என் மேஜை என்றுமே நேர்த்தியாக இருந்தது கிடையாது. அதனை அவ்வப்போது ஒழுங்குபடுத்த முனைவேன். விரைவில் குப்பைக் காடாகி விடும். பின் அதையே பெருமையாகச் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தேன். அலுவலகம் வருவோரிடம், ‘மன்னியுங்கள், என் மேஜை கொஞ்சம் தாறுமாறாகத்தான் இருக்கும்’ என்று ஆரம்பிப்பேன். அவர்களும் கொஞ்சம் இரக்கத்துடன், பரவாயில்லை என்று மன்னிப்பார்கள். உண்மையில், என் மேஜையை எப்படி ஒழுங்காக்குவது என்பது எனக்குத் தெரியவில்லை. அதுதான் என் பிரச்னை. ஆனால் அந்தப் பிரச்னையின் ஆழத்துக்குச் சென்று அதனை நேர்த்தியாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை ஆராய என் மனம் விரும்புவதில்லை.
இதே சிக்கல் என் கணினியிலும் தொடர்கிறது. சில பல ஃபோல்டர்கள் இருக்கும். அவற்றில்தான் கோப்புகளை வைக்க விரும்புவேன். ஆனால் நாளடைவில் டெஸ்க்டாப்பில் குப்பை கூளங்கள் சேர்வதுபோல் கோப்புகள் சேரும். பின் ஒரு சுபயோக சுபதினத்தில் Stray Files என்று பெயர்கொண்ட ஃபோல்டரில் குறிப்பிட்ட தேதியிட்ட சப்-ஃபோல்டரில் அனைத்து கோப்புகளையும் கடாசிவிடுவேன். அடுத்த சில நாள்கள் டெஸ்க்டாப் நன்றாக இருக்கும். பிறகு மீண்டும் இதே கதைதான்.
அலுவலகத்துக்காக ஒரு பயணம் மேற்கொண்டால் உடனடியாக செலவுக் கணக்கை எழுதித் தருவது கிடையாது. கடைசி நிமிடத்தில் இருக்கும் ரசீதுகளை எடுத்து எழுதித்தருவேன். சிறிய தொகை என்றால், அந்த ரசீதுகளை சேர்த்துகூட வைக்கமாட்டேன்.
இதெல்லாம் சாதாரண விஷயங்கள்தானே என்றால் உண்மைதான். ஆனால் இவையெல்லாம் நம் அலுவலகப் பணிகளையும் வீட்டுப் பணிகளையும் பாதிக்கின்றன என்றே நினைக்கிறேன். சுத்தம், நேர்த்தி ஆகியவை நம் உடலோடு ஒட்டிக்கொள்பவை. வீட்டில் மட்டும் சுத்தம், வெளியில் அழுக்கு என்று இருக்கமுடியுமா? அதுபோல ஒரு செயலில் நேர்த்தி இல்லை என்றால், மற்றொரு செயலை நேர்த்தியாகச் செய்யமுடியுமா என்று தெரியவில்லை.
உங்கள் மேஜையை ஒழுங்காக வைத்துக்கொள்வது எப்படி என்று யாராவது ஒரு புத்தகம் எழுதித்தர விரும்புகிறீர்களா?
ஐந்து புத்தகங்கள் – 9
2 hours ago
//உங்கள் மேஜையை ஒழுங்காக எப்படி வைத்துக்கொள்வது என்று யாராவது புத்தகம் எழுதித்தர விரும்புகிறீர்களா?//
ReplyDeleteஎழுதித்தர நான் ரெடி. ஆனால் என் மேஜை உங்களுடையதை விட ரொம்ப மோசம் :-(
கண்டிப்பாக முடியும். ஆனால் அது ஒரு obsession ஆக கூட மாறிவிடும். என்னுடைய தந்தை அடிக்கடி கூறுவார்: There is a Place For Everything & Everything Should Be in Its Place.
ReplyDeleteமுதலில் சற்று கடினமாக இருக்கும். அனைத்து நேரங்களிலும் பின்பற்ற முடியாது. ஆனால், வாரம் ஒருமுறையாவது அதனை கவனிக்காமல் விட்டால், முடிந்தது. அவ்வளவுதான். அதனை சரி செய்ய ஒரு / இரண்டு மாதம் ஆகிவிடும். எவ்வளவுதான் திறமையான டைம் மேனேஜராக இருந்தாலும்கூட இது ஒரு சோதனையே.
என்னுடைய அண்ணன் இதனை திறமையாக செயல்படுத்தி வருகிறார். நான் என்னால் முடிந்த அளவிற்கு (அதாவது - அலுவலகங்களில், பயணத்தின்போது இதர், இதர) முயல்கிறேன். ஆகையால், Yes, it is possible.
அன்ன ஒரு குறிப்பிட்ட கான்சப்ட் வைத்துள்ளார்: இத்துனை மணிக்கு கண்டிப்பாக தூங்கிவிடவேண்டும், இத்துனை மணிக்கு எழுந்துக்கொள்ள வேண்டும், என்பது போல இந்த பிளேஸ்மென்ட் விஷயமும் ஒரு மன உறுதி சம்பந்தப்பட்ட விஷயமே. பழகிவிட்டால், அது ஒரு சுகம் (என்று சொல்கிறார்கள்).
``ராமதுரை எழுதியது
ReplyDeleteஎன்னால் புத்தகம் எழுதித் த்ர இயலாது. வேண்டுமென்றால் அடிப்படையான குறிப்பு வேண்டுமானால் கூற இயலும். நான் ஒரு பிரபல் தமிழ் செய்திப் பத்திரிகையில் செய்தி ஆசிரியராக இருந்த போது அனுபவ மூலம் ஒன்றைக் கற்றுக் கொண்டேன். அந்த நாட்களில் பல செய்தி நிறுவனங்கள் மற்றும் எங்களது சொந்த செய்தி ஏஜன்சியிலிருந்து ஓயாது செய்திகள் -- அந்த நாட்களில் Hard copy ஆக செய்திகள் வரும். ஒரு பெரிய பத்திரிகைக்கு வருகின்ற செய்திகள் அனைத்தையும் பிரசுரிப்பது என்றால் 100 பக்கங்கள் கூடப் போதாது. அவ்வித நிலையில் செய்தித் தேர்வு மிக அவசியம். எது தேவையில்லை என்று கழித்துக் கட்டத் தெரிந்திருக்க வேண்டும். உடனுக்குடன் அவற்றைக் - அண்டா சைஸ் கூடையில் உடனுக்குடன் போட்டாக வேண்டும். அதாவது அடிப்படையில் கூறுவதானால் எது தேவையில்லை என்று முடிவு எடுத்தால் மேஜை சுத்தமாக இருக்க வழியுண்டு. இதையே மேலும் எளிதுபடுத்திக் கூறுவதானால் எது முக்கியம் என்ற தேர்வு அதிலும் உடனடியாக முடிவு எடுப்பது உதவுவதாக இருக்கலாம். இதையே எதிர்மறையாகக் கூறுவதானால் எதை உடனே அப்போதே கழித்துக் கட்டுவது என்று முடிவு எடுக்கப் பழகிக் கொண்டால் அது உதவுவதாக இருக்கும் என்பது நான் அனுபவ மூலமாகக் கற்றுக் கொண்டதாகும். இன்னொன்று delegation.முக்கியமல்லாத பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பது.அதாவது முக்கியமற்றவை உங்கள் மேஜைக்கு வராமல் ஏற்பாடு செய்து கொள்வது. மேஜையில் தேவையில்லாமல் பலவும் குவிவதை இதுவும் தவிர்க்க உதவலாம்.இப்ப்டியான முறைகள் எல்லாத் தொழில்களுக்கும் பொருந்துமா என்று என்னால் கூற இயலாது. ராமதுரை
Whenever similar thoughts offend I go to this piece that came in the Economist some years back. And that feeling goes away.
ReplyDeletehttp://www.economist.com/node/1489224
Some excerpts if you are not a subscriber:
But why do people need to spread papers around on their desks? Why don't they just read their paperwork and file it? Alison Kidd, a psychologist, investigated this question while working for Hewlett-Packard Laboratories. Ms Kidd, whose new firm, The Prospectory, helps companies to use technology to develop new ideas, interviewed 12 workers about how they used information, paper and computers.
Her paper, “The Marks are on the Knowledge Worker”, draws a distinction between “knowledge workers” and other categories, such as clerical workers. Clerical workers use information—about, say, customer orders—to aid the smooth working of the company. Knowledge workers use information to change themselves. So, for instance, knowledge workers take notes not in order to store information, but because the process of note-taking helps them to learn. Once taken, notes are rarely reviewed. According to a study of research workers reported in “The Technology of Team Navigation”, a paper by Edwin Hutchins, a psychologist, while 64% kept their notes for years, 44% hardly ever referred to them.
The relationship between workers and their clutter is similar. People spread stuff over their desks not because they are too lazy to file it, but because the paper serves as a physical representation of what is going on in their heads—“a temporary holding pattern for ideas and inputs which they cannot yet categorise or even decide how they might use”, as Ms Kidd puts it. The clutter cannot be filed because it has not been categorised. By the time the worker's ideas have taken form, and the clutter could be categorised, it has served its purpose and can therefore be binned. Filing it is a waste of time.
மேஜையையே எடுத்து விட்டால் என்ன?
ReplyDelete//உங்கள் மேஜையை ஒழுங்காக எப்படி வைத்துக்கொள்வது என்று யாராவது புத்தகம் எழுதித்தர விரும்புகிறீர்களா?/
ReplyDeleteயாரேனும் எழுதினால், புத்தகம் வாங்கி படிக்க ரெடியாகிவிடுகிறேன் :) [புத்தகம் படிக்கிற டேபிளை முதல்ல சரி செய்யணும் எல்லா புக்கும் படிச்சு - பாதியில கவிழ்ந்து கிடக்குது]
அன்பின் திரு பத்ரி அவர்களுக்கு
ReplyDeleteநீங்கள் டேவிட் ஆலனின் Getting Things Done படித்திருப்பீர்கள். மேலும் சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஜோகிந்தர் சிங் You Can புத்தகமும் படிச்சிருப்பீங்க
Clutter Management குறித்து இந்த இரண்டு புக்ஸ் நல்லாருக்கும்
மௌளீ
9840656627
நான் ரெடி
ReplyDeleteNo big difference between your and mine desk & System Desktop , I do the same mistake as you do :(
ReplyDeleteHope we both sail in same boat, do share if you find some good idea :D
மேஜை அப்படி இருந்தால் தான் அழகு. நாம் வேலை செய்வது பிறருக்கு தெரிய வேண்டாமா?
ReplyDeleteஅவ்வப்போது சுத்தம் செய்வதும் ஒரு வேலை தானே?
என் அலுவலக / வீட்டு மேஜையும் கணினி டெஸ்க்டாப்பும் குப்பைக்கூளங்களாகவே இருக்கின்றன. அதைப் பெருமையாக நினைத்து என்னை நானே ஏமாற்றிக்கொள்ள ஆரம்பித்துப் பல காலமாகிவிட்டது.
ReplyDeleteஇதையெல்லாம் ஒழுங்குபடுத்தினால் நான் தேடுவது சட்டென்று கிடைக்காது என்று ஒரு பிரம்மை வேறு. இந்த விஷயத்தில் நான் தேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன்!
யாராச்சும் புத்தகம் எழுதினால் நிச்சயம் வாங்கிப் படிப்பேன். பின்பற்றுவேனா தெரியாது. எனக்கென்னவோ இது தீர்க்கமுடியாத மனத்தடையாகத் தோன்றுகிறது.
- என். சொக்கன்,
பெங்களூரு.
குப்பையில் இருந்து வைரம் கிடைக்கும் .
ReplyDeleteசிதறிகிடக்காத பூக்களை கொண்ட தோட்டம் செயற்கையானது
இதற்கெல்லாம் entropy தான் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/therm/entrop.html#e3
ReplyDeleteஆனால் அப்படி இல்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். entropyயை முழுவதும் புரிந்துகொள்ள எனக்கு அறிவு போதவில்லை என்றே நினைக்கிறேன்.
Dear badri,
ReplyDeletehope doing well.wellcome to erode book fair.don't miss curd!!
மீண்டும் ராமதுரை எழுதியது.
ReplyDeleteஇது தமாஷான சமாச்சாரம் அல்ல.பொதுவில் It is a problem of Middle Management.இவர்களுக்கு மேலே இருந்தும் இடி. கீழே இருந்தும் இடி. இதன் விளைவாக வேலையும் ஜாஸ்தி பொறுப்பும் ஜாஸ்தி. ஆகவே மேஜை ஒரே குவியலாகத் தான் இருக்கும். Top Management --CEO மாதிரி இருந்தால் பிரச்சினை வேறு.Buck stops here.என்ற கதை . எல்லாமே கடைசியாக அந்த மேஜைக்குத் தான் வந்து சேரும்.அவ்வித நிலையில் you classify. create many filters.அவ்வித நிலையில் முக்கியமானவை மட்டுமே இறுதியாக வந்து சேரும். Then create methods for disposal.இதற்கு 1 உடனடி 2. இரண்டு நாளில் 3. சுமாராக ஒரு வாரத்தில் என்று வகை பிரித்துக் கொள்ளலாம்.அரசு அலுவலகங்களில் D.dis. என்ற முறை ஒன்று முன்பு இருந்ததாக ஞாபகம். வந்த காகிதத்திலேயே பதில் எழுதி அனுப்பிவிடுவார்கள்.மேலும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அதனதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து கீழே உள்ளவர்களுக்குப் பிரித்து கொடுத்து விடலாம். குப்பை மற்றவர் மேஜைகளுக்குச் சென்றுவிடும். மேஜையில் குப்பை சேராமல் இருக்கும்படி செய்வது எளிதானதல்ல.This is an art as well a science. Management நிபுணர்களிடம் இதற்குத் தீர்வு இருக்கலாம்.
முடிவே காணமுடியாத பிரச்சினை இது.
ReplyDeleteஎனக்குத் திருமணமான தினத்திலிருந்து (51 ஆண்டுகள் ஓடிவிட்டன)தினமும் எனக்கும் என் மனைவிக்கும் ஆரம்பமான இந்த யுத்தம் இன்னும் முடிவடையேவில்லை. காலையில் அழகாக நான் அடுக்கிவைத்த புத்தகங்கள் மாலையில் நான் வரும்போது அலங்கோலமாகக் காட்சி அளிக்கும்-அன்று முதல் இன்று வரை.
வழிப்போக்கன்
Ramaduri got good point.. thanks..
ReplyDeleteDear badhri, pl do not keep book (how to keep the desk clean!!) in your desk/Table!
VS Balajee
TRY 5-S
ReplyDeleteOn a lighter note: This reminds me a story. A person wants to have a haircut and there are two neigbouring barber shops - one untidy and the other one way too neat. He chooses to walk into the former one as he believes that the later does not know his work well, hence not many customers and has all the time in the world to keep the shop clean.
ReplyDeleteOn a not so lighter note: I think we tend to keep things neat if there is a compulsion or missing the stuff is too costly(think of brushing, bathing etc). We delete unwanted emails when the mail box is full and so is the case with SMSes. So if we attach some compulsion to clearing our desks, it will work. We don't keep our cheque books or home documents or salary related papers just like that on the table as missing them is costly.
On a philosophical note: Whatever you do, the table is going to get untidy in no time. So, why bother?
//
ReplyDeleteவழிப்போக்கன் said...
முடிவே காணமுடியாத பிரச்சினை இது.
எனக்குத் திருமணமான தினத்திலிருந்து (51 ஆண்டுகள் ஓடிவிட்டன)தினமும் எனக்கும் என் மனைவிக்கும் ஆரம்பமான இந்த யுத்தம் இன்னும் முடிவடையேவில்லை. காலையில் அழகாக நான் அடுக்கிவைத்த புத்தகங்கள் மாலையில் நான் வரும்போது அலங்கோலமாகக் காட்சி அளிக்கும்-அன்று முதல் இன்று வரை.
வழிப்போக்கன்
//
//(51 ஆண்டுகள் ஓடிவிட்டன)//
//அழகாக நான் அடுக்கிவைத்த புத்தகங்கள்//
இது பதிவைவிட அதிக பிரச்சினையாக இருக்கும்.
:) :)
-விபின்
kovai
//உங்கள் மேஜையை ஒழுங்காக எப்படி வைத்துக்கொள்வது என்று யாராவது புத்தகம் எழுதித்தர விரும்புகிறீர்களா? //
ReplyDeleteசீக்கிரம் எழுதினால் அதையும் என் மேஜையில் வைத்துக்கொள்ளலாம்.
சாலமன் எழுதிய உங்கள் பதிப்பின் புத்தகத்தை நீங்களே படிக்க வில்லையா?
ReplyDelete:)
பத்ரிக்கோ வாசகர்களுக்கோ தெரியாது என்றில்லை - நான் தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.
ReplyDeleteவேலை, வேலை சம்பந்தப்பட்ட பொருட்கள் - இவை இரண்டையும் பிரித்து விடுங்கள். அதாவது, வேலையைக் குறித்துக்கொண்டு, புத்தகம், கருவிகள் போன்ற பொருட்களை அதனதன் இடத்தில் வைத்து விடுங்கள்; வேண்டும்போது எடுத்துக் கொள்ளலாம்(உரிய இடம் இல்லாவிட்டால் முதலில் இடத்தை உருவாக்குங்கள்).
குறித்துக் கொள்வதற்கு கணினி அல்லது கோப்பு உதவும். வரிசையாக வேலைகளை எழுதிக்கொண்டே வரவும். ஒரு வேலையைப் பற்றி நிறைய எழுத வேண்டுமானால், தனி காகிதத்தில் எழுதிக் கோப்பில் சேர்க்கவும்(Getting Things Done புத்தகத்தின் சுருக்கததை அதன் amazon.com பக்கத்தில் பார்க்கவும்). சரி, இவை இரண்டும் அருகில் இல்லையென்றால்? (சட்டைப்) பையில் உள்ள சிறு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு பின்னர் கணினிக்கு/கோப்புக்கு மாற்றுங்கள். செல்பேசியும் உதவும் (எழுத்து அல்லது பேச்சுப் பதிவு).
வீட்டிலும், வெளியிலும் தனித்தனி கணினி உபயோகிப்பவர்களுக்கு: Google Docs, Office Online போன்றவற்றில் எழுதிய குறிப்புகளை எந்தக் கணினியிலிருந்து வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். குறித்த நாளில் செய்ய வேண்டியதை Google Calendar-ல் பதிவு செய்தால் ஞாபகப்படுத்தும்.
முக்கியம்:
1. குறிப்புகளை தினம் புரட்டிப் பார்க்க வேண்டும். அன்றைய தினம் செய்ய வேண்டியவதைத் தனிக் காகிதத்தில்/குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். இதையும், மொத்த வேலைகளின் பட்டியலையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
2. என்னதான் குறிப்பெடுத்தாலும் திட்டமிட்டாலும், செயல்படுத்தும் திறன் வேண்டும். ஒவ்வொரு வேலையாக எடுத்துக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் (எனக்கு இதில் தான் குறைபாடு).
சிலர் இந்த மாதிரி வழிமுறைகள் ஏதுமின்றி செயல்படுவதாகத் தோன்றும் - ஆனால் ஏமாறாதீர்கள்! வெற்றி பெரும் ஒவ்வொருவரும் தம் திறமைக்கும் தேவைக்கும் பொருந்தும் வழிமுறையை வைத்திருப்பார்கள். இல்லையென்றால் வெற்றி சாத்தியமில்லை.
இதற்க்கு ஒரு எளிய வழி, மேசையின் நீள அகலத்தை குறைத்து விடுங்கள்!
ReplyDeleteஒரு பத்திரிகையாளன்(ப சே அவர்களைத்தான்!) ஒரு குப்பையைப்பற்றிகூட ஒரு அருமையான விவாதத்தை தொடங்க முடியம் என்று காட்டியிருக்கிறார் பாருங்கப்பா! இதையும் தாண்டி இவர் ஒரு ரேடியோ ஜாக்கியாக கூட வெற்றிகரமாக (கவனிக்க-- வெற்றிகரமாக) இயங்க முடியும் என்று தோன்றுகிறது!ஓர் சின்ன செய்தி மூலமாக பலரை திருப்பி எவ்வளவு கருத்துகளை வாங்கி விட்டார் பாருங்கள்!! -ரோமிங் ராமன்
ReplyDeleteநான் அதிசயப்பட்டு பின் ஆராதிக்க ஆரம்பித்தது எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவனின் அறையும் அதைவிட முக்கியமாக அவரது மேசையும். லேசாக மனம் சரியில்லாவிட்டாலும் அவர் மேசைமுன் சில நொடிகள் அமர்ந்து (அவரிடம் சொல்லாமலே) ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தாரை எரிச்சல்படுத்தும்- வியாதி என்று திட்டவைக்கும்- என் ஒழுங்குக்கு அவரே இன்ஸ்பிரேஷன். அவரிடம் 'நேர்த்தி'க்கடன் பட்டிருப்பதைச் சொன்னதில்லை; இதைவிட சொல்லத் தகுதியான இடம் வேறில்லை. புத்தகம் எழுத அவரையே அணுகலாம்.
ReplyDelete-- பத்மப்ரியா.
//உங்கள் மேஜையை ஒழுங்காக வைத்துக்கொள்வது எப்படி என்று யாராவது ஒரு புத்தகம் எழுதித்தர விரும்புகிறீர்களா?//
ReplyDeleteJ.S.Ragavan will be the best choice to write this book.
Garfield says:
ReplyDeleteA Clean desk is a sign of a Sick mind.
//
ReplyDeleteஉங்கள் மேஜையை ஒழுங்காக வைத்துக்கொள்வது எப்படி என்று யாராவது ஒரு புத்தகம் எழுதித்தர விரும்புகிறீர்களா?
//
அப்படி எழுதுபவரது மேஜை சுத்தம் பற்றி எனக்கு எக்கச்செக்க சந்தேகம் இருக்கும்.
பத்மப்ரியா மிகச்சரியாக சொல்லி உள்ளார்.,
ReplyDelete// ஜே.எஸ்.ராகவனின் அறையும் அதைவிட முக்கியமாக அவரது மேசையும்// - ...
அவரை சந்தித்தபோது(ஒரே முறை)அவர் அறையை நான் பார்த்ததும் சொன்னது (அவருக்கு நினைவிருக்கிறதா என்று தெரியாது!)- "இங்கு சில வினாடிகள் இருந்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது சார்".. அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் !!