ஆனந்தகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வுக்கு தேவையா, வேண்டாமா என்று கருத்து கேட்டிருந்தபோது, நுழைவுத்தேர்வு இருப்பதே நல்லது என்று நான் குழுவுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு முன்னர் ஒருமுறை சில மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நுழைவுத்தேர்வு முறை எந்த அளவுக்கு பலரைப் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
Normalisation முறையைப் பற்றிக் குறிப்பிடும்போது நீதிபதிகள்
...the normalisation of marks, which forms the basis of the new admission policy of the State Government was not so arbitrary as to warrant the court's intervention on the ground of violation of the Fundamental Right to Equality.என்று சொல்லியுள்ளனர். பெஞ்சின் ஒரு நீதிபதி சம்பத்குமார், மேற்கொண்டு, எந்தத் தேர்வு முறையும் நியாயமானதாக, வெளிப்படையானதாக, (எந்த வகையினரையும்) சுரண்டாததாக இருக்கவேண்டும் என்றும் மேற்கண்ட நார்மலைசேஷன் முறை இந்த மூன்று அடிப்படையிலும் தேறுகிறது என்றும் சொல்லியுள்ளார்.
அடுத்த மூன்று வருடங்களில் இந்த முறை எவ்வாறு இயங்குகிறது என்று பார்த்துவிட்டுத்தான் மேற்கொண்டு கருத்து சொல்லமுடியும்.
This year there is going to be NO Entrance Exams in Tamil Nadu for MBBS Admission
ReplyDeleteYou will see that there is atleast 70 % of girls in the allotment list
And then, Not even 50 Students from Rural Areas will be getting seats (as Entrances are removed)
This may sound funny, but the truth is that the Amount of Coaching needed (read as money spent) for Entrance Exams is just 10 % of the Coaching (read money spent) that is being given for Board Exams to enable the candidate get centum.
Hence, Rural Students will be at a great disadvantage because of Cancellation of Entrance Exams.... (Though this may look absurd now, you will all understand after some time)
After seeing the pathetic result of the regulation, they will bring back the entrance in few years.. !!!
மருத்துவம் இருக்கட்டும்; பொறியியல் துறைக்கு பெண்கள் 70% வந்தால் நல்லதுதான். குறைந்தபட்சம் அபிநந்தனனாவது சந்தோஷப்படுவார்:-)
ReplyDeleteகிராமப்புற மாணவர்களுக்கு இது வரமா, சாபமா என்பது இனிதான் தெரிய வரும். பார்ப்போம்.
//பொறியியல் துறைக்கு பெண்கள் 70% வந்தால் நல்லதுதான். //
ReplyDeleteமொத்தமாக பொறியியல் துறைக்கு பெண்கள் 70% வருவது நடக்காது... ஆனால் அண்ணா பல்கலைக்கழகம், Computer Science போன்ற பி்ரிவுகளில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
கிராமப்புற மாணவர்கள் (மற்றும் அவர்களின் பெற்றோர்) ஒரு தவறான கருத்தை கொண்டுள்ளார்கள்....
ReplyDeleteகிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவன், +2வில் 195/200 எடுத்துள்ளான். ஆனால் நுழைவுத்தேர்வில் 80/100 எடுத்ததால் 275/300 மதிப்பெண். (25 மதிப்பெண் குறைந்துள்ளது - அதில் 20 மதிப்பெண் நுழைவுத்தேர்வில் குறைந்துள்ளது +2வில் வெறும் 5 மதிப்பெண்கள் மற்றுமே குறைந்துள்ளது) மருத்துவம் படிக்க முடியவில்லை !!!! எனவே நுழைவுத்தேர்வு இல்லையென்றால் 5 வெறும் 5 மதிப்பெண்கள் மற்றுமே குறையும். எனவே இடம் கிடைத்துவிடும் !!!!! என்ற கனவில் உள்ளனர். ஆனால் (கசப்பான) உண்மை என்னவென்றால்....
நுழைவுத்தேர்வில் 95/100 எடுத்த city student எழுத்து தேர்வில் 200/200 எடுத்திருப்பான்.....
அவன் 95/100 மதிப்பெண் பெற 1 மாதம் பயிற்சி மற்றும் 5000 ரூபாய் செலவு....
அதே நேரம் 200/200 மதிப்பெண் பெற 24 மாதம் பயிற்சி (many school sin cities do not take XI Syllabus. Instead they take XII Syllabus for two years. Now the government is very strict and has reformed this) மற்றும் 25000 ரூபாய் செலவு.... (Tuition for 4 subjects)
இந்த (கசப்பாண)உண்மை பலருக்கு (சில பத்திரிகைகள் - நக்கீரன் உட்பட) தெரியாததால் தான், குழப்பம்.