என் பெண் பள்ளியில் கற்றுக்கொண்டு வந்த ஒரு சிறுவர் பாடல் இங்கே:
பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேலே ஊர்வலமாம்
ஒட்டகச் சிவிங்கி நாட்டியமாம்
[நடுவில் இரண்டு வரிகள் என் பெண்ணுக்கு சரியாகச் சொல்ல வரவில்லை. யாருக்காவது தெரியுமா?]
தடபுடலாகச் சாப்பாடு
தங்கத்தட்டில் தாம்பூலம்
தாலிகட்டும் வேளையிலே
மாப்பிள்ளைக் கூட்டம் காணோமாம்
பக்கத்து வீட்டுக்குச் சென்ற பூனை
பாலைத் திருடிக் குடித்ததாம்
பார்த்து விட்டார் பெண்ணின் தாயார்
பலத்த சத்தம் போட்டாராம்
வேணாம் இந்தச் சம்பந்தம்
வெட்கக் கேடு போய் வாரும்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
18 hours ago
அட, சூப்பராயிருக்கே பாட்டு. குழந்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளைப் பழக்கம் செய்ய இது ஒரு நல்ல உத்தி. பாட்டும், ஆசிரியர் நடித்துக் காட்டி சொல்லித் தரும் விதமும் , குழந்தைகளுக்கு பிடித்துப் போய் விட்டால், அப்படியே கப்பென்று பிடித்துக் கொள்வார்கள். இந்த மாதிரி தமிழ்ப் பாட்டெல்லாம் கூட பள்ளிகளில் சொல்லித் தருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
ReplyDeleteதூண்டப்பட்ட பாப்பா பாட்டு :-)
ReplyDeleteBadri,
ReplyDeletesorry for using this post to comment on your article on cricket telecast rights in samachar-tamil.
It was well written article covering good details on business angle of Zee, Sony, Star etc. I expected something about the quality of coverage as well which you did not touch upon. The quality of coverage of international matches in India and domestic matches (Ranji, Duleep, Deodhar..) have to be considered. Doordarshan's coverage quality (inspite of outsourcing the crew/equipments/commentary/logistics) was extremely poor in last 5 yrs. ESPN / Star scores very high in viewer involvement or passion and quality of commentary team and style compared to Sony Max or Ten sports. And all these mainly due to Harsha Bogle & team of professional and knowledgeable cricketers.
Even domestic matches were covered comparatively better by ESPN/Star few years back. Zee is very poor in quality of telecast or the set of professionals they will attract. The signal quality of Zee is also very poor.
Look at the way Star covered recent SL onedayers in Hindi with Shekar Suman as anchor. He may be popular but his coverage/anchorage was targeting BIMARU states with only hindi cinema/politics comments than about cricketing finesse which Gavaskar or Harsha or Boycott or Richie Benaud covers..
Of all, Channel 9 telecast of Australian summmer series is best while Sky in UK is innovative every year. Remember they had moving camera in boundary line - present score display in bottom of screen etc
- Mahesh
மஹேஷ்: quality of coverage - இரண்டு வகைப்படும்.
ReplyDelete1. ஆட்டத்தை அப்படியே பிடித்து நேர்முகமாக அனுப்புவது - live telecast.
2. நேரடி ஒளிபரப்பைத் தவிர்த்து கூட ஒட்டவைக்கும் சமாச்சாரம் - அங்கு மந்திரா பேடி நூடுல்ஸ் மேலாடை அணிந்து வந்து மோகனப் புன்னகை செய்யலாம், அல்லது ஹர்ஷா போக்ளே குழைந்து குழைந்து பேசி எதிரே உள்ள கிரிக்கெட் வீரர் மனதில் உள்ளதை வெளியே கொண்டு வரலாம்.
ஐசிசி விதிமுறைகள் நேரடி ஒளிபரப்பு என்ன தரத்தில் இருக்கவேண்டும் என்றுமட்டும்தான் சொல்கிறது. அந்தத் தரத்தில் இருந்தாலே போதுமானது. அந்த வகையில் ஜீ கூட மூன்றாவது ஆசாமி யாரையாவது வைத்துத்தான் நேரடி ஒளிபரப்பைச் செய்ய முயல்வர் - TWI, Octagon CSI, WSN என்று சிலர் உள்ளனர். ஹர்ஷா கிடைக்க மாட்டார். அவருக்கு இ.எஸ்.பி.என்னுடன் தனி ஒப்பந்தம் உள்ளது. அதுபோலவே கவாஸ்கரும் கிடைக்க மாட்டார். அதனால் என்ன? டென் ஸ்போர்ட்ஸ் ஒரு சஞ்சய் மஞ்ரேகரைப் பிடித்தது போல ஜீக்கு வேறு யாராவது கிடைப்பார்கள் (மனீந்தர் சிங்? :-)
ஓரளவுக்கு மேல் என்னமாதிரியான கவரேஜ் வேண்டும் என்று ஒவ்வொரு சானலும்தான் முடிவு செய்யவேண்டும்.
தனியாளாக என்னைக் கேட்டால் எனக்கு இ.எஸ்.பி.என் தான் பிடிக்கிறது.
===
ஜீ சிக்னல் நன்றாக இல்லை என்றீர்கள். அது தாற்காலிகத் தொல்லைதான். டிரான்ஸ்பாண்டர் மாற்றினால், செயற்கக்கோளை மாற்றினால் அதையெல்லாம் சரி செய்யலாம். DTHஇல் அதெல்லாம் சரியாகி விடும்.