என்னுடைய இந்தப் பதிவு மீண்டும் மீண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இப்பொழுது பெயரை மாற்றி மீண்டும் இடுகிறேன். நாளைதான் பார்க்க வேண்டும், இன்னமும் இருக்கிறதா என்று.
ஒரு மாநில அரசு அம்மாநில மொழியை கட்டாயமாகப் புகுத்தலாம் - உச்ச நீதிமன்றம் - மே 31, 2004
ரீடிஃப்.காம் இணையத்தளத்திலிருந்து
மஹாராஷ்டிர மாநில அரசு அம்மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் கட்டாயமாக மராத்திய மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் பிறப்பித்திருந்ததாம். அதனை எதிர்த்து ஒரு குஜராத்தியப் பள்ளி வழக்குத் தொடர்ந்திருந்தது. விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் மேற்படி சட்டம் மொழிச்சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவில்லை என்றும், இத்தகைய சட்டம் மாநிலத்தின் பெரும்பான்மை நலனைக் கருத்தில் கொண்டே இயற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் தங்கள் கருத்தில் "ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டே, அம்மாநிலத்தின் மொழியைக் கற்க மாட்டோம் என்று எதிர்ப்பது மொழிச்சிறுபான்மையினரை பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தும்; மாநிலம் மொழிவாரியாக பின்னமாகும். இது தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடாகும்." என்றும் சொல்லியுள்ளனர்.
தமிழகத்தில், தமிழ் மொழியைத் தாய் மொழியாக உள்ளவர்களே தமிழை ஒரு பாடமாகப் படிப்பதில்லை. அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக ஃபிரெஞ்சு, சமஸ்கிருதம் என்று தேர்வு செய்து கொள்கிறார்கள். இதனால் தமிழ் மொழியும் தகராறு; படிக்கும் புது மொழியிலும் தொடக்க நிலையைத் தாண்டுவதில்லை.
தமிழக அரசும் தமிழகப் பள்ளிகளில் படிக்கும் அனைவரும் கட்டாயமாகத் தமிழையும் ஒரு மொழியாகப் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வருமா?
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
Badri - not only the blogs disappear. But at times, it is impossible to comment here. Nothing happens when I clieck 'comment' hyperlink (most of the times, obviously, not always).
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஇப்படியெல்லாம் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தால், அப்புறம் உங்களை மொழிவெறியர் என்று சொல்லிவிடுவார்கள்; பொடா மாதிரி ஏதாவது ஒரு தீவிரவாதச் சட்டம் கொண்டுவந்து உங்களை உள்ளே போடவேண்டும் என்று கூடச் சொல்லுவார்கள். நீங்கள் ஒரு பாரத்வாசி இல்லை என்று ஆகிவிடும்.
நல்லதற்குக் காலம் இல்லை. அப்புறம் உங்கள் பாடு. :-)
அன்புடன்,
இராம.கி
அன்பு இராம.கி: என் தமிழ் பற்றிய கருத்துகள் சில சமயம் இரண்டு பக்கத்திலும் அடிவாங்க வைக்கிறது. தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்படுவதில் நிசமாகவே ஏதேனும் தமிழுக்கு பயனுள்ளதா, இந்த அறிவிப்பு தேவைதானா என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு பல நல்ல பதில்களும், மேலதிக விவரங்களும் கிடைத்தன. சில திட்டுகளும். இந்த 'தமிழ் கட்டாயப் பயில்விப்பு' அவசியம் என்ற என் கருத்துக்கும் பல எதிர் கருத்துகள் சில இடங்களில் கிடைக்கின்றது. இதையெல்லாம் பார்த்தால் முடியாது:-)
ReplyDeleteநான் பல வருடங்களாகவே தமிழிலேயே (அல்லது அந்தந்தப் பிராந்திய மொழிகளிலேயே) பிள்ளைகளுக்கு, குறைந்தது ஐந்தாவது வரையிலுமாவது, கல்வி கற்பிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நடைமுறையில் என் மகளுடன் தமிழிலேயே பேசிப்பழகி வருவதில் அவளொத்த குழந்தைகளிடையே (அவள் வகுப்பில் உள்ள குழந்தைகளோடு ஒப்பிடுகையில்) அதிக அளவிற்கு அவளிடம் கிரகிப்புத்தன்மையும், சொல்லாளுமையும் இருப்பதை கவனிக்கிறேன். ஆனால் இதனால் பள்ளியில் (இத்தனைக்கும் படிப்பது வெறும் LKG->UKG) அவளது ஆசிரியர்களுடன் எனக்கு எப்பொழுதும் சண்டைதான்.
இப்பொழுதிருக்கும் பள்ளிகளுக்கு நல்ல மாற்றாக தனியார் பள்ளிகள் தமிழிலேயே சொல்லிக்கொடுத்தால் அங்கு குழந்தைகளை சேர்க்க வசதியாயிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் சென்னையில் வழியில்லாமல் இருக்கிறது.
வெங்கட்: bloggerஇன் மறுமொழி வசதி அவ்வளவு திருப்திகரமாக இல்லை. புகார் செய்துள்ளேன். பார்க்கலாம். இல்லாவிட்டால் வேறிடத்திற்கு மாற வேண்டியதுதான்.
ReplyDeleteபத்ரி, உங்கள் வலைப்பதிவுக்கும் இந்த "காணாமல் போகும் வைரஸ்" வந்துவிட்டதா? ஹ்ம்ஹ¤ம்.. blogger support பிரயோசனம் இல்லை. அதுசரி, தொலைந்து போன comment ஐ மறுபடி ஹாலோஸ்கேனிலிருந்து எடுத்துப்போடலாம் என்றால் எழுத்துரு மாற்றம் செய்ய முடியவில்லையே? தூஊ, செவ்வகம், ஜிலேபி என்று பல டிசைன்கள் :-(
ReplyDeleteஅது போகட்டும்; உங்கள் பதிவுக்கு முதலில் பின்னூட்டம் கொடுத்திருந்த ஜெயஸ்ரீயின் கருத்துக்கு பதில் எழுத முற்பட்டால் comment பெட்டி வேலை செய்யவில்லை. பின்னர் அதைத் தூக்கி "மரத்தடியில்" போட்டுவிட்டு, மறு நாள் பார்த்தால் மொத்தமாக யாஹ¥ குழுமம் அத்தனைக்கும் ஏதோ சங்கடம் வந்துவிட்டது போலிருக்கிறது. ஒன்றையுமே காணோம். ஆனாலும் விடாமல் அன்று எழுதியதை மறுபடியும் இங்கே தருகிறேன்.
"தமிழ் நாட்டில் தமிழர்களுக்கே தமிழ் மொழி தெரியாமல் இருப்பது கவலையளிக்கும் விஷயம்தான். அதே சமயம், பல மாநிலங்களில் வசிக்க நேரும் குழந்தைகள் பல மொழிகளைக் கட்டாயப் பாடமாக எடுத்துக் குழம்புவதும் சிந்திக்க வேண்டிய பிரச்சனை. இதற்கு ஒரு வழி, அவரவர் தங்கள் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக பள்ளிகளில் தொடர்ந்து பயிலும்படி இருக்கலாம். ( சிங்கப்பூரில் இப்படி இருக்கிறது.) எங்கு சென்றாலும் தாய் மொழியில் புலமை இருக்கும். ( வீட்டில் பேச்சுப் பழக்கமும் இருக்க வேண்டும்) ஆங்காங்கே வேறு மாநிலங்களில் மூன்று வருடத்துக்கொரு முறை மாற்றலாகிப் போகும்போது அந்தந்த மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொள்ளலாம் - வட்டார மொழி, சூழ்நிலை காரணமாக தானாகவே எளிதில் வந்துவிடும்."
see my comments in
ReplyDeletehttp://ravisrinivas.blogspot.com