எனக்கு இல்லைங்க. காங்கிரஸ் கூட்டணிக்குதான்.
சமீபத்தில் ஒரு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பல தேர்தல் சாவடிகளில் மக்களை அனுமதிக்கவேயில்லை. சில இடங்களில் குண்டர்கள் துணையுடன் சக் சக்கென்று ஆளுங்கட்சிக் காரர்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாகக் குத்திக் கலக்கினர். ஜனநாயக வாக்குரிமையை வேண்டிய வாக்காளர்கள் மிரட்டி அனுப்பப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் அநியாயம், அக்கிரமம் என்று கதறின.
இப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். மத்திய அரசு இதுபோன்ற அநியாயங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்கிறார். அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையின்படி மாநில அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்கிறார்.
இல்லைங்க. தமிழ்நாட்டைப் பத்தி இல்லையாம். உத்தர பிரதேசத்தைப் பத்தி சொல்றாராம். அங்கயும் சென்னைல நடந்ததேதான் நடந்திருக்கு. ஆனா அங்க உதை வாங்கினது காங்கிரஸ்காரங்க. அதனால் மினிஸ்டருக்கு கோபம். தமிழ்நாட்டுல நம்ம மினிஸ்டரோட நண்பர்களுக்குத்தான நல்லது நடந்திருக்கு. அதனால் இங்க 'ஆட்சிக் கலைப்பு' மிரட்டல் வராது.
For the record: இதெல்லாம் வெத்து மிரட்டல். உத்தர பிரதேச ஆட்சியையோ அல்லது தமிழக ஆட்சியையோ உள்ளாட்சித் தேர்தல் குழப்படிகளை வைத்துக் கலைக்க முடியாது. உச்ச நீதிமன்றம் (bless them!) இதுபோன்ற abuse-களைத் தடுக்கும். அதனால் இந்த மிரட்டலையெல்லாம் ஏறக்கட்டி வைத்துவிட்டு தைரியமிருந்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதலைக் கொண்டுவரட்டும் - மாநில தேர்தல் கமிஷன்களைக் கலைத்து இந்திய தேர்தல் கமிஷனிடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பணியைக் கொடுக்கலாம். அல்லது மாநில தேர்தல் கமிஷனர்களுக்கு நல்ல அதிகாரங்களைக் கொடுத்து நியாயமான முறையில் தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம். முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவரவேண்டும்.
ஆதாரம்: தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
17 hours ago
செமை ஃபார்ம்லே இருக்கீங்க போல... பதிவுக்கான தலைப்பைப் பத்தி சொல்றேன் :-)
ReplyDeleteதமிழ்நாட்டுலக் கூட திமுக காங்கிரஸை ஆங்காங்கே ஒதைச்சதா பேசிக்கிறாங்களாமே.
ReplyDeleteகிருஷ்ணன்
பதிவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி:
ReplyDeleteபெங்களூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு தகவல் கூட உங்க பதிவுகளில் காணோமே?
தலைப்பு சூப்பர். அப்படியே பொருந்துகிறது சூழலுக்கு. உள்ளாட்சித் தேர்தல் அரசியல் சூழலைச் சொல்கிறேன். நன்றி.
ReplyDelete//அதனால் இந்த மிரட்டலையெல்லாம் ஏறக்கட்டி வைத்துவிட்டு தைரியமிருந்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதலைக் கொண்டுவரட்டும் - மாநில தேர்தல் கமிஷன்களைக் கலைத்து இந்திய தேர்தல் கமிஷனிடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பணியைக் கொடுக்கலாம். அல்லது மாநில தேர்தல் கமிஷனர்களுக்கு நல்ல அதிகாரங்களைக் கொடுத்து நியாயமான முறையில் தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம். முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவரவேண்டும்.//
ReplyDeleteஉண்மை..நியாயமான கருத்து
:-))))
ReplyDelete