அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்?
நீண்ட விளக்கம் பின்னர். முக்கியமான கருத்துகள் மட்டும் இப்பொழுது.
- இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி ஆரம்பித்தது? வேதாந்தம் இல்லை அய்யா! அறிவியல் மூலமாக விளக்குகிறார். "Big bang" என்று சொல்லப்படும் பெரும் வெடிப்பு (பெரும் சிதறல்?) நடந்திருக்குமா? அந்த விளக்கம் தேவையா என்றெல்லாம் விளக்குகிறார்.
- "Black hole" என்று சொல்லப்படும் கருந்துளை என்றால் என்ன என்று ஆராய்கிறார்.
- காலம் என்பது என்ன? அது எப்பொழுது ஆரம்பித்தது? (பிரபஞ்சம் ஆரம்பித்த போதுதான் காலமும் ஆரம்பித்தது என்பதை நன்கு விளக்குகிறார்.)
- மனிதன் என்னும் அறிவுடைய ஒரு உயிரினம் ஏன் உருவானது?
- அறிவியல்-புதினம் எழுதுவோருக்குப் பிடித்தமான "future-travel" அதாவது எதிர்காலம்-செல்லல் என்பது நடக்கக் கூடியதா? எதிர்காலத்தை கணிக்க முடியுமா? (எதிர்காலம்-செல்லல், எதிர்காலம்-சொல்லல், இரண்டுமே முடியாது என்கிறார் thermodynamics ஆதாரத்தில்).
இந்தப் புத்தகம் தமிழில் பொழிபெயர்க்கப் பட வேண்டும், அனைவரும் படிக்க வேண்டும், பள்ளிகளில் பாடமாகவும் வைக்கப்பட வேண்டும்.
இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமும் இல்லாதது, முடிவும் இல்லாதது, காலம் என்பது எப்பொழுதுமே இருந்த, இருந்து கொண்டிருக்கிற ஒன்று என்று சொல்லும் நம் வேதாந்த சிந்தனைகள், கடவுள் பற்றிய நம் இந்தியச் சிந்தனைகள் ஆகியவற்றை இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு "காலம்-ஒரு வரலாற்றுச்சுருக்கம்" என்ற பெயரில் வந்துள்ளது.நீங்கள் சொன்னபடி இது பாடமாக வைக்கபடவேண்டிய புத்தகம் தான் ஆனால் இந்த புத்தகம் வந்திருப்பதாவது நம் நாட்டு பள்ளிக்கல்வி துறைக்கு தெரியாது.
ReplyDeleteநண்பரே, இந்த தமிழ் பதிப்பு எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? என்னுடைய மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் ksmanya1979@yahoo.co.in
ReplyDelete