல் போட மாட்டார்கள், மேலும் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்கவோ தயங்க மாட்டார்கள். ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் பதவியை பேரம் பேசும் அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் என்றால், சாமானியனுக்கும் அது நிச்சயம் பெரிய தொகை கொண்ட ஊழலாகவே தோன்றும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    - கல்யாணசுந்தரம்.

    ReplyDelete
  9. உங்கள் புலமை இங்கு யாருக்கும் தேவையில்லை. தவறுகள் நடந்திருக்கின்றன. அதுதான் முக்கியம்.

    ReplyDelete
  10. //pectrum 1 .75 lakh கோடி ஊழல் . இஸ்ரோ 2 லட்சம் கோடி ஊழல் .ஒரு நியூஸ் வந்தவுடனே பலரும் அதை நம்பிவிடுகின்றனர். அல்லது பலருக்கு பரப்புகின்றனர் . கேட்டால் பேப்பரில் அப்படித்தானே போட்டிருக்கிறார்கள் . டிவி யில் சொன்னார்கள் என பதில் வருகிறது. ஆனால் உண்மை நிலையை யாரும் அறிய முற்படுவதில்லை. பின்பு படித்தவனுக்கும் படிகதவனுக்கும் என்ன வேறுபாடு? உண்மையை எடுத்து கூறினால் , " நீங்கள் DMK வா?" என்று பதில் கேள்வி .
    துரோகம் 1, 2, 3 யை நானும் படித்தேன் . அன்றே உங்களிடம் இருந்து பதில் வரும் என எதிர் பார்த்தேன்.

    Uninor ஐ , பலரும் லெட்டர் பாடு கம்பெனி என சொல்கிறார்கள் .
    இவர்கள் பார்வையில் டெலிபோன் கம்பெனி என்றால் tower எல்லாம் நட்டு , சிம் எல்லாம் கடைகளுக்கு விநியோகம் செய்த பின்பு தான் license Apply செய்ய வேண்டும் போல் உள்ளது.


    யாரும் ஊழலே நடக்கவில்லை என்று சொல்லவில்லை .

    இவ்வளவு நடந்திருக்காது என்று தான் கூறுகிறோம்

    ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனி யில் ஷேர் வாங்கியதையும் இவர்கள் தப்பு என்கிறார்கள் . இவர்களுக்கு basic எகானமி தெரியாததே காரணம் என நினைக்கிறேன்.

    1 + 1 = 2 என தெரியாதவர்களுக்கு (A +B)2 Formulavai விளக்கினால் , விளக்குபவனே முட்டாள் .

    ----- ஆனாலும் இந்த விளக்கங்களை விரும்பி படிக்கும் வாசகன் ---iambalamurugan
    //
    வரிக்கு வரி வழிமொழிகிறேன்

    ReplyDelete
  11. பத்ரி அவர்களுக்கு ,

    BSEINDIA ல் Bharti Airtelன் FY09-10

    வருமானம் - 35,609.54 cr
    நிகர லாபம் - 9,426.16

    ஆனால் NSE-INDIA ல் Bharti Airtelன் Annual Report FY09-10

    நீங்கள் குறிபிடுவது போல்
    வருமானம் - 41,829 cr
    நிகர லாபம் -9163 cr

    இது எப்படி சாத்தியம் ? விளக்கவும்

    ReplyDelete
  12. அப்படின்னா போன மாசா மாசம் ஏர்டெல்லுக்கு 1000 ரூபாய்க்கு மேல அழுவதெல்லாம் ராசாவுக்குதான் போகுதா? அப்பாடா... இனிமே அழாம பில் கட்டலாம்.

    நம்ம தமிழனுக்கு தானே போகுது!

    ReplyDelete
  13. சதீஷ்: ஒன்று ஏர்டெல்லின் இந்திய வருமானமாகவும், மற்றொன்று அதன் பிற இந்திய மற்றும் அந்நிய சப்சிடியரி நிறுவனங்களையும் சேர்த்த வருமானமாக, லாபமாக இருக்கலாம். கவனமாகப் பார்த்து பின்னர் எழுதுகிறேன்.

    ReplyDelete
  14. இந்தியாவிலேயே தன்மானத் தமிழனுக்கு வக்காலத்து வாங்கும் பத்ரியே நீ கேடி ராசாவிடம் பெற்றது எத்தனை கோடி?\\\

    அப்பவி தமிழன்

    ReplyDelete
  15. You should have atleast accepted that Sivakumar's back of the envelope revenue calculation equals your well researched calculation.

    ReplyDelete
  16. நீங்கள் குறிப்பிடும் கம்பெனிகளுடன் டாட்டா டெலிசர்வீசஸ், ஏர்செல் ஆகிய 2 கம்பெனிகளை மட்டுமாவது சேர்த்துப் பார்க்க வேண்டும்.

    சரவணன்

    ReplyDelete
  17. Sir, Can you please explain what is wrong in துரோகம் 1, 2, 3 ?

    ReplyDelete
  18. சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் – ரூ 4000 கோடிக்கு மேல் )

    ஆனால் செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ?

    அல்லது மதிய அரசாங்கத்தை போராடி கேட்டு பெற முடியாதா ??

    தன் குடும்ப வருவாய்க்கு டெல்லி சென்று பல நாட்கள் தங்கும் தெருனாநிதி, விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை பாதைக்கு பணம் பெற நடவடிக்கை எடுக்க முடியாதா ?

    கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?

    சென்னை மட்டும் தான் தமிழகமா ?

    சேது திட்டம் – வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது போக மீதம் தலைவர் தெருனாநிதி குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?

    சென்னையில் எத்தனை பாலங்கள் ? ரோடு அதே ரோடு தான் !!! ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ? கொள்ளை அடிக்கவா ?

    ReplyDelete
  19. spectrum திருடன் வருகிறான் பார்.

    2G திருடன் வருகிறான் பார்.

    Cell Phone திருடன் வருகிறான் பார்.

    ரேசன் திருடன் வருகிறான் பார்.

    மணல் திருடன் வருகிறான் பார்.

    Horlicks திருடன் வருகிறான் பார்.

    Cable திருடன் வருகிறான் பார்.

    TV திருடன் வருகிறான் பார்.

    அரிசி திருடன் வருகிறான் பார்.

    "சேது கால்வாய்" திருடன் வருகிறான் பார்.

    பஸ் டிக்கெட் கொள்ளையன் வருகிறான் பார்.

    மக்களே உசார் !!!!!!

    ReplyDelete
  20. //எனவே ஒரு டீக்கடையின் ஒரு வருட நிகர வருமானம் 365*29,520==ரூ1,07,74,800 - ஒரு வருடத்திற்கு மாநகராட்சி உரிமக் கட்டணம் ரூ5000 == ரூ1,07,69,800 (1கோடிக்கும் மேலே).
    வெறும் ரூ5000-ஐ அரசுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு டீக்கடையில் 1கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் படுகிறது,
    எனவே 5000கடைகளில் 5000*ரூ1,07,69,800==ரூ5384,90,00,000 (அதாவது 5384 கோடிரூ) கொள்ளையடிக்கப் படுகிறது.
    தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நகரங்கள் உள்ளன, அவற்றில் ஒரு வருடத்தில் கொள்ளையடிக்கப்படுவது எத்தனை கோடிகள்? //
    மாநகராட்சிப் பகுதிகளில் டீக்கடை நடத்த உரிமம் ஏலத்தில் விடவேண்டும் என்ற விதியை காற்றில் பறக்கவிட்டு முதலில் வருபவர்க்கே டீக்கடை லைசென்சு என்று அறிவித்து விட்டது மாநகராட்சி. முதலில் வந்தது யாராக இருந்தாலும் அவர்கள் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டது. மாநகராட்சி மேயர் அறிவுறுத்தல்கள் குப்பைக் கூடைக்குப் போயின. திடீரென்று ஒருநாள் போன மாதம் 25ஆம் தேதி வரை வந்த விண்ணப்பங்களே செல்லும் என்றது. இப்படிப்பட்ட முதலில் வ்ருவோர்க்கு முந்திய லைசென்சுகளை வாங்கிய சிலர் லைசென்சுகளை பகுதி பகுதியாகப் ப்ரித்து அதிக விலைக்கு விற்றார்கள். ஏலத்தில் 20000 ரூபாய் கொடுத்து உரிமம் பெற ஆட்கள் தயாராக இருந்தார்கள். ஏலத்தில் 20000க்கு மேல் விலை போனால் அதிகம் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று டீக்கடை உரிமக் குழுத் தலைவர் மிரட்டிவிட்டார் என்ற புகாரை இதுவரை அவரும் மறுக்கவில்லை.

    ஏலத்தில் விட்டால் ரூ.20000க்கும் அதிகமாகத் தேறியிருக்கக் கூடிய ஒரு லைசென்சு ரூ.5000க்கு விற்கப்பட்டது குற்றம். அந்த விற்பனை என்ற பெயரில் செய்யப்பட்ட ஈகை ஏற்படுத்தியது மாநகராட்சிக்கு நட்டம். என்னவிலைக்குப் போயிருக்கும் என்பதை அனுமானம் செய்தால் கண்டிப்பாக 20000க்கு அதிகம் என்பதே உண்மை. 5000 ரூபாய் என்று எப்படி price fixation செய்தீர்கள்? உதாரணம் கொடுக்குமுன் விவரங்களை முழுதாக அறிந்து கொண்டு உதாரணம் கொடுப்பது நல்லது. இல்லையென்றால் துப்பறிந்த சிங்கம் துப்புக்கெட்டதாகி அசிங்கப்பட்டுவிடும்.

    ReplyDelete
  21. அய்யா எல்லாம் சரி, எந்த ஊருக்கு போனாலும் நிலத்த இந்த அரசியல்வாதிங்க வாங்கி வாங்கி குமுச்சிருக்காங்க... இதற்கு காசு எப்படி வந்தது. திருடனுங்க பொதுவா தான் செய்த குற்றங்கள்ள மாட்டுறத விட செய்யாத ஒன்னுக்கு மாட்டுவானுகன்னு ஒரு கதை உண்டு... அது மாதிரி இருக்கட்டுமே இது... இதப் போயி சயிண்டிபிக்க அனலைஸ் பண்ணி, அவனுகளுக்கு நீங்கள கதவ திறந்து விடுவீக போலிருக்கு...

    ReplyDelete
  22. துப்புக் கெட்ட சிங்கம்...........Mon Mar 07, 11:26:00 AM GMT+5:30

    \\ ஏலத்தில் 20000க்கு மேல் விலை போனால் அதிகம் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஏலத்தில் விட்டால் ரூ.20000க்கும் அதிகமாகத் தேறியிருக்கக் கூடிய ஒரு லைசென்சு ரூ.5000க்கு விற்கப்பட்டது குற்றம்.\\
    ரூ20,000க்கு ஏலம் எடுக்கத் தயாராக இருந்த நல்லவர்கள் வேறு யாருமல்ல, கடந்த பத்து வருடங்களாக வருடத்திற்கு இதே 5000ரூபாயை மட்டும் மாநகராட்சிக்குக் கட்டி விட்டு, இன்று ரூ7க்குக் கிடைக்கும் ஒரு டீயினை ரூ25க்கு விற்றுக் கடை நடத்திப் பெரும் பணம் சேர்த்துவிட்ட, பணக்கார முதலாளிகள்தான்...........
    அவர்கள் ரூ20,000 என்ன 50,000ரூபாய்க்குக் கூட
    ஏலம் எடுப்பார்கள்,
    எதற்காக என்றால்,
    புதிய கடைகள் வரும் முன்னர் அவர்கள் கடையில் டீயின் விலை ரூ25.........
    பெருந் தனவான்களுக்கு மட்டுமே கிட்டக்கூடியதாக இருந்தது டீ,
    ஆனால் ரூ5000க்கு உரிமங்கள் வழங்கப்பட்டதால், புதிதாகத் திறக்கப்பட்ட கடைகளில் டீயின் விலைரூ5லிருந்து ரூ8வரை மட்டுமே..............
    இன்று சாதாரண கூலிக்காரர்கள் தொடங்கி, சாமன்ய மக்கள், விவசாயிகள், ஏழைகள் என எல்லோராலும், வாங்கிட இயலும் விலையில் கிடைக்கின்றது டீ.............
    பழைய முதலாளிகளோ அன்று ரூ25க்கு விற்ற அதே டீயினை, இன்று ரூ7க்கும் ரூ8க்கும் கூவிக் கூவி விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.........
    இந்த நிலை தங்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், - புதிதாக யாரும் இந்தத் தொழிலில் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக- பழைய முதலாளிகள் ரூ20000க்குக் கூட ஏலம் எடுக்க முன்வந்தனர்........
    அவர்களுக்கு மட்டுமே உரிமங்கள் கொடுக்கப் பட்டிருருந்தால் டீயின் விலை இன்றும் அதே ரூ25ல்தானே இருந்திருக்கும்,

    ஒரு அடிப்படையான முக்கியமான வசதி ஒன்று, மேல்தட்டு, நடுத்தரம், கீழ்த்தட்டு என எல்லாத் தரப்பு மக்களையும் சென்று சேருமாறு செய்வதே அரசின் பணியன்றி, கிடைக்கும் வருமானத்தினைக் கணக்குப் பார்த்துக் கொண்டு, ஒரு சில பெரும் முதலாளிகள் மட்டும் தொழிலில், ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி, அந்த வசதியினை பலமடங்கு அதிக விலையில் மக்களிடம் விற்று, அப்பாவி மக்களின் பணத்தினைச் சுரண்டிடத் துணை போவதல்ல................

    ReplyDelete
  23. \\முதலில் வ்ருவோர்க்கு முந்திய லைசென்சுகளை வாங்கிய சிலர் லைசென்சுகளை பகுதி பகுதியாகப் ப்ரித்து அதிக விலைக்கு விற்றார்கள்.\\
    உரிமம் வாங்கியவர்கள் வெறும் உரிமத்தினை மட்டும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய இயாலாதல்லவா?, மேற்கொண்டு கடை நடத்த ( சட்டி, பானை, அடுப்பு, விளம்பரம், வேலையாட்கள், இன்னபிற) தேவையான முதலீட்டினை வெளி ஆட்களிடமிருந்து திரட்டியுள்ளனர்..... விற்கப்பட்டது பங்குகளே தவிர உரிமம் பெற்ற மொத்த நிறுவனமல்ல.....
    முதலீட்டிற்காகத் திரட்டப்பட்ட பணத்தினை எடுத்துக் கொண்டு உரிமம் பெற்ற நிறுவனங்கள் எங்கும் ஓடிவிட இயலாது.....
    திரட்டிய முதலீட்டினைக் கொண்டு கடை நடத்தி, வியாபாரம் செய்து, 7ரூ, 7ரூபாயாகச் சேர்த்து, அதில் அன்றாடச் செலவுகள் போக, மிஞ்சும் லாபப் பணத்தினை(லாபம் இருந்தால்) சேர்த்து மொத்தமாகக் கணக்குக் காட்டி, அதிலிருந்து முதலீடு செய்தவர்களுக்கு உரிய பங்கினைக் கொடுக்க வேண்டும்............
    பங்குகள் விற்கும் நிறுவனம்தான் -எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்- எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும்- அன்றாடப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்- முதலீடு செய்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்,
    ஆனால் பங்குகள் வாங்கியவர்களின் வேலை, பணத்தினை முதலீடு செய்வது மட்டுமே, (SLEEPING PATNER). எனவே அவர்கள் அதிகமாகத்தான் முதலீடு செய்தாக வேண்டும்.....................

    ReplyDelete
  24. \\ டீக்கடை உரிமக் குழுத் தலைவர் மிரட்டிவிட்டார் என்ற புகாரை இதுவரை அவரும் மறுக்கவில்லை. \\
    அவர் தனது சுயலாபத்திற்காகத் தவறுகள் செய்திருப்பாரேயானால், கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை......
    கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!

    ReplyDelete
  25. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நீங்க தொடக்கத்தில் எழுதியது முதல் இன்று பலரும் இது பற்ற வாய் வலிக்க பேசிக் கொண்டிருப்பது வரைக்கும் பல விசயங்களை கவனித்துக் கொண்டு வருகின்றேன். நான் வலைபதிவுகள் பத்திரிக்கைகளை விட பொது மக்களிடம் என்ன மாதிரியான தாக்கம் உருவாகி உள்ளது என்பதை தான் கவனமாக பார்த்துக் கொண்டு வருகின்றேன். பலரிடம் பேசிப் பார்த்த போது 90 சதவிகித மக்களுக்கு இது குறித்து ஒன்றுமே தெரியவில்லை.

    என்னமோ சொல்போன் ஊழலாம் என்கிறார்கள். அப்புறம் எந்த அரசியல்வாதி திருடாமல் இருக்கின்றான் என்று எளிதாக கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இதைவிட மற்றொரு ஆச்சரியம்.

    கடந்த ஒரு மாதத்தில் செல்லும் வழியில் நாலைந்து தெரு முனை அதிமுக பிரச்சார கூட்டத்தை சுவராஸ்யத்திற்காக ஒரு ஓரமாக நின்று கவனித்த போது பேசுபவர்களுக்கே முழுமையாக இது பற்றி தெரியவில்லை. சும்மா அடிச்சு தூள் கிளப்புறாங்க. அதிலும் ஒருவர் ஒரு கோடியே ஒரு லட்சத்து ஓராயிரத்து 99 ரூபாய் என்கிறார். ஒவ்வொருவருக்கும் இந்த தொகையை முழுமையாக தம் கட்டி சொல்வதற்குள் மறை கழண்டு போய் விடும் போல.

    வாய்க்கு வந்த எண்களை அடித்து விட்டு கடைசியில் கனிமொழி என்று ஊத்தவாய் சங்கதிகளை கூசாமல் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    என்ன செய்வது? கலைஞரை விஞ்ஞான திருடன் என்பதை இனிமேலாவது எவரும் சந்தேகம் இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்.

    ReplyDelete
  26. //ஒரு அடிப்படையான முக்கியமான வசதி ஒன்று, மேல்தட்டு, நடுத்தரம், கீழ்த்தட்டு என எல்லாத் தரப்பு மக்களையும் சென்று சேருமாறு செய்வதே அரசின் பணியன்றி, கிடைக்கும் வருமானத்தினைக் கணக்குப் பார்த்துக் கொண்டு, ஒரு சில பெரும் முதலாளிகள் மட்டும் தொழிலில், ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி, அந்த வசதியினை பலமடங்கு அதிக விலையில் மக்களிடம் விற்று, அப்பாவி மக்களின் பணத்தினைச் சுரண்டிடத் துணை போவதல்ல................ /
    அப்படிச் செய்தும் பெரும் பணம் முதலீடு செய்த தனவந்தர்கள் 2டீக்கு ஒரு டீ இலவசம். கஸ்டமருக்கு டீ இலவசம் அவர் வேறு யாருக்காவது டீ வாங்கிக் கொடுத்தால் அந்த டீக்கு மட்டும் காசு என்றெல்லாம் அள்ளி விடுகிறார்களே.... வருமானமில்லாமல் எப்படி இது முடியும்?? பிஎஸ்என்எல் அரசு நிறுவனம். அது துன்புறும் நட்டத்துக்கு நீங்கள் சொல்லும் லாஜிக் ஒத்து வரும். தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கில்லாது மயிரிழையைக் கூட ஆட்டமாட்டா. அரசின் கடமை தனியாருக்கு குறைந்த விலையில் விற்று மக்களை டெக்னாலஜி சென்றடையச் செய்வதல்ல. அத்தியாவசியத் தேவைக்கான சாலை முதல் தானியக் கிட்டங்கிகள் வரை முறையாகச் செய்ய தனியாருக்கு அரசு உதவுவது சரியாக இருக்கும். சோத்துக்கு இல்லாமல் பலர் சாகும் போது செல்போன் குறைந்த விலையில் தருவது எதற்கு? எமனுக்கு வந்து சேரும் தகவலை எமனுக்கு SMS செய்யவா??

    ReplyDelete
  27. \\ அப்படிச் செய்தும் பெரும் பணம் முதலீடு செய்த தனவந்தர்கள் 2டீக்கு ஒரு டீ இலவசம். கஸ்டமருக்கு டீ இலவசம் அவர் வேறு யாருக்காவது டீ வாங்கிக் கொடுத்தால் அந்த டீக்கு மட்டும் காசு என்றெல்லாம் அள்ளி விடுகிறார்களே.... \\
    அப்படிச் செய்ததால்தான் 25ரூபாயில் இருந்த டீயின் விலை 10ல் ஒரு பங்காகக் குறைந்துள்ளது என்பது உண்மைதானே....
    அப்படிச் செய்திராமல், நீங்கள் குறிப்பட்ட அந்த 20,000ரூபாய்க்கும் மேலே ஏலம் கேட்டவர்களுக்குக் கொடுத்திருந்தால் டீயின் விலை அதே ரூ25ல்தானே இருந்திருக்கும்.............
    \\ வருமானமில்லாமல் எப்படி இது முடியும்?? \\
    \\தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கில்லாது மயிரிழையைக் கூட ஆட்டமாட்டா. \\
    வருமானம் இருக்கலாம், ஆனால் புதிய கடைகளுக்கு உரிமம் வழங்கும் முன்னர், ஒரு டீயினை ரூ25க்கு விற்றுக் கொண்டிருந்தவர்களுக்குக் கிடைத்த வருமானத்துடன் ஒப்பிட்டால், இன்று கடைகாரர்களுக்கு அதில் 20ல் ஒரு பங்கு வருமானம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை அல்லவா?

    ReplyDelete
  28. \\அரசின் கடமை தனியாருக்கு குறைந்த விலையில் விற்று மக்களை டெக்னாலஜி சென்றடையச் செய்வதல்ல. \\
    (சற்றேறக்குறைய) 110கோடி இந்தியர்களில் 75-80கோடி இந்தியர்கள் உபயோகிக்கும் ஒரு பொருள் அல்லது டெக்னாலஜி மக்களுக்கு அத்தியாவசியமனதா? அநாவசியமானதா?
    அரசு ஒரு பொருளுக்கான விலையினைக் குறைப்பதால், நாட்டின் 80%மக்களின் மாதாந்திரச் செலவு குறைந்து, அதனால் அந்த80% மக்களும் பலனடையும் பட்சத்தில், அதைச் செய்ய வேண்டியது அரசின் கடமைதானே......... அரசு அதைத்தானே செய்தது.... மக்களும் பலனடைந்து கொண்டுதானே இருக்கின்றனர்....

    ReplyDelete
  29. \\ சோத்துக்கு இல்லாமல் பலர் சாகும் போது செல்போன் குறைந்த விலையில் தருவது எதற்கு? \\
    அரசு உடனடியாகக் கவனம் செலுத்தித் தீர்க்க வேண்டிய, தலையாய பிரச்சினை இது, கண்டிப்பாகத் தீர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்காது......
    ஆனால் அதற்காக 80%-90% மக்களுக்குப் பயன்படக் கூடிய நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான செயல்களான,
    பல்கலைக் கழகம் கட்டுதல்,
    சாலைகள் போடுதல்,
    நாட்டுப் பாதுகாப்பிற்கான ராணுவத் திட்டங்கள்,
    மருத்துவ ஆராய்ச்சிகள்,
    தகவல் தொடர்பு, தொலைத் தொடர்புக்குப் பயன்படும் விண்வெளி செயற்கைக்கோள் ஆராய்சிகள்
    உள்ளிட்ட இன்னபிற காரியங்களுக்கான செயல்களை அரசு செய்யவே கூடாதா என்ன? பெரும்பான்மை மக்களுக்கு நன்மை தரும் வகையில் செயல்படக் கூடாதா என்ன?

    ReplyDelete
  30. பொருளாதார நிபுணராகிவிட்ட பத்ரி அவர்களே...:)
    நீங்கள் ஏன் ஜப்பானின் அணுக்கரு கதிர்வீச்சு குறித்து எழுதவில்லை என்று ஆச்சரியம் எழுகிறது... உங்கள் core சப்ஜெக்டை மறந்துவிட்டீர்களா?

    ReplyDelete