கடிதத்துக்கும் ஆவணத்துக்கும் (Document) உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா? இனி தெரிந்தாக வேண்டும். அத்துடன் அரைக்கிலோவுக்கு மேல் என்றால்தான் தனியார் சேவையை அணுக முடியும் என்பதாகச் சட்டங்கள் கொண்டுவரப் போகிறார்களாம்.
Rediff: Letters below 500 gm? Only India Post, please
தன் வருமானம் பாதிக்கப்படுவதால் தனியார் நிறுவனங்களின் குரல்வளையை நெரிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் அரசு இப்பொழுது கூரியர் நிறுவனங்களின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளது.
500 கிராம்களுக்கு - அதாவது அரைக் கிலோவுக்கு - குறைவான "ஆவணங்களை (அ) கடிதங்களை" இனி தனியார் கூரியர்மூலம் அனுப்பக்கூடாது என்று Indian Postal Act 1898-ல் சில மாற்றங்களைச் செய்வதன்மூலம் சட்டம் இயற்றப்போவதாக மைய அமைச்சர் ஷகீல் அஹமத் கூறுகிறார்.
இன்று தனியார் கூரியர் சேவைகளை அதிகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் இதனால் திண்டாட வேண்டிவரும்.
எந்தவிதமான சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன? அவர்களது வேலையாள்களே நமது நிறுவனம் வரை வந்து கடிதங்களையோ, ஆவணங்களையோ, பொதிகளையோ எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். மாதம் ஒருமுறை பில் தருகிறார்கள். மாதத்துக்கு ஒருமுறை அவர்களுக்குப் பணம் கொடுத்தால் போதும். கிரெடிட் வசதி உண்டு.
ஆனால் இந்தியா போஸ்ட்டைத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற நிலை வந்தால் என்ன ஆகும்? ஆவணம் சென்று சேர்ந்த ரசீது வேண்டுமென்றால் ரிஜிஸ்தர் தபால் அனுப்ப வேண்டும். அதற்கு நாம் போஸ்ட் ஆஃபீஸ் போய் வரிசையில் நிற்க வேண்டும். உடனுக்குடன் பணத்தைக் கட்ட வேண்டும். சரியான சில்லறை இல்லாமல் இந்திய போஸ்ட் ஆஃபீஸ்களில் நின்றிருக்கிறீர்களா? இத்துடன் இன்றைய வேலை முடிந்தது என்று போர்டை இழுத்து மாட்டிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்கள். பாதி நேரம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அரட்டைக் கச்சேரி சுகமாக நடக்கும். அதாவது விகடன் குமுதம் படிக்கும் நேரத்தைத் தவிர.
நாங்கள் தபால் துறையையும் உபயோகிக்கிறோம் - வேண்டும் என்றால் மட்டும்தான். மணி ஆர்டர், வி.பி.பி, பதிவுத் தபால் என்று அவ்வப்போது. ஆனால் தனியாருக்கு இடமில்லை, அதனால் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஏதேனும் தொல்லைகள் வந்தால் அதைப்பற்றிக் கவலையில்லை என்று அகங்காரமாக சட்டம் இயற்றுகிறார்கள்.
அரசுக்கு வருமானம் போவதற்கு முக்கியமான காரணம் தபால் துறையில் சீர்திருத்தங்களையும் நல்ல நுகர்வோர் சேவையையும் அவர்கள் கொண்டுவராததே. அதைவிடுத்து தனியாரின் சேவைகளை நிறுத்தும்விதமாகக் கொண்டுவரப்படும் மேற்படிச் சட்ட மாற்றத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
Pac-Man வீடியோ கேம்
4 hours ago
இது மிகவும் பிற்போக்கான செயல். நானும் உங்களுடன் எதிர்ப்பில் இணைகிறேன். ஒருபக்கம் இலாபத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை விற்க முயற்ச்சி, மறுபக்கம் அரசின் கையாலாத்தனத்தை சரிகட்ட தனியார் முயற்சிகளை நெரித்தல். என்ன கொள்கையோ ?
ReplyDeleteமுக்கியமாக கூரியர் துறை SME எனப்படும் சிறுவணிகர்களால் நடத்தப் படுவது. பெருவணிக நிறுவனங்களுக்கு விரிவாக்க தாராளமயமாக்கல் கொள்கைகளை அமல்படுத்தி சிறு வணிக மற்றும் முதன்முறை தொழில்முனைவோரை நசிப்பது எந்த வளரும் நாட்டிற்கும் நல்லதல்ல.
For a moment I thought I was reading Tamilmurasu, because the title is very much their style :)
ReplyDeleteIt is amazing how laws are made on the fly without any debate and consensus in "democracy"
//தனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு?" //
ReplyDeleteதலைப்பு ரொம்ப டாப்பு
மத்தபடிக்கு இந்த ஐடியா, தகவல் தொடர்புத்துறை அமைச்சர், Mr. Moron இன் ஐடியாவாக இருக்குமோ? அடிப்பொடி ஷகீல் அஹ்மத் வழிமொழிகிறாரோ?
இனி இப்படி எதிர்பார்க்கலாம்.
*public transport வருமானம் குறைகிறது. ஆகவே, இனிமேல் யாரும் கார் வாங்கக்கூடாது.
*bsnl க்கு போட்டி அதிகமாகிவிட்டது. ஆகவே, நாளை முதல் ஏர்செல், ஏர்டெல் என்று எந்த சேவையை வாங்கினாலும், கூடவே cell one ஐயும் வாங்க வேண்டும். TRAI ஐத் தூக்கி தயிர்லே போடேய்
* ஒன்றில் இருந்து ஐம்பது வயசுக்குட்பட்டவர்கள், எல்ஐசியிடம் தான் இன்சூரன்ஸ் பாலிசி வாங்க வேண்டும். இழுத்துக்கோ பறிச்சுக்கோ ன்னு இருக்கிறவர்கள் மட்டும் தான், ராயல் சுந்தரம், மெட்லை·ப் பக்கம் போகலாம். 1956 இலே ஐந்து கோடி ரூபாய் ஈட்டுத்தொகை குடுத்து தேசியமயமாக்கப்பட்ட எல்ஐசி, போன வருஷம் கெவர்மெண்ட்டுக்குக் கொடுத்த டிவிடண்ட், நாலாயிரத்து சொச்சம் கோடி ரூபாய்.. இன்னும் வேணுமாமா?
அதுக்கு எல்லாத்தையும் அவங்களே நடத்திட்டுப் போகலாமே,.. கூடாது... developing nation இல்லையா? பேரு ரிப்பேராகிப் போகுமே.. இது மட்டும் அமுலுக்கு வந்தால், நான் இல்லீகலா கூரியர் கம்பெனி நடத்துவேன்.. பிரச்சனையின்னா ஜட்ஜய்யா கிட்ட பேசிக்கிறேன்...
பரி: டமில்முரசு தலைப்பு வைப்பதில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது.
ReplyDeleteமுடிந்தவரை டமில்முரசு பாணியைப் பின்பற்ற விரும்புகிறேன்.
பிரச்சனையின்னா ஜட்ஜய்யா கிட்ட பேசிக்கிறேன்... // -
ReplyDeleteஇக்காரஸ், அப்போ உங்களுக்குத்தான் கூரியர் செர்வீஸ்..சரியான இடமா தெரிஞ்சி பிடிச்சிட்டீங்க..
எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது...:)
ReplyDeleteஇதைப்பார்த்து சந்தோசப்பட்டுக்கோங்க.
I use all forms of communications and I am very concerned with this and I am sure that this is a bad news for me...... bad in a sense not as you would imagine, but something else......
ReplyDeleteIn all my capacities, I can safely proclaim that the MOST COST EFFECTIVE MODE OF SENDING A LETTER OR A DOCUMENT was through the department of Posts, Govt of India. Period.
Many of you would be cursing the postal department. If you are thinking that their service is poor, then you have not obviously used post office for the past couple of years (and was tired by their services in the latter half of last decade )
I can very well tell you that for the last couple of years the postal department is very efficient. On an average
1. My letter to Hyderabad or Delhi(with a five rupee stamp) reaches them on the second day from tuticorin or at the worst scenario, the third day. Even with courier (Except DTDC which delivers on the second day), Thoothukudi to hyderabad takes 2 days.
2. Letters within the district reach the next day.
Now this will come as a surprise to you, but this is THE REALITY.
I will tell you why and how
Way back in 1980, the postal department was efficient.
Then in the 1990s, their efficiency dipped as the load was more. They had a lot of letters and documents and their speed was affected
In the late 1990s, thanks to the "JOB CUT" (or ban on recruitment), they lost their staff and the performance dipped to a Very Low level. A letter from Chennai took 5 days (or even more) to reach Thoothukudi
And at this time, the courier services blossomed. Banks, Publishers, Shipping Companies and all other private concerns, started sending their letters through couriers.
And at this time, the postal department went a step further. They raised all costs. Remember that a book post that cost 50 paise was raised to Rs 4 within a short period of time.
And the same time, around 1996 to 1997, we were able to get a telephone after 1 month of booking. After 15th Aug 1998, STD rates started dropping. With phones at household and cheaper STD rates, there were no need of any letters to the near and dear . The very statement we used to tell some one while "giving them a send off" at the railway station or busstand was "Send a letter after reaching (ooruku poi kaduthasi podu)" It gradually changed into "Call me after reaching home" (Of course it has further changed to "send a SMS" and now the lastest fashion is "give a missed call") I have written in my post http://doctorbruno.blogspot.com/2006/01/cell-phones-mobile-phones-in-college.html about how we used to send letters to parents during our "first anatomy" days and how that was changed into calling by mobile at our intern period.
In short during the period from 1995 to 1998 (middle of the last decade), regular official communication were diverted to courier and during the last few years of the decade, "INLAND" letters were replaced by the telephone.
So what happened........ The LOAD for the postal department became lighter. In the early years of this decade (for examply in 2001 to 2003) the city post offices in cities handled less than 10 % of the "traffic" they handled in 1993. At this time, their staff strength was nevertheless reduced by 50 %. However, post offices are still being widely used in the villages where there are no other ways
Yet their efficiency was increased, because they had nothing to deliver except lawyer notices, memos from banks for defaulters, notices from co-operative societies and chit funds, marriage invitation send to distant relatives and distant friends.
It is for this reason why a letter I send on Monday to a publisher in Hyderabad or Delhi reaches him on Wednesday.
So Why am I worried....... With the new govt initiative, they are going to increase the NUMBER OF LETTERS. I am 100 percent sure that they are not going to increase the staff strength or other infrastructure. No new vans will be bought. No new counters at the post office. In short, my letter sent on Monday is going to reach Hyderabad on Saturday. And if I am able to register a letter in 10 minutes, that is going to increase to 20 minutes
Do I have reason to be worried ?? You please tell