தமது அரசியல் தளத்தை விரிவுபடுத்தவேண்டி புதுவகைப் போராட்டம் நடத்தும் ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகிய மூவரையும் அவர்களது ஆதரவாளர்களையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதை நான் வெகுவாக ஆதரிப்பவன். அதே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் பெயர்ப்பலகைகள் வைப்பதையும் ஆதரிப்பவன். இன்று ராமதாஸ் தலைமையில் மேற்படி மூவர் கூட்டணி, தம் ஆதரவாளர்களோடு, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பெயர்ப்பலகை வைத்த பாரத ஸ்டேட் வங்கியின் போர்டில், ஆங்கில எழுத்துக்கள் மீது மட்டும் கரி பூசிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என்றா இவர்கள் எதிர்பார்க்கின்றனர்? பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை என்று கண்டிப்பது வேறு, தமிழில் மட்டும்தான் பெயர்ப்பலகைகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேறு.
முதலாவது எனக்கு நியாயமானதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் தோன்றுகிறது. இரண்டாவது அபத்தமாகவும், வன்மையாகக் கண்டிக்கக்கூடியதாகவும் தோன்றுகிறது. இதுதான் மூன்றாவது மொழிப்போர் என்றால் அதற்கு எனது ஆதரவு முற்றிலுமாக இல்லை.
[இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களை இத்துடன் நிறுத்தி வைத்துள்ளேன். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி.]
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
10 hours ago
ரோம்போ கொதிச்சுபோய் எழுதியிருகீங்க போலிருக்கு...
ReplyDeleteநீங்கள் சொல்வதில் 'அரசியல்' இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் நியாயம் உள்ளது.
ReplyDelete- சுட்டுவிரல்
//பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை என்று கண்டிப்பது வேறு, தமிழில் மட்டும்தான் பெயர்ப்பலகைகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேறு.//
ReplyDeleteஇதை வழிமொழிகிறேன்
//தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என்றா இவர்கள் எதிர்பார்க்கின்றனர்? பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை என்று கண்டிப்பது வேறு, தமிழில் மட்டும்தான் பெயர்ப்பலகைகள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேறு.//
ReplyDeleteஉண்மைதான்.
தமிழில்மட்டுந்தான் பெயர்ப்பலகைகள் இருக்க வேண்டுமென்பது தவறு. பழ.நெடுமாறன் கூட இப்படிச் செயற்படுவது வருந்தத்தக்கது. இது அவர்களின் போராட்டத்திலுள்ள நியாயத்தன்மையைக் கேலிக்குள்ளாக்குகிறது.
ReplyDeleteஅவர்களின் திட்டமே அப்பத்தான் வரையப்பட்டிருந்ததா, அல்லது ஆதரவாளர்களின் உணர்ச்சிமயப்பட்ட தவறா என்பது தெரியவில்லை. ஆனால் அச்செயலுக்கு அதன் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
நியாயம் ! இதை வழிமொழிகிறேன்
ReplyDeletehttp://arataiarangam.blogspot.com/
நான் வேறு இங்கே எனது கருத்தையும் எழுதி இந்த விவாதத்தின் போக்கையே திசை திருப்ப வேண்டுமா என்ன? வழக்கம் போல 'அப்பீட்' ஆகிக்கிறேன். :)
ReplyDeleteவெறியர்கள் மட்டும் இல்லை. இவர்கள் தமிழ் மொழியை சுய நலத்துக்காக உபயோகப்படுத்தும் சந்தர்ப்பவாதிகள். தயவுசெய்து 'போர்' என்றெல்லாம் சொல்லி இவர்கள் செய்வதை புனிதப்படுத்திவிட வேண்டாம்.
ReplyDeleteநியாயமான வாதம். ஆனால் நீங்கள் பார்த்தது எந்த தொலைகாட்சியில் காட்டப்பட்டது? அது போன்று தான் எல்லா இடங்களிலும் நடந்ததா? அல்லது அதை மட்டும் தேர்ந்தெடுத்துக் காட்டினார்களா? விதிவிலக்கை வைத்து விதிகள் செய்வதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்--செய்வது யாராக இருந்தாலும்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete//By: மாயவரத்தான், at 6:23 PM
ReplyDeleteவெறியர்கள் மட்டும் இல்லை. இவர்கள் தமிழ் மொழியை சுய நலத்துக்காக உபயோகப்படுத்தும் சந்தர்ப்பவாதிகள். தயவுசெய்து 'போர்' என்றெல்லாம் சொல்லி இவர்கள் செய்வதை புனிதப்படுத்திவிட வேண்டாம்.//
மாயவர்த்தனா நீங்கள் தமிழனா என்பது சந்தேகமாகத்தான் இருக்கு. ஏன் எனெனில எப்போதும் நீங்கள் தமிழுக்கும் தமிழ் சம்பந்தமாகப் பேசுபவர்களுக்கும் எதிராகப் பின்னூட்டமிடுகிறீர்கள்.
பத்ரி உங்களுடைய கருத்து ஏற்கக் கூடியமாதிரி இருக்கிறது. ஆனால் பழ. நெடுமாறன் அவர்களுக்கு அரசியல் தளத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவையில்லையென்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.
ReplyDeleteமன்னிக்கவேண்டும் மாயவர்த்தனா. சுரேஸ் சொன்ன கருத்துக்கு உங்களுடைய பெயரைப் போட்டுத் திட்டிவிட்டேன்.
ReplyDeleteசுந்தரமூர்த்தி: நான் பார்த்தது சன் நியூஸ் தொலைக்காட்சி மதியம் 2.00 மணிச் செய்தி, 2.30 மணிச்செய்தியில்.
ReplyDeleteகாண்பிக்கப்பட்ட பல படத்துண்டுகளில் இதுதான் மிகவும் விரிவாக இருந்தது. சில ஆங்கிலம் மட்டுமே இருந்த பலகைகளிலும் கரி பூசினார்கள். ஆனால் அத்துடன் தமிழும், ஆங்கிலமும் கலந்திருந்த பலகையிலும் இந்த வேலை நடந்தது. ஆக, எங்கு ஆங்கிலம் இருந்தாலும் அதில் 'கரி பூசு' என்று சொல்லியிருப்பார்கள் போல.
தொண்டர்களின் தவறுக்கும் தலைவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தத் தவறு ஓரிடத்தில் நடந்தாலும் சரி, நூறு இடங்களில் நடந்தாலும் சரி.
நாளை முழு விவரங்கள் கிடைக்கும். அதைப் பதிவு செய்கிறேன்.
//மன்னிக்கவேண்டும் மாயவர்த்தனா. சுரேஸ் சொன்ன கருத்துக்கு உங்களுடைய பெயரைப் போட்டுத் திட்டிவிட்டேன்.//
ReplyDeleteபரவாயில்லை இளையவன். கருத்தை பார்த்தெல்லாம் திட்டுவதில்லை. ஆளைப் பார்த்து தான் திட்டுவீர்கள் என்பதை நிருபித்ததற்கு! வாழ்க உங்கள் மனப்பான்மை!!
(கருத்தே சொல்லாம போனாலும் திட்டுராய்ங்கப்பா!)
என்னோட பேரு மாயவர்த்த்னா இல்லை.. மாயவரத்தான்... தமிழிலே தான் எழுதியிருகிறேன். அது படிக்கவே கஷ்டமா?
இந்த விடயம் அரசியல் போராட்டமாக வடிவெடுத்திருப்பது நல்லது.
ReplyDeleteஆனால் தமிழில் மட்டும் பெயர்ப்பலகை என்பது அநியாயம். முட்டாள்தனம்.
நான் நினைக்கிறேன்.
இதனை செய்தவர்கள், கட்சியின் அடிமட்ட தொண்டர்களாக இருக்கலாம்.
சிலவேளை தலைமைக்கும் இச்சம்பவத்துக்கும் சம்பந்தமில்லாதிருக்கலாம்.
தலைமைக்கு தெரியப்படுத்துவது நல்லது. எமது ஆதங்கத்தை.
ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே நாம் உலக நாடுகளுக்கு போகத்துணிகிறோம்...?
நாணயத்திற்கு மறுபக்கம் என்பது போலவொரு எடுத்துகாட்டு..
ReplyDelete==
எ கா
http://thoughtsintamil.blogspot.com/2005/05/blog-post_111684209695932138.html
எனக்கு ஒரு காப்பி எடுத்து வெச்சிருங்க.. என் ப்ளாகுக்கு மேட்டர் கிடைக்காம ஒரே அவஸ்தை... தேறுதான்னு பாப்பம் :-)
( faculty படம் எல்லாம் ரிவர்ஸிலே இருக்க மாதிரி இருக்கு )
மேலுள்ளதை எழுதிய பிரகாஷ்
"...எனக்கும் ஒரு படி எடுத்து வெச்சிருங்க,,, என்னுடைய பதிவுக்கு விடயங்கள் ( அல்லது விஷயங்கள் சரியே ) கிடைக்காம ஒரே இக்கட்டு...தேறுதான் பாப்பம் :-)
வளாக மாணவர் குழு படம், பின்னோக்கி ??? எடுத்த மாதிரில்ல இருக்கு.."
என்று எழுத முடியாததும் ஒரு வகை மொழிப்போர்தான், முதுகில் குத்துகிற போர்.
வாசன்
பத்ரி,
ReplyDeleteஅரசியல் லாபத்துக்கு என்று எப்படிச்சொல்கிறீர்கள். பிரச்சினையை இரண்டாகப் பார்க்கலாம்.
தார்பூசுவது என்பதை ஒரு குறியீடாகக் கொள்ளுங்கள். (என்னைக் கேட்டால் எளிதில் அழிக்ககூடியதாக பூசலாம், வியாபாரிகளுக்கு செலவு மிச்சம்)
கிருஷ்ணசாமியின் நோக்கம் பற்றி எனக்குத் தெரியாத போது நான் கருத்து சொல்லக்கூடாது. திருமாவளவனின், "தமிழர் அடையாளம்" என்பதோடு சேர்த்துப்பாருங்களேன். அதில் என்ன உங்களுக்குப் பிரச்சினை? இதனூடு அடங்கியிருக்கும் தலித் நலப்பணி தெரியும்.
சென்னையிலே சரவணபவனுக்குள் நுழைய எத்தனை கிராமத்தோர் பயப்படுவர் என்று யோசித்ததுண்டா. அதற்காக பெயர்ப்பலகையை தமிழில் மட்டுமே வைத்தால் சரியாகிவிடும் என்று சொல்லமாடேன். இது ஒரு செயற்பாடு அவ்வளவுதான். கொஞ்சம் அந்நியத்தன்மை குறையும் என்று புரிந்து கொள்கிறேன்.
ஆங்கிலம் இருப்பது அவசியம்தான். ஆனால், ஆங்கிலம் எல்லா மாநிலங்களிலும் அமல் செய்யப்பட்டுள்ளதா? என்ற மட்டையடியிலிருந்தே முதலில் துவங்குவோமே? ;-)
வாசன், உங்கள் மொழிபெயர்ப்பு தவறாக இருந்தாலும், நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது. பிரகாஷ் என்ற பெயரே தமிழ் இல்லைதான். என்ன செய்வது. எல்லோருமே தமிழ் பற்று (மொழிப்பற்று) விசயத்தில் தடுமாறுகின்றோமோ என்று தோன்றுகின்றது. இன்று ஆங்கிலமே கலக்காமல் தமிழ் பேசுவது கிராமப்புறங்களில் வசிக்கும் வயதானவர்களும், படிப்பறிவில்லாதவர்களும் தான். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் தமிழே கலக்காமல் ஆங்கிலம் பேசும் தமிழர்களும் உள்ளனர். இந்த இரண்டு பிரிவினையும் தவிர மீதியுள்ள பெரும்பாலான கூட்டம் பேசுவது, எழுதுவது தமிங்கிலம்தான். அவரவர் ஆங்கில அறிவைப் பொறுத்து, சேர்க்கும் ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை இருக்கும். இது தமிழுக்கு ஆரோக்கியமா என்றுத் தெரியவில்லை. நாமெல்லாம் தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு செய்தால்தான் செய்ய முடியும். இயல்பாக நமக்கு அது வருவதில்லை. இது இயல்பிலேயே வரும் காலம்தான் தமிழ் வளர்ந்த காலமாக இருக்க முடியும். எனக்கென்னவோ அந்த காலம் வராது என்ற அவநம்பிக்கைதான் உள்ளது.
ReplyDelete- ஞானி
karthikramas said...
ReplyDelete//சென்னையிலே சரவணபவனுக்குள் நுழைய எத்தனை கிராமத்தோர் பயப்படுவர் என்று யோசித்ததுண்டா. //
ரொம்ப நேரம் யோசித்தேன். நீங்கள் எதற்காக இதனை எழுதினீர்கள் என்பது புரியவில்லை.
- ஞானி
எது ரொம்ப கறுப்பு?
ReplyDeleteபெயர்ப்பலகையில் பூசப்பட்ட தார்
இடைத்தேர்தலில் கூட்டணிக்கு பூசப்பட்ட கரி
(தாரைத் தமிழ்ப்படுத்தவில்லையோ இடிதாங்கி)
//நாணயத்திற்கு மறுபக்கம் என்பது போலவொரு எடுத்துகாட்டு..//
ReplyDeleteதவறுதான் வாசன். இயல்பாக உரையாடும் போது எந்த மொழியைக் கைக்கொள்கிறேனோ, அதையே, சில பொழுது ( பல சமயங்களில் என்றும் கொள்ளலாம்) எழுதும் போதும் பின்பற்றிவிடுகின்றேன். அப்படிப் பேசுவதும் எழுதுவதும் தவறு என்று தோன்றினாலுங்கூட, புகைப்பழக்கம் போல, விட முடியாதாக இருக்கின்றது. இனி முயற்சிக்கிறேன்.
பத்ரி, நீங்கள் சொல்லுவது சரி - வெறுமனே ஆங்கிலத்தில் மட்டும் எழுதியிருந்தால் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஆங்கிலத்தை அழிப்பது சரி (உள்நாட்டில் தயாரானக் கதராடையை ஆதரித்து, பிரிட்டிஷ் மில் துணிகளை எரித்த கதர் இயக்கத்தின் போராட்ட வழிமுறையைப் போல!). தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் போதிலும் ஆங்கிலத்தை அழிப்பது சரியல்ல. அது மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தையே தவறாகப் புரிந்து கொள்ளும்படியான இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ReplyDeleteநோக்கம் ஒன்று, நடைமுறை வேறாய்த் திரிந்து வரும் எல்லாப் பிரச்சினைகளைப் போலவே இதுவும் என்று நினைக்கிறேன். இந்தி எதிர்ப்பு இப்படித்தான் ஆனது. திரைப் படங்களுக்கு வேண்டுமென்றே வாயில் நுழையாத, கதைக்குச் சம்பந்தமில்லாத ஆங்கிலப் பெயர்களை எதிர்ப்பது என்பது சரி. மும்பை எக்ச்பிரஸ் என்ற நடப்பில் உள்ள பெயர்களையும் எதிர்க்கும் பொழுது நோக்கத்தின் எதிரிகள் ஜல்லியடிப்பதற்குத் துணை போகிற செயலாக முடிகிறது.
இப்படி சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பறுந்த நிலை ஒன்றும் புதிதல்லவே. வாதத்துக்காக சோ. இராமசாமியும், ஜெயகாந்தனும் (தற்பொழுது பி. கே. சிவக்குமாரும் :-) கூறி வருவது போல பார்ப்பனியம் உயர்வான தத்துவம் என்றாலும், சோ "எங்கே பிராமணன்" நூலிலிம், ஜெயகாந்தன் "பிரம்மோபதேசம்" குறுநாவலிலும் சொல்லும் உண்மையான பார்ப்பனியத்தை ஒருவர் கூட நடை முறையில் கடைப் பிடிக்காமல் இருப்பதைப் போல!
நன்றி - சொ. சங்கரபாண்டி
அன்பு பத்ரி...
ReplyDeleteதமிழ் பாதுகாப்பு போராட்ட அறிக்கையில்,தமிழில் இல்லாது ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ள பெயர் பலகைகள்தான் அழிக்கப்படும் என்று தெளிவாக சொல்லப்பட்டிருந்தத்து.ஆனால் இன்று என்ன நடந்தது எனக்கு தெரியவில்லை...
அன்புடன்
அரவிந்தன்
பத்ரி அவர்களே!
ReplyDeleteஉங்களை போன்றோரே தமிழ்மொழிக்காக போராடுபவர்களை “மொழிப்போர் வெறியர்கள்” என்று கூறி உங்களைச் சிறுமைப்படுத்தி கொள்ளாதீர்கள்! அப்படி தவறு என்றால் வேறு சொற்களை பயன்படுத்திருக்கலாம்.
ஏன் என்றால் நீங்கள் மற்ற மற்ற நாடுகளுக்கெல்லாம் சென்று வந்துருப்பீர்கள் என்று கருதுகிறேன். அங்கேயெல்லாம் அவர்களின் மொழிக்கப்பால்தான் மற்ற மொழிகள் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.
முதலில் நீங்கள் சன்செய்தியை!!! பார்த்துவிட்டு கொதித்துவிட்டீர்கள்போல தெரிகிறது! தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சுற்றிக்கையை நீங்கள் அறியாமல் கூறிவீட்டீர்கள் என கருதுகிறேன். ஓர் அன்பர் கூறியதுபோல் அடிமட்ட தொண்டர்களின் உணர்ச்சி குவியலாக இருக்கலாம்.
தமிழ்நாட்டில் தமிழுக்கே போராட்டம் வெட்கி தலைகுனிகிறோம் என்போன்ற வெளிநாட்டு தமிழர்கள்.
இங்கே மலேசியாப்பற்றி கூறவேண்டுமென்றால், முதலில் மலாய்சொற்கள் கொண்ட விளக்கத்தில் தலைப்பு இருந்தால்தான் முதலில் அனுமதி தருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதிக சுற்றுலா கவந்திருக்கும் மலேசியாவில் ஆங்கிலம் எல்லா இடத்திலும் இல்லையே. ஏதோ ஒரு சில இடத்தில் ஆங்கிலம் தான் இருக்கும் அதனால் இந்நாடு மொழிவெறியர்கள் என்று எவரும் கூறுவில்லை. அப்படி எந்நாட்டவரும் வருவதும் குறையவுமில்லை.
என்னால் ஒவ்வொன்றாக விளக்கி எழுதிப் நேரத்தை வீணாக்காமல் எனது வலைப்பதிவில் கட்டுரை வரைகிறேன். இந்நாட்டு தமிழர்களின் மொழிப்பற்று மற்றும் தமிழர்களின் மொழி இனப்பற்றைப்பற்றி...
இங்கே வந்துசென்ற திருமாவளவன், இராமதாசு, (சன் தொ.கா) மாலன், அவைத்தலைவர் காளிமுத்து, செஞ்சி இராமச்சந்திரன் ஆகியோரிடம் நான் உரையாடிருக்கிறேன். உங்கள் தமிழ்நாட்டு ம(¡)க்கள் பேசும் தமிழ், தொலைக்காட்சி தமிழ், நாளிதழ் தமிழ் போன்றவற்றை கேள்வி கேட்டு அவர்கள் பதில் தர முடியாமல் துப்பி அனுப்பினோம். அந்த தமிழ் உணர்வுதான் (வெறியல்ல) இச்செயலுக்கு அடிக்கல் என்று கருதுகிறேன்.
ஒரு சின்ன கருத்து மலேசியா அரசின் வானூர்தியில் தமிழ் கதைக்கப்படும் என்பதும் தமிழ்நாட்டிலிருந்து வரும் வானூர்தியில் தமிழே தெரியாமல் இருப்பதும் தெரியுமா பத்ரி அவர்களே!
ஒரு நாட்டில் அவ்வரசு செய்யாத ஒரு செயலை இவர்கள் செய்வதை வெறியர்கள் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது! இவர்கள் செய்த செயல் எடுத்தோம் கவிர்த்தோம் என்பதல்ல நீ....ண்ட நாள் அறிவிப்புற்கு பின் நடந்தேறியது.
தமிழும் ஆங்கிலமும் எழுதிய பலகையில் கரிநெய்(தார்) பூசியது தவறாக இருந்தாலும் தமிழே எழுதாத பெயர்ப்பலகையை உடைத்து தூள் தூளாக நொறுக்குவதே மேல். அதற்கு உங்கள் பதில் என்ன?
மலேசியா தமிழர்களின் ஆதரவு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கே...
காலம் கருதி முடித்துக்கொள்கிறேன் (காலை 5.00மணி)
புமு.சுரேஷ்
மலேசியா.
தி ஹிந்து செய்தியின்படி "Dr. Ramadoss urged the State Government to implement in 'letter and spirit' its orders issued in 1983, 1984 and 1990, directing the commercial establishments to have their name boards in Tamil."
ReplyDeleteமுதலில் இந்த GOக்களை வாங்கிப் படிக்க முயற்சி செய்கிறேன். இதில் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்று முழுமையாகத் தெரியவரும்.
விளம்பரப் பலகை, பெயர்ப் பலகை என்று தமிழ் செய்தித்தாள்களில் குழப்புகிறார்கள். பெயர்ப் பலகை என்றால் ஒவ்வொரு அலுவலகத்திலும், கடையிலும் வாசலில் வைத்திருக்கும் பெயர் பொருத்திய தட்டி. விளம்பரப் பலகை என்றால் ஒரு நிறுவனம் தன் பொருளையோ, சேவையையோ, தனது பெயரையோ அதிகம் பேரைப் பார்க்க வைத்து அவர்களை தமது பொருளை, சேவையை வாங்க வைக்கும் உத்தி.
தமிழக அரசாணைகள் எதைக் கட்டுப்படுத்துகின்றன என்று கவனிக்க வேண்டும்.
எடுத்துக்காட்ட தோதாக முந்தைய எண்ணங்கள் பதிவில் பின்னூட்டம் போட்டிருந்தீர்கள் பிரகாஷ்! பயன்படுத்திக் கொண்டேன், அவ்வளவே.
ReplyDeleteஅட்லேண்டாவில் வசிக்கும் பெரியண்ணன் சந்திரசேகரன் சொல்வார், வடமொழி கலப்பில் மலையாளம் உருவாகி சேரநாட்டில் தமிழ் வழக்கொழிந்தது போல், ஆங்கிலம் கலந்த தமிழ் மற்றொரு மொழியாக உருவெடுத்து, தமிழுக்கு இழப்புகள் ஏற்படலாம் என்று.
///ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே நாம் உலக நாடுகளுக்கு போகத்துணிகிறோம்...?///
ReplyDeleteஅய்யா.ஆங்கிலம் தான் உலக நாடு முழுக்க என்றோ அல்லது அல்லது எல்லா நாட்டிலும் பெயர் பலகைகள் இருக்கும் என்றோ நினைப்பதை மாற்றிக்கொள்ளுங்கள்.உலகில் எத்தனையோ நாட்டு மக்கள் தங்கள் தாய் மொழிக்கு தான் முக்கிய இடம் கொடுக்கின்றனர்.ஆங்கிலம் அதற்கு பின்னர் தான்.
மலேசியாக்காரரே....மாக்கள், துப்பி அனுப்பினோம் இவைகளிலிருந்து உங்கள் தரம் தெரிகிறது. மலேசியாவிலிருந்து வரும் வானூர்தியில் தமிழ் கதைப்பதைப்போல் இந்தியாவிலிருந்து வரும் வானூர்தியிலும் தமிழ் கதைக்கிறார்கள். மலேசியாவைப்போல் இந்தியா 3 மொழிகளை கொண்டிருக்கவில்லை. 18 மொழிகளுக்கு மேல்.
ReplyDeleteஇருந்தும் தமிழ்நாட்டில் சுதந்திரமாக தமிழ் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். உங்களைப்போல் மலாய்காரனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கவில்லை.
பெங்களூரில் பல கடைகளில் கன்னடத்தில் மட்டும் தான் விளம்பரபலகை உள்ள்து. அதனால் கண்ன்டம் வள்ர்ந்தா விட்டது.
ReplyDeleteஇந்தி படிக்க விடாம பண்ணீட்டாங்க. பெங்களூர்ல் தமிழ் தெரியாதா அளுகிட்ட ஆங்கிலத்தில் பேசுனா இந்தீ கூட தெரியாதானு நக்கலா பார்க்கிறான்.
இப்ப ஆங்கிலமும் படிக்கதேனு சொல்றானுங்க. வாழவுட மாட்டானுங்க போலிருக்கு
மலேஷியாவிலுள்ள இயற்கை வளங்களுக்கு , அதனுடைய நாணய மதிப்பு சிங்கப்பூரை காட்டிலும் பல மடங்கு இருந்திருக்கவேண்டும் .. உதாரணம் காட்டக்கூடிய அளவுக்கு மலேஷியா ஒன்றும் பெரிய எதிர்காலம் உள்ள நாடல்ல.. மஹாதீர் அவர்கள் மலேஷியாவில் இங்கிலிஷ் மொழி ஆளுமை வளரவேண்டும் அதுதான் எதிர்கால வலர்ச்சிக்கு நல்லது என கூறியதை படித்ததேயில்லையா?
ReplyDeleteஇந்தியா வேலை வாய்ப்புகளை அள்ளுவதற்கு , இங்கிலீஷ் மொழி புலமை ஒரு காரணம் .. வளரும் பல ஐரோப்பிய, தென் அமெரிக்க , மற்ற ஆசிய நாடுகள் இங்கிலிஷ் புலமை இல்லாததால் வாய்ப்புகளை இழந்து , இந்தியாவை பார்த்து வயிறு எரிகின்றனர் ..
இன்றைய தினமலர் செய்தித்தாளில் படம் வந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதன் மேல் தார் ஊற்றி உள்ளனர். தார் உருகி, வழிந்து கீழே தமிழில் எழுதப்பட்டிருப்பதையும் மறைக்கின்றது. ஒருவேளை ஸ்டேட் வங்கி என்பதை தமிழ் படுத்தவில்லை என்ற கோபமோ என்னவோ?. நேற்று சன் செய்திகளில் ஒரு பா.ம.க தொண்டர் தங்களின் போராட்டத்திற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். மிகவும் எச்சரிக்கையாக தமிழில் பேசினார். நாக்கு வரை வந்துவிட்ட ஆங்கில வார்த்தைகளை கூட, சற்று நேரம் எடுத்து, கடைசி நொடியில் தமிழ்படுத்திக்கொண்டார். வாழ்க அவர் தமிழ் பற்று. ஆனால் பாவம், கடைசி வரை அவரால் ழ வை சரியாக உச்சரிக்க முடியவில்லை. தமில் மொலிக்காகப் போராட்டம் என்றே பேசினார்.
ReplyDeleteஅப்புறம், பிரகாஷ், உங்களுக்கு இயல்பாக வருவதை (கஷ்டப்பட்டு) மாற்றிக் கொள்வதாக அறிவித்து உள்ளீர்கள். பாராட்டுகள். முடியுமா? அவசியம்தானா? என்ற இரண்டு கேள்விகளைகளையும் உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, ஆங்கில வார்த்தைகள் மொத்தத்தையும் தமிழுக்கு தத்து எடுத்து விடுவதுதான் (அவர்கள் நமது கட்டு மரத்தை எடுத்துக் கொண்டது போல). அதன் பிறகு "ஸ்டேசன் போயிட்டு டிக்கெட் இருக்கான்னு செக் பண்ணிட்டு பைவ் மினிட்ஸ் கழிச்சு உங்களை காண்டாக்ட் பண்றேன்" ன்னு நான் பேசுறதை யாரும் குறை சொல்ல மாட்டாங்க. இன்று நாம் பேசும் தூய தமிழ் 200 வருடங்களுக்கு முன்பு இப்படி இருக்கவில்லை. அதே போல் நான் மேலே சொன்ன தமிங்கில வாக்கியம் நாளை தூயத்தமிழானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் சொல்ல வருவது உங்களுக்கும், நீங்கள் சொல்ல வருவது எனக்கும் புரியவேண்டும் என்பதற்காக உருவான தொடர்பு சாதனம்தான் மொழி (எழுத்து). பிறவி ஊமைகளுக்கும், செவிடர்களுக்கும் நமது மொழி உதவப்போவது இல்லை. தமிழுக்காக உயிர் கொடுப்பேன் என்று வாய் கிழிய கத்திவிட்டு, வீட்டிற்குச் சென்றதும் "இப்புடே மீட்டிங் அயிந்தி. கொஞ்ச நீலு தீஸ் கொண்ணு ரா" என்று நடைமுறைக்கு திரும்பிவிடும் (நான் விஜயகாந்தை சொல்லவில்லை) வேடதாரிகளாகத்தான் நம்மில் பலரும் இருக்கின்றோம். இவ்வளவு ஏன், பத்ரியுடன் நீங்கள் அரை மணி நேரம் உரையாடினால், அதில் 20 நிமிட உரையாடல் ஆங்கிலத்தில்தான் இருக்கும்( அரை மணி நேரத்தில் 28 நிமிடம் அவர் மட்டும்தான் பேசுவார் என்பது வேறு விசயம்.;-) ) யதார்த்தம் இதுதான். இதனை மறந்துவிட்டு (மறைத்துவிட்டு) அவ்வபோது குரல் எழுப்பி, நம்மையும் அரசியல்வாதிகள் போல் மாற்றிக் கொள்வது அவசியமா என்று யோசியுங்கள்.
- ஞானி
நீங்கள் எல்லொருக்கும் அறிமுகமான பத்திரிக்கையாளர் ஞானியா? அல்ல புது ஞானியா?
ReplyDeleteஅவர் ஞாநி. ஏணி வைத்தாலும் எட்டாது. இது வெறும் ஞானி. ஞான சூனியத்தின் சுருக்கம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன். :-)
ReplyDelete- ஞானி
/* தமிழ்நாட்டில் தமிழுக்கே போராட்டம் வெட்கி தலைகுனிகிறோம் என்போன்ற வெளிநாட்டு தமிழர்கள். */
ReplyDeleteஇந்நாட்டிற்காக உழைத்து, இதனை முன்னேற்றாமல் எவனோ தரும் அதிகக் கூலிக்காக, அடுத்த நாட்டிற்குச் சென்று, அடிமைகளாக இருந்து, அந்நாட்டிற்காக மட்டும் உழைக்கும் உம்போன்றவர்கள் வெட்கி தலை குனிய வேண்டியது மொழிக்காக அல்ல.
ஏன்யா, தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழனா?
பத்ரி - உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteபெங்களூரிலும் வட்டால் நாகராஜ் போன்றவர்கள் அவ்வபோது பிரிகேட் ரோடு போன்ற இடங்களில் தார் பூசி மறுநாள் தினசரியில் புகைப் படம் வரச் செய்வார்கள். இது (ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி) பெரும்பாலும் நகரம் சார்ந்த இடங்களில் அதிகமாகவும், மற்ற இடங்களில் பிராந்திய மொழி மட்டுமே இருக்கும். பல பொதுத்துறை / மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியும் இருக்கும்.
கிழக்குப் பதிப்பகம் - பலகையில் தமிழ் மட்டுமா இல்லை தமிழ் + ஆங்கிலமா ? அங்கும் வந்தனரா குடிதாங்கியின் சீடர்கள் ?
- அலெக்ஸ்
'கிழக்கு பதிப்பகம்' அலுவலகத்தில் இரண்டு பெயர்ப்பலகைகள். ஒன்று 'கிழக்கு பதிப்பகம்' எனப்படும் தமிழ் imprint-இன் பலகை. இது தமிழில் மட்டும்தான் இருக்கும். மற்றது நியூ ஹொரைஸன் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பலகை. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் (வரிவடிவில்) இருக்கும். ஆனால் நிறுவனத்தின் பெயர் ஆங்கிலத்தில்தான் வைக்கப்பட்டது (New Horizon Media).
ReplyDeleteஇந்தப் பக்கம் தமிழ் மொழிப்போர் பாசறையினர் யாரும் வரவில்லை - இதுவரையில்.
"/இந்தப் பக்கம் தமிழ் மொழிப்போர் பாசறையினர் யாரும் வரவில்லை - இதுவரையில்./"
ReplyDeleteஇன்விடேஷன் அனுப்பி விட்டீர்கள், எத்தனை பேர் வரப்போகிறார்களோ?
Srinivas venkat
அன்பின் ஞானிக்கு உங்கள் விளக்கம் கேட்டுப் புல்லரிக்கிறது.
ReplyDeleteகட்டுமரத்தை அப்படியே எடுத்த ஆங்கிலேயன் ஏன் சோறை ரைஸ் ஆக்கினான் என்று கேட்டீர்களானால் உங்கள் விளக்கத்துக்கு நல்ல பதில் கிடைக்கும்.ஆங்கிலம் பல்வேறு மொழிகளிலிருந்து மூலச்சொல்லை எடுத்து உருவான மொழிதான் ஆனால் எல்லாச் சொல்லும் மூலச் சொல்லாக இன்றளவும் இல்லை தமக்கேற்றமாதிரி தேவைக்கேற்ற மாதிரி மாற்றித்தான் வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் நாளைக்கு பைவ் மினிற்சிலை ரெயில்வே ஜங்சனுக்கு வாறன் எண்டு தமிங்கிலத்திலை பேசும் நாள் வரும்போது உலகப் பொதுமொழியாக சைனீசோ வேறெதுவோ வந்துவிட்டிருக்கும்.அன்று சிங்குசாங் ஜிங்குச்சான் போய் மங்குஸ்தானில் திரும்பி என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள் ஏனென்றால் புரிந்துகொள்ள மட்டும்தானே மொழி.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுகவின் இன்றைய மொழிக்கொள்கை மற்றும் இந்தபோராட்டம் குறித்து அதன் நிலைப்பாடு ஆகியவை குறித்து திமுகவின் முன்னாள் அமைச்சரும் , சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அவர்களிடம் கேட்டபோது,தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை அமலில் இருந்து வரும் வேளையில் , ஆங்கில விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்கு எதிராக நடக்கும் இப்போராட்டம் அவ்வளவு அவசியமானது அல்ல என்றாலும், போராட்டம் நடத்துவோரின் மொழி உணர்வுகளைப்புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.
ReplyDeleteகொசுறு தந்த தமிழோசைக்கு நன்றி!
மாயவர்த்தானின் பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கும் இடுகின்றேன்
ReplyDelete-----------
இந்த மொழிப்போராட்டம் ஏதோ 1900 த்திற்கு பிறகு ஆரம்பித்ததில்லை 2000 ஆண்டுகளுக்குமுன்பிருந்து அவ்வப்போது சிலரால் நடத்தப்படது, கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆட்சி புரிந்த களப்பிரர்கள் காலத்திலே மேலூருக்கும் மதுரைக்கும் இடையிலுள்ள யானைபோன்ற தோற்றமுடைய மலையின் மேலே(மதுரைக்காரர்கள் யாரேனும் அந்த மலைப்பெயரை சொல்லுங்களேன்) ஆயிரக்கணக்கான தமிழ்ப்புலவர்களை கொன்றுகுவித்தனர், அன்று தமிழ்ப்புலவர்கள் குகைகளில் மறைந்தும் ஒளிந்தும், தமிழ் நூல்களை மறைத்து வைத்தும் தமிழ் வளர்த்தனர்,
பாண்டியர்களும் பல்லவர்களும் கி.பி.300 ல் பலம் கொண்டு களப்பிரர்களை அடக்கியப்பின் தான் தமிழ்ப்புலவர்கள் நாட்டில் நடமாடவே முடிந்தது.
அன்று பயந்திருந்தால் இன்று வரலாற்றிலே அழிந்த மொழிகளில் ஒன்றாக குறிக்கப்பட்டிருக்கு, அவ்வப்போது தமிழ்ப்புலவர்கள் வடமொழிகலப்பின் எதிர்ப்பை பாடல்களில் பதிவு செய்துள்ளனர் (எனது தந்தைதான் இந்த பாடல்கள் பற்றி கூறினார், அவர் ஒரு தமிழாசிரியர்)இது போன்ற ஏராளமான ஆதாரங்கள் அவ்வப்போது தமிழுக்காக போராடியவர்களைப்பற்றியுள்ளது, நமக்கெல்லாம் இராஜராஜசோழனையும், இராஜேந்திரச்சோழனையும் தான் தெரியும் (அதுவும் கூட கல்கியின் பொன்னியின்செல்வன் உபயத்தால்)
மொழி வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமே என ஜல்லியடிப்பவர்களுக்காக கூறுகிறேன் அது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம், ஒரு இனத்தை ஒரு கலாச்சாரத்தை அழிக்க அவர்களின் மொழியை அழித்தால் போதும், தானாகவே அந்த இனம் அழிந்து போகும் யாழில் தமிழ் நூலகம் எரியூட்டப்பட்டதும் அதன் விளைவே.
களப்பிரர்கள் காலத்திலும் அதற்கு பிந்தைய வரலாற்று காலங்களிலும் தமிழன் தமிழ் மொழிக்காக பிற இனத்தவரிடம்தான் போராடினான, இன்றோ தமிழ் மொழிக்காக தமிழினத்திடமே போராடிக்கொண்டிருக்கின்றான் என்ன கொடுமை இது? இன்னும் பல மொழிப்போர்கள் தமிழருக்கு தேவைப்படும் போலத்தெரிகின்றது.
தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க கூட பலர் மடிந்துதான் செயல்படுத்த முடிந்தது
மொழிப்பற்று மிகுந்த மலையாளிகளின் கூட நமஸ்தே என்று தான் சொல்கின்றனர், தமிழிலோ வணக்கம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது, சின்னக்குத்தூசி இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார் (யாரிடமேனும் இருந்தால் மீள்பதிவு செய்யுங்களேன்)
இது போன்ற சிலரின் போராட்டத்தினால் தான் தமிழுக்கு பாலூற்றப்படாமல் இருக்கின்றது
http://ravisrinivas.blogspot.com/
ReplyDelete1990 தமிழக அரசின் ஆணைப்படி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மும்மொழியில் எழுதப்படலாம்.ஆனால் எழுத்தில் அளவு 10-ல் 5 தமிழிலும் 3 ஆங்கிலத்திலும் 2 வேறு மொழியிலும் எழுதப்படவேண்டும்.1990-இறுதியில் களின் வந்த மற்றொரு ஆணை தமிழில் எழுத்ப்படும் பெயர்கள் தூய தமிழில் எழுத்தப்படவேண்டும் என்று சொல்கிறது.அதாவது நல்லி சில்க ஸ்டோர்ஸ் என்று தமிழில் எழுதியிருக்ககூடாது.நல்லி பட்டு மாளிகை என்று இருக்கவேண்டும் என்று ஆணை சொல்கிறது...தமிழ் பாதுபாப்பு போரட்டம் இப்படி ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதுவதை கூட மன்னித்து விட்டது..அவர்கள் அழிக்க நினைத்தது முற்றிலும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்ட பலகைகளை மட்டுமே..போரட்ட வேகத்தில் எதாவது தவறு நடந்து இருக்கலாம்..இந்த போராட்டமே அரசு ஆணையை வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.இது சட்ட மறுப்பு போரட்டம் அல்ல .சட்டத்தை நிலைநாட்டவே இந்த போராட்டம்..இந்த போராட்டவாதிகளை நீங்கள் வெறியர்கள் என்று சொன்னால் உங்களை என்ன சொல்லாம்..
ReplyDeleteஎன்னடா இது, தமிங்கில பிரச்சனைக்கு ஒரு பெரிய தீர்வு சொல்லி இருக்கோம், இன்னும் யாரும் எதுவும் சொல்லலையேன்னு நினைச்சேன். பதில் வந்துடுச்சு. அதுவும் ஈழத்தில் இருந்து வந்து இருக்கு. உங்களை நான் எதுவும் சொல்ல முடியாது. உண்மையிலேயே தமிழுக்காக பாடுபடுபவர்கள் உமது மக்கள். இணையத்தில் உங்களவர்களின் பங்களிப்பில் இருந்தும், உங்களது போராட்டங்களில் இருந்தும் இந்த உண்மை அனைவருக்கும் நன்கு தெரியும். ஈழநாதன், உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும், நானும் கொஞ்சம் தமிழ்பற்றோடு சுற்றிக் கொண்டு இருப்பவன்தான். என்ன செய்வது. பிறந்ததில் இருந்து பேசிக்கொண்டு இருக்கின்ற (எனக்கு தெரிந்த ஒரே) மொழியாயிற்றே. எனது பின்னூட்டங்களை ஒன்றுக்கு இருமுறை படித்தீர்கள் என்றால் எனது ஆதங்கமும், வருத்தமும், நான் சொல்ல நினைப்பதும் உங்களுக்கு புரியலாம்.
ReplyDeleteசரி, எனக்கென்று சொந்த பதிவு இல்லாததால், கொஞ்சம் விரிவாக இங்கு பதிந்து விடுகின்றேன். இப்போது பிரச்சனை என்ன? தமிழைக் காப்பாற்ற வேண்டும். ஏன் காப்பாற்ற வேண்டும்? அது மெல்ல செத்துக் கொண்டு இருக்கின்றது. யார் கொல்கின்றார்கள்? குழலி சுட்டிக்காட்டிய களப்பிரார்களோ, அந்நிய நாட்டை அல்லது பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அல்ல. இதனை எழுதும் நான், படிக்கும் நீங்கள் என்று அனைவரும் அடங்கிய தமிழர்களாகிய நாம்தான் அந்த பாதகச் செயலை செய்து கொண்டு இருக்கின்றோம். (நம்மிடமிருந்து இதனைக் காப்பாற்ற, நம்மை எதிர்த்து நாமே நடத்தும் போராட்டங்கள். ஆரம்பமே சிரிப்பாக இல்லை?!) சரி, எப்படி கொல்கின்றீர்கள்? மொழிக் கலப்பின் மூலம், மொழி வளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்யாததன் மூலம், எம் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படித்தால் மட்டும்மே எதிர்காலத்தில் உயிர் வாழ முடியும் என்று நம்புவதின் மூலம், தமிழ் தெரிந்தவர்களிடம் அந்நிய மொழியில் பேசுவதில்தான் பெருமை என்று எண்ணுவதன் மூலம், தமிழ் மட்டும் தெரிந்தவர்கள் இவ்வுலகில் எல்லா சுகங்களையும் பெற்று வாழலாம் என்ற நிலையை உருவாக்காததன் மூலம், இன்னும் பலவற்றின் மூலம் மெல்ல கொன்று கொண்டு இருக்கின்றோம்.
ஆக கொலையாளி, நோயாளி, மருத்துவர், திருத்துவர் என்று எல்லாமும் நாமாக இருக்கின்றோம். இதில் ஒருவரை ஒருவர் குறை கூறி என்ன பயன்? இது போல் நமக்கு நாமே பிரச்சனைகளாக இருக்கும் விசயங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு, நாம் திருந்துவதுதான். அடுத்தவன் திருந்தினானா என்று கவலைப்படுவதோ, அடுத்தவனைத் திருத்துவதோ தீர்வு இல்லை. நான் திருந்திவிட்டேன், திருத்திக் கொண்டேன் என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லும்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும், தமிழுக்கு விடிவு பிறக்கும். திடீரென ஊரைத் திருத்தக் கிளம்பிவிட்டேன் என்று புறப்படும், திருமாக்களையும், ராமதாசுக்களையும் பெரிது படுத்தாதீர்கள். ஓநாய்கள் அழுவதின் காரணங்கள் நாம் அறிவோம்.
இயல்பாக வந்ததை அப்படியே எழுதினேன் என்று ஐகாரஸ் சொன்னது யதார்த்தம். திருத்திக் கொள்ள முயல்கின்றேன் என்று சொன்னது அவரது பெருந்தன்மை. சிகரெட்டை விடுவது போல கடினமான விசயம் என்று சொன்னது நிதர்சனமான உண்மை. இதனைக் குறித்துதான் நான் பின்னூட்டம் இட்டிருந்தேன். ஒன்று யதார்த்தத்தில் வாழவேண்டும், இல்லையேல் இலட்சியத்தில் வாழ வேண்டும். தேவையான போது எதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு உங்களையும் குழப்பிக் கொண்டு அடுத்தவரையும் குழப்பாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.
சரி விடுங்கள், இப்போது சவாலாக கேட்கின்றேன். எதையும் முதலில் நம்மில் ஆரம்பிப்போம். பத்ரியாகட்டும், குழலியாகட்டும், ஈழநாதன் ஆகட்டும், இங்கு பதிந்த அத்தனை தமிழர்களுக்கும் இதனை எழுதுகின்றேன். தமிழை வாழ வைக்க போராடும் அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள். முதலில் உங்களில் இருந்து ஆரம்பியுங்கள். இனி வீட்டில், வெளியில், எங்கும், தமிழ் தெரிந்த தமிழர்களிடம் ஒரு ஆங்கில வார்த்தைக் கூட கலக்காமல், தமிழில் மட்டுமே பேசுவேன் என்று இந்த நிமிடத்தில் சபதம் எடுத்து அதை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றீர்களா? உங்களில் எத்தனைப் பேர் முன் வருவீர்கள். எத்தனைப் பேரால் முடியும்?
- ஞானி
// இது போன்ற சிலரின் போராட்டத்தினால் தான் தமிழுக்கு பாலூற்றப்படாமல் இருக்கின்றது //
ReplyDeleteஅப்படியா..! நெஜமாத்தான் சொல்றீங்களா?!
அப்பாவி
//தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க கூட பலர் மடிந்துதான் செயல்படுத்த முடிந்தது //
ReplyDeleteஅப்படி பெயர் வைத்து நாம் சாதித்தது என்ன? மலையாள நாடு என்று பெயரிட்டுக் கொள்ளாத கேரளாவும், தெலுங்கு நாடு என்று பெயர் சூட்டிக் கொள்ளாத ஆந்திராவும் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டன?
//தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க கூட பலர் மடிந்துதான் செயல்படுத்த முடிந்தது //
ReplyDeleteஅப்படி பெயர் வைத்து நாம் சாதித்தது என்ன? மலையாள நாடு என்று பெயரிட்டுக் கொள்ளாத கேரளாவும், தெலுங்கு நாடு என்று பெயர் சூட்டிக் கொள்ளாத ஆந்திராவும் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டன?
madras presidency was the name used by british to denote a region in south india.that region consisted of parts of the present kerala,present andhra , parts of present orissa and parts of present karnataka.in mid 50s it was divided into states on the basis of language.Gurjat was formed by dividing the then bombay province. andhra was formed as a separate state on the basis of language. if you dont know history learn it.Gujrat,Bengal,Orissa,Punjab these names are related to the respective languages.so tamil nadu was not the only state whose name indicated the language.
ravi srinivas
that region consisted of parts of the present kerala,present andhra , parts of present orissa and parts of present karnataka.
ReplyDeleteit should be
that region consisted of parts of the present kerala,present andhra , present tamil nadu,parts of present orissa and parts of present karnataka.
ravi
//if you dont know history learn it.//
ReplyDeleteரவி சீனிவாஸ்.. அவசரத்தில் அந்த அனாநிமஸ் கேட்ட கேள்வியை நீங்கள் ஒழுங்காக படிக்காமல் பதில் கொடுத்து விட்டீர்களோ என்று தோணுகிறது. அவர் கேட்ட கேள்வி, எதற்காக அப்படி தமிழ் நாடு என்று பெயர் வைத்தார்கள் என்பதல்ல. அப்படி வைத்ததினால் (மட்டும்) என்ன சாதித்து விட்டோம்? கேராளவும், ஆந்திராவுக்கும் தங்களது பெயர்களோடு மொழியையும் இணைத்துக் கொள்ளாமல் வளர்ந்து விட வில்லையா என்பது தான் அவரது கேள்வி. அத்ற்கு நேரடியாக பதில் தாருங்கள். அதை விடுத்து history தெரியுமா, ஜியாகரபி தெரியுமா என்று எதற்காக சுற்றி வளைக்க வேண்டும்?! (சத்தியமாக மேற்படி அனாநிமஸ் நான் இல்லை!)
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பல மாநிலங்களின் பெயர்கள் அந்தந்த மாநிலங்களில் பெருவாரியான மக்கள் பேசும் மொழியின் பெயருடன் தொடர்புள்ளதைக் குறிப்பிட்டேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பெயருக்கும் நேரடித் தொடர்பில்லை.இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகமாக உள்ள மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று. ஆந்திரமும், கேரளமும் அதற்குப் பின்னரே. தொழில் வளர்ச்சியில் தமிழ் நாடு எப்போதும் கேரளாவை விட முன்னேறிய நிலையில்யே இருக்கிறது. சிலவற்றில் கேரளம் தமிழ்நாட்டை விட முன்னேறி இருக்கலாம் உ-ம். கல்வி பெற்றோர் விகிதம். சிலவற்றில் இல்லை. சென்னை மாகாணம் என்றிருந்ததுதான் தமிழ் நாடு என்று மாற்றப்பட்டது. எது பொருத்தமானது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். பம்பாய் மாகாணம் பிரிக்கப்பட்ட போதும் மகாராஷ்டிரம், குஜராத் என்ற பெயர்களில்தான் புதிய மாநிலங்கள் அழைக்கப்பட்டன. பம்பாய் என்ற பெயரில் அல்ல.கேரளம் என்ற பெயரில் மாநிலம் இருந்தாலும் தாய்மொழியாக மலையாளம் பேசுவோர் மலையாளிகள் என்றுதான் அழைக்க்படுகிறார்கள், அழைத்துக்கொள்கிறார்கள். அது போல் தாய்மொழியாகதெலுங்கு பேசுவோர் தெலுங்கர்கள் என்றுதான் அறியப்படுகிறார்கள்.ஆ.பி காரர்கள் என்று நாம் கூறுவதில்லை. என்.டி,ராமாராவ் ஆரம்பித்த கட்சியின் பெயர் தெலுங்கு தேசம், ஆ.பி தேசம் அல்ல.
ReplyDelete//.... கேரளம் என்ற பெயரில் மாநிலம் இருந்தாலும் தாய்மொழியாக மலையாளம் பேசுவோர் மலையாளிகள் என்றுதான் அழைக்க்படுகிறார்கள், அழைத்துக்கொள்கிறார்கள். அது போல் தாய்மொழியாகதெலுங்கு பேசுவோர் தெலுங்கர்கள் என்றுதான் அறியப்படுகிறார்கள்.ஆ.பி காரர்கள் என்று நாம் கூறுவதில்லை. என்.டி,ராமாராவ் ஆரம்பித்த கட்சியின் பெயர் தெலுங்கு தேசம், ஆ.பி தேசம் அல்ல.//
ReplyDeleteநான் கேட்ட கேள்விக்கும், ரவி சீனிவாஸ் எடுக்கும் ஐந்தாம் வகுப்பு வரலாற்று பாடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை.
நண்பர் ஞானிக்கு நான் ஆத்திரப்பட்டு சொன்னவை சுட்டிருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteஎப்போதும் மற்றவர்களைத் திருத்த முனைவது எவ்வளவு தவறோ அதைவிடத் தவறு சுயபிரக்ஞையுடன் எதையாவது செய்ய முன்வருபவர்களை நொட்டை நொள்ளை சொல்வது.தமிழ் இன்று வாழும் மொழியாக இருந்து செம்மொழியாகிவிட்டது விரைவில் இன்னொரு செம்மொழியான சமஸ்கிருதத்திற்கு ஏற்பட்ட நிலையே தமிழுக்கும் ஏற்படலாம்.அதனாலேயே இப்போதைக்கு தேவை ஒரு மொழிப்போர் என்று எல்லோரும் எழுத சிலர் தமிழ் என்ன சோறு போடுமா?கறி விடுமா பாயாசம் தருமா என்று கிண்டலடிப்பதைக் கண்டால் ஆத்திரம் ஏற்படுகிறது இதனை எங்கள் நாட்டில் வைக்கோல்ப் பட்டடை நாய்க்குணம் என்பார்கள் அதாவது தானும் தின்னாது தின்பவனையும் விடாது.
தூய தமிழ் என்பதுகூட இரண்டாம் பட்சம்தான் ஆங்கிலக் கலப்பும் வடமொழிக்கலப்பும் முற்றாக ஒழிக்கப்படமுடியாதவை அதில் எனக்கு இரண்டு கருத்து இல்லை ஆனால் பேசும் தமிழை ஆகக்குறைந்தது வலைப்பதிவுகள் மாதிரி நானூறு ஐந்நூறு பேர் பார்க்குமிடத்தில் எழுதுபவர்கள் தெளிவாக வரையறை செய்துகொண்டு எழுதலாம்.எதற்காக வலைப்பதிவு எழுதுகிறோம் சோறு போடும் கறி போடும் என்றா ஏதோ ஒரு ஆத்ம திருப்திக்காக என்று சொல்லிக் கொள்வதில்லையா.மொழியும் அதுசார்ந்த விடயங்களும் இவ்வாறான ஆத்ம திருப்திக்காகத் தான் .தொடர்பாடலுக்கு மட்டுமே மிழ்யென்றால் உலகப்பொதுமொழியாம் சைகையுடனேயே நிறுத்திக் கொள்ளலாம்.
மற்றது நீங்கள் கேட்ட பேசும் போதும் எழுதும் போலும் கலப்பில்லாமல் தூய தமிழில் எழுத முடியுமா என்ற கேள்விக்கு பதில் முடியும்.நான் ஏற்கனவே அவ்வாறுதான் செய்கிறேன் இன்றிலிருந்து இன்னும் இறுக்கிக் கொள்கிறேன்
நீங்கள்?
இந்த "பத்ரி சேஷாத்ரி"யில் "சேஷாத்ரி" எதை குறிக்கிறது என்று சொல்லமுடியுமா நண்பர்களே?
ReplyDelete// இந்த "பத்ரி சேஷாத்ரி"யில் "சேஷாத்ரி" எதை குறிக்கிறது என்று சொல்லமுடியுமா நண்பர்களே? //
ReplyDeleteஅவர் பெயரின் இரண்டாம் பாதியைக் குறிக்கின்றது. இது கூட தெரியவில்லையா?
மூன்றாம் மொழிப்போரா? மொழி வெறியா?
ReplyDeleteபத்ரி அவர்கள் தனது வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகைகளை தார்பூசி அழிப்பது மொழி வெறி என்று கூறிவிட்டதால் இங்கே அதுபற்றி கொஞ்சம் எழுதலாம் என்று எண்ணம் ஏற்பட்டது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பலகைகளையும் தார்பூசுவது சரியா என்று கேட்பது இருக்கட்டும்.
ஒரு முறை சூரியத்() தொலைக்காட்சியில் பேராசிரியர் அன்பழகன் சொன்னதை வழிமொழியலாம் இங்கே. மொழி வெறி தவறு இல்லை என்றே அவர் சொன்னார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாணர்கள் என்று ஒரு கூட்டம் இருந்தது. இவர்களது பிழைப்பே தமிழ் தான். மன்னர்களையும் பணக்காரர்களையும் பாடித்தான் இவர்கள் வயிறாற உண்டார்கள். பெரியார் ஒருமுறை தமிழ்ப்புலவர்களை பிச்சைக்காரர்கள் என்றார். இதனைக்கேட்ட கதிரைவேல் புலவர் என்பர் குடித்த பாலை வாந்தி எடுத்துவிட்டுச்சென்றார். கதை இருக்கட்டும். ஆனால் தமிழ் சோறு போட்ட காலம் அது. அக்காலங்களில்தான் காலத்தால் அழியாத காவியங்கள், காப்பியங்கள், தத்துவங்கள் தோன்றின. ஆனால் அதன் பிறகான காலகட்டங்களுக்குப்பிறகு உலக மாற்றங்கள் தோன்றின. தமிழர்களிடையே அவநம்பிக்கையும் அருவருப்பும் ஏற்படத்தொடங்கியது. இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் சங்ககாலப்பெருமைகளை தமிழர்களால் ஏற்படுத்த முடியவில்லை. அது புறச்சூழல்களால் மட்டுமல்ல. அகச்சூழல்கள், சிந்தனையியலில் காலத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் இவையும் காரணமாகும். புறச்சூழல்கள் என்றால் தமிழர்களுடைய அரசியல் அமைப்பு. தமிழைக்கட்டாய பாடமாக்குவதற்கு டெல்லி கொம்பு ஒன்று வேண்டும். அகச்சூழல் என்றால் தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா? வெள்ளக்கார தொர வேல குடுப்பார், ஏபிசிடி படி, என்றொரு அடிமைச்சூழல். இப்படியாக, நாம் அழிவதை, மொழி அழிவதை, கலாச்சாரத்தின் வேர்கள் அழிவதை, தன்னம்பிக்கை போய், தன் மீதான அவநம்பிக்கை ஏற்படுவதை, நாம் கண்ணாரக்காண்கிறோம். 75 வருடங்களுக்கு முன்னர் பெரியார் காலத்திய எழுத்துக்களைப்பார்த்தால், சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் இருக்கும். இப்போது அதே தலைகீழாய் மாறி ஆங்கில வார்த்தைகளின் ஆதிக்கம். கல்லூரிப்பெண்கள் நுனி நாக்கில் கால் தமிழ், முக்கால் ஆங்கிலம் என்று பேசினால், அவர்களைச்சுற்றி மாணவர்கள் கூட்டம். இவர்கள் பேசுவதை எந்த வெள்ளைக்காரனும் சகிக்க மாட்டான் என்பது வேறு விடயம்.
இப்படியொரு கால கட்டத்தில் நான் இதை எழுதுகிறேன். பிரெஞ்சுக்காரர்கள்
இமெயில் என்ற ஆங்கில வார்த்தையையே தடை செய்தார்கள். நேற்றுப்பிறந்த மொழிக்காரர்களுக்கு இருக்கும் சொரணை நமக்கு ஏன் இல்லை? அது போகட்டும்.
மொழி மனிதரை இணைக்கும் விடயம். நம்முடைய மொழியை நாம் இழப்பதால் நம்முடைய அடையாளத்தை இழக்கிறோம். பெயரை இழக்க நாம் சம்மதிப்போமா என்ன? எத்தனை சர்ட்டிபிகேட்டுகள்? அத்தனையையும் நாம் இழக்கவேண்டியிருக்கும். ஒரு தனி மனிதனுடைய பெயருக்கே அத்தனை வலிமை என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஒட்டி உறவாடி நம் மூதாதையருடைய உதடுகளில் நடமாடிய நம்முடைய மொழியை இழப்பதால் ஏற்படும் இழப்புகள் எவ்வளவு இருக்கும்? அதனால் நாம் இழக்கும் சமூக முதலீடு(social capital) எத்தனை ஆயிரம் கோடிகள்?
வேலை வாய்ப்பு? கிடைக்கும் கண்டிப்பாக. இரண்டாயிரம் ஆண்டுகளில் நாம் இழந்த தன்மானத்தைத்திரும்பப்பெறுவோம். சமூக முதலீடு ஓடோடி வரும். பணம் என்பது அமெரிக்க அரசாங்கம் தரும் காகிதமா என்ன? பணம் என்பது ஆழமான நம்பிக்கை. ஒருவர் ஒருவர் மீது. அந்நம்பிக்கை குறையும்போது பணம் என்பது காகிதமாகிறது. காகிதம் கோடிப்பணமாகிறது, அந்நம்பிக்கை வலுவடையும்போது. அந்நம்பிக்கையை ஏற்படுத்துவன, மொழி, வரலாறு, கலாச்சாரம். மொழியைப்பாதுகாப்போம். மொழியைப்பாதுகாப்பது என்பது தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் போராட்டமே. யாருக்கும் எதிராக அல்ல.
அமலசிங்
அமலசிங் அண்ணாச்சி, இந்தக்கதையையெல்லாம் நீங்க எங்கே உட்கார்ந்து எழுதிக்கிட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? சும்மாவாச்சுக்கும் தமிழ்நாட்டிலே தான்னு உதார் விடாதீங்க!
ReplyDeleteஅமலசிங்..இந்த பெயருடைய பால்ய நண்பனை(பார்த்திபனூர்) ரொம்ப காலமாய் தேடிக்கொண்டுகிறேன்.. இது உங்கள் உண்மையான பெய்ரென்றால், என்க்கு மெயில் அனுப்பவும்.
ReplyDeleteநாகார்ஜுன்சிங் அவர்களே, உங்களுடைய கேள்விக்கு விடை மேலே நான் எழுதியதில் 21வது வரியில் முன்னரே கொடுத்துவிட்டேன். படித்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteஅமலசிங்
அமலசிங் கூறுவது அவ்வளவும் சரியானது!வழிமொழிவோம்.
ReplyDeleteஅடுத்து எதற்காக இந்தப் பதிவுகளில் தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்துவது நிகழ்கிறது?தமிழுக்கு ஒரு நாடிருந்து,சுயபொருளாதாரப் பலமிருந்தால் இப்படி ஏசிவரும் காலம் வந்திருக்காது.தமிழ் நாட்டை கன்னடக்காரியும்,மலையாளிகளும்,இந்திக்காரரும்,ஆங்கிலேயரும் ஆளும்போது இதுவும் சொல்வீர்கள்-இதுமேலும் சொல்வீர்கள்!உங்கள் வாரீசுகளின் எதிர்காலத்துக்குத் தமிழ் தேவையில்லாததுதாம்.அதற்காக முழுத்தமிழர்களுக்கும் அது தேவையற்றெதனக் கூறுவதற்கு தமிங்கலத்தவருக்கு எந்த உரிமையும் கிடையாது.போய் உங்க வேலையை வெள்ளைக்காரத் துரைகளிடம் காட்டுங்கள்:தமிழர்களுக்குத் தெரியும் தமது மொழியால் எது முடியும்-எது முடியாதென!நாம் உலகத்தில் மாடா மேய்க்கிறம்?எம்மினத்தின்-மொழியின் விடிவுக்கு எம்மைத் தயார்படுத்துகிறோம்.எமக்கும் தெரியும் ஆங்கிலம்,பிரஞ்சு,டொச்,இஸ்பெயின்,எஸ்பெரென்டோ,சிங்களம் போன்ற அந்நிய மொழிகளில் ஆய்வுகள்-கட்டுரைகள் எழுத.அதனாற்றாம் கூறுகிறோம் நேற்று முளைத்த இந்த மொழிகளோடு நமது தமிழ் இணையாக- இல்லை இன்னும் மேலாக உயர முடியும்.இது அறிவுத் திமிரில் கூறவில்லை.மாறாக ஒப்பிட்டுக் கூறுகிறோம்.
ஈழநாதன்,
ReplyDelete//சிலர் தமிழ் என்ன சோறு போடுமா?கறி விடுமா பாயாசம் தருமா என்று கிண்டலடிப்பதைக் கண்டால் ஆத்திரம் ஏற்படுகிறது இதனை எங்கள் நாட்டில் வைக்கோல்ப் பட்டடை நாய்க்குணம் என்பார்கள் அதாவது தானும் தின்னாது தின்பவனையும் விடாது.//
ரொம்ப நல்லா சொன்னீங்க..குறிப்பா இந்த மாயவரத்தான் பதிவுகளை படிக்கும் போது பல முறை அடக்கமுடியாத ஆத்திரம் வருகிறது..
ரொம்ப காலமாய் நான் தேடிக்கொண்டிருந்த நண்பன் அமலசிங்கை , இந்த வலைப்பூ மூலமாய் கண்டுபிடித்தேன் .. மிக்க மகிழ்ச்சி .. நன்றி
ReplyDeleteஇங்கு சிலருக்கு புரியாத (அல்லது புரிந்து கொள்ள விரும்பாத) விடயத்தை மறுபடியும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது. தமிழ் வளரவேண்டும் என்பதிலும், தமிழை நடைமுறையில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் பொதுவாக யாருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாது.
ReplyDeleteஆனால் தன்னால் பின்பற்றமுடியாத ஒன்றை ஒருவர் மற்றவர் மேல் திணிக்க முற்பட்டால், அது கேலிக்கூத்தாகி விடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்வினையை ஏற்படுத்துவதால், நட்டத்திலும், தோல்வியிலும் முடியும். நல்லதை யார் கூறினாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒவ்வாது. சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை.
மேலும், இந்த மொழிக்கூத்தை முன்னர் நடந்த மொழிப்போர்களோடு ஒப்பிடுவது நல்ல நகைச்சுவை ;-) அவற்றை முன்னின்று நடத்தியவர்கள் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டவர்கள். கடைசியாக, சில ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது செம்மொழிக்கு, எந்த கொம்பனும் 'பாலூற்ற' முடியாது. தற்போது இணயத்தில் வாயிலாக, தமிழ் ஜோராக வளர்ந்து தான் வருகிறது.
//குறிப்பா இந்த மாயவரத்தான் பதிவுகளை படிக்கும் போது பல முறை அடக்கமுடியாத ஆத்திரம் வருகிறது.. //
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஜோ... இதே போல மீண்டும் மீண்டும் உங்களிடமிருந்து பலமான பாராட்டுகளை பெறுவதற்காக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன் என்று உங்களுக்கு உறுதி மொழி அளிக்கிறேன். ஆனாலும் எல்லாம் என் கையில் மட்டும் இல்லை...! குடிதாங்கிகள் இதே போல தொடர்ந்து செயல் பட வேண்டும். மனம் மாறி திருந்தி விட்டால் என்னால் அப்படி எழுத முடியாது என்பதையும் முன் கூட்டியே உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டுமொருமுறை உங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
//சிலர் தமிழ் என்ன சோறு போடுமா?கறி விடுமா பாயாசம் தருமா //
ReplyDeleteஈழநாதன்... அப்படி சொல்லுபவர்களை தமிழ் நாட்டு பக்கம் அனுப்புங்கள்.. இங்கே இப்போ ஒரு கும்பல் தமிழை வைத்து தான் தங்களது அரசியல் வாழக்கையையே ஓட்டுகிறது தெரியுமா?!
விசிதா... வர வர நீங்களும் உங்கள் தலைவரை (?!) போல சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் உளருகிறிர்கள். இது ரஜினி சம்பந்தப்பட்ட பதிவா என்ன?
wichita,
ReplyDeleteI was also referring about the great Tamil kings who fought for Tamil and performed great service to Tamil, when I mentioned about language wars.
You have this useless and irritating habit of talking about totally irrelevant things and completely out of context, like, "rajaji was the c.m when the first war against hindi was launched." and "please apply to rajni first" etc.
When will you ever learn ? FYI, I am not keen to discuss ANYTHING with biased and intolerant people like you.
mAyavarathAn rightly said,
"விசிதா... வர வர நீங்களும் உங்கள் தலைவரை (?!) போல சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் உளருகிறிர்கள். இது ரஜினி சம்பந்தப்பட்ட பதிவா என்ன? "
thanks and regards,
BALA
விசித்திரா,பாலா போன்ற மனிதர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்தெழுதித் தாங்கள் கற்றவர்கள் என்பதாய்...
ReplyDeleteஇதுதான் தாழ்வு மனப்பாண்மை.இதிலிருந்து விடபடமுடியாத இந்த மனிதர்கள் எதையுமே பெரிதாகச் சாதிக்க முடியாது.முதலில் தமிழில் எழுதுவது பிடிக்காதுபோனால் அதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் எழுதுங்கள்.இல்லையேல் தயவுசெய்து பின்னூட்டமிடாதீர்கள்.உங்கள் தகுதிகள் நாறுவதற்குமுன் ஓடிவிடுங்கள்.அன்னிய மொழி தெரிவதால் நீங்கள் பெரும் படிப்பாளிகளல்ல.பால்குடி ஆங்கிலக் குழந்தையும் ஆங்கிலம்தான் பேசுகிறது.அதற்காக அதனை படிப்பாளியென்று எந்த மனிதர்களும் நம்பமுடியாது,தமிழர்களைத் தவிர.தமிழகத்துத் தமிழர்களின் ஊடகங்களிலிருந்து,அங்கு வாழும் பாமரர்கூட ஆங்கிலம் கலந்து தமிழ்பேசுதல் சகிக்கமுடியல்ல.
விசித்திரா,பாலா போன்ற மனிதர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்தெழுதித் தாங்கள் கற்றவர்கள் என்பதாய்...
ReplyDeleteஇதுதான் தாழ்வு மனப்பாண்மை.இதிலிருந்து விடபடமுடியாத இந்த மனிதர்கள் எதையுமே பெரிதாகச் சாதிக்க முடியாது.முதலில் தமிழில் எழுதுவது பிடிக்காதுபோனால் அதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் எழுதுங்கள்.இல்லையேல் தயவுசெய்து பின்னூட்டமிடாதீர்கள்.உங்கள் தகுதிகள் நாறுவதற்குமுன் ஓடிவிடுங்கள்.அன்னிய மொழி தெரிவதால் நீங்கள் பெரும் படிப்பாளிகளல்ல.பால்குடி ஆங்கிலக் குழந்தையும் ஆங்கிலம்தான் பேசுகிறது.அதற்காக அதனை படிப்பாளியென்று எந்த மனிதர்களும் நம்பமுடியாது,தமிழர்களைத் தவிர.தமிழகத்துத் தமிழர்களின் ஊடகங்களிலிருந்து,அங்கு வாழும் பாமரர்கூட ஆங்கிலம் கலந்து தமிழ்பேசுதல் சகிக்கமுடியல்ல.
//இதுதான் தாழ்வு மனப்பாண்மை.இதிலிருந்து விடபடமுடியாத இந்த மனிதர்கள் எதையுமே பெரிதாகச் சாதிக்க முடியாது.//
ReplyDeleteவாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதற்கு இதோ இன்னொரு சாட்சி.
சரி.. நீங்கள் தூய தமிழ் புலவராகவேயிருங்கள். இதுவரை நீங்கள் என்ன என்ன சாதிக்ட்தீர்கள் என்பதை பட்டியலிடுங்களேன் பார்க்கலாம். ஊருக்கு அப்புறம் உபதேசம் செய்யலாம். விசிதா, பாலாவின் தமிழ் புலமை பற்றி எல்லாருக்கும் தெரியும். அவர்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததன் சூழ்நிலை என்ன என்று கூடத் தெரியாமல் பேச வேண்டாம்.
//தமிழகத்துத் தமிழர்களின் ஊடகங்களிலிருந்து,அங்கு வாழும் பாமரர்கூட ஆங்கிலம் கலந்து தமிழ்பேசுதல் சகிக்கமுடியல்ல. //
ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பிரிவினையை.. ஏதோ போனா போகுதுன்னு நீங்க பேசுறது நல்ல தமிழா இருக்கேன்னு போற இடங்களிலெல்லாம் நாங்க (அதான் தமிழகத்து தமிழர்கள் - அதென்ன 'தமிழகத்து' தமிழர்கள்? நாங்கவெல்லாம் 'தமிழர்கள்' தான்.. மற்றவர்கள் வேண்டுமானால் முன்குறிப்பு கொடுத்துக் கொள்ளுங்கள் உங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள!) சொல்லிப் பாராட்டுவதை வைத்துக் கொண்டு எங்களுக்கே நக்கலா? நீங்கள் சில (அல்ல, பல) ஆங்கில வார்த்தைகளை தமிழில் பேசுகிறேன் பேர்வழி என்று கொலை செய்வதை கேட்க சகிக்கவும் முடியுமோ?!
மாயவரத்தான் சொன்னது!
ReplyDelete//ஏதோ போனா போகுதுன்னு நீங்க பேசுறது நல்ல தமிழா இருக்கேன்னு போற இடங்களிலெல்லாம் நாங்க (அதான் தமிழகத்து தமிழர்கள் - அதென்ன 'தமிழகத்து' தமிழர்கள்? நாங்கவெல்லாம் 'தமிழர்கள்' தான்.. மற்றவர்கள் வேண்டுமானால் முன்குறிப்பு கொடுத்துக் கொள்ளுங்கள் உங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள!) சொல்லிப் பாராட்டுவதை வைத்துக் கொண்டு எங்களுக்கே நக்கலா? //
சரியாகச் சொன்னீர்கள். நக்கலுக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். (இங்கே கருணா என்ன நோக்கில் சொன்னாரோ தெரியாது. வில்லங்கமில்லாத நோக்கத்தில் அவர் சொல்லியிருக்கக்கூடும்.) தாம் கதைப்பது நல்ல தமிழ் என்று மற்றவர்கள் சொல்வதை வைத்து தலைக்கனம் பிடிப்பது சிலரின் நோய். நாம் நல்லதமிழ் கதைப்பதென்பதே கேலிக்கிடமானது. அப்படிக் கதைத்தாற்கூட அதைவைத்து நாமே பெருமைப்பட என்ன இருக்கிறது. "நீங்கள் நல்ல தமிழ் கதைக்கிறீர்கள்" எனறு ஆய்வுபூர்வமாக இன்றி மேடையில் முழங்கி காசு பார்த்துச் செல்லும் சிலரை நம்பி எப்படி நாம் ஆணவம் கொள்ளத் துணிந்தோம்? மலேசியாவிலும் இதே கதைதான். "நீங்கள் நல்லாத் தமிழ் பேசுகிறீர்கள்" என்று அவர்களின் தலையில் நன்றாக மிளகாயரைத்துக் காசு பார்த்துச்செல்லும் கலைக்கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன்.
அதுசரி மாயவரத்தான்!
தமிழகத்தமிழர் என்று சொல்வதில் என்ன சிக்கல். நாம் தமிழர்கள்தான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாயிற்றே. பலவிடங்களில் வித்தியாசப்படுத்தத்தானே வேண்டும். (இங்கே தமிங்கலம் கதைப்பதில் வித்தியாசப்படுத்தத் தேவயில்லை. அதைச் செய்வது எல்லோரும்தான். வீதம் தான் மாறுபடும்.) சிலவேளை இந்தியத்தமிழன் என்று கூறவேணுமோ? என்னை இலங்கைத்தமிழன் எனவோ சிறிலங்காத் தமிழன் எனவோ அழைப்பது எனக்கு உவப்பானதில்லை. ஈழத்தமிழன் என அழைக்கப்படுவதையே விரும்புபவன். அதேபோல் நீங்களும் ஏதாவதொன்றை விரும்பலாம்.
மீண்டுமொருமுறை மாயவரத்தானுக்கு நன்றிகள். தக்க சமயத்தில் தலையில் ஓங்கிக்குட்டி தெளிவித்ததற்கு.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதமிழை வைத்து பிழைப்பு நடத்த எப்படி ஒரு கூட்டம்(ராமதாஸ் வகையறா) இருக்கிறதோ அது போல தனிப்பட்ட சிலரின் தவறுகளை முன்னிருத்தி ஒட்டு மொத்த தமிழுணர்வையே கிண்டலும் கேலியும் செய்யும் அதன் மூலம் தங்களை மேதாவிகளாக காட்டிக்கொள்ளும் ஒரு கூட்டமும் (சோ,மாயவரத்தான் வகையறாக்கள்) இருக்கிறது..முதல் கூட்டத்துக்கு தங்களை வளர்த்துக்கொள்ள தமிழ் ஒரு கருவி..இரண்டாம் கூட்டத்திற்கு தங்கள் தமிழின,மொழி இகழ்வுக்கு ராமதாஸ் கூட்டத்தின் செயல்பாடுகள் நல்ல வாய்ப்பு..
ReplyDeleteதமிழ் செம்மொழியானதால் தமிழர் வீட்டில் அடுப்பு எரிந்து விடுமா? என்று தமிழுக்கு கிடைத்த உயர்வை பொறுக்க முடியாமல் கிண்டல் செய்த தினமலரை தாங்கி பிடிப்பவர்கள் முகங்களில் காறி உமிழ்கிறேன்.
வசந்தன்,
ReplyDeleteதாங்கள் வெளிப்படுத்திய பெருந்தன்மைக்கும், தெளிவுக்கும் பாராட்டுக்கள் !
மாயவரத்தான்,
என் கருத்துக்கள் சிலவற்றை நீங்களே கூறிவிட்டீர்கள். மிக்க நன்றி ! இருந்தும் ஒரு சுயவிளக்கம் கருணாவுக்காக, கீழே !
கருணா,
//விசித்திரா,பாலா போன்ற மனிதர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்தெழுதித் தாங்கள் கற்றவர்கள் என்பதாய்...
இதுதான் தாழ்வு மனப்பாண்மை. இதிலிருந்து விடபடமுடியாத இந்த மனிதர்கள் எதையுமே பெரிதாகச் சாதிக்க முடியாது.
//
முதலில் நான் தமிழும் ஆங்கிலமும் கலந்த "தமிங்கலத்தில்" ஒருபோதும் எழுதுவதில்லை. என் பதிவுகளை பார்க்காமலேயே கருத்து கூறுவது சரியில்லை. தமிழில் பதிய முடியாத நேரங்களில் ஆங்கிலத்தில் பின்னூட்டத்தை (சில சமயம்) பதிகிறேன். அவ்வளவு தான். இதில் "கற்றவர்" என்று காட்டிக் கொள்வதோ, "தாழ்வு மனப்பான்மை"யோ எங்கிருந்து வந்தது ? மேலும், நான் இதுவரை எதுவும் சாதித்ததாக நினைக்கவில்லை. தமிழார்வத்தால் இங்கு உலவி வருகிறேன்.
//உங்கள் தகுதிகள் நாறுவதற்குமுன் ஓடிவிடுங்கள்.அன்னிய மொழி தெரிவதால் நீங்கள் பெரும் படிப்பாளிகளல்ல.
//
இந்த வசை தேவையில்லாமலேயே, நீங்கள் கூறுவதை (அதாவது, அனைவரும் தமிழில் பின்னூட்டமிட வேண்டும் என்பதை!) பரிசீலனை செய்யும் அளவில், திறந்த மனதுடனே உள்ளேன்.
//தமிழகத்துத் தமிழர்களின் ஊடகங்களிலிருந்து,அங்கு வாழும் பாமரர்கூட ஆங்கிலம் கலந்து தமிழ்பேசுதல் சகிக்கமுடியல்ல. //
தயவு செய்து இவ்வாறு பிரிவினை வளர்க்க வேண்டாமே !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
பத்ரியும் (டோண்டு, இட்லிவடையை போல!) நூறு பின்னூட்டம் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள் :))
ReplyDeleteஎங்கே அல்வா சிட்டியை காணும் ? நூறென்ன, இரு நூறுக்கு எடுத்துச் சென்றும் வல்லமை படைத்தவர் அவர் :))
வசந்தன்... உங்கள் புரிந்து கொணர்வுக்கு நன்றி.
ReplyDeleteதமிழகத்து தமிழர்கள் - இதை ஒரு முறை சொல்லிப்பாருங்கள். வித்தியாசமாக இல்லை. தமிழர்கள் என்றாலே அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். இங்கிருந்து சென்றவர்கள் தங்களை அடையாளம் கூறுவதற்காக, இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், தமிழர்கள் என்றாலே அது பொதுவாக தமிழகத் தமிழர்களைத் தான் குறிக்கும் என்பது எனது கருத்து. உதாரணத்திற்கு, மலேசிய இந்தியர்கள் என்று கூறுகிறோம். அதே மாதிரி இந்திய இந்தியர்கள் என்றா கூறுகிறோம்?!
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். தவறு இருந்தால் தெரியப்படுத்தவும். திருத்திக் கொள்கிறேன்.
அப்புறம் ஜோ அண்ணாச்சி... நாங்க ஒட்டு மொத்த தமிழுணர்வை கிண்டலடிக்கிறோம் என்று என்றைக்குச் சொன்னோம்?! அம்மனமாக இருக்கிறவன் ஊருக்கெல்லாம் கோவணம் கட்டச் சொல்லி அறிவுறுத்தக் கூடாது என்று தானே சொல்கிறோம். அதில் தப்பேதுமில்லையே?!
கோவணம் கட்டிக் கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் எல்லோரையும் கோவணம் கட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு தான் மட்டும் அம்மனமாக இருப்பதில் ஏதோ 'கணக்கு' இருக்கிறதே! அதான் எங்கள் கேள்வி!!
சோ-வுடன் என்னையும் சேர்த்து பேசியதில் மகிழ்ச்சி!
அன்புடைய பாலா,தங்கள் மனதைப் புண்படுதும் நோக்கம் எனக்கில்லை!
ReplyDeleteநான் தமிழர்களின் முன்னேற்றத்திலும், அவர்களது அதிசிறந்த கண்டுபிடிப்புகளிலும் அவாவுறுபவன்.அவர்கள் பெறும் சிறு மரியாதையையும் எனதாகவெண்ணுபவன்.
இந்த வகையில்தான் திரு.சந்திரசேகர் நோபல்பரிசுபெற்றபோது துள்ளிக்குதித்தவன்.
அவரை நெடுக மட்டம்தட்டிய ஆர்த்தூர் எடிங்டன்போன்றோரை மனசால் சபித்தன்.இறுதியில் சந்திரசேகருக்கு ஒரு நெயில் போர் நண்பராகி குவண்டன் கணிதத்தில் சந்திரசேகர் வரம்புகள் உண்மையானது என்று நிருபணமாகி-அவருக்கு,அவரது உச்ச வரம்புக்கு(The Maximum Mass of Ideal White Dwarfs) நோபல் பரிசு கிடைத்தது.
இங்கு கவனிக்கத் தக்கது எதுவென்றால்,நான் யாரையும் சாதிகளால் பிரிப்பவன் அல்ல.நாடுகளாலும் பிரிப்பவன் அல்ல.
என் மொழியும்,எனது இனமும் எல்லா இடங்களிலும் சிறப்படைவதையே நோக்கமாகக் கொண்டவன்.
பாழும் சினிமாவுலகம் இந்தத் தமிழை இவ்வளவு மோசமாகச் சிதைக்கும்போது-அதையே தமது நாகரீகமாகவெண்ணும் பாமரமக்களை நினைத்து மனம்வெதும்பியே அப்படியெழுதுகிறேன்.உங்களைக் கிண்டல் பண்ணவது எனது நோக்கமல்ல.இன்று நாசாவில் பணிபுரியும் தமிழர்களை எண்ணிப் பெருமிதும்கொள்ளும் நான்-அந்த அறிவைப் பயன் படுத்தத் தமிழர்களுக்கென்றொரு நாடில்லையே என்று வேதனைப் படுபவன்.இது தப்பா?
மற்றும்படி யாரையும் பிரித்துப்பார்பவன் அல்ல.ஐரோப்பிய நாடுகளுக்கு கணினி வேலையாக வரும் தமிழகத் தமிழர்களை காணும் இடங்களில் கைலாகுகொடுத்து நலம்விசாரித்து,வீட்டுக்கழைத்து விருந்திட்டு மகிழ்பவன் நான்.என் விருப்பமெல்லாம் தமிழர்கள் தமது மொழியை ஒரு பிரஞ்சுக்காரர்,ஜெர்மனியர்,இத்தாலியர்,இஸ்பானியர்போல் அதிகக் கலப்பில்லாது உரையாடவேண்டுமென்பதே.'கையிலென்ன புக்கா வைத்திருக்கறீங்க' என்றால் பொத்துக் கொண்டு கோபம் வருகிறது.புத்தகம்(தமிழில்லை.வடமொழி.எனினும் தமிழாக ஒலிமாற்றி ஏற்றுக்கொண்ட சொல்அல்லது நூல்) எனக்கேட்க முடியாத நாகரீக-படிப்பாளியெனக் காட்டமுனைதலைச் சொன்னேன்.
திரு.மாயவரத்தான் கற்பனை தவறென்பேன்.
நா.கண்ணனுக்குத் தெரியும் நான் எப்படிப்பட்டவனென.அவர் ஐரோப்பாவில் வாழ்ந்தபோது நிறைய உரையாடியுள்ளேன்.
ஈழத்தமிழர்களுக்கு தமிழ்மீது காதலிருந்த படியால்தான் தமது குழந்தைகளை போருக்கனுப்பி அந்த மொழி நலனுக்காகத் தமது வாழ்வையே அற்பணித்தார்கள்-அற்பணிக்கிறார்கள்!இதில் ஏற்றங்கள் இறக்கங்கள்-நன்மைகள்,தீமைகள் எல்லாமிருக்கு.அதற்காகத் தமிழரின் போராட்டம் தேவையில்லாதது என்று எவராலுமே நிறுவமுடியாது.
இதுபோன்றே தமிழக மொழிப்போராட்டம்.
புரிதற் தவறுகள் எல்லாவற்றையும் ஒரு சாதிக்கெதிரானதாகப் போட்டுக் குழப்புகிறது.
ஒரு மொழி வளர்வதற்கும்,காபாற்றப் படுவதற்கும் ஒழுங்கமைந்த நாடும் அதுசார்ந்த கட்டுமானங்களும் தேவை.
இது அவசியமென ஈழத்தமிழர் எப்பவோ உணர்ந்துள்ளார்கள்.
பாலா மீளவும் சொல்கிறேன் உங்களைப் புண்படுத்தவில்லை!
அப்படி நீங்கள் உணர்ந்தால் எனது மொழிக்காக அதன் உயிர்த்திருத்தலுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக்கேட்கிறேன்.
இது ஈழத்தில் தமிழுக்காக உயிர்விடும் எனது மகளின்,மகனின் தியாகத்துக்குமுன் ஒரு அற்ப விடையமே!
அன்போடு
கருணாநந்தன் ப.
மாயவரத்தான் சொன்னது,
ReplyDelete//தமிழர்கள் என்றாலே அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். இங்கிருந்து சென்றவர்கள் தங்களை அடையாளம் கூறுவதற்காக, இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், தமிழர்கள் என்றாலே அது பொதுவாக தமிழகத் தமிழர்களைத் தான் குறிக்கும் என்பது எனது கருத்து.//
உங்கள் கருத்திலிருந்து முழுவதுமாக முரண்படுகிறேன் மாயவரத்தான் அவர்களே. யார் சொன்னது ஈழத்தமிழன் தமிழகத்திலிருந்து சென்றவன் என்று. நல்லாயிருக்கிறதே கதை. அகழ்வாராய்ச்சியின் அடிப்படையிற் பார்த்தாற்கூட ஈழத்திற் கண்டெடுக்கப்பட்டவை தமிழகத்திற்கும் முந்தியவை, அதாவது ஆகப்பழைய ஆதாரம் ஈழத்தில்தான் உள்ளதாகச் சொல்வார்கள். இங்கே நான் இதை ஏன் சொல்கிறேனென்றால், ஈழத்தையும் தமிழகத்தையும் எடுத்துக்கொண்டால் தமிழர் எங்கே முதலில் வாழ்ந்தனர் என்ற பேச்சுக்கே இடமில்லையென்று சொல்லவே. நீங்கள் மலைநாட்டில் வாழும் தமிழர்களைச் சொல்கிறீர்களா? அவர்கள் இன்னும் கலாச்சார மொழிநடைரீதியாகக் கூட இந்தியாவுக்கே அண்மையில் உள்ளனர். அண்மை வரை இந்தியத்தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். ஓருவேளை நீங்களும் 'மகாவம்ச' வம்சமோ என்று நினைத்தேன்.