நேற்று விஜில் சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவரும், முன்னாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியருமான அருன் ஷோரி கலந்துகொண்டு பேசினார். விஜில் அமைப்பின் கல்யாணராமன், தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.
கல்யாணராமன் - சரஸ்வதி ஆறு, சேதுசமுத்திரம் ஆகியவை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவருபவர். தெற்காசியா என்பது இந்திய கலாசாரம் பரவியுள்ள பகுதி. இந்தப் பகுதியின் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார். தினமணி ஆசிரியர் வைத்யநாதன் ஏன் பேசினார் என்று தெரியவில்லை. தமிழ்ல் பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்று அடம்பிடித்து, எதையோ சொன்னார்.
கடைசியாக அருன் ஷோரி பேசினார். அந்தப் பேச்சின் ஒலிப்பதிவை இங்கே கொடுத்துள்ளேன்.
அருன் ஷோரியின் வாதம்:
* காங்கிரஸ் அரசு கையாலாகாத அரசு.
* ஷிவ்ராஜ் பாடிலுக்கும் மன்மோகன் சிங்குக்கும் கடல் வழியாகத் தாக்குதல் நடக்கும் என்று தெரியும். இதைப் பல இடங்களில் பேசியுள்ளனர். ஆனால் தற்காப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை.
* பாகிஸ்தான், இஸ்லாத்தால் ஒன்றுபட்ட தேசமல்ல. இந்திய எதிர்ப்பால் ஒன்றுபட்ட தேசம்.
* லஷ்கார்-ஈ-தோய்பா, வெளிப்படையாகவே பாகிஸ்தானில் இயங்கிவருகிறது. இஸ்லாமாபாதுக்குப் பக்கத்தில் 300 ஏக்கர் நிலத்தில் அதன் அலுவலகம் உள்ளது. “அரசமைப்புக்கு வெளியே உள்ளவர்கள்” இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என்று சொல்வது அபத்தம்.
* பாகிஸ்தானின் உள்நாட்டடுப் பிரச்னைகளால் காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்னைகளை அதிகரிக்குமாறு செய்யவேண்டும். பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரவேண்டும். ஆஃப்கன்ஸ்தான் - பஷ்டூன் பழங்குனியினருக்கு ஆதரவு தரவேண்டும். நரசிம்மராவ் பாராட்டப்படவேண்டியவர். அவர் வடக்குக் கூட்டணிப் படையினருக்குக் கொடுத்த ஆதரவால்தான் தாலிபன்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
* இந்தியாவைச் சுற்றி ஆறு “failed states” உள்ளன. (அதாவது பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், பங்களாதேசம், நேபாளம், மையான்மார், இலங்கை?)
* பாகிஸ்தானைக்கூட இந்தியாவால் சமாளித்துவிட முடியும். ஆனால் சீனா இந்தியாவை நசுக்கப் பார்க்கிறது. சீனா இந்தியாவை “நண்டில் ஒரு கொடுக்கு” என்று வர்ணிக்கிறது. அமெரிக்கா என்ற நண்டின் கொடுக்குகள் - இந்தியா, தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்றவையாம்.
* சீனா மையான்மாருக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து, அந்த நாட்டைத் தன் பிடியில் வைத்துள்ளது. பங்களாதேசத்துடன் ராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்து, சிட்டகாங்கில் கப்பல் தளம் அமைக்கிறது. பாகிஸ்தானில் க்வத்தார் என்ற இடத்தில் கப்பல் தளத்தை அமைக்கிறது. திபெத்தில் ராணுவத்தைக் குழுமியுள்ளது. அருணாசலப் பிரதேசத்தைத் தனது என்கிறது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அடுத்த நாள் முதலாக அந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து ஷரத்துகளையும் மறுதலித்துள்ளது.
* மக்கள் தேசப்பற்று உள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். அந்த வாய்ப்பு அவர்களுக்கு இப்பொது கிடைக்க உள்ளது.
* தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டதிட்டங்கள் வேண்டும். 1990களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர். 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு இன்னமும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
கீதையை அறிதல்-16
20 hours ago
100% Right!
ReplyDeleteYes I agree with Arun Shourie that we have to act tough with Pakistan but why is that the party he belongs to, BJP, is politicizing the Mumbai siege and why is the party indulging in one-upmanship - I am referring to Modi's offer of one crore to Hemant Karkare's wife and BJP vice president Mukhtar Abbas Naqvi's rubbishing of candle vigils for Mumbai terror victims.
ReplyDeleteYou must be joking dude. A chief minister of state offering 1 Cr rupees to a martyred cop is hardly "politicizing" to me.
ReplyDeleteThe candle vigil looks to me like a bullshit by left leaning chattering class cocktail commies. Any way, mukhtar abbas's comments were made in a fit of rage and BJP's top brass has distanced itself from it.
The likes of you hate BJP so much, thats the reason why you just can't keep shut.
நன்றி.
ReplyDeleteஇந்த Failed states/ சீனாபற்றி நான் என் பதிவில் ஏற்கனவே சுட்டியிருந்தேன்.
http://balaji_ammu.blogspot.com/2008/11/472.html
சீனா பாகிஸ்தானை விட அபாயகரமான "பக்கத்து" நாடு என்பது மிகச் சரி !!!!
எ.அ.பாலா
இக்கருத்துக்கள் 100% உண்மை.
ReplyDelete//பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்னைகளை அதிகரிக்குமாறு செய்யவேண்டும்.
//பாகிஸ்தானைக்கூட இந்தியாவால் சமாளித்துவிட முடியும். ஆனால் சீனா இந்தியாவை நசுக்கப் பார்க்கிறது.
ஒவ்வொரு இந்தியனும் மனதில் இருத்த வேண்டுய செய்திகள்!
10000% correct, arun shorie will be next internal security or diffence misnister.
ReplyDeletehw don't know how to get commission in buying military equipements/ in all buying commercial business agreements
There are only a few journalists like Arun Shourie, Shekhar Gupta, and a few others who really talk a lot of sense and reality and long term plans and interests. Frontline English electronic media coverage and exploitation has been a national shame in an event of such a tragedy. Overhaul of police and Security forces is the utmost need of the hour. And a coercive smart diplomacy also needs to be exercised to achieve our strategic goals. Thanks for the Arun Shourie speech - Srividhya
ReplyDeleteஅருன் கருதுக்கள் ஒன்றை மட்டும் எடுதுக்கொண்ட் இந்திய மக்கள் செயல் பதுத்த வேண்டும்..
ReplyDeleteநாட்டிற்க்கு தேவை நாட்டுபற்றூள்ள, உண்மையான,திடமான மன உறுதியுள்ள தலைவர்.
மக்கள் தான் யோசிக்க வேண்டும்
"அருன் ஷோரி" இல்லை
ReplyDelete“அருண் ஷோரி”
//I am referring to Modi's offer of one crore to Hemant Karkare's wife and BJP vice president Mukhtar Abbas Naqvi's rubbishing of candle vigils for Mumbai terror victims.//
ReplyDeleteGet it straight. Modi NEVER offered one crore to Hemant Karkare's wife. As she herself makes it clear - He gave moral support and left. He announced Gujarat Government would give one crore Rs to all the martyrs of Mumbai. He is perfectly justified in doing that as Mumbai has a substantial Gujarathi population.
//and BJP vice president Mukhtar Abbas Naqvi's rubbishing of candle vigils for Mumbai terror victims//
Yes It was an ugly despicable statement. I join every Indian in condemning that.
Badri...Great post. Thanks a lot for taking pains to record it and publish it in your blog. Timely and needed.
அருண் ஷோரியின் அணைத்து கருத்துகளையும் ஏற்கிறேன், ஒன்றைத் தவிர.
ReplyDeleteஅடுத்தவன் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தித்தான் நம் நாட்டில் அமைதி தேட வேண்டுமா ? பின்பு தோற்ற தேசங்கள் பற்றி பேசுவது ஹிபோகிரெடிக்காக காட்ச்ி அளிக்கிறதே!
Shourie has been writing about this and other issues for a long time.But his voice is a minority voice in BJP.Many
ReplyDeleteothers including Advani dont want to take a hardline view against China or Pakistan.
That is why BJP was more or less following
the foreign policy of the congress
when in power, heading the NDA.
Pakistan's future is difficult
to predict.Democracy there is
fragile and the internal problems
are too many.When the time is ripe
for military to intervene in the pretext of bringing order one can expect a coup.
Obama is not a great friend of Pakistan
nor has faith in its rulers.The good thing is Obama will not be anti-India.
Baluchistan issue will becoma a headache
for Pakistan in the years to come.
Video of the same is available here..
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Hoa3qDWmAQk