Wednesday, June 09, 2004

இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.

குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் பாராளுமன்றத்தில் 7 ஜூன் 2004 அன்று ஆற்றிய உரை தொடங்குமுன்னர், சொன்ன கவிதை இது. அன்று காலை காலாற நடந்துகொண்டிருக்கும்போது இவருக்கு திடீரென்று தோன்றியதாம். திருக்குறள் ஒருசில (சிதம்பரம் பட்ஜெட் போடும்போது சொல்வார்) தவிர பாராளுமன்றத்தில் தமிழில் சொந்த சரக்கு எடுத்து விட்டவர் நம்மாள்தான் இதுவரை.

வாஜ்பாயி பிரதமராக இருந்திருந்தால் எசப்பாட்டு படித்திருப்பார் ஹிந்தியில்.

===

நேற்றைய கேள்விகளுக்கு 'match the following' பகுதிக்கு பலர் சரியான விடை சொன்னார்கள். ஆனால் யாருக்கும் அப்துல் கலாம் பெயர் தோன்றவில்லையா? எல்லோருக்கும் GKஇல் முட்டைதான்:-) பலரது கவிதைகள் நன்றாக இருந்தன.

4 comments:

  1. அப்துல் கலாம் அவர்கள் தன்னால் தமிழில் இந்தக்கவிதையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று சொன்னதாக மாலையில்தான் படித்தேன் உடனே பதில் எழுத முடியவில்லை

    ReplyDelete
  2. your writings are very nice
    i had just started with my blog (www.sugumar.com)
    but i dont know how to publish tamil content
    can you help me please !?

    keep thinking and writing, you are too good :)
    sugumar (sugumar_1975@yahoo.com)

    ReplyDelete
  3. அய்யோ, நிஜமாவே அந்தக் கூட்டத்தில் கலாமும் வந்தார்...டூ லேட் :)

    ReplyDelete
  4. ஜெயஸ்ரீ அக்கா, இதைக் கலாம் படிக்காம இருப்பார்னா நினைக்கிறீங்க? :) கண்டிப்பா ஒரு நாள் மரத்தடிக்கு வருவார்!!

    ReplyDelete