சென்னை CASஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
* இனி போகோ (POGO) சானல் மாதம் ரூ. 10 ஆகும். செட் டாப் பாக்ஸ் இல்லாத மானிடர்களுக்கு சானல் கிடைக்காது.
* The History Channel - இப்பொழுதைக்கு இலவசமாம். ஆனால் சுமங்கலி கேபிள் விஷனில் (அதாங்க, நம்ம தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரோட குடும்ப நிறுவனம்) ஒரு குறிப்பிட்ட பேக்கேஜ் வாங்குபவர்களுக்குத்தான் இந்த சானல் கிடைக்கும்.
* சுமங்கலி கேபிள் விஷன் வழியாக செட் டாப் பாக்ஸ் வைத்திருக்கும் மாந்தர்களுக்கு ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் இரண்டும் கிடைக்காது. தேடிப்பார்த்து அலுத்துப்போகலாம். ஆனால் அவர்களிடமிருந்தே செட் டாப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சானல்கள் கிடைக்கின்றன.
* விண் டிவி, தமிழா டிவி போன்றவையும் சுமங்கலி கேபிள் விஷனில் கண்ணுக்குத் தெரிவதில்லை. எங்கோ சமீபத்தில் படித்தது: செயற்கைக்கோள் ஒளிபரப்புக்கு காசு கட்ட முடியாததால் தாற்காலிகமாக இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று.
* டிஸ்னி சானல்கள் இரண்டு - அதில் ஒன்று சிறுவர்களுக்கு (டூன் டிஸ்னி) - சீக்கிரமே வரப்போகிறது. ஸ்டார் வழியாக வரும் இவை இலவசமாகக் கிடைக்காது.
* ஸ்ப்லாஷ் என்று பெண்டாமீடியா நடத்தி வந்த சானல் சுமங்கலி கேபிள் விஷனில் காணக்கிடைக்கவில்லை. இந்த சானல் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்பட்டது என்று கேள்விப்படுகிறேன். இழுத்து மூடிவிட்டார்களா அல்லது சு.கே.வி யால் ஒதுக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. [பெண்டாமீடியாவின் The Legend of Buddha, அனிமேஷன் படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் உள்ளது என்ற விஷயம் தெரியுமல்லவா?]
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
19 hours ago
செட்டப் பாக்ஸ் இல்லாமல் சுமங்கலி கேபிள் இணைப்பு வழியாகத்தான் டிவி நிகழ்ச்சிகளை பேட்டையில் பார்த்து வருகிறோம். விண் டிவியும், தமிழன் டிவியையும் இப்போதும் பார்க்க முடிகிறது. Splash எனப்படும் பிரமாதமான சேனல் போன மாதம் வரை கண்ணுக்கு தெரிந்தது. உருப்படியான சேனல் அது. ஏனோ கவனிக்கப்படாமலேயே போய்விட்டது!
ReplyDelete