1. ஐஐடி மெட்ராஸ், பிற்படுத்தப்பட்ட, SC/ST மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களை ஒதுக்குவதில்லை என்று ஒரு ரிட் மனுவை கமலக்கண்ணன் என்ற மாணவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது சம்பந்தமாக ஏற்கெனவே ஒரு பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்ற டிவிஷன் பெஞ்சில் உள்ளதால் இரண்டும் சேர்த்து விசாரிக்கப்படும்.
2. சுப்ரமணியம் சுவாமி, சோனியா காந்தி தன் தேர்தல் மனுவில் பொய்யான கல்வித் தகுதி பற்றிய தகவலைச் சேர்த்திருந்தார் என்றும், அதனால் தேர்தல் ஆணையம் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
3. பல பொதுநல அமைப்புகள் (சென்னையைச் சேர்ந்த உந்துநர் அறக்கட்டளை சேர்த்து), தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தீம்தரிகிட ஆசிரியர் ஞானி ஆகியோர் வரவேற்கும் தேர்தல் சீர்திருத்தம் - தேர்தல் இயந்திரத்தில் (வாக்குச்சீட்டில்) "எனது வாக்கு யாருக்கும் இல்லை" என்ற தேர்வையும் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை உச்ச நீதிமன்றம் முன் வந்துள்ளது. இந்தப் பொதுநல வழக்கைத் தொடுத்திருப்பது மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL). விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் வழக்கு விசாரணையைத் தொடரும்.
இதில் விசேஷம் என்னவென்றால் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் இதை ஆதரித்துப் பேசுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் எதிர்க்கிறார்.
(Source: The Hindu)
விண்திகழ்க!
2 hours ago
//பல பொதுநல அமைப்புகள் (சென்னையைச் சேர்ந்த உந்துநர் அறக்கட்டளை சேர்த்து), தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தீம்தரிகிட ஆசிரியர் ஞானி ஆகியோர் வரவேற்கும் தேர்தல் சீர்திருத்தம் - தேர்தல் இயந்திரத்தில் (வாக்குச்சீட்டில்) "எனது வாக்கு யாருக்கும் இல்லை" என்ற தேர்வையும் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை உச்ச நீதிமன்றம் முன் வந்துள்ளது. இந்தப் பொதுநல வழக்கைத் தொடுத்திருப்பது மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL). விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் வழக்கு விசாரணையைத் தொடரும்.//
ReplyDeleteஇதற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டால், பரவலான தொடர்முயற்சிகள் மூலம் இதை மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டால், அரசியல்வாதிகளுக்கு திண்டாட்டம்தான். இது எனது வாக்கு யாருக்கும் இல்லை என்பது மட்டுமா, அல்லது வாக்குச்சீட்டில் இல்லாத ஆனால் பொதுநலமாய் வேறு யார் பேரையாவது முன்மொழிய இயலுமா என்றும் பர்ர்க்க வேண்டும்.