ஆனால் ஹட்ச், டாடா, பிற சிறு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவது கஷ்டம். தகவல்கள் என்றால்?
அவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அவர்களது முழு வருமானம், நிகர லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களுக்கு ஈட்டித்தரும் வருமானம், பங்கு ஒன்றுக்கு அவர்கள் பெரும் லாபம் (ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்) ஆகியவை.
இதில் GSM வழியாக செல்பேசிச் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, செல்பேசிச் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு COAI மூலமாக வெளியே கிடைக்கிறது. இப்பொழுது TRAI மூலம் இந்த நிறுவனங்களின் வருமானம் பற்றிய தகவலும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் இவர்கள் அரசுக்குச் செலுத்தும் உரிமத் தொகை இவர்களது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம். எனவே அரசுக்கு இவர்கள் தங்கள் வருமானத்தைச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான இந்தச் செய்தியைப் பாருங்கள். கடந்த காலாண்டில் (Q3 2006) இவர்களது வருமானம்:
நிறுவனம் | வருமானம் (கோடி ரூபாய்) |
---|---|
பார்தி ஏர்டெல் | 5,361.62 |
ரிலையன்ஸ் இன்ஃபோகாம் | 3,621.26 |
ஹட்ச் | 2,800.53 |
டாடா இண்டிகாம் | 1,642.26 |
ஐடியா | 1,187.59 |
ஏர்செல் | 344.20 |
அடுத்த சில வருடங்களில் இந்த வரிசை எப்படி மாறும் என்பது சுவாரசியமானது.
No comments:
Post a Comment