Friday, November 12, 2004

ஜயேந்திரரும், வீரப்பனும்

ஜயேந்திரர் அக்டோபர் 30 அன்று: என்னை வீரப்பன் கடத்திக்கொண்டு போய், தமிழக, கர்நாடக அரசுகளிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்தான் என்று வெளியான தகவல்கள் பற்றி எனக்குத் தெரியும்...

வீரப்பன் (இன்று): சாமியோவ், நானெல்லாம் யாரையாவது கொலை செய்யணும்னா நேரா துப்பாக்கி எடுத்து டுபுக்குன்னு சுட்டுருவேனுங்க. ஒங்கள மாதிரி மெட்ராஸ்லேர்ந்து கூலிக்கு ஆளுகள கொணாந்து செய்ய மாட்டேனுங்க! ஒங்களக் கடத்திக் கொணாந்தேன்னா, நீங்கள்ள சாமி என்ன ஆள வச்சுப் போட்டுத் தள்ளிருப்பீங்க!

இன்றைய செய்தி: காஞ்சிபுரம் சங்கர ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயேந்திரரின் cultural dictatorship பற்றிய என் முந்தைய பதிவுகள்: ஒன்று | இரண்டு

14 comments:

  1. இப்போதுதான் ஆஃபீஸ் வந்து இந்த செய்தியை படித்தேன். தமிழக வறலாற்றில் மிக முக்க்கியமான நிகழ்வாக தெரிகிறது.

    A group of DMK volunteers assembled in front of the mutt and burst crackers to celebrate the arrest, even as some devotees, who were yet to come to terms with the arrest of their religious head, trickled into the mutt premises.

    When asked by UNI, a DMK volunteer said, "When the Jayalalithaa Government arrested DMK Chief M Karunanidhi, at midnight on June 30, 2002, the Mutt Staff came out and burst crackers to celebrate it".

    "It is our turn now", he quipped and burst crackers.

    இது எப்படி இருக்கு?!

    ReplyDelete
  2. அப்படி நம்பவில்லை. ஆனாலும் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்தான்.

    ReplyDelete
  3. அறிவித்துக்கொள்ளாத அரசியல்வாதியாக இருந்தார். சிறை செல்வது ஒன்றுமட்டுமே அவர் செய்யாதது. அதையும் செய்தாச்சு. இனி அடுத்து தேர்தலிலும் நின்றுவிட்டால் சுற்று முழுமையாகி நாடு சுபிட்சமடையும்.
    மூர்த்தியை சொல்வது நடக்கும் என்று நானும் நம்பவில்லை. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் போய், நீதி மன்ற விஷயத்தில் (வருடக்கணக்காக) காத்திருந்து தீர்ப்பை பார்த்து அறிந்துகொள்வதே உண்மை;-)

    By: காசி

    ReplyDelete
  4. மூர்த்தி சொன்னது போல் நடக்காது என்றே தோன்றுகின்றது. காசி, கலக்கல் கமெண்ட்.
    பத்ரி, உங்க பதிவு படிச்சுட்டு அடக்க முடியாம சிரிக்கின்றேன்.
    பாலாஜி-பாரி

    By: பாலாஜி-பாரி

    ReplyDelete
  5. நம்ம பரட்டை(அதாப்பா இந்த தேர்தல் வந்தா இல்ல புதுசா படம் எடுத்தா தமிழனுக்கு கருத்து சொல்லுவாரே ரசினிகோந்த்) ஒரு 4 நாளைக்கு முன்னால தைரியலட்சுமி பத்தி பேசுனப்பவே ஏதோ நடக்க போவுதுன்னு நினைச்சேன் பார்த்தா நம்ம பெரியசாமிய(அதாப்பா பெரியவா) அவள உள்ள புடிச்சி போட்டுட்டா. எனக்கு என்னமோ அம்மாதான் கல்கி அவதாரமோன்னு......

    By: முதல்வன்

    ReplyDelete
  6. ஏதோ வகையான ஆதாரம் சிக்கியிருக்கிறது. இல்லையென்றால் இந்த அளவுக்கு கைது நடவடிக்கையில் எல்லாம் இறங்கியிருக்க மாட்டார்கள். மேல் மட்டத்தில் இந்த விஷயம் பற்றி சில நாட்களாகவே பேச்சு இருந்திருப்பதாக தெரிகிறது. கருணாநிதி மற்றும் சோவின் பேட்டிகள் இதனை உறுதி செய்கின்றன.

    சோவின் ரிடிஃப் பேட்டி: http://in.rediff.com/news/2004/nov/12kanchi3.htm

    இரவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அநாவசிய பதட்டங்களை தவிர்ப்பதற்க்காக என்றே நான் நினைக்கிறேன்.

    By: ராஜா

    ReplyDelete
  7. காவல்துறையின் இச்செயல் பாராட்டுக்குரியது. அரசியல்/மதவாதிகளின் குறுக்கீடு (+/-) இல்லாமல் விசாரணையும் நடந்தால் சரிதான்.

    ReplyDelete
  8. இந்தக் கைதால் காவல்துறையின் மதிப்பு மேலும் கூடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் குறுக்கீடுகளின்றி காவல்துறையை நேர்மையாகச் செயல்பட அனுமதித்தால் பல நல்ல காரியங்கள் நடக்கும்.

    ReplyDelete
  9. It's unfortunate that Tamil Nadu is still under the grips of atheistic characters like karunanidhi. Did he not say Hindus are thiefs? No wonder it continues to remain a third world country. I wish Tamilians could be like Americans who always elect people with strong religious values.

    By: anonymous

    ReplyDelete
  10. I'm deeply saddened by by tha fact that none of the bloggers raised a protest in the manner which the arrest was carried out , with commandos having loaded guns . He's the most liberal Sanyasi in the recent times among his peers the simailar maThas . Some may have misused his "Liberal" stand. He unlike his predessesors tried to involve all sections of the soceity in the mutt activities. One must not forget the good deeds carried out by the mutt. Sankara Nethralaya is one such.

    It's very easy to be victim of false propaganda ,it takes a strong will to be on the side of dharma and truth.

    Lets pray the almighty for the truth to prevail in a nation that was cradle for the worlds greatest religions.


    By: Seshadri Ramani

    ReplyDelete
  11. திரு செயேந்திரனின் கைது கண்டிப்பாக இந்துக்களிடையே ஒரு பெரிய பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என்று நினைக்கின்றேன். இங்கு இத்துத்துவா வெறியர்களைப் பற்றி குறிப்பிடவில்லை. அவர்கள், செயேந்திரன் கையும் களவுமாக பிடிபட்டிருந்தாலும் அவரின் குற்றத்தை மறுக்கவே செய்வர். அவர்களை விட்டுவிடுவோம். ஏனையோர்? கலியுகம் என்று மன ஆறுதல் கொள்ள வேண்டியதுதான். இந்நிகழ்வு சிந்தனைப் புரட்சிக்கு வழி வகுத்தால் நலம். அதுவே, குழியை இன்னும் ஆளமாக தோண்ட உந்தினால்?

    என் மனைவி (ஒரு பிராமணப் பெண்) சங்கதி கேட்டது முதல் மிகுந்த கவலைக் குள்ளாகிவிட்டாள். அவளைப் பொருத்தவரை செயேந்திரன் கடவுளுக்குச் சமமானவன். அவனையும் கொலைக் குற்றத்தையும் தொடர்புப் படுத்திப் பார்ப்பதையே ஒரு பாவமாகக் கருகிறாள். வெந்த புண்ணில் ஏன் வேள் பாய்ச்சுவானேன் என்று வாயை மூடிக்கொண்டிருக்கின்றேன். அப்படி திரு செயேந்திரன் இக்கொலைக்கு உதந்தையாக இருந்திருந்தால், அவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். (அதிலும், அவனுக்கு அதிகபட்ச தண்டனையே பொருந்தும்.) மனிதரில் மானிக்கமாக விளங்க வேண்டியவர்களே கயவர்களாக, கொலையாளிகளாக மாறினால், பாமரனுக்கு ஏது விடியல்?

    இருப்பினும், சட்டம் தன் வேலையைச் செய்ய அனுமதி வழங்கப்படுமா? எனக்கு நம்பிக்கையில்லை. கலைஞர் கொஞ்சம் கவனமாக இருப்பதே நலம்.

    By: செழியன்

    ReplyDelete
  12. Check this out: http://in.rediff.com/news/2004/nov/13agn1.htm

    (I hope we'll learn the full truth on this matter.)

    By: செழியன்

    ReplyDelete
  13. அப்படியே பிரசன்ன வெங்கிடேஸ்வர சதுர்வேதி ஸ்வாமிகளைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்க. அப்பதான் ஐயர், ஐயங்கார் என்கிற இருவர்களுக்கும் நீங்கள் நடுநிலையாளராகத் தெரிவீர்கள் :-) இல்லைன்னா "இணையத்தில் ஐயங்கார் கோஷ்டி" என ஒரு குழு உடனே கிளம்பிவிடும்..

    - குமார் வி

    By: Kumar V

    ReplyDelete
  14. பிரசன்ன வெங்கடேஸ்வர சதுர்வேதி செக்ஸ் சாமியார் புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் என்பவரிடம் வேதங்கள் கற்றுக்கொண்டார் எனக் கேள்விப்பட்டேன். அது ஒன்றுதான் அவருக்கும் ஐயங்கார்களுக்குமான உறவு என்றும் கேள்விப்படுகிறேன்.

    மற்றபடி ஐயங்கார்கள் என்றால் உசத்தி இல்லை...

    ReplyDelete