Friday, May 27, 2005

தமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்

நாளை சனிக்கிழமை, 28 மே 2005 அன்று, மாலை 6.00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலைக்கு அருகே தமிழ் மென்பொருள் ஆர்வலர் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. [ராதாகிருஷ்ணன் சாலை கடற்கரைச் சாலையுடன் இணையும் இடம். காவல்துறை அலுவலகத்துக்கு எதிர்ப்புறம்.]

நோக்கம்: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினிகளில் (விண் 98, விண் எக்ஸ்பி) தமிழில் படிக்க, எழுத, ஒரு எழுத்துருவிலிருந்து மற்ற எழுத்துருக்களுக்கு மாற்ற, விண் 98ல் முடிந்தவரையில் யூனிகோடுக்கான வசதிகளைச் செய்துதர, அடிப்படைத் தேவையான தமிழ் இடைமுகத்தால் ஆன உலாவி, மின்னஞ்சல், மெஸஞ்சர், ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருள்கள் ஆகிய அனைத்தையும் நிறுவ என்று ஒரு மென்பொருளை உருவாக்குவது. முடிந்தவரையில் திறமூல மென்பொருள்களைப் பயன்படுத்த எண்ணம்.

மிக எளிதாக நிறுவப்படக் கூடிய, தானே நிறுவும் வகையிலான ஒரு மென்பொருளை உருவாக்குவது, எந்த வகையிலும் கணினி அறிவு இல்லாதவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த நிறுவு மென்பொருளை உருவாக்குவது ஆகியவை பற்றி விவாதிப்போம்.

பிற விஷயங்கள்: தமிழ் லினக்ஸ் தற்போதைய நிலை. புதிதாக வரத்தொடங்கும் கணினி போன்ற கருவிகளுக்கு (AMD's PIC, Mobilis etc. from Simputer, Novatium's thin clients etc.) தேவையான தமிழ் ஆதரவு.

கலந்துகொள்பவர்கள்: முகுந்த், நாராயண், பத்ரி.

சென்னையில் இருக்கும், விருப்பமுள்ள தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

6 comments:

  1. நல்ல விஷயத்திற்கு கூடுறீங்க... கூட்டம் மிகப் பயன்மிக்கதாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி பத்ரி அவர்களே. கண்டிப்பாக நான் வருவேன்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    ப்ளாக்கர் எண் 4800161
    (எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

    ReplyDelete
  3. தயவு செய்து

    உமரின் யூனிகோட் ரைட்டர்

    கலையின் குறள் 3.2

    லெட்டிட் போன்ற மென்பொருள்களைப்

    பற்றி பலர் அறியத்தாருங்கள்

    இண்டி ராம்

    ReplyDelete
  4. இந்த கருத்தரங்கம் நன்கு விவாதித்து நல்லதொரு மெண்பொருளை தமிழ் கூறும் நல்லகுகிற்கு விரைவில் வழங்கிடும் என்ற நம்பிக்கையில்......

    அன்புடன்
    அரவிந்தன்...

    ReplyDelete
  5. //உமரின் யூனிகோட் ரைட்டர்

    கலையின் குறள் 3.2

    லெட்டிட் //

    சுட்டி தர முடியுமா 'ராம்'

    ReplyDelete