நேற்று கவிஞர் புஹாரியின் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு அரங்கம் இருந்தது. அதனால் அலுவலகத்திலிருந்து நடந்து அந்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டு அப்படியே நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்தேன்.
இரவு 8.45க்கு வீடு நோக்கி நடக்கும்போது, கவுடியா மடத்தெருவில் ஒரு வீட்டின் வாசலில் சண்டை. அந்த வீட்டின் வயதான வாட்ச்மேன் கையில் தடிக்கம்பு ஒன்றை வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்தார். அவரை எதிர்த்து இளைஞன் ஒருவன் ஏதோ திட்டிக்கொண்டிருந்தான்.
பக்கத்தில் நடைபாதையில் ஒரு சைக்கிள் ரிப்பேர்க் கடை இருந்தது. அந்த இளைஞன் சைக்கிள் கடையில் கிடந்த ஒரு பெரிய ஸ்பானரைக் கையில் தூக்கிக்கொண்டு வாட்ச்மேனை எதிர்த்தான். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்தவாறு சிலர் அருகில் நின்றுகொண்டிருந்தனர். திடீரென வாட்ச்மேன் கையில் இருந்த கம்பால் அந்த இளைஞன் மண்டையில் ஓங்கி அடித்தார். அவனது மண்டையின் இடதுபுறம் காதுக்கருகில் பலமாக அடிபட்டிருக்கும். ஒரு விநாடி சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞன் தன் கையில் இருந்த இரும்பு ஸ்பானரால் அந்தக் கிழவரை ஓங்கித் தாக்கினான். அவரைக் கீழே தள்ளினான். கால்களால் அவரது வயிற்றை மிதித்தான். தொடைகளுக்கிடையில் மர்மஸ்தானத்தை ஓங்கி உதைத்தான்.
சுற்றி இருந்தவர்கள் முதலில் இருவரையும் விலக்கிவிட முயற்சி செய்யவில்லை. பின் சற்று தாமதமாக அந்த இளைஞனைப் பிடித்து இழுத்தனர். இதற்குள் எழுந்திருந்த கிழவர் கீழே நழுவியிருந்த கம்பைக் கையிலெடுத்து மீண்டும் அந்த இளைஞனைத் தாக்கினார். நல்ல வேளையாக மற்றொருவர் அந்த இளைஞனைக் கையோடு பிடித்து அந்த இடத்தை விட்டு இழுத்துச் சென்றார். அந்த இளைஞன் அங்கிருந்து தலையைக் கையால் பிடித்துக்கொண்டு சிறிது தூரம்தான் சென்றிருப்பான். அவனது முகத்தில் அடிபட்ட அவமானம் தெரிந்தது. தலை வலித்ததைவிட சுயம் வலித்திருக்கவேண்டும். திடீரென, தன்னை இழுத்துச்செல்பவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் அந்த வாட்ச்மேன் இருக்குமிடம் நோக்கி ஓடினான்.
இதற்குள் சுற்றியிருப்பவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். நான் சாலையின் மறுபக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்த வாட்ச்மேன் வீட்டின் வாசலில் இருந்த கேட்டை இழுத்துப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார். இளைஞன் நடு வாசலில் நின்றுகொண்டு தன் வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டிருந்தான்.
தெருவில் வண்டிகள் எந்தச் சலனமும் இன்றி ஓடிக்கொண்டிருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
அய்யா.. :-) என்னமோ சொல்ல வந்தேன்.. வேண்டாம் விடுங்க.. நான் எதாவது சொல்லி.. அப்புறம் யாராவது கம்பு எடுத்துட்டு வந்தா வம்பு..
ReplyDeleteராசா, இங்கேயும் அதே:-)
ReplyDeleteபதிவு வந்தவுடனே பார்த்தேன்... எப்படி சொல்றதுன்னு போய்ட்டேன்.
ReplyDeleteஇப்ப திரும்பவும் பார்க்கும்போது, 2 பின்னூட்டம்னு உடன... ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யான்னு நினைச்சா... ரெண்டு தைரியசாலி நின்னுகின்னு ஏதோ பேசிண்டிருக்கிறீங்க.... :)
புகாரி திறனாய்வரங்கம் பற்றிய உங்கள் பதிவு மிக அருமை.
ReplyDelete//அவனது முகத்தில் அடிபட்ட அவமானம் தெரிந்தது. தலை வலித்ததைவிட சுயம் வலித்திருக்கவேண்டும்...
ReplyDeleteநான் சாலையின் மறுபக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.//
நாய்கள் சண்டை போட்டால் கூடத்தான், எந்த நாயும் சண்டையை விளக்கிவிட வருவதில்லை; அதேசமயம், அவை சண்டையை வேடிக்கையும் பார்ப்பதில்லை.
ஞானபீடம், நாய்களால் சண்டையை விளக்க முடியுமா என்ன? நமது நண்பர் சண்டையை விலக்கி விடவில்லையே தவிர விளக்கி விட்டார். ஏதோ அவரால் முடிந்தது. இருந்தாலும் நாய்கள் உதாரணம் கொஞ்சம் ஓவர்.
ReplyDelete- ஞானசூனியம்
என் அறிவுக்கு எட்டியது: வண்டிகள் எப்படிச் சலனம் இல்லாமல் ஓடும்?
ReplyDelete¬†¡, Áì¸û þùÇ× º¢ó¾¢ì¸ ¬ÃõÀ¢îº¢ð¼¡í¸Ç¡? ¿¡Î ¾¡í¸¡¾ö¡, ¾¡í¸¡Ð!
ReplyDeleteதெருவில் வண்டிகள் எந்தச் சலனமும் இன்றி ஓடிக்கொண்டிருந்தன
ReplyDeletethe observer was oblivious to the sound or was engulfed by silence. you should read little magazines.there is more to life than chess :)
என் அறிவுக் கண்கள் திறந்து போயின. நன்றி "anonymous".
ReplyDeleteநான் chess விளையாடுவதில்லை (விளையாட இங்கெவரும் இல்லை + எனக்குப் பெரிதாக விளையாடவும் தெரியாது).
ஒண்ணும் புரியலையே! என் கு(கி)றுக்குபுத்தி 'ரீடிங் பிட்வீன் லைன்ஸ்' சொல்லுது,
ReplyDeleteபுஹாரி கவிதைகளைவிட இந்தத் தெருச்சண்டை 'நல்லா இருந்ததுன்னு:-)
அப்ப்டியா?
±ý§É¡§Á¡ ¬îº¢ Àòâ «ñ½¡Å¢üÌ,
ReplyDelete±ýɾ¡ý ¦º¡øÄ ÅÈ£í¸... ¸¢ÆÅ÷ ¦ÅüȢ¨¼óÐÅ¢ð¼¡Ã¡, «øÄÐ þý¨È þ¨Ç»÷¸û Å¡ö ÁðÎõ¾¡ý ºñ¨¼§Â ¦¾Ã¢Â¨Ä ±ýÚ ¦º¡øÄ ÅÈ£í¸Ç¡... þø¨Ä ºð¼ôÀÊ ¿¼ÅÊ쨸 ±Îì¸ §Åñ¼¡õ ÁýÉ¢òРŢ¼Ä¡õ ±ýÚõ Áñ¨¼ ´ÊïºÉ¡ ¨¸ ´ÊïºÉ¡... «ôÀÊí¸¢È£í¸Ç¡ ²ýÉ¡ ¿£í¸¾¡ý Áì¸Ç¡ðº¢Ä ÌüÈõ þø¨ÄõÀ£í¸§Ç..
ºÃ¢. ¾¡ò¾¡Å¢üÌ ²§¾Ûõ «ÊôÀðξ¡... ÀÂóо¡ý ¿¢ýÉ£í¸ ¬É¡ø À¼õ ±Îì¸Ä¡Á¢øÄ...
¦¾¡¨Ä측𺢠¦¾¡¼¨Ã §¿ÃÊ¡ À¡÷츢Ⱦ¡ ¿¢¨É츢ðËí¸¡.
Ò.Ó.ͧÄ, Á§Äº¢Â¡.
"யாருமே கண்டுக் கொள்ளவில்லை", "எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரிதாங்க! அப்ப நீங்க...................?
ReplyDeleteஇப்படிக்கு,
பொல்லா பிள்ளையார்