வெள்ளிக்கிழமை (15 ஏப்ரல் 2005) அன்று சென்னையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பல தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டனர்.
அதில் தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியும் உள்ளது. இன்று மாலை எனக்கு அந்தக் குறுந்தகட்டின் நகல் கிடைத்தது.
இன்று காலையே நாராயண் அந்தக் குறுந்தகட்டில் உள்ள ஃபயர்ஃபாக்ஸ் பற்றிக் கேட்டிருந்தார். அது முகுந்த் (தமிழா குழு) செய்ததாக இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாகச் சொன்னார். எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. எனவே மென்பொருள் சிடி கையில் கிடைத்ததுமே முதலில் நான் பார்வையிட்டது அதைத்தான்.
ஈயடிச்சான் காப்பி என்று சொல்வார்களே, அதைப்போல இருந்தது. இது முழுக்க முழுக்க முகுந்த் மற்றும் அவரைப்போன்ற தன்னார்வலர்களின் வேலை. ஆனால் CDAC செய்தது என்று சொல்லியிருக்கிறார்கள். முகுந்த் கொடுத்த பொதியில் உள்ள தவறுகள் கூட இதில் அப்படியே வந்துள்ளது. உதாரணம் "மாலுமி கருவிப்சட்டம்" - அதாவது 'ச்' வருவதற்கு பதில் 'ப்' தவறாக உள்ளது. ஒரே இடத்தில்தான் முகுந்த் செய்யாத ஒரு மொழிமாற்றம் (Close = மூடு) வந்துள்ளது என்பது மேலோட்டமாகப் பார்த்ததில் தெரிய வந்தது.
ஆனால் இந்தக் குறுந்தகட்டில் முகுந்த், மற்றும் தமிழா குழுவினர் பெயர்கள் இல்லை. அவர்கள் செய்த வேலை அங்கீகரிக்கப்படவில்லை. இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதுபற்றி மேலே விசாரிக்க முகுந்திடம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவர் இதுபற்றிய மேலதிக விவரங்களை அறிவாரா என்று தெரியவில்லை. அவரிடமிருந்து இதுவரையில் பதிலில்லை.
அதைப்போலவே ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்ப்படுத்துதலிலும் அதிகாரபூர்வமாக முகுந்த்தான் ஈடுபட்டுள்ளார். ஆனால் CDAC தானாக ஓர் ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்க் கோப்பை வெளியிட்டுள்ளது. இந்த forking தேவையா என்று தெரியவில்லை. நான் இன்னமும் ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளைச் சோதனை செய்யவில்லை. ழ கணினி குழுவினர் ஓப்பன் ஆஃபீஸைத் தமிழ்ப்படுத்துவதில் முனைந்தபோது ஏன் அவர்களும் முகுந்த்/தமிழா குழுவினருடன் இணைந்து செயல்படக் கூடாது என்றொரு பிரச்னை எழுந்தது.
இந்திய அரசு நிறுவனம் தன்னார்வலர்களின் செயல்களைக் கேவலமாக நினைக்கக் கூடாது. தன்னார்வலர்களைத் தூண்டிவிடுதலே இந்தியாவுக்கு நல்லது.
பிற மென்பொருள்களைப் பார்வையிட்டபின் நாளை எழுதுகிறேன்.
கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள்
4 hours ago
i am not surprised by this.i dont know whether they ever consulted the state govt. or the other groups working in tamil computing
ReplyDeleteon the software to be made available or on avoiding duplicating what others have done.
from what appears in the press it seems that they want to claim and project this as an initiative of the DOT, perhaps, as if they are the first to provide such software in tamil.i wonder whether DOT is aware of who is doing what in tamil computing. who knows this may be claimed as one of the achievements of UPA govt , with DMK taking due credit. :)
எதையும் வைத்து அரசியல் பண்ணுவது இன்றைக்கு இதிலும் தொடர்கிறது. சிடியிலும் சிங்கும்,சோனியாவும், தாத்தாவும், பேரனும் சிரிக்கிறார்கள். ஆனால் உள்ளே இருப்பதென்னவோ சுட்டபழம்தானா? இம்மாதிரி நிகழ்வுகள் தமிழ்க்கணிமைக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படமுடியாது.
ReplyDeleteஹிந்துவில் தலையங்கம் பார்த்தீங்களா? ஒரேயடியாக கலாநிதி மாறன் சொன்னதை சாதித்துவிட்டார் என்பதுபோல வந்திருக்கிறது.
அட, அது தயாநிதி மாறன்... சன் டிவி இல்லாத வீடு நம்முது, அதனால் இன்னும் மூழுதாய் மூளைச் சலவை ஆகலை, பெயர்கள் மனதில் பதியலை. (எப்படி சப்பைக்கட்டு?)
ReplyDelete/அவர்கள் செய்த வேலை அங்கீகரிக்கப்படவில்லை/
ReplyDelete:O
/ஒரேயடியாக கலாநிதி மாறன் சொன்னதை சாதித்துவிட்டார் என்பதுபோல வந்திருக்கிறது./
இந்து மருமகன் அல்லவா? ;-)
பத்ரி, ஏற்கனவே உங்களுடன் இதுப்பற்றி பேசியிருந்தாலும், இது இணைய மக்களுக்காக. முதலில், தமிழ்க்கணிமையில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பாததே மிகப்பெரிய தவறு. உள்ளே போனவர்கள் அனைவருமே மென்பொருள் தந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள். இதற்கு சன் டிவியில் விளம்பரம் வேறு. ஆக, இது திட்டமிட்ட , தமிழ்க்கணிமையை அரசியாலாக்கும் முயற்சி. போகட்டும். அரசியலாக்கினாலும், ஏதெனும் உருப்படியாக செய்திருந்தால் மன்னித்து விடலாம்.
ReplyDeleteநான் ஏற்கனவே சொன்னப்படி, கணித்தமிழ் சங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் TAM,TAB பிரியர்கள். அவர்கள் இன்னமும் 20 வருடங்கள் ஆனாலும், ஒருங்குறி சரிவராது என்றுதான் சொல்லுவார்கள். காரணம், கணித்தமிழ் சங்கத்தின் தலைவர் மனோஜ் அண்ணாதுரை (சென்னை கவிகள்) இன்னமும் அவர்களின் சக்தி அலுவலக ஸ்யுட்டில் ஒருங்குறியில்லை. ஆக, உலகம் முன்னேறினாலும், இவர்கள் அங்கேயேதான் இருப்பார்கள். எல்லா இணைய மாநாடுகளிலும் தீராத பிரச்சனையிது. ஒருங்குறியின் பங்கீட்டில் குறைபாடுகள் உண்டெனினும், அதை எவ்வாறு சீர்செய்ய வேண்டும் என்று பார்க்கவேண்டுமே தவிர அதை ஒதுக்கமுடியாது.
200 எழுத்துறுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக படித்தேன். எல்லாம் டேம்,டேப் மயமாகதான் இருக்கும். அவர்களால், ஒருங்குறி எழுத்துருக்கள் தரமுடியாது, மாட்டார்கள். பயர்பாக்ஸ் தமிழ் என்பது முழுக்கமுழுக்க முகுந்தின் தமிழா குழுவின் உழைப்பும்,வியர்வையும் ஆகும். முகுந்தோடு இதை வணிகமயமாக்குதலைப் பற்றி சில மாதங்களாக பேசிக் கொண்டிருப்பதால், இதன் பின்புலம் முழுவதுமாக தெரியும். இதைத் தாண்டி, தமிழா குறுந்தகட்டில் ஏற்கனவே முகுந்த் மொசில்லா உலாவியின் தமிழ்வடிவினை தந்திருக்கிறார். அதுவும் ஒபன் ஆபிஸ் 1.0வும் தமிழா குறுந்தகடோடு வரும். வேண்டுமானால், ஒரு குறுந்தகடினை அனுப்பிவைக்கிறேன்.
இது பச்சை அயோக்கியத்தனம். திறமூலமாக இருந்தாலும் கூட, பங்காற்றியவர்களின் பெயர் கூட இல்லாமலிருப்பது அவமானமாக இருக்கிறது. தமிழில் மட்டும்தான் இப்படி ஆளுக்கொரு திசையாய் பிரிந்து அடித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். வெட்கமாக இருக்கிறது. காலையில் முகுந்தோடு பேசியபோது, அவரின் பயர்பாக்ஸ் தமிழ் நீட்சியினை பயன்படுத்தப்போகிறோம் என்பதைக் கூட சொல்லாமல், விழா முடிந்து, குறுந்தகடுகள் கொடுத்து முடித்தபின், சாவகாசமாய், காலையில் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள் CDAC -இன் புத்தி ஜீவிகள். ஒருவருக்கு தெரியாமல் அவரின் உழைப்பினையும், உழைப்பினால் உருவாகும் பொருட்களையும் எடுப்பதற்கு எங்களூரில் "திருட்டுத்தனம்" என்று பெயர். ஒரு மத்திய அரசு நிறுவனம், ஆள்பவர்களின் கைப்பொம்மையாக மாறினால், திருடக் கூட துணியும் என்பதுதான் கேவலமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது.
இவ்வாறு, பங்கேற்பவர்களின், உதவியர்களை இருட்டடிப்பு செய்தால், திறமூலத்தில், அவர்களின் மீது வழக்கு தொடர இடமிருக்கிறதா என்று பாருங்கள்? அப்படியிருப்பின் நான் செலவு செய்ய தயார், CDAC-இன் மீது வழக்கு தொடரலாம். முகத்திரையினை கிழிக்கலாம். உணவினை திருடினால், பசியென்று விட்டு விடலாம், ஒரு குழுவின் உழைப்பினை திருடினால் சும்மா இருக்க முடியாது.
பத்ரி, தமிழில் ஓபன் ஆஃபீஸ் முதன்முதலில் பெரும்பகுதி மொழியாக்கம் செய்தது C-DAC'ன் பாரதீய குழுவே. பாரதீய குழு முகுந்த் மற்றும் பிற ஆர்வலர்களுடன் ஒத்துழைத்து செயல்படவே விரும்பியது. முகுந்தராஜ் மற்றும் குழு பாரதீயவுடன் தொடர்புகொண்ட பொழுது, பாரதீய'வின் தலைவர் பாரதீயவின் முதல் குறி ஹிந்தி பதிப்புதான் எனவும், தமிழ் ஓபன் ஆஃபீஸ் பதிப்பை முகுந்த் குழுவிடம் விட்டுவிட இசைந்தார். அதன்படி முகுந்த் குழு ta.openoffice.org நிறுவினர்.
ReplyDelete'ழ' கணினி தான் பிளவு செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
// may be claimed as one of the achievements of UPA govt , with DMK taking due credit.//
ReplyDeletegood foresight. So much for democracy.
It is an condemnable act. At least we will do that in internet.
In one way, I welcome it because by doing this, more people will get to know it and may open communication b/w
volunteers and govt in future.
பிளாகர் உள்ளே விடவில்லை. திரும்பவும் முயற்சிக்கிறேன்.
ReplyDeleteபத்ரி - நீங்கள் இதை எழுதிய அதே நேரத்தில் நானும் இதே தலைப்பில் எழுதிக்கொண்டிருந்தேன். அது ஜுனியர் விகடனில் வெளியான கலாநிதி மாறனின் பேட்டியை மையமாகக் கொண்டது.
http://www.domesticatedonion.net/blog/?item=453
இதைப் பற்றி வரும் நாட்களில் மேலும் எழுத உத்தேசம். நாம் எல்லாருமாகச் சேர்ந்து எதாவது கூட்டு நடவடிக்கை எடுத்து உண்மையான தகவல்களைப் பரப்ப முயற்சிக்க வேண்டும்.
தமிழா, அஃபீஷியல் இணையதளத்திலே ஒரு பேனர் போட்டு , வாக்கு பதியலாம். தமிழா.கொம் லே செய்வது அப்ட் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteஅவசரப்படாமல், சட்டரீதியாய் யோசித்து செயல் படவேண்டும் என்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ReplyDelete// அவசரப்படாமல், சட்டரீதியாய் யோசித்து செயல் படவேண்டும் என்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.//
ReplyDeleteஇதைத்தான் நானும் சொல்லுகிறேன். சீ-டாக் பதில் சொல்லட்டும். இங்கே பேசிக் கொண்டிருப்பதால் பிரயோசனங்கள் குறைவு. இதனை ஒரு வழக்காக்கி, நீதிமன்றத்தில் முறையிட்டாலேயொழிய கவனமும், ஈர்ப்பும் வரப்போவதில்லை. வழக்குத் தொடரமுடியுமா என்பதுதான் என் கேள்வி.
இது CDAC-இன் தவறாக இருந்தாலும் இதைச் செய்வதன் பின்னணியில் இருப்பது கேடு கெட்டு அலையும் கலைஞர் குடும்பம்தான். சன் தொலைக் காட்சியைப் பார்க்க ஆரம்பித்தால் இந்தக் குடும்பத்தின் அனைத்துப் பித்தலாட்டங்களும் வெளி வரும். இவர்களின் சம்பந்தக் காரர்களான "THE HINDU"வும் மருமகன் தயாநிதி மாறன் மந்திரி என்ற பெயரில் என்ன பிதற்றிக் கொண்டிருந்தாலும் முன்பக்கத்திலும், ஆசிரியர் பகுதியிலும் எழுதி புளகாங்கிதம் அடையும்.
ReplyDeleteதயவு செய்து பதிவர் உலகத்திலிருந்து பெருத்த கண்டனத்தை அவர்கள் கேட்கும் படிச் செய்ய வேண்டும்.
நல்ல வேளையாக நான் கொஞ்சம் சீக்கிரம் இன்று பதிவைப் படித்ததனால் பின்னூட்டம் இட முடிந்தது. பத்ரியின் நீதிக்கட்சி, தெகெல்க்கா ஈழம் கட்டுரைகள் மற்றும் இரவியின் IIT இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை பற்றிய பதிவுகளில் என்னுடைய கருத்துக்களை சொல்ல முடியாமல் போய் விட்டது.
நன்றி - சொ. சங்கரபாண்டி
நாராயண், பத்ரி & friends, இப்போதுதான் இந்த விஷயத்தைப் படித்தேன். அதிர்ச்சியாக வெல்லாம் இல்லை. பார்த்துக் கொண்டே இருங்கள், இன்னும் இது போல இன்னும் நிறைய அறிவுத்திருட்டுகள் நடக்கும். அப்போதும் இங்கேயே உட்கார்ந்து , புலம்பிக் கொண்டிருக்கிறேன். ழ கணி விவகாரத்தின் போதும் நான் சொன்னேன், நம்முடைய, தமிழ்க் கணிமை தொடர்பான விஷயங்கள் வெளியுலகுக்குத் தெரியவேண்டும் என்று. நாராயண் சொல்வது போல வழக்கு தொடருவதில் எல்லாம் நம்பிக்கை எனக்கு இல்லை. அதில் பைசாவுக்கு பிரயோசனம் கிடையாது. முதலில் issue வைக் கிளப்ப வேண்டும். வழக்குத் தொடர்ந்தால், காசுக்கு ஆசைப்படும் ஒருத்தர், இப்படிப் பிரச்சனையைக் கிளப்புகிறார் என்று விஷயம் திரிக்கப்பட்டுவிடும். torts விவகாரங்களில் எல்லாம் நம்முடைய அரசு/நீதி அமைப்புகள் எத்தனை மெதுவாகச் செயல்படுகிறது என்று தெரியும் தானே?
ReplyDeleteஉணர்ச்சி வசப்படாமல் யோசிக்கணும். முள்ளை முள்ளால் தான் எடுக்கணும். இந்த ரிப்போர்ட் ஜு.வியில் தானே வந்தது? முதலிலே, அந்த ரிபோர்ட்டைக் கவர் செய்த, செய்தியாளரைப் பிடித்துப் பேசுங்கள், if not talk to the editor. அமைப்புகளுக்கு எதிரான செய்திகள் என்றால், அதுவும் ஆதாரத்துடன் என்றால், பத்திரிக்கைகளுக்கு வெல்லம் மாதிரி. இங்கே, இணையத்தில் என்ன மாதிரியான செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று பொறுமையாகப் பேசுங்கள். ஓப்பன் ஆ·பீசை தமிழ் படுத்தியது யார் என்ற வாசகர்கள் அறிந்த செய்திக்க்கு, எதிர்மறையான தகவல் இருக்கிறது என்பது முதலிலே சின்ன பெட்டிச் செய்தியாகவாவது வரட்டும். பின்னர், நாலு பேர் அதற்கு, ஆதரவாக, ஆதாரங்களுடன் கடிதம் எழுதினால், ஜூ.வி பத்திரிக்கை அதை கவனித்துத்தான் ஆகவேண்டும். பிரச்சனை பெரிசாக வளர்ந்த பின்னர், ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்து, புள்ளி விவரங்களுடன் ஆதாரங்களை அச்சடித்த காகிதத்தில் தந்து பரபரப்புக் கிளப்பலாம். விவகாரம் பெரிசானால், அது தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும். அவ்ர்களே, ஆதாரங்களைத் இணையத்துக்கு வந்து தேடி, கண்டுபிடித்து எடுத்துக் கொள்வார்கள்.
இல்லாவிட்டால் வலைப்பதிவில் போஸ்ட் போடலாம். நாலு பேர் ஆதரவாகவும், நாலு பேர் எதிராகவும் கருத்துச் சொல்வார்கள். அடுத்த போஸ்ட் பதியும் வரை, பொறி பறக்கும். என்ன சொல்றீங்க...?
whatever it is,i.e.whether it is open source or free software the work by mukunth and the group is covered by copyright.if my understanding is wrong pls. correct.CDAC or DOT cannot openly violate copyright like this.what are the terms and conditions under which this software has been released by DOT or CDAC.The better way to bring this issue to the attention of open source community all over the world and draw the attention of the President of India.The minister may be ignorant about the facts but that is no answer for such an unethical behavior. ravi srinivas
ReplyDeleteபிரகாஷ் சொல்வது சரியான் அணுகுமுறையாக எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteRavi : there is no denying in the fact that one's intellectutal property is under copy right irrespective of whether he/she includes a copyright symbol. but things have gone too far.Methodical way of approaching will only cause delay, particularly with this issue. We have to act fast.
ReplyDeleteProbably, CDAC or DOT or Daynithi Maran doesn't even know that they infringing copyrights. Let them know first.
Taking it to the president of india is a good option, but we should try to raise the issue in the popular media first.
it is high time, tamil netizens have their own print magazine to communicate their views to the rest of the world.
//it is high time, tamil netizens have their own print magazine to communicate their views to the rest of the world.//
ReplyDeleteஇன்னா தலைவா, தராசு, நக்கீரன் அலுவலங்களுக்கு ஏற்பட்ட கதி ஞாபகமிருக்கிறதா ? ப்ரிண்ட் நிறைய தடைகளிருக்கின்றன. வேண்டுமென்றால், இணைய பத்திரிக்கை ஆரம்பிக்கலாம். அதிலிருந்து முக்கிய செய்திகளை வேண்டுமானால், பேப்பரில் கொண்டு வரலாம். ஆனால், பிரகாஷ், நான் வழக்கு தொடர சொன்னது மீடியாக்களின் கவனம் திரும்பும்.
யாரோ, எவரோ உச்சநீதி மன்றத்தில், வாக்கு சீட்டில் யாரையும் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை வழக்காக பதிய, எல்லா தொலைக்காட்சிகளும், அதை கையிலெடுத்துக் கொண்டுவிட்டன. நம்மிடம் ஆதாரங்களிருக்கின்றன. தெஹல்காவிடம் காலையில் பேசும் திட்டமிருக்கிறது. பேசிவிட்டு சொல்லுகிறேன்.
நாராயண்: ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. " ஒரு அரசாங்கம் நன்றாக இயங்கினால் மட்டும் போதாது, நன்றாக இயங்குவதாகவும் தெரியவேண்டும். ". இணையத்த்தில் தமிழ் எழுதப்படிக்கிற, இணைய வசதி இருக்கிற ஒரு நூறு பேர் கொண்ட சாம்பிளில், எத்தனை பேருக்கு, தமிழ் செயல் நிரலிகள் பற்றியும், தமிழா குழுவி சேவைகள் பற்றியும் தெரியும் என்று நினைக்கிறீர்கள்? ஒருத்தர் இருந்தா அதிகம். நாம் எங்கே கோட்டை விடுகிறோம் என்று புரிகிறதா?
ReplyDeleteஇணையத்தில் இருந்து, code ஐயும், design, template களையும் சுடுவது என்பது நம்மவர்களுக்கு புதிதா என்ன? கேட்பாரில்லை. அவனவன் எடுத்துக் கொண்டு போகிறான்.
நீங்கள் சொன்ன அந்தக் கேஸ் ஒரு பொது நல வழக்கு. நாங்கள் ஒரு வேலையைச் செய்தோம், அந்த வேலையின் பயனை அரசு நிறுவனம் திருடிவிட்டது என்று சொல்வது பொதுநல வழக்கின் கீழே வராது. இப்பக் கூட நாம் கேஸ் போடக்கூடாது என்று சொல்லவில்லை, போடணும். but not for the moment. அதிகார பூர்வமான அமைப்புகளிடம் இது பற்றிப் பேசினால், " அப்படியா? முன்னாடியே தெரியாமப் போச்சே? இவ்ளோ விஷயம் இதிலே இருக்கா? " என்று சொல்வதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். தீர விசாரித்து, ஒழுங்கு படுத்தினால் சரி. இல்லை என்றால் கேஸ் போடலாம். CDAC முதற்கொண்டு, தயாநிதி, கருணாநிதி அனைவரும்,தமிழா குழுவினரை, திட்டமிட்டு , திருடி, ஏமாற்றினார்கள் என்று முடிவு கட்டி விடமுடியாது. முதலில் சொல்லுவோம். சரி வராட்டி வெடிகுண்டு மாதிரி இன்னொரு ஐடியா இருக்கு.
நாரயண், நான் சட்டப்படி உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. சட்டப்படி நம்மால் என்ன செய்யமுடியுன் என்று தெரிந்து கொள்ளவேண்டும் முதலில், என்று சொல்லவந்தேன். சங்கரபாண்டியும்(நாராயண்-ம்) உணர்ச்சி வசப்படுகிறார்.
ReplyDeleteஉங்கள் கோபத்தில் நியாயம் உள்ளது . இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் , வழக்கு போடுவது என்பது முதலில் நாமே "ஹோஸ்டைல்" ஆக திசை திருப்பிவிடும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு தெரிந்திருக்காது என்று நான் முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை என்னினும், "க்ரெடிட்ஸ் கொடுப்பது" "பற்றி, காபிரைட்ஸ்" முழுமையான அறிவில்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
ஏன் கேஸ் போடக்கூடாது? தாரளமாக போடலாம். ஆனால், நாம் முக்கியமாக சாதிக்க நினைப்பது என்ன? அவர்களை பழிவாங்குவதா? இல்லை. அவர்களுடன் கை கோர்ப்பது; அவர்கள் நம்மை(அதாவது தமிழா மற்றும் தன்னார்வலர்களை ) அங்கீகரிக்கசெய்வது; அதன் மூலம் , முயற்சியையும் , பயனை அதிகரிப்பது.
இதற்கு , முதலில் சம்பந்தப்பட்டவர்களிடம், ஒரு கம்ம்யூனிகேஷன் -ஐ தொடஙவேண்டும், அதற்கடுத்து , அவர்கள் நோகம் திருடுவதாக மாட்டுமே இருப்பின் , இருக்கவே இருக்கு நீதி மண்றம் எட்செட்ரா,எட்செட்ரா.
எனக்கு பிரகாஷின் அணுகுமுறை சரியாகப் படுகிறது. ஓட்டுக்காக எந்த இழிவையும் செய்ய தயாராக இருக்கும் குடும்பம்-கட்சி-அரசு மனப்பான்மை எந்த திருட்டையும் செய்யும். மக்களிடம் கொண்டு போவதே ஓட்டு அரசியலை பாதிக்கும் என்பதால் எளிதாக கவனமும் பெறும். அதோடு ஊடகங்களின் உற்சாகமான பங்களிப்பு இதை நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் மிக அவசியமானது. இன்னொருவகையில் இது தமிழ் ஓப்பன் ஆபிஸ் முயற்சிகளை மக்களிடம் தெரியப்படுத்தும்.
ReplyDeleteஊடகங்களுக்குச் செல்லாத வரையில் இதைப் பற்றி நீதிபதிகள் கூட அறியமாட்டார்கள். மேலும் மக்களுக்கும் இது பற்றி தெரியவராவிட்டால் கட்சி-அரசு இதை பெரிதாகக் கையாளாது என்றும் நினைக்கிறேன்.
ReplyDelete//அவர்களுடன் கை கோர்ப்பது; // என்பது அரசியலில்;திருட்டுத்தனத்தில் அல்ல. கணனித்தமிழ் அளவிலே அவ்ர்களது முயற்சியில் கைகோர்ப்பது.
ReplyDeleteதொடக்க அளவில், பிரகாஷ் சொல்வதை நானும் சரி என்றே நினைக்கிறேன். ஜூ வியில் செய்தி வரட்டும் முதலில்.
இச்செய்தி ஆச்சரியப்பட வைக்கவில்லையென்றாலும் வருத்தமடையச் செய்கிறது.
ReplyDelete//அமைப்புகளுக்கு எதிரான செய்திகள் என்றால், அதுவும் ஆதாரத்துடன் என்றால், பத்திரிக்கைகளுக்கு வெல்லம் மாதிரி.// ஓர் ஆதாரம் குறித்து - சென்ற ஆண்டு 'சன்' தொ.காவிலேயே முகுந்த் ஒரு நிகழ்ச்சியை (மாலனுடன்?) வழங்கினாரே அதில் தமிழா! உலாவியுடன், 'ஓபன் ஆஃபிஸ்'-ம் இருக்குமென்று நினைக்கிறேன்.
எதிர்காலத்தில் வலைப்பதிவின் வீச்சு பரவலாகும்போது காசியின் தமிழ்மணத்தை இவர்கள் வெளியிட்டாலும் வெளியிடுவார்கள்! ;-)
நான் உணர்ச்சிவசப்படவில்லை, கோபப்படுகிறேன். எதையெடுத்தாலும் தங்கள் ஆதாயத்துக்கும் விளம்பரத்துக்கும் பயன்படுத்துவது கலைஞர் குடும்பத்துக்குப் வழக்கமாகி விட்டது. தமிழைச் செம்மொழி ஆக்கிவிட்டோம் என்று இவர்கள் அடித்த விளம்பரங்களே சகிக்க முடியவில்லை. இப்பொழுது தமிழை கணினி மொழியாக்கினோம் என்று அடுத்து விளம்பரப் படுத்த நினைக்கும் முயற்சிதான் இது. இவர்கள் வட்டம், மாவட்டம், கணினித்துறையில் உள்ள சில ஜால்ராக்கள், எழுத்துலகத் துதிபாடிகள் என்று முழுமூச்சில் ஆரம்பிக்கும் முன்னாடி இதை முளையிலே கிள்ள வேண்டியது அவசியம். நீதி மன்றத்திற்குப் போவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்னால் அவர்களின் விளம்பர அரசியலை அடியோடு நிறுத்த வேண்டும்.
ReplyDeleteமுள்ளை முள்ளால் எடுப்பது கூட மிக விவேகம் என நினைக்கிறேன். தகவல்களை ஒருங்கே திரட்டி 'ஜெ'விடம் கொடுப்பது என்று கூட எனக்குத் தோன்றுகிறது.
நன்றி - சொ. சங்கரபாண்டி
//ஆனால் அதற்கு முன்னால் அவர்களின் விளம்பர அரசியலை அடியோடு நிறுத்த வேண்டும்.// முடிகிற காரியமா?
ReplyDelete//தகவல்களை ஒருங்கே திரட்டி 'ஜெ'விடம் கொடுப்பது என்று கூட எனக்குத் தோன்றுகிறது. // இன்னொருவகை விளம்பரத்துக்கு அடியெடுத்துக் கொடுக்கவே உதவும்.
அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை.
நமது நோக்கம் இன்றைய பிரச்சினை மட்டுமல்ல. தொடர்ந்தும் தன்னார்வலர்களுடன் அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வழிவகுப்பது. அவர்களின் உழைப்பை மதிப்பது. (உண்மையில் நானே கூட முதலில் பயர்பாக்சை தமிழ்ப்படுத்தியது ழ குழுவினர் என்றே இதுவரை நினைத்திருந்தேன்.) பத்திரிகைகள் வாயிலாக நிகழ்வுகளை அம்பலப் படுத்தினாலே போதுமானது. பழிவாங்குதல் போன்றவை இடைவெளியை அதிகரிக்கவே உதவும். தமிழ் தன்னார்வலர்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் ஏதேனும் ஒருதளத்தில் ஒருங்கிணைந்தாலே இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
மொதல்ல நமக்குள் நாமே ஒருவர் (தமிழுக்கான) கண்டுபிடிப்பை பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும்.யார் யாரோ தமிழ்ல மென்பொருள் என்ற பெயரில் எதை எதையோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம் உலகுக்கு தெரிந்துக் கொண்டா இருக்கிறது? இல்லையென்றால் நாம் தான் அதையெல்லாம் ஊக்குவிக்கிறோமா?
ReplyDeleteஇல்லையென்றால் அவர்களையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க முடிகிறதா? ஒருங்கிணைத்தால் தான் ஒன்று திரண்டு விடுவார்களா?
ஓங்கி சத்தம் போடும் வலிமையுள்ளவர்களுக்கு தான் ஆதரவு. அருமையான கண்டுபிடிப்புகளை வைத்துக்கொண்டு ஈன ஸ்வரத்தில் முனங்குபவனை எவனும் கண்டுக் கொள்வதில்லை. அல்லது முன்னின்று எடுத்துச் சென்று எல்லாருக்கும் தெரியும் வகையில் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் எண்ணம் இருந்ததா (இருக்கிறதா?)?(அதாவது 'சுட்டு விட்டார்' என்றவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வரும் அதே ஸ்பிரீட்டோடு).
ஆளாளுக்கு ஈகோவோட ஒருத்தர் காலை ஒருத்தர் இழுத்துக் கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி இருந்தால் அந்த மாதிரி பொறம்போக்கு அரசியல்வாதிகள் கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்க தான் செய்வார்கள்.
TAB,TAM பயன்படுத்தும் பன்னாடை பத்திரிக்கைகளுக்கு எத்தனை வாட்டி புது ஒருங்குறி மற்றும் மற்ற எழுத்துருக்களை பற்றி சொன்னாலும் செவுட்டு முண்டங்களாக தான் இருக்கும்.சாமானியர்கள் சொன்னால் எப்படி கேட்பார்கள். தயாநிதி மாதிரி ஒரு புன்னகை புண்ணாக்குகள் சொன்னால் கேட்பார்கள்.
ஒரு முடிவுக்கு வாங்க மொதல்ல. எதுவாயிருந்தாலும் நானும் இறங்க ரெடி.
1. அவசரப்பட்டு நாம் மாறன், கருணாநிதி குடும்பம் என்று எதையும் சொல்லக்கூடாது. விளம்பர அரசியல் நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இங்குள்ள பிரச்னை அதுவல்ல.
ReplyDelete2. C-DAC செய்தது நிச்சயம் தவறான செய்கை. அதற்கான ஆதாரங்கள் நம்மிடையே உள்ளன. ஏதோ நெருக்கடி காரணமாக அந்தக் குறுந்தகடு வெளியிடும்போது முகுந்த்/தமிழா குழு பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும் இன்றும் கூட இவர்களது இணையத்தளத்தில் முகுந்த்/தமிழா பெயரைக் காணோம். இணையத்தளம் இவர்களது கையில்தான் உள்ளது? எப்பொழுது வேண்டுமானாலும் எதையும் மாற்றலாம், சேர்க்கலாம். நீங்கள் பார்க்க வேண்டிய சுட்டி: http://www.ildc.in/GIST/htm/browser.htm
இதை C-DAC முதலில் மாற்றுமாறு முகுந்தை விட்டு காட்டமாக ஒரு அஞ்சல் எழுதச் சொல்வோம். நாமும் நேரடியாக C-DAC மின்னஞ்சல் முகவரிகளுக்கு எழுதுவோம்.
3. ஏதோ அவசர அடியாக C-DAC ஒரு பிரவுசரைக் கொடுத்துவிட்டோம் என்று சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் இந்த பிரவுசர் தமிழாக்கத்தில் இன்னமும் பல வேலைகள் மிச்சமுள்ளன. முகுந்த்/தமிழா குழுவுக்கு ஆதரவாக நாம் அனைவரும் இந்தத் தமிழாக்கத்தில் முடிந்தவரை ஈடுபட வேண்டும். அதன்மூலம் இன்னமும் சிறப்பான - முழுமையாகத் தமிழ் இடைமுகம் கொண்டுவரப்பட்ட - உலாவியினை நாம் கொண்டுவர முடியும்.
அதே நேரம் C-DAC வாரத்துக்குப் 10,000 குறுந்தகடுகளை அச்சிட்டு தம் செலவிலேயே பொதுமக்களுக்கு அஞ்சலில் அனுப்ப இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அப்படிச் செல்லும் புதுக் குறுந்தகடுகள் அனைத்திலும் முகுந்த்/தமிழா குழு/திறமூல மென்பொருள் ஆர்வலர்கள் பற்றிய தகவல்களும் சேர்ந்து இருக்க வேண்டும். முதலில் Firefox என்னும் திறமூல அமைப்பிடமிருந்துதான் உலாவி மென்பொருள் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் கூட இல்லை. அதன்பின் முகுந்த்/தமிழாவிடமிருந்து தமிழாக்க internationalisation xpi கோப்பு எடுக்கப்பட்டுள்ளது என்ற முக்கியமான விவரமும் சேர்க்கப்பட வேண்டும்.
நாம் இதனைக் கேட்டுப் பெறுவோம்.
4. C-DAC இன்று தமிழில் ஆர்வம் இருப்பது போலக் காண்பிக்கும். சில எழுத்துருக்களை உருவாக்கியதோடு இவர்கள் அதிகமாக தமிழில் எதுவும் செய்யவில்லை. பாவம் கன்னட, தெலுகு, பிறமொழி மக்கள். இப்பொழுது தமிழ் அமைச்சர் இருக்கிறார் என்பதாலும் அவர் ஏப்ரல் 15-ல் ஏதோ செய்துகாட்டிவிட வேண்டும் என்று நினைத்தார் என்பதாலும் அவசர அவசரமாக எதையோ கொடுத்திருக்கிறார்கள். ஒருமித்த இந்திய மக்கள் நினைவாக இவர்களிடம் எந்தக் கருத்துமில்லை என்றுதான் தோன்றுகிறது.
இவர்கள் இதுவரையில் வேலை செய்ததெல்லாம் ஹிந்தி ஒன்றில்தான் என நினைக்கிறேன்.
தமிழர்களைப் போல பிற மொழி மக்களும் இந்தச் செய்கைகளைக் கண்டு மிகவும் கோபமடைய வேண்டும். சும்மா டாம், டாப் எழுத்துருக்களைக் கொடுத்தால் இவர்களுக்கு யூனிகோட் என்று ஒன்று இருப்பதே தெரியாத மாதிரி நடந்துகொண்டால் இந்தியாவின் பிறமொழிக்காரர்கள் பாடு பெருந்திண்டாட்டம்தான்!
5. பலரும் சொன்னதைப் போல முடிந்தவரை ஊடகங்களைத் தொடர்பு கொண்டு திறமூல மென்பொருள்கள், அவற்றை தமிழாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் ஆகிய விஷயங்களை எடுத்துச் சொல்வோம். இன்று சிலரிடம் பேசிவிட்டு அதுபற்றி இங்கே எழுதுகிறேன்.
ஆங்கில வலைப்பதிவாகவும் இவ்விஷயங்களைத் தொடர்ந்து இட்டுவரவும் - பிறமொழிகளுக்கும் இதனால் உபயோகம் இருக்குமெனில்;விஷயமும் இன்னும் விரைவிலும், தமிழ் வலைப்பதிவுகள் படிக்காதவர்களிடமும் பரவும். ஆங்கில வலைப்பதிவுகள் மூலம் இன்னும் பலரை இந்த விஷயம் சென்றடையட்டும்...
ReplyDeleteDear Badri,
ReplyDeleteI sent you a personal email (gmail) dated 15th
april 2005, with the Junior Vikatan article in which some credit is wrongly given to Microsoft for tools developed in Open Office. I also sent to Venkat. Just wondering whether you received it or not.
We should write to the editor to correct it.
-- mks --
Dear Badri & others.
ReplyDeleteA brief note. After seeing Mr Dhayanithi Maran in the news, Mugunth and I did have a brief conversation in the phone regarding their inclusion of Firefox and OpenOffice in their CD. While their effort is laudable, I don't know why neither of us were ever consulted ... as we are still the official owners of the projects.
I was not involved in Firefox translation. Mugunth was. It was, however, based on our previous work on Mozilla. So, at the least, they should have acknowledged his original contribution.
As to OpenOffice Ta l10n, I think the bulk of the credit should go to the original BaratheeyOO team. (I suspect there are new people there now. They may not be aware of the history.)
My grudge is simply this: if the Indian government could pour in so much money into distributing the product, why not invest some of it for its production? The Tamil localisation project is yet to take off due to lack of _serious_ institutional and monetary backing. While Mugunth is optimistic about your government's new found interest in OS products, I am cynical. Chennai Kavigal's product in an OS CD? Go figure!
Dear Ev,
ReplyDeleteMy main grouse, like you, is that while everyone from Chennai Kavigal, Cadgraf, Modular, Palaniappa Brothers, LearnFun Systems, Anna University etc. have been acknowledged by the nodal agency C-DAC, the only one completely masked out in this self-prmotional CD is open source enthusiasts.
Anyone who is an institution - from the mighty Microsoft to the puny Chennai based software developer company has been invited, but no acknowledgement for the most important contribution in that CD - Tamil Firefox.
I cannot yet comment on OO as I have not gone through it yet, but as you point out, as the project managers you and Mugunth should have been contacted and at least informed of their decision.
This shows the callous disregard for open source movement.
The most shocking of course is a statement attributed (see Venkat's blog) to Dayanidhi Maran where he says that Microsoft and "they" (namely the ministry and C-DAC) worked jointly to put together Bharatheeya OO, complete with spellchecker and what not. This interview appeared in Junior Vikatan. It is quite possible that the reporter might have also misunderstood.
Whatever it is, not only are open source volunteers forgotten, but the enemy is given the credit:-) I hope Microsoft quickly issues a denial saying that they were not ever involved in OO except to undermine it in public statements.
As to Chennai Kavigal, Modular and Cadgraf, all they have provided are a few fonts. I suspect all of them are useless TAB/TAM fonts. But will revert on that after I go through them one by one.
நேற்று என்னால் இங்கே பின்னூட்டம் இட முடியவில்லை. இகாரஸ், பத்ரி, செல்வநாயகி சொல்வதை ஏற்று கொள்கிறேன். ஒரு கடமையாக அனைத்து வலைப்பதிவரும் கண்டன குரல் எழுப்ப வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் பயனற்றவன், சேர்ந்து ஏதேனும் செய்யும்போது என்னையும் சேர்த்து கொள்கிறேன்.
ReplyDeleteஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளை முழுவதும் மொழிமாற்றம் செய்தது தானே என்று முகுந்த் சொல்லட்டும். உங்களுக்குள் எதற்கு இத்தனை விவாதங்கள். எனக்கு தெரிந்தவரை ஓப்பன் ஆஃபீஸில் 80% உழைப்பு CDAC உடையது. இன்றும் ஓப்பன் ஆஃபீஸ் தமிழை compile செய்வது முதல் பல வேலைகளை CDAC செய்வதாக அறிகிறேன். பார்க்க http://l10n.
ReplyDeleteopenoffice.org/languages.html
மொசில்லாவை உருவாக்கியது தமிழா குழுவே இதில் சந்தேகம் எதுவும் இல்லை. மொசில்லா மொழி பெயர்பை சில மாற்றங்களுடன் அப்படியே ஃபையர் ஃபாக்ஸுக்கு பயன்படுத்தலாம்.
என்னை பொருத்தவரை எந்த திறந்த நிரல் மென்பொருள் ொழிபெயர்பாளர்களையும் தன்னார்வலர்களையும் யாரும்
தாம்பூலம் வைத்து வரவேற்பதில்லை. குறிப்பாக தமிழ் கணினிக் குழுக்கள் எதுவும் சரியான முறையில் ஊக்கம் கூட தருவதில்லை. மாறாக குறைமட்டும் கூறுவதாகவே உணர்கிறேன். நம் குழுக்களுக்குள்ளேயே இந்த நிலை எனில் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.
ஓப்பன் ஆஃபீஸ் மொழி பெயர்க்கப்பட்டது. மொசில்லா மொழிபெயர்க்கப்பட்டது. நாளை உங்கள் மேண்ட்ராக்குக்கான முழு
தொகுப்பை உருவாக்கும் போது தமிழ் மொழி பெயர்புகளை ஓப்பன் ஆஃபீஸ் CVS அல்லது மொசில்லா CVS லிருந்து
பெற்றுக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது. ஒரு திறந்த நிரல் மென்பொருளை வியாபாரம் செய்வதற்கான வகைகளை மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தால் போதுமா? மற்ற Distribution கள் அதை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பதை நம் தன்னார்வலர்கள் ஏன் யோசிக்கவில்லை. நாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டாமா? இதற்கான முயற்சிகளில் தமிழா குழுவினர் இறங்க வேண்டும். அன்றன்றைய மொழிபெயர்பெயர்புகள்
தொழில் நுட்ப மாற்றங்கள் அத்தனையும் அவைகளுக்கான CVS இல் இருக்க வேண்டும்.
பெடோரா தமிழ் பதிப்பை உருவாக்கும் போது சமீபத்திய ஓப்பன் அஃப்பீஸ் மென்பொருள் அதில் இடம்பெற்றிருந்தது.
ஒன்றுக்கு இரண்டுபேர் மொழி பெயர்த்தும் அதிகார பூர்வ ta.OO வை பயன்படுத்த முடியாத நிலை. காரணம், ஓப்பன் அஃப்பீஸின் CVS இல் தமிழ் GSI மொழிபெயர்பு கோப்பு இல்லை. அவசரகதியாக ழ வின் கோப்பை பயன்படுத்த வேண்டியதாக போய்விட்டது. ஓப்பன் ஆஃபீஸ் போன்ற மென்பொருள்கள் இன்றையப்படுத்தப்பட வேண்டும்.
பழையதையே(CDAC செய்ததையே) வைத்துக்கொண்டு, we are not proceeding என கதை அளந்துகொண்டிருக்ககூடாது.
அப்படி கதை அளப்பதாக இருந்தால் இவைகளின் மேலாண்மை பொருப்பை ஏற்றிக்கக்கூடாது. தானும் செய்வதில்லை மற்றவர் செய்தால் பிளப்பதாக கூச்சல் போடுவது. ஒரு முழுமையான தமிழ் Distrubution ஐ உருவாக்க முயலும் போது
இது போன்ற சிறு சிறு சிக்கல்கள் தடைக்கற்களாக அமைந்துவிடுவதுண்டு. எனவே பொருப்பில் இருப்பவர்கள்
அக்கறையுடன் செயல்பட வேண்டும். தானே தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு தடையாக இருக்ககூடாது.
ஃபையர் ஃபாக்ஸ் பொருத்தவரை பதிவு செய்தது. மேலாண்மை பொருப்பு மற்றும் ·பையர் ஃபாக்ஸ் cvs க்கு
விண்ணப்பித்தது எல்லாம் அடியேன் தான். அதுவும் ஃபையர் பாக்ஸைமுழுவதும் முடித்து அந்நிறுவனத்திற்கு அனுப்பி
அதன் அடுத்த பதிப்பில் தமிழ் ஆதரவு என்ற நற்செய்தியை எதிர்பார்த்து காத்திக்கும் சமயத்தில், தமிழா குழு
மொசில்லாவில் ஒரு சின்ன ஒட்டு போட்டு ஃபையர் ஃபாக்ஸை தான் முடித்ததாக அறிவித்தது. (இத்தனைக்கும் மொசில்லாவிற்கு பணியாற்றுபவர்களுக்கு ஃபையர் ஃபாக்ஸில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்க வாய்பில்லை, முன்கூட்டியே தாங்கள் செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கலாம்.பார்க்க http://www.mozilla.org/projects/
firefox/l10n/ மற்றும் https://bugzilla.mozilla.org/show_bug.cgi?id=264875) இதில் என் 15 நாள் உழைப்பு வீண். இந்த 15 நாட்களை வேறு பயன்பாடுகளை மொழி மாற்றம் செய்ய பயன்படுத்தி இருப்பேன். மற்றபடி யார்
செய்தால் என்ன வேலை முடிந்தால் சரி. உரக்க கத்துபவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளும் உலகம் இது.
KDE,GNOME, Fedora என எத்தனையோ பயன்பாடுகளை தமிழ் படுத்தி இருக்கிறோம். டெபியான், ஃபெடோரா முதல் CDAC தயாரித்த ரங்கோலி வரை ஏன் மேண்ட்ராக்கிலும் கூட நாங்கள் மொழி பெயர்த்து முடித்த எத்தனையோ
பயன்பாடுகள் இடம்பெறுகின்றன. ஒரு குழுவின் உழைப்பின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேருகிறது.
அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ நம் உழைப்பின் பயன் சாமான்யர்களை எளிதில் சென்று சேர்ந்தாலே போதும்.
சத்தமில்லாமல், பிரதி பலன் பாராமல் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்க வேண்டும். மொசில்லா தமிழா
சட்டை போட்டுக்கொள்ளலாம், டெபியான் ரங்கோலி சட்டை போட்டுக்கொள்ளலாம். ஓப்பன் ஆஃபீஸ் பாரதீயோ சட்டை
போட்டுக்கொள்ளலாம். இதில் யார் செய்தால் என்ன? யார் விற்றால் என்ன? அடிப்படையில் திறந்த நிரல்
மென்பொருள்கள் இலவசமாக கிடைக்ககூடியவை. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அட்டை படத்தை
மாற்றிக்கூட விற்கலாம். இதையே தான் தமிழா நிறுவனமும் செய்கிறது. உதாரணமாக, ஓப்பன் ஆஃபீஸை CDAC இடமிருந்து பெற்றது, தன்னுடையது தானே செய்தது என்றது. ஃபையர் ஃபாக்ஸ் சுக்கு CDAC இதையே திருப்பி
செய்கிறது. இதில் இடையில் நமக்கு என்ன கூச்சல் குழப்பம். சம்மந்தப்பட்டவர் பேசட்டுமே? யார் செய்தது யார் பிளந்தது என்று தீர்த்துக்கொள்ளட்டுமே? இது பங்காளி சண்டையப்பா இதில் மூன்றாம் நபர் குறுக்கீடு எதற்கு!.
நன்றி,
ஜெயராதா.
is it very difficult to trace the evolution and development of the tamil software available as open source.what is the response of tamizha to the comment by jayaradha.why should there so many claims and counterclaims on all this.ravi srinivas
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteஇந்தப்பிரச்சனைப்பற்றி என் கருத்துக்களையும் இங்கு பதிக்கிறேன்.
மத்திய அரசு விழாவில் தமிழ் மென்பொருட்கள் குறுந்தட்டில் தமிழ்-பயர்பாக்ஸ்ம் வெளிவந்த செய்தி நண்பர்கள் மூலம் தெரிந்தது. அப்போது நான் சிடாக் ஆட்கள் தனியாக இந்த முயற்சியை செய்துவிட்டார்கள் என்று நினைத்தேன்.
அப்போது ஒரே வேலையை வீணாக இரண்டு குழுக்களில் செய்து கொண்டிருந்திருக்கோமே என்றுதான் எனக்கு வருத்தம் ஏற்பட்டது.
இதை அவர்களுக்கு கேட்டு ஒரு மடலும் அனுப்பினேன். அதற்கு பதில் எழுதும்போதுதான் அவர்கள் நான் ஏற்கணவே வெளியிட்ட தமிழ் பயர்பாக்ஸ் பொதியைப் பயன்படுத்திய விபரத்தைத் தெரிவித்தார்கள். அவசரகதியில் அவர்கள் விழாவுக்காக ஏற்பாடுகள் செய்தபடியால் , இத்தகவலை முன்பே தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தமும் தெரிவித்தார்கள். அதேபோல் அந்தப்போதியினுள் பங்களிப்பாளர்கள் பகுதியில் என்னுடைய பெயரையும் குடுத்திருப்பதாகக் கூறினர்.
திறவூற்று மென்பொருட்களை மற்றவர்கள் எடுத்துப் பயன்படுத்துவது தவறில்லை ஆனால் அந்த மென்பொருளை உருவாக்கிவர்களுக்கு தக்க அங்கிகாரத்தையும் கொடுக்கவேண்டும். இந்த விதிகள் பற்றி விரிவாக அந்தத் திறவூற்று மென்பொருளின் உரிமத்தில் குறிப்படிப்பட்டிருக்கும் இருக்கும்.
அதே சமயம், தமிழ் பயர்பாக்ஸ் பற்றிய பிரச்சனையை தமிழ் வலைப்பதிவாளர்கள் எழுத ஆரம்பித்தது குறித்து இங்கு மலேசியாவிலுள்ள நன்பர்கள் தொலைப்பேசியில் சொன்னப்பிறகுதான் பதிவுகளைப்படிக்க ஆரம்பித்தேன்.
பிறகு பத்ரியின் மடலையும் பார்த்தேன், பிறகு நாராயணனுடன் யாகூ தூதுவன் வழி பேசினேன்.
குறுந்தட்டு வெளியீட்டு செய்தியிலும், சிடாக் வலைத்தளத்திலும் உலாவிப் பற்றியத்தகவல் பகுதியில் தமிழா குழுவின் பெயரையும் தெரிவிக்காமல் போனது எனக்கும் தமிழா குழு நண்பர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியதைத் தெரியப்படுத்தி பாரதியோ ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் எழுதினேன்.
தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக அந்த மடலை, பத்ரி மற்றும் நாராயணனுக்கும் நகலிட்டுள்ளேன்.
விரைவில் சீடாக் வலையில் உள்ள தமிழ் பயர்பாக்ஸ் உலாவிப்பற்றியத் தகவலை தமிழாக் குழுவின் பங்களிப்பையும் குறிப்பிட்டு மாற்றி அமைப்பதாகத் பாரதியோ குழு நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தவறுசெய்வது சகஜம், அதைத் திருத்திக்கொள்ளும் மணப்பக்குவம் இருக்கும் பட்சத்தில் பிரச்சனையே இல்லை.
சிடாக் வலைத்தளத்தில் தமிழ் பயர்பாக்ஸ் பற்றிய சரியான செய்தியை வெளியிட்டு, இத்துடன் இப்பிரச்சனையை சுமூகமாக முடிந்துவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
பாரதியோ மற்றும் இதர குழுக்களுடன் சேர்ந்து மேலும் பல உபயோகமான திறவூற்று மென்பொருட்களை படைக்க முடியும் என்று நம்புகிறேன்.
சரியான பதில்,
ReplyDeleteஆனா கடைசி வரைக்கும் ஓப்பன் ஆஃபீஸை தமிழாக்கம் செய்ததில் முக்கிய பங்கு யாருக்கு என்று சொல்லவே மாட்டேங்கறீங்களே? எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கப்பா. உங்களை மட்டும் 10 பேர் புகழ்ந்தா போதுமா?
நன்றி,
ஜெயராதா.
ஜெயராதாவின் பின்னூட்டத்தைப் பற்றி என் கருத்துக்கள்...
ReplyDeleteமுன்பு ழ-கணினி குழுவைச் சேர்ந்தவரும் தற்போது ஒரு பன்னாட்டு நிறுவணத்திற்காக முழுநேர மொழிபெயர்பில் இருக்கும் ஜெயராதாதானா அல்லது வேறு ஒரு ஜெயராதாவா என்று தெரியவில்லை.
ஏற்கணவே ழ-கணினி ஆட்களுடன் முட்டி மோதி ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. அதனால் மீண்டும் இவருடன் வாதிட எனக்கு விருப்பமில்லை(சக்தியில்லை) என்றாலும் அவர் சொன்ன தவறானக் கருத்துக்களை மட்டும் இங்கே குறிப்பட்டு என் கருத்துக்களை சொல்ல நினைக்கிறேன்.
1. நானோ அல்லது எங்கள் குழுவனரோ என்றைக்குமே தமிழ் ஓப்பன் ஆபீஸ் மென்பொருளில் பாரதீயோவின் பங்கு இல்லை என்று கூறவில்லையே. தமிழ் ஓப்பன் ஆபிஸ் அதிகாரப்பூர்வ புரோஜக்ட்டை எடுத்து நடத்தும் பொறுப்பை நானும் இளஞ்செழியனும் ஏற்றோம், பாரதீயோ உதவியுடன்தான் தமிழ் ஓப்பன் ஆபீஸ் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிக்கிறோம்.
இதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லையே, http://ta.openoffice.org தளத்திலும் discuss@ta.openoffice.org மடற்குழுவிலும் மற்றும் பல்வேறு ஒப்பன் ஆபீஸ் மடற்குழுக்களிலும் இருக்கும் மடல்களைப் பார்த்து யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.
ஜெயராதா ஏன் நான் தெரிவிக்காத விசயத்தை, நான் தெரிவித்ததாக சொல்லவேண்டும் என்று புரியவில்லை
2. மேலும் http://www.mozilla.org/projects/firefox/l10n/ மற்றும் https://bugzilla.mozilla.org/show_bug.cgi?id=264875
போன்ற தளங்களில் ஜெயராதா பதிந்துள்ளதாகக் குறிப்பட்டார்.
அந்தப் பதிவுகளை இணையத்தில் யார்வேண்டுமானாலும் செய்யலாம் என்பதும், யார்வேண்டுமானாலும் CVS மேலான்மைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதும் மோசில்லா வலைத்தளத்தை மேய்தாலே தெரியவரும்.
அப்படி பதிவு செய்வதற்கு முன்னால் ஏற்கணவே அது சம்மந்தமாக வேலை செய்துகொண்டிருக்கும் குழுவை தொடர்பு கொள்ளவேண்டும் என்பதும் ஜெயராதாவிற்கு தெரியாதா ?
மொசில்லா மற்றும் அது சார்ந்த மென்பொருட்களைப் பொருத்தவரை தமிழா குழுதான் செய்து கொண்டிருக்கிறது என்பது ஜெயராதாவுக்கு தெரிந்து இருந்தும் (அவரேதான் சொல்கிறாரே, மொசில்லாவில் இருந்து எதோ எடுத்த ஒட்டு போட்டு பயர்பாக்ஸை தயாரித்துவிட்டோம் என்று ) ஏன் தமிழா குழுவுடன் சேர்ந்து தமிழ் பயர்பாக்ஸ் வேலைகளை செய்யவில்லை. மாற்றாக யாருக்கும் தெரியாமல் 15 நாட்கள் முயன்றுவிட்டு பிறகு 15 நாட்களை வீணடித்துவிட்டாக சொல்வது எந்த வகையில் ஞாயம்?
ஜெயராதா சி.வி.எஸ் பாராமரிப்பு பொறுப்பை எடுத்துக்கொண்டால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். ஆனால் அவரால் பதிவுதான் செய்யமுடிந்ததே தவிர சி.வி.எஸ் பாராமரிப்பு அங்கிகாரம் பெற முடியவில்லை இதுவரை. பார்க்க அவர் குடுத்த சுட்டியை: https://bugzilla.mozilla.org/show_bug.cgi?id=264875
உண்மையில் பலவேலைகளை பகிர்ந்துகொள்ள ஆர்வலர்கள் கிடைக்காமல் இருக்கிறது.
ஜெயராதா சி.வி.எஸ் பாராமரிப்பு பொறுப்பை எடுத்துக்கொள்வதையோ அல்லது வேறுப் பொருப்புகளை எடுத்துக்கொள்வதையோ நானோ அல்லது மற்ற திறவூற்று ஆர்வலர்களோ கண்டிப்பாக ஆதரிக்கத்தான் செய்வோம்.
ஆனால் அவர் ஏற்கணவே மொழிபெயர்ப்பில் இருப்பவர்களுடன் சேராமல் ரகசியமாகவே அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தால் தமிழ் திறவூற்று சமூகத்திற்கு என்ன பயன். பிறகு ஏற்கணவே செய்து முடித்துவிட்டவர்களைக் குறைக் கூறினால் என்னதான் செய்ய முடியும்.
3. KDE,GNOME, Fedora என எத்தனையோ பயன்பாடுகளை தமிழ் படுத்தி இருக்கும் ஜெயராதாவின் செயலை கண்டிப்பாக நாங்கள் பாராட்டுகிறோம் அவர் மேலும் மேலும் பல தமிழ் திறவூற்று மென்பொருட்களை தமிழுலகிற்கு கொடுக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
4. தமிழ் திறவூற்று ஆர்வலரிடையே ஒன்றுமை நிலவ ஜெயராதா போன்றோர் மனது வைக்கவேண்டும். அவர்கள் மனது வைக்க நாம் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் தற்போதைக்கு.
ரவி இதைப்பாருங்கள். தாங்கள் கேட்ட தமிழ் மென்பொருள் வரலாறு பற்றி இது நேரடி பதிலாகாது. ஆனாலும் அங்கே ஆரம்பித்தால் விடை கிடைக்கலாம்.
ReplyDeleteதமிழ் மென்பொருள் முயற்சிகளும் அதன் நிலவரங்களும் அனைத்தயும் பற்றி ஓர் ஒருங்கினைந்த தகவல் வலைமனை இல்லை. வெங்கட்டின் தமிழ்லினக்ஸ், முகுந்தின் தமிழா எல்லாம் நல்ல ஆரம்பமே. மேலே எடுத்துச்செல்ல தனிமனிதனால் முடியாது.
ஜெயராதாவின் 'ழ' குழுவினரின் பங்களிப்பை எவருமே மறுக்க முடியாது. இந்த பதிவில் இதைபற்றி பேசுவது முறையாகாது. எனது வலைப்பதிவில் ஓரிரு நாட்களில் பதிக்கிறேன்.
திரு முகுந்த் அவர்களின் மனம் திறந்த பதிலுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஃபையர் ஃபாக்ஸை முயர்சி செய்வதற்கு முன் அதற்காக ஏற்கெனவே யாரோ முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணராமல் போனது எனக்கு வருத்தை தருகிறது. ஓப்பன் ஆஃபீஸிலும் இதே நிலை தான். ஃபையர் ஃபாக்ஸில் நான் முடித்த அனைத்து கோப்புகளையும் உங்கள் மொசில்லா ஒட்டு ஃபையர் ஃபாக்ஸில் சேர்க்க சொல்லி அனுப்பியதை நீங்கள் மறந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதன் தொடர்சியாக என்ன செய்ய வேண்டும் என்று பதிலனுப்பி இருந்தால் அல்லது எங்கெல்லாம் முழுமையாக முடிக்க முடியவில்லை என தெரியப்படுத்தி இருந்தால் ஒரு வேலை ஃபயர் ஃபாக்ஸ்சுக்கு இன்னேரம் சிவிஎஸ் அனுமதி கிடைத்திருக்கலாம். உங்கள் பாணியில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை.
என்னை பொருத்தவரை ஒரு திட்டத்தை துவக்கினால் அதை ஒருமுறையேனும் 100 சதம் முடிக்க வேண்டும். அப்போது தான் அடுத்த பதிப்புகளுக்கான வேலை குறையும், அடுத்த பதிப்பை மற்றவர் தொடரவும் சுலபமாக இருக்கும். மேலும் நான் ஃபையர் ஃபாக்ஸ் திட்டத்தை துவங்கும் முன் யாஹூ தூதுவனில் உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்தினேன். என்பதையும் நீங்கள் ஒரு வேலை மறந்திருக்கலாம்.
மொழிபெயர்புக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதிகார பூர்வ வலைமனையில் குறிப்பிட்ட திட்டத்தை துவக்கியவரை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். ஃபையர் ஃபாக்ஸ் பொருத்தவரை நீங்கள் அதை செய்யவில்லை. குறை கூறுவதற்கு மன்னிக்கவும். இன்றும் மொசில்லா, ஃபையர் ஃபாக்ஸ், ஓப்பன் ஆஃபீஸ் மூன்றையும் அரை குறையாக முடிக்காமல் 100% சதம் முடிக்க முயன்றால் நல்லது. இதற்கு தேவையான உதவிகளை என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் திறந்த நிரல் மென்பொருள் உலகில் மிக ஆர்வமாக வேலை செய்பவர்களை நையாண்டி செய்து அவர்களின் ஆர்வத்தை குறைப்பதும் தவறு.
ஓப்பன் ஆஃபீஸில் CDAC இன் பங்களிப்பு பலருக்கு சரியாக தெரியாமல் இருப்பதாகவே நான் உணர்கிறேன். அவர்களின் பங்களிப்பு மேலும் தொடர்ந்தால் திட்டத்திற்கு நல்லது. CDAC தமிழ் மென்பொருள்களுக்கென எடுக்கும் முயற்சிகளை நான் ஓரளவுக்கு அறிவேன். எனவே தான் அதை நீங்களாக எடுத்துகூற வேண்டும் என்று எண்ணினேன்.
இதற்கு மேல் இந்த விவாதத்தை தொடர எனக்கு விருப்பமில்லை. அதற்கு பதில் ஓப்பன் ஆஃபீஸில் மொழி பெயர்காத இரண்டு கோப்புகளை அனுப்பி வைக்கவும். விவாதத்திற்கு பதில் வேலையாவது செய்யலாம்.
மற்றபடி உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்..
நன்றி
ஜெயராதா
my comments is here: http://www.mugunth.tamilblogs.com/?itemid=43
ReplyDeleteA related post:
ReplyDeletehttp://mathy.kandasamy.net/musings/2005/04/19/185
The need of the hour is not translating commands in Tamil. We need to make sure Tamil appears as it is without any distortions. Firefox has a problem. My question to Jeyaradha and Mugunth is very simple.
What has been done for that?
I would rather know this, than who has translated a few commands here and there!
Thanks in advance for your constructive reply.
-Mathy
Mugunth,
ReplyDeleteSlightly scrolldown and read the link you have sent. there in my mail it is mentioned that you have not included the files i sent while converting the files in to po files. You also agreed that it is correct. That time i did all essential files translation. but did more than what is there is the po files you used for building firefox. so i told that i will complete 100% firefox and send it to you.
chk
http://groups.yahoo.com/group/tamilinix/message/3830
Note : Please send your files as a separete mail
For that my reply is
http://groups.yahoo.com/group/tamilinix/message/3831
and i sent file on 25th march as a spearate mail. i joined in thamiza group also.
i am maintaining a list of projects i am completing with date nowadays.
anyway i don't want to waste my time by giving this kind of justification.
do firefox or openoffice or what ever you want as you wish. there are lot of opensource projects in this world to translate in tamil. i started firefox with the assumption that no one has started it.
For me Who is doing is not at all a matter. wether it has been done or not matters. anyway do well
best regards,
Jayaradha.
மதிப்புக்குரிய 'டுபாக்கூர்' ஜெயராதா,
ReplyDeleteதாங்கள் பயர்பாக்ஸ் இல் வேலை செய்வதாக எழுதிய மடல்கள் எல்லாமே. 18 பிப்ரவரி 2005 அன்று தமிழ் பயர்பாக்ஸ் பொதியை நாங்கள் வெளியிட்டு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தப் பிறகுதான் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீரா?
இல்லை இதையும் நாங்கள் உங்கள் வீட்டு/அலுவலகக் கணினிக்குள் புகுந்து உங்கள் கோப்புகளை எடுத்து வெளியிட்டுவிட்டோம் என்று புதுக்கதை எதும் கட்டபோகிறீர்களா?
நாங்கள் பயர்பாக்ஸ் தமிழ் பொதியை வெளியிடுவதற்கு மும் நீங்கள் செய்த வெற்றிகரமான (திருட்டு ) வேலைகள் என்ன வென்றால்
1. அதிகாரப்பூர்வ மொசில்லா தமிழ் குழுவிற்கு தெரிவிக்காமலே http://www.mozilla.org/projects/firefox/l10n/ தளத்தில்Unofficial Localization Teams பகுதியில் உங்களை பதிவு செய்து கொண்டது.
மொசில்லா குடும்பத்தைச் சார்ந்த பயர்பாக்ஸ்க்கு தனியா லோக்கலைசெசன் டீம்கள் உருவானதே பலருக்கு தெரியாது. இன்னும் அதே மொசில்லா குடும்பத்தைச் சார்ந்த தண்டர்பேர்ட், சன்பேர்ட் போன்ற செயலிக்கு எல்லாம் இன்னும் தனியாக லோக்கலைசேசன் டீம்கள் உருவாகவில்லை. அப்படி உருவாக்கபடும் பட்சத்தில் இந்த ஜெயராதா போல் யாரேனும் சென்று மொசில்லா குழுவிற்கு தெரிந்தோ தெரியாமலோ பதிவு செய்துகொள்ளவும் முடியும் என்பதை இங்கே கவனிக்கவும்.
2. மற்றது சி.வி.எஸ் மேலான்மை உரிமை வேண்டும் என்றும் மொசில்லாவிற்கு விண்ணப்பமும் போட்டுள்ளீர்கள். https://bugzilla.mozilla.org/show_bug.cgi?id=264875
இன்னும் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சி.வி.எஸ் மேலான்மை உரிமை இன்னும் கிடைக்கவும் இல்லை.
இதையும் மொசில்லா தமிழ்குழுவிற்கு தெரியாமல் செய்துள்ளீர்கள்.
மேலே சொன்ன இந்த ரெண்டு வேலைகளையும் எங்களுக்கு தெரிந்தே செய்திருக்கலாம். நாங்கள் உற்சாகப்படுத்தி இருப்போம், உங்களுக்கு ஆதரவாக இருந்திருப்போம். ஒரே குழுவாக விரைவாக பொதிகளை உருவாக்கி இருக்கலாம்.
இந்த ரெண்டையும் எங்களுக்கு தெரியாமல் செய்தும்விட்டு,
இவற்றை ஏன் தமிழா குழு பார்க்கவில்லை? ஏன் என்னை கேட்காமல் பயர்பாக்ஸை மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டீர்கள் ? என்றும் இப்போது கூக்குரலிடுகிறார்.
சரி போனது போகட்டும்,
தங்களிடம் இருக்கும் கோப்புகளை எங்களுக்குத் தேவையான .po வடிவில் மாற்றித் தாருங்கள் முழுமையான தமிழ் பயர்பாக்ஸ் பொதியை தமிழுலகுக்கு அளிப்போம் என்று நான் பொது அரங்கில் (தமிழ்லினக்ஸ் குழுவில்) (date: Mar 4, 2005) எழுதிய மடலுக்கு இன்னும் இவரிடம் இருந்து பதிலே காணோம்.
பார்க்க: http://groups.yahoo.com/group/tamilinix/message/3841
( இவர் முன்பு இட்ட மறுமொழியில் நான் பதிலே எழுதவில்லை என்று புழுகினார் என்பதையும் இங்கே கவனிக்கவும்)
ஜெயராதா அவர்களுக்கு, எங்களுடன் சேர்ந்து இயங்க முடியவில்லை என்றாலும், தொடர்ந்து இது போல் பொது காரியங்களில் பின்னடைவு ஏற்படும் வண்ணம் செய்யாதீர் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முகுந்த்,
ReplyDeleteதெரிந்தவர்களிடம் வாதிடலாம். தெரியாதது போல நடந்துகொள்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.ஃபையர் ஃபாக்ஸ் பற்றி திட்டத்தை துவங்கும் போதே உங்களுக்கு தெரியப்படுத்தியது, தனி மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு சமீபத்திய கோப்புகளை ஏற்கெனவே அனுப்பியது இரண்டையுமே நீங்கள் கடைசிவரை ஒப்புக்கொள்ளவில்லை.
திட்டங்களை கையாளும் போது மற்ற குழுவுடன் எதிரி மனப்பான்மையுடன் செயல்படுகிறீர்கள். மற்றவர்களின் பங்களிப்பை எப்படி பயன்படுத்த முடியும் என யோசிக்க மறுக்கிறீர்கள். கடைசில் நாங்கள் மனதுவைக்கவில்லை என குறை சொல்கிறீர்கள்.
இதற்கு இரண்டு தீர்வுகள் தான் உண்டு.
1. நான் ஃபையர் ஃபாக்ஸ் முயற்சியையும் நிறுத்திக்கொள்கிறேன். நீங்களே முயன்று முடிக்கவும்.
எனக்கும் வேலை மிச்சம். வேறு ஏதாவது உருப்படியாக செய்யலாம்.
உதவி ஏதும் தேவையெனில் தொடர்புகொள்ளவும்.
.po கோப்பாக இல்லாமலேயே அப்படியே என் கோப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். அவசியம் ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ளவும். இல்லையேல் விட்டு விடவும்.
2. இல்லையெனில் உங்கள் சமீபத்திய கோப்புகளை அனுப்பி வைக்கவும்.( .po களாக அனுப்ப வேண்டாம்) நான் இரண்டையும் சேர்த்து ஃபையர் ஃபாக்ஸ் மொழிபெயர்பு பொதியை உங்களுக்கு உருவாக்கி தருகிறேன்.
நன்றி
ஜெயராதா.
//2. இல்லையெனில் உங்கள் சமீபத்திய கோப்புகளை அனுப்பி வைக்கவும்.( .po களாக அனுப்ப வேண்டாம்) நான் இரண்டையும் சேர்த்து ஃபையர் ஃபாக்ஸ் மொழிபெயர்பு பொதியை உங்களுக்கு உருவாக்கி தருகிறேன்.
ReplyDelete//
If you dont want .po format. Then no need to wait for me to send the files.
You can take it from the language pack we have already released.
You can just use winzip or 7-zip and extract the necessary files from Tamil pack ( Take it from here:
https://addons.update.mozilla.org/extensions/moreinfo.php?application=firefox&category=Languages&numpg=10&id=512
)
and merge your files and release and updated Tamil pack for Firefox .
I would definitely welcome and encourage you if you will work & release an upgraded tamil firefox.
-Mugunth