சென்ற ஆண்டு (2011) செப்டெம்பர் மாதம் தென்னிந்தியத் திரைப்படச் சங்க அரங்கில் சஷிகாந்தின் ‘கேளாய் திரௌபதாய்!’ என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.
அப்போதே அதைப்பற்றி விவரமாக எழுதியிருந்தேன். இதனை முதலில் படித்துவிடுங்கள்.
இந்தப் படத்தை அக்டோபர் 6, 2012 அன்று தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை மாதாமாதம் நிகழ்த்தும் கூட்டத்தில் திரையிட்டோம். சென்ற வடிவத்திலிருந்து ஏழெட்டு நிமிடங்கள் வெட்டியுள்ளார் என்று தெரிந்தது. கொஞ்சம் வேகம் அதிகரித்துள்ளது. சிவ-அர்ஜுன சண்டையின்போதான சில profanities நீக்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.
|
கல்யாணராமன் படத்துக்கான முன்னுரையை வழங்குகிறார். |
இரண்டாவது முறையாகப் பார்க்கும்போதும் gripping என்றே சொல்வேன். இன்னும் பலமுறை பார்த்தாலும் சலிக்காது. ஓர் ஆவணப்படம் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.
|
படத்தின் இயக்குனர் சஷிகாந்த் |
எச்சூரில் நடக்கும் மகாபாரதக் கூத்துதான் ஆவணப்படத்தின் கரு. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களை எடிட் செய்வதில் இறங்கியிருக்கிறார் சஷிகாந்த். இரண்டாவது, ‘நினைவின் நகரம்’. இதன் முதல் கட் எடிட் வடிவத்தை ஏற்கெனவே தமிழ் பாரம்பரிய நிகழ்வு ஒன்றில் திரையிட்டிருந்தோம். மூன்றாவது பகுதி, மகாபாரதக் கூத்தின் அழகியல் பற்றியது.
|
ஆவணப்படத்தில் முத்துக்குமாரசாமி சில விளக்கங்களைத் தருகிறார். |
படத்தின் இறுதியில் பேசிய சஷிகாந்த், உண்மையில் தான் இதன் இயக்குனர் அல்லன், அந்த கிராமத்து மக்கள்தான் படத்தை இயக்கினார்கள் என்றார். முதல் இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர்கள்தான் எங்கு கேமராவை வைத்தால் எந்தக் காட்சி நன்றாக வரும், எது எங்கு நடக்கிறது என்று படப்பதிவுக்கு வழி காட்டத் தொடங்கினராம்.
|
காந்தி மையத்தின் இயக்குநர் அண்ணாமலை நிகழ்ச்சியின் இறுதியில் தன் கருத்துகளை முன்வைக்கிறார். |
சனிக்கிழமை திரையிடலின்போதும் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை. என்
பதிவிலும், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடைய பதிவுகளிலும் இதுபற்றிய
தகவல் இருந்தது. சஷிகாந்த் இந்தப் படத்தின் டிவிடியை அரங்கில் விற்பனை
செய்தார். சிலர் வாங்கிக்கொண்டனர். அவரிடமிருந்து இதனை வாங்கிக்கொள்வது
எப்படி என்று தகவல் கேட்டு எழுதுகிறேன்.
Giridhar, one of those present called quite excited after the programme saying how happy he was that he got an opportunity to watch this movie. I recently saw the movie for the second time in full and yet again felt amazed.
ReplyDeleteGripping. The Krishna Arjuna war or Arjuna's penance is an imporatant work in TN. Thevaaram, Bharavi's sanskrit work Kiratarjuniam in sanskrit which was composed when he was the court poet of Mahendra Pallava, The mamallapuram Arjuna's penance and the miniature of chila period & pallava period.
ReplyDeleteA must see and buy DVD
Sankaranarayanan