சமண முனிவர்கள் எப்போதும் குன்றுகள் இருக்கும் இடமாகப் பார்த்து அங்கு வசிப்பது வழக்கம். இந்தக் குன்றில் சில சமணர் படுக்கைகள் உள்ளன. பல்லவர் காலத்தில் இந்தக் குன்றின் ஒரு பக்கத்தில் சில புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். எப்படிப் பல்லவர் காலம் என்று சொல்லமுடியும்? அந்தச் சிற்பங்களைப் பார்த்தால் அவற்றில் பல்லவர் கால நேர்த்தியை நம்மால் காணமுடிகிறது. கிட்டத்தட்ட மாமல்லபுரத்தை ஒத்த வடிவ நேர்த்தி.
அடுத்து ராஜராஜன் காலத்தில் குந்தவையின் கொடையைக் கொண்டு சோழர்கள் கால மாதிரியிலான கோவில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இந்தக் கோவில், குன்றினை ஒட்டி, சமதரையில் அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல், செங்கல், சுதை கொண்ட சோழ நாட்டு மாதிரியிலான கோவில். கோபுரங்கள். மண்டபம், சந்நிதி. சந்நிதியில் நேமிநாதருக்கான கல் சிலை. முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல் சிலை பின்னம் அடைந்த காரணத்தால் அது வெளியே வைக்கப்பட்டு சந்நிதியில் வேறு ஒரு புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து விஜயநகர ஆட்சிக் காலத்தில் குன்றில் வடிக்கப்பட்டிருக்கும் அழகான புடைப்புச் சிற்பங்களை மறைக்கும்விதமாக செங்கல், சுதைக் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் கோவர்தன புடைப்புச் சிற்பத்தை மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் கல் தூண்களால் ஆன கிருஷ்ண மண்டபத்தை இதற்கு இணையாகச் சொல்லலாம். இந்த செங்கல் சுதைக் கட்டடங்கள் சில அடுக்குகளால் ஆனவை. இங்குதான் விஜயநகரக் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று முற்றிலுமாக அழிந்துவிட்டுள்ளன. சில துண்டுகளை மட்டும்தான் காணமுடிகிறது.
மலைக்கு மேலே விஜயநகர அல்லது நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெரும் (18 அடி) மகாவீரர் புடைப்புச் சிற்பம் உள்ளது.
***
எனக்கு jain iconography தெரியாது. சமண புராணங்களும் தெரியாது. எனவே சில சிலைகளை அடையாளம் காண்பிப்பது கடினம். தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
முதலில் குன்றின்மீது செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைப் பார்ப்போம்:
திருமலை - பகுபலியும் சகோதரிகளும் (?) |
திருமலை - யார் எனத் தெரியவில்லை |
திருமலை - ஒரு தீர்த்தங்கரர் (யார்? நேமிநாதர்?) |
திருமலை - நாக அரசன்(?) |
பக்தி என்ற பெயரில் புடைவை கட்டி, நெற்றியில் குங்குமம் இட்டிருக்கும் கோலத்தையும் தாண்டி, இந்தப் புடைப்புச் சிற்பங்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட பல்லவ வளைவுகளைக் காணலாம். முதல் சிற்பம் ‘பகுபலியும் அவரது சகோதரிகளும்’ - இதில் பெண்கள் செதுக்கப்பட்டிருப்பது, மாமல்லபுரம் அர்ஜுன ரதத்தில் ‘அரச குமரியும் சேடியும்’, அல்லது ஆதிவராக மண்டபத்தில் ‘அரசனும் அவனது மனைவிகளும்’ ஆகியோருக்கு ஒப்பானதாகத் தோன்றும்.
மாமல்லை - அர்ஜுன ரதம் - அரச குமரியும் சேடியும் |
இந்த மலையடிவாரத்தில்தான் குந்தவை ஜீனாலயம் கோவில் உள்ளது. அந்தக் கோயில் கட்டப்படும்போது (11-ம் நூற்றாண்டின் ஆரம்பம்) இந்த புடைப்புச் சிற்பங்கள் திறந்தவெளியில் இருந்திருக்கும். இவற்றில் மேல் உள்ள குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் பின்னர் விஜயநகர காலத்தில் இந்தப் புடைப்புச் சிற்பங்களைச் சுற்றி சந்நிதிகள் கட்டப்பட்டு மூடிமறைக்கப்பட்டன.
திருமலை - புடைப்புச் சிற்பத்தின்மேல் எழுப்பப்பட்ட விஜயநகர காலத்துச் சந்நிதி |
அருகில் தரையில் கட்டப்பட்டிருக்கும் குந்தவை ஜீனாலயத்தின்:
குந்தவை ஜீனாலயத்தின் நுழைவாயில் |
திருமலை - குந்தவை ஜீனாலயத்தின் கோபுரமும் சிகரம் |
இந்தக் கோவிலில் ஆரம்பத்தில் வழிபாட்டில் இருந்த நேமிநாதர் சிலை (இப்போது உள்ளே வழிபாட்டில் இருப்பது வேறு சிலை)
குந்தவை ஜீனாலயம் - நேமிநாதர் (வழிபாட்டில் இல்லை) |
விஜயநகர காலத்தில் மலையோரப் புடைப்புச் சிற்பங்கள்மீது உருவாக்கப்பட்ட சந்நிதியில் பல ஓவியங்களும் வரையப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துபோய்விட்டாலும் சில துண்டுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. இவற்றில் பல கடந்த 20-30 ஆண்டுகளில் அழிந்துபோயுள்ளன என்பதுதான் சோகமே. 700 ஆண்டுகள் தாண்டிவிட்டன; ஆனால் அடுத்த பத்தாண்டுகளைத் தாண்டுவது கடினம்.
சமவசரணத்துக்குப் பின் நேமிநாதர் லக்ஷ்மிவரமண்டபத்தில் இருந்தபடித் தரும் பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் தேவர்கள், முனிவர்கள் |
யக்ஷி அம்பிகையாக உருவெடுத்த அக்னிலா (சோமசர்மனின் மனைவி) (இந்துக் கடவுள்களில் காளிக்கு ஒப்பானவள்) |
கூரையின் மேற்பரப்பில் ஓவியம் - இந்நாளைய ஷாமியானாகளுடன் ஒப்பிடுங்கள். |
மற்றொரு கூரை. பாரசீக விரிப்புக் கம்பளங்களைத் தோற்கடிக்கும் திறன்! |
சுவரில் வடிவங்களும் வண்ணங்களும் |
அக்னிலா/சோமசர்மன் கதை இதில் சுவாரசியமான ஒன்று. இடப் பற்றாக்குறை காரணமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன். முடிப்பதற்குமுன்... மலையின் மேல்பகுதியில் 18 அடி உயர தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. சிற்பத்தின் தரத்தின்படிப் பார்த்தால், நிச்சயம் பிற்காலத்தைச் சேர்ந்தது. தோள்பட்டைகள் சமமாக இல்லை. ஒன்று சற்று அதிகம் சாய்ந்துள்ளது.
18 அடி உயரம் |
திருமலையில் காணக்கிடைத்த கல்வெட்டுகளில் ஒன்று:
தமிழ்தான்... |
***
திருமலை பயணத்தின்போது திருப்பாண்மலை என்ற இடத்துக்கும் அருங்குன்றம் என்ற இடத்துக்கும் போயிருந்தோம். இவற்றைச் சுருக்கமாகவாவது அடுத்து எழுத முயற்சி செய்கிறேன்.
என்னுடைய அன்றாட வேலைப்பளுவுக்கு இடையே வலைபதிவில் எழுதுவது கடினம் என்று சொல்பவர்களை நினைக்கும் போது உங்கள் உழைப்பை காட்ட வேண்டும் போல் உள்ளது. பாதி சுஜாதா போல் செயல்படும் அளவிற்கு உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கதே.
ReplyDeleteYes, I completely agree with Joythigee. In fact, while reading this blog I thought the same and wanted to post the same comment which is posted by Joythigee. The mystery is, Badri, I don't know how you manage your Time?-Magesh
ReplyDeleteexcellent
ReplyDeleteநல்ல பதிவு. நிறைய உழைத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Badri,
ReplyDeleteVery Interesting info. Infact I studied in Vellore Thanthai Periyar College only. But not heard of this place at that time.
Regards,
Suresh
Really awesome efforts. Congrats.
ReplyDelete-jagan
//அந்தச் சிற்பங்களைப் பார்த்தால் அவற்றில் பல்லவர் கால நேர்த்தியை நம்மால் காணமுடிகிறது. கிட்டத்தட்ட மாமல்லபுரத்தை ஒத்த வடிவ நேர்த்தி.//
ReplyDeleteபத்ரி
நீங்கள் சிற்பசாஸ்திரத்தில் PHd பண்ணும் எண்ணம் உள்ளதா
/* குந்தவை என்ற ராஜராஜனின் தமக்கை இந்தக் கோவிலுக்குக் கொடை அளித்ததால் அதற்கு இந்தப் பெயர். */
ReplyDeleteபத்ரி இது சரியான தகவலா? ஏன் கேட்கிறேன் என்றால் ராஜராஜன் தன் மகள் ஒருவருக்கு குந்தவை என்ற பெயரையே வைத்திருந்தான். அவரா என்று தெரியவில்லை ஆனால் ராஜராஜனின் மகள் சமண மதத்திற்கு மாறி துறவியாக வாழ்ந்ததாகவும் பாலகுமாரனின் ‘உடையார்’-இல் வருகிறது. குந்தவை என்ற மகள் தான் சமணத்துறவி என்றால் அவர் பெயரில் இம்மடத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?
சாணக்கியன்: கல்வெட்டில் உள்ள ஆண்டைப் பார்க்கும்போது இது தெளிவாக ராஜராஜனின் சகோதரியை மட்டும்தான் குறிக்கிறது. அத்துடன் ராஜேந்திரனின் கல்வெட்டு தன் அத்தையின் கொடையைக் குறிப்பிடுகிறது (சரியான சொற்கள் ஞாபகம் இல்லை) என்றுதான் நினைக்கிறேன். வார்த்தைகளைத் தேடி எடுத்துப் பிறகு காண்பிக்கிறேன்.
ReplyDelete//எனக்கு jain iconography தெரியாது. சமண புராணங்களும் தெரியாது. எனவே சில சிலைகளை அடையாளம் காண்பிப்பது கடினம். தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்//
ReplyDeleteOne could identify the Tirthankarars with the associated icons.
1. Rishabha Bull
2. Ajitnath Elephant
3. Sambhavnath Horse
4. Abhinandannath Monkey
5. Sumatinath Red Goose (kronch pakshi)
6. Padmaprabhu Lotus
7. Suparshvanath Swas-tika
8. Chandraprabhu Moon
9. Pushpadanta Crocodile
10. Sheetalnath Kalpa-vriksha or ficus religiosa
11. Shreyansnath Rhino-ceros
12. Vasupujya female buffalo
13. Vimalnath Shukar
14. Anantnath Falcon
15. Dharmanath Vajra
16. Shantinath Deer
17. Kunthunath Goat
18. Arahnath Fish
19. Mallinath Jar
20. Munisuvrata Tortoise
21. Naminath Blue Water Lily or Blue Lotus
22. Neminath Conch
23. Parshvanath Snake
24. Mahaveera Lion
where where? For us 'English only' friends, please?
ReplyDeleteஅன்பு பத்ரி, நல்ல பதிவு. உங்களின் ஆர்வம் எங்களையும் தொற்றிகொள்கிறது.
ReplyDeleteஎனக்கு தெரிந்த செய்தி: பொதுவாக தீர்த்தங்கரர்கள் சிலைகளை, அதன் பீடத்தில் பொறித்திருக்கும் இலாஞ்சனை (சின்னம்) வைத்துதான் கண்டுபிடிக்க இயலும். (விதிவிலக்கு : ஸ்ரீ ஆதிநாதர் (முதல் தீர்த்தங்கரர் ஸ்ரீ ரிஷபர்) & ஸ்ரீ பார்ஸ்வநாதர்). இலாஞ்சனை இல்லாத தீர்த்தங்கரர் சிலை பொதுவாக ஆதிநாதராக கருதப்பட்டு, அதற்குரிய பூஜைகள் நடத்தப்படும். ஸ்ரீ பார்ஸ்வநாதருக்கு ஸ்ரீ தரனேந்திரன்/பத்மாவதி என்ற யக்ஷன்/யக்ஷி உண்டு. பார்ஸ்வநாதர் சிலையை பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடிக்க இயலும். அவருக்கு ஸ்ரீ தரநேந்திரன் நாக வடிவில் குடை பிடிப்பான். நீங்கள் படத்தில் "நாக அரசன்" என்று குறிப்பிட்டிருப்பது ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கரர். இன்றும் தமிழக ஜைனர்கள் வழிபாட்டில் இருக்கும் நிறைய கோவில்கள் வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணலாம்.
அன்புடன்
த.வர்த்தமானன்