இந்த ரிப்போர்ட்டில் புது விஷயம் எதுவும் இல்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது புது விஷயம். புலிகள் சார்புநிலை உள்ள ஒரு ரிப்போர்ட் இந்திய mainstream பத்திரிகையில் வருவது இதுவே முதல் தடவை.
சார்புநிலை என்று சொல்வதைக் காட்டிலும் புலிகள் பகுதியில் உள்ள இயல்புநிலையைக் காண்பித்துள்ளது என்பதுதான் சரியானதாக இருக்கும். 'தி ஹிந்து' மட்டும்தான் அவ்வப்போதாவது இலங்கை விவகாரத்தைப் பற்றி எழுதி வருகிறது. ஆனால் அது முழுவதுமாக புலி எதிர்ப்பு நிலையாகவும், இட்டுக்கட்டிய செய்திகளாகவுமே இருந்து வருகிறது.
ஆனால் சஷிகுமாரின் செய்தி விளக்கமாகச் சொல்வது இதுதான்:
* புலிகள் ஏற்கெனவே ஒரு தேசியத்தை அடைந்து விட்டார்கள் - a state within a state, a nation of their own.
* புலிகளின் தேசத்தை சுனாமிக்குப் பிறகு சர்வதேச அரசுகளும் ஓரளவுக்கு அங்கீகரித்துவிட்டன. இல்லாவிட்டால் புலிகளைச் சேர்க்காமல் நிவாரணப் பணி என்றால் காசு கொடுக்க மாட்டோம் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன. இது புலிகளுக்கு, முக்கியமாக பிரபாகரனுக்கு, புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.
* சுனாமி அழிவு ஏற்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளாக ஈழப்பகுதியின் சிவில் அரசமைப்பு புணர்வாழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டது. இதிலிருந்து புலிகள் வெறும் பயங்கரவாத அமைப்பல்ல, மக்கள் நலனை முன்வைக்கும் முழுமையான அரசமைப்பு என்று புலனாகிறது (என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார், அதை சஷிகுமார் ஆமோதிக்கிறார்.)
* ஈழத்தில் நடைபெறும் நீதிமன்றம். 1993-ல் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றம் இப்பொழுது முழுதானதோர் அமைப்பாக விளங்குகிறது. சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்ற முறைப்படி நடக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் உள்ளன.
* முழுமையான உள்நாட்டுக் காவல்துறை.
* குடியேறல் துறை. ஈழப்பகுதிக்குச் செல்பவர்கள் பாஸ்போர்ட் தனியாக பரிசோதிக்கப்படுகிறது. ஈழத்திலிருந்து இலங்கை அரசுப் பகுதிகளுக்குச் செல்வதும், வருவதும் கண்காணிக்கப்படுகிறது.
* ஆனாலும் பல அத்தியாவசியப் பொருள்களுக்காக கொழும்பு அரசைத்தான் ஈழ மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
புலிகள் இந்தியா உறவு பற்றி சிறு பத்தி வருகிறது. அதிலிருந்து நேரடி மேற்கோள்:
The LTTE claims that it has witnessed a phenomenal rise in grassroots support for its cause in Tamil Nadu through the growth of caste parties.லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக புலிகள் இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் இந்தப் பத்தி சொல்கிறது.
The party leaders in Tamil Nadu, who the LTTE claims to be in contact are -- Tamil Nationalist Movement president P.Nedumaran; MDMK general secretary Vaiko; PMK leader S.Ramadoss, who has the support of the Vanniyars who form a sizeable chunk of the middle class in the state and dalit leader R.Thirumavalavan.
But the LTTE is extremely careful of the way it positions the growing political support as it does not want India to feel threatened by Tamil expansionism.
இந்த நீண்ட கட்டுரையை முடிக்கும் முன் ஆசிரியர் சொல்வது இதுதான்:
இங்குள்ள புலிகள் தலைமையிடம் பேசும்போது, அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருக்காமல், புலிகள் தாமாகவே சுதந்தரத்தை பிரகடனம் செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அவர்களே ஈழத்தை அங்கீகரித்தது போலாகும். ஆனால் இந்த முடிவை எதிர்த்து புலிகள் மீது போர் தொடுத்தால், அது பிரபாகரனுக்கு வசதியாகப் போகும். பிரபாகரன் இலங்கை அரசுதான் அமைதிக்கு எதிராகப் போரை ஆரம்பித்தது என்று அவர்கள் மீது கையைக் காண்பித்து விடலாம். மேலும் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமைதியை ஆதரித்து அமைதி இருந்தால்தான் இலங்கை அரசுக்கு நிதியுதவி செய்வோம் என்ற கொள்கையில் இருக்கும்போது, புலிகள் மீது படையெடுப்பது இலங்கை அரசுக்கு முடியாத செயலாக இருக்கும்.
ஆக சந்திரிகா எந்த முடிவை எடுத்தாலும் அது புலிகளுக்கு வசதியாகவே இருக்கும். இலங்கையில் ஓர் அரசியல் சூறாவளி நிகழவிருக்கிறது. ஆனால் புலிகளுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.
நீங்கள் சொல்லியிருக்காவிட்டால் இந்த வி்ஷயம் கண்ணில் பட்டிருக்காது.
ReplyDeleteநன்றி பத்ரி!
பதிவுக்கும்,லிங்கிற்கும் நன்றி, பத்ரி.
ReplyDelete//Can anyone write the lines of my unwritten poem? //
கட்டுரையில் கூறப்பட்டமாதிரி, இது மாலதியால் எழுதப்பட்டதல்ல. கப்டன் வானதியால் (91ம் ஆண்டு ஆனையிறவுக்கான முதற்தாக்குதலின்போது மரணமடைந்திருந்தவர்), இறுதியாய் எழுதப்பட்ட முடிக்கப்படாத கவிதையில் உள்ள வரிகள் இவை. வானதியின் கவிதைகள் தொகுப்பாய் வந்திருக்கின்றது. அதுபோலவே தமிழ்க்கவி நல்லதொரு நாவலை எழுதியுள்ளார், 'இனி வானம் வெளிச்சிரும்' என்று பெயரிடப்பட்ட புதினம் (இந்த நாவல் குறித்து விரிவாக எழுதவேண்டும் என்று இதை வாசித்த காலத்திலிருந்து நினைத்துக்கொண்டிருக்கின்றேன். பார்ப்போம்).
தெஹெல்கா சுட்டி வழி சென்றவுடன் காணக்கிடைத்த "பாக் ஜலசந்தி" தலைப்பிலான கட்டுரையை கண்டவுடன் தோன்றிய எண்ணம்/பகற்கனவு:
ReplyDeleteநிலமை சீரடைந்தால் யாழ்ப்பாணத்திலிருந்து கடலடியாக தமிழ்நாட்டிற்கு நீர் கொண்டுவரக்கூடிய சாத்தியங்கள் பரீசிலிக்கப்பட வேண்டும்.
-
வாசன்
//நீங்கள் சொல்லியிருக்காவிட்டால் இந்த வி்ஷயம் கண்ணில் பட்டிருக்காது.//
ReplyDeleteThanks Badri!
இதைப் பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். முந்திக் கொண்டீர்கள். இந்தியாவின் உதவி இப்போது பெருமளவில் புலிகளுக்கு தேவை. ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் படுத்தப்பட்டுவிட்டால், இந்தியாவிற்கும், ஈழத்திற்கும் நிறைய வர்த்தக உடன்பாடுகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளுண்டு. இன்னமும், மின்சாரம் முழுமையாக இல்லை. மின் உற்பத்தி நிறுவனங்களை உண்டாக்கும் நுட்பத்தினை பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே, இந்தியன் ஆயில் நிறுவனம், லங்கா ஆயில் என்கிற பெயரில், இலங்கையில் கல்லா கட்டுகிறார்கள். இதனை நீட்டிப்பு செய்யலாம். விரிவாக எழுதுகிறேன், தமிழ்ப் புத்தாண்டுக்கு பிறகு. இனி புலம்பெயர்ந்த மக்கள், இந்திய அமைதிப்படையின் அரஜாகத்தினை முன்னிறுத்தி பேசவேண்டியதில்லை என்பதும், புலிகள் ராஜீவ் மரணத்தினை ஒரு துர்சம்பவம் என்றும் சொல்லி விட்டார்கள் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், காங்கிரஸ் அரசால், இதை வைத்துக் கொண்டு ஏதாவது செய்யஇயலும் என்று தோன்றவில்லை. அவர்கள் இன்னமும் மனவிலங்கிலேயே இருக்கிறார்கள் அல்லது இருக்கவைக்கப்படுவார்கள் என்று தோன்றுகிறது.
ReplyDeleteவடக்கிந்திய ஏடு ஒன்றில் தமிழர் பிரச்னை பற்றிய நடுனிலை மகிழ்ச்சி தரும் விஷயம். தெஹெல்கா சுட்டிக்கு நன்றி பத்ரி!
ReplyDelete//இதனோடு இணைந்த இன்னுமொரு செய்தி இது.. நன்றி தமிழ்நாதம்//
ReplyDeleteபழைய சம்பவங்களை மறந்துவிட்டு ஈழத்தமிழருக்கு அமைதி நியமங்களுக்கு கீழ் நிரந்தர சமாதானத் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க சிறீலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நீதி நிர்வாகப்பொறுப்பாளர் பரா தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு இந்தியாவுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய புலனாய்வு இணையத்தளமான தெகல்கா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய அரசுத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு 2002 ஆம் ஆண்டு; வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலக அதிகாரிகளில் ஒருவரான வண. கருணாரட்ணம் அடிகளார் அங்கு சென்றிருந்தார். ஆனால் அப்போது இந்திய-பாகிஸ்தான் உறவில் முறுகல் நிலை தீவிரமாக இருந்ததால் திட்டமிட்டபடி சந்திப்பு கைகூடவில்லை என்று விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் நலனுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தக்காரியத்தையும் விடுதலைப்புலிகள் செய்யமாட்டார்கள். அதேபோல் தமிழ் மக்களின் நலனுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்த வேலையும் இந்தியா செய்யக்கூடாது என்று தமிழகக்கட்சிகளுக்கு ஊடாக ஒரு உறுதிமொழி செய்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புக்களில் விடுதலைப்புலிகள் வழங்கிய செய்தியை எடுத்துச்சென்றுள்ள அந்த அதிகாரி அதை லண்டன் தூதரகம் ஊடாக புதுடில்லி அரசிடம் சமர்ப்பித்திருப்பார் என்றும் விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தச்செய்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரக ஊடகப்பிரிவு அதிகாரி பரத்வாஜ் என்பவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி எதுவும் நடந்ததாக தனக்கு தெரியாது என்றும் அவ்வாறான தகவல் பரிமாற்றம் எதுவும் நடந்ததாகவோ நடக்கவில்லை என்றோ தன்னால் கூறமுடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம் வலைஞ்சிகையின் விளையாட்டு அநியாயம். மேற்குறிப்பிட்டதிலிருந்து அப்படியே தனக்குச் சார்பானதை அள்ளிப்போட்டுக்கொண்டு, அதிலே "அருணன், ஈழம்" என்று வேறு யாருக்கோ தானம் வேறு கொடுத்திருக்கின்றது :-( வெட்கக்கேடு. இதனாலே, அவர்களை மற்றவர்கள் நம்பமுடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் :-(
ReplyDeleteநன்றிகள் பத்ரி. நீங்க சுட்டியது மட்டும் அல்ல நீங்கள் தொகுத்ததும் தரம். மீண்டும் நன்றிகள்
ReplyDeleteதங்கள் பதிவிற்கு நன்றிகள் பல!
ReplyDeleteஇதுப் போல பல பதிவுகள் இந்திய பத்திரிக்கைகளில் வர வேண்டும்.
நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழ மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்.
பத்ரி தொகுத்து வழங்கியது மேலும் சிறப்பு!
நன்றி. மயிலாடுதுறை சிவா...
http://www.eelampage.com/index.shtml?id=2005031218020310342&in=">
ReplyDeleteஇங்கு போட்டிருக்கிறதிலே தேவையானதை மட்டும் எடுத்து அங்கே போட்டிருக்கிறார்கள். அதுவே செமை கூத்து... கூடவே " இந்திய அரசின் சார்பு நிலை இணையத்தளமான தெகல்கா " என்று எழுதியிருப்பதைப் படித்து விட்டு முடியைப் பிச்சிகிட்டேன். தெகல்கா, அரசு சார்பான இணையத்தளமா? அடப்பாவியளா......
தெஹெல்கா கட்டுரையின் செய்தியைச் சாரமாக்கிச் சொன்னமைக்கு நன்றி பத்ரி!
ReplyDeleteபுதினம் - யாரென்று தெரியவில்லை. அவர்கள் இதிலிருந்து உருவி எழுதியதில் எனக்கொரு வருத்தமுமில்லை. இது ஒன்றும் நான் சொந்தமாக ஆக்கிய கருத்தில்லை. தெஹெல்கா வீட்டுக்கு வருவதைப் படித்து, சுருக்கி எழுதினேன். அவ்வளவே.
ReplyDelete===
பிரகாஷ்: அவர்கள் இந்திய அரசுச் சார்புநிலை பத்திரிகை என்று சொன்னது எனக்கும் புரியாத புதிராக இருந்தது. இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகை, அல்லது Indian mainstream journal (சொல்லப்போனால் தெஹெல்கா mainstream கிடையாது) என்று சொல்ல நினைத்திருக்கலாம்.
அடேங்கப்பா.. புதினத்தில் வந்த இந்தச் செய்தி அப்படியே நிதர்சனத்தில் வந்திருக்கிறது. ஆனால் பத்ரி எழுதிய அதே செய்தியை புதினத்தில் உள்ளது போலவே நிதர்சனத்தில் எழுதியிருப்பவர்.. எஸ் எழில்வேந்தன்
ReplyDeleteஇதை எங்கை போய்ச் சொல்லியழ..
இது இணைப்பு
http://nitharsanam.com/?art=9620
யோவ்,நம்ம பிரதமரைக் கடாசிய பயங்கரவாதிப்புலிகளைப்பற்றி என்னாவோய் பனாத்திக்கிட்டுப் போறீர்க?இவங்க நம்ம நாட்டில பண்ற காரியங்க கொஞ்சமா! இவங்கட தினாவெட்டால தமிழகமே அமைதியிழந்து போச்சுன்னு நா சொன்னா-இவங்கு பார்ப்பான்னு சொல்லிடுவாங்க.ஏன்னா இவங்க பண்ற அனியாயத்த நம்ம படிப்பாளிங்க சோ மாதிரி மேதைங்க தட்டிக்கேட்டுக்கிட்டே இருக்கிறாங்கல்லா -அது இந்த கத்துக்குட்டிப் பயலுகளுக்குப் புரியுமோ? வந்திட்டாங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு... ஏண்ட ஏகலைவா கட்டுரையில நீ சாஷ்டாங்கம் பண்ணுவியோ?சோ மாதிரி மேதைகளுக்கு இந்தக் கத்துக்குட்டிப் பசங்களின் கட்டுரை என்னாத்துக்கு?
ReplyDeleteஈழத்தவன் நம்ம பாரதப் புதல்வனையே கொன்னுபோட்டு உறுவுப்பாலம் போடுகிறாங்களா-எதற்கு? தமிழ்நாட்டு மணிப் புதல்விக்குக் குண்டு கொண்டுவரவா?
இந்தியா பிராபாகரன் பயல ஒரு பாடுபடுத்தாம ஓயாது-ஒறங்காது!
யாழ் அந்த மணி புதல்வி? ஊழல் திலகம் ஜெயலலிதாவா?
ReplyDeleteஅக்கட்டுரையின் முழுத் தமிழ் வடிவமும் தினக்குரலில் வெளியாகியயுள்ளது.. சுட்டிகள் இதோ..
ReplyDeletehttp://thinakural.com/New%20web%20site/web/2005/April/24/epaper/page-20.swf
http://thinakural.com/New%20web%20site/web/2005/April/24/epaper/page18.swf