அணு உலையைக் கருத்திரீதியாக எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிலர் இல்லாத பொல்லாத கருத்துகளை அறிவியல் தீவிரத் தன்மையோடு கொடுத்து, ஒன்றும் புரியாதவர்களைக் குழப்பப் பார்க்கிறார்கள்.
ஞாநி, ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு என்ற சிறு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.
அணுக்கள் பிளக்கும்போதோ சேரும்போது மூன்றுவகைக் கதிர்வீச்சுகள் நிகழ்கின்றன. ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்கள். இதில் ஆல்ஃபா கதிர்கள் என்பவை ஹீலியம் அணுவின் உட்கரு (அதாவது இரண்டு புரோட்டான், இரண்டு நியூட்ரான் சேர்ந்த கனமான கோலிகுண்டு). பீட்டா கதிர்கள் என்பவை பெரும்பாலும் எலெக்ட்ரான்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். காமா கதிர்கள், எடையற்ற மின்காந்த அலைகள்.
எல்லாத் தனிமங்களின் எல்லா ஐசோடோப்புகளும் கதிர்வீச்சை வெளியிடாது. ஒரு சில ஐசோடோப்புகள் மட்டுமே வெளியிடும்.
ஹைட்ரஜனை எடுத்துக்கொண்டால் அதற்கு மூன்று ஐசோடோப்புகள் உள்ளன. அதிகம் காணப்படும் புரோட்டியம் எனப்படும் ஒரே ஒரு புரோட்டான் கொண்டது; டியூட்டிரியம் எனப்படும் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்டது, டிரிட்டியம் எனப்படும் ஒரு புரோட்டான், இரு நியூட்ரான்கள் கொண்டது.
சாதா தண்ணீரில் புரோட்டியம்தான் அதிகம் இருக்கும். கன நீரில், புரோட்டியத்துக்கு பதில் கிட்டத்தட்ட 100% டியூட்டிரியம் இருக்கும். இதனால் கனநீரின் அடர்த்தி, சாதா நீரின் அடர்த்தியைவிட சுமார் 11% அதிகமாக இருக்கும். அவ்வளவுதான்.
இந்த டியூட்டிரியம் நிலையானது. அதாவது கதிர்வீச்சை வெளியிடாதது. கனநீரைக் கொஞ்சமாக உட்கொண்டால் மனிதர்களுக்கு ஒன்றும் ஆகாது. கனநீர் கலந்து பெயிண்ட் அடித்தால் சத்தியமாக சுவற்றுக்கு ஒன்றுமே ஆகாது. விக்கிபீடியாவில் பார்த்தீர்கள் என்றால், உடல் எடையில் உள்ள நீரில் சுமார் 25% அல்லது அதற்குமேல் கனநீர் போனால்தான் உடலுக்குப் பிரச்னை ஏற்படும் என்று போட்டிருப்பார்கள். ஒரு டம்ளர் குடித்தாலோ, அதில் பல் தேய்த்தாலோ ஒரு வித்தியாசமும் ஏற்படாது.
ஞாநி எழுதுகிறார்:
மேலே கனநீர் பற்றி உள்ளது, டிரிட்டியம் நீர் பற்றி உள்ளது. இரண்டையும் தனித்தனியாகப் பார்ப்போம்.
மாதோலாலுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. ஆனால் கனநீரை சும்மா யார்வேண்டுமானாலும் பயன்படுத்துமாறு வைத்திருந்த அதிகாரிகளை உதைக்கவேண்டும். பணத்தை இப்படியா வீணடிப்பது? அந்தச் சுவற்றில் கதிர்வீச்சும் இருக்காது, மண்ணாங்கட்டியும் இருக்காது. அதை அதிகாரிகள் நிஜமாகவே சுரண்டச் சொன்னார்கள் என்றால் அவர்கள் தலையில் மூளையும் இல்லை என்று சொல்லலாம். மேலும் பணம் வேஸ்ட்.
ஞாநி, அப்துல் கலாமை கனநீரால் முகம் கழுவச் சொல்கிறார். அதனால் கலாமுக்கு ஆபத்தில்லை. யுரேனியம் படுக்கையில் படுக்கச் சொல்கிறார். அது பாவம். தவறு.
அடுத்து டிரிட்டியம் நீர். டிரிட்டியம் கதிரியக்கத் தன்மை கொண்டது. ஹீலியம் ஐசோடோப்பாக மாறி, பீட்டா கதிர்களை வெளியிடும். பீட்டா கதிர்கள் நம் மேல் பட்டால் அதனால் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை. ஆல்ஃபா கதிர்கள் என்றால் வேறு விஷயம். ஆனால் உட்கொண்டு, வயிற்றினுள் கதிரியக்கம் ஏற்பட்டால் அதனால் உடல் செல்கள் பாதிக்கப்படும். எனவே டிரிட்டியம் நீரை உட்கொண்டால் அதனால் கட்டாயம் பிரச்னை ஏற்படும். எனவே இது நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் கொஞ்சம் டிரிட்டியம் உள்ளே போனாலும் உயிரெல்லாம் போய்விடாது. இரண்டு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிடலாம்.

ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க வந்த மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே காஸ்ட்லியான பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009-ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
மேலே கனநீர் பற்றி உள்ளது, டிரிட்டியம் நீர் பற்றி உள்ளது. இரண்டையும் தனித்தனியாகப் பார்ப்போம்.
மாதோலாலுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. ஆனால் கனநீரை சும்மா யார்வேண்டுமானாலும் பயன்படுத்துமாறு வைத்திருந்த அதிகாரிகளை உதைக்கவேண்டும். பணத்தை இப்படியா வீணடிப்பது? அந்தச் சுவற்றில் கதிர்வீச்சும் இருக்காது, மண்ணாங்கட்டியும் இருக்காது. அதை அதிகாரிகள் நிஜமாகவே சுரண்டச் சொன்னார்கள் என்றால் அவர்கள் தலையில் மூளையும் இல்லை என்று சொல்லலாம். மேலும் பணம் வேஸ்ட்.
ஞாநி, அப்துல் கலாமை கனநீரால் முகம் கழுவச் சொல்கிறார். அதனால் கலாமுக்கு ஆபத்தில்லை. யுரேனியம் படுக்கையில் படுக்கச் சொல்கிறார். அது பாவம். தவறு.
அடுத்து டிரிட்டியம் நீர். டிரிட்டியம் கதிரியக்கத் தன்மை கொண்டது. ஹீலியம் ஐசோடோப்பாக மாறி, பீட்டா கதிர்களை வெளியிடும். பீட்டா கதிர்கள் நம் மேல் பட்டால் அதனால் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை. ஆல்ஃபா கதிர்கள் என்றால் வேறு விஷயம். ஆனால் உட்கொண்டு, வயிற்றினுள் கதிரியக்கம் ஏற்பட்டால் அதனால் உடல் செல்கள் பாதிக்கப்படும். எனவே டிரிட்டியம் நீரை உட்கொண்டால் அதனால் கட்டாயம் பிரச்னை ஏற்படும். எனவே இது நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் கொஞ்சம் டிரிட்டியம் உள்ளே போனாலும் உயிரெல்லாம் போய்விடாது. இரண்டு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிடலாம்.
Sir Matter Super sir.
ReplyDeleteDr.P.S.
அதுசரி, எதிர்த் தரப்பார் 'கூடங்குளம் வந்தால் தமிழ்நாட்டுக்கு 1000 மெ.வாட் கிடைக்கும், அணு மின்சாரத்தின் விலை வெறும் யூனிட்டுக்கு 3 ரூபாய், 25 வருடமாகக் கூடங்குளத்துக்கு எதிர்ப்பில்லை, கல்பாக்கத்தில் மீன்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை, உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது (எத்தனை தடவைதான் சொல்வார்கள்), அணுவுலையில் விபத்து நேர வாய்ப்பே இல்லை (!)' என்றெல்லாம் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளோடு ஒப்பிடும்போது ஞாநி எழுதியிருப்பது ஒன்றுமேயில்லை. மேலும் மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது என்றுதானே எழுதியிருக்கிறார்? அவர் இறந்ததாகவோ, பாதிக்கப்பட்டதாகவோ சொல்லவில்லையே!
ReplyDeleteஞாநியும் இங்கு பின்னூட்டம் வழியாகப் பதில் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.
சரவணன்
நான் சொல்லாத பொய்களுக்கு என்னை ஜவாப்தாரி ஆக்காதீர்கள்.
Deleteஎன் கருத்து தெளிவானது. கனநீர் மனிதர்களுக்குப் பெரும் ஆபத்தைத் தந்துவிடப் போவதில்லை. அதை நீக்கி விட்டு, பிற பயங்கரங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம். அவ்வளவுதான். மற்றபடி அந்த நூலில் உள்ள பிறவற்றைப் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.
இப்படி அறிவியல்பூர்வமாக எழுதுவதைவிட இப்போது முக்கியமானது என்று நான் கருதுவது, அணு உலை தேவை என்ற உங்கள் நிலைப்பாட்டின் தற்போதைய நிலை, அரசு என்னதான் செய்யமுடியும் என்று நீங்கள் நினைப்பது, வெளிநாட்டுப் பணம் வந்தது என்பது உண்மையாக இருக்குமா பொய்யாக இருக்குமா, வந்தாலும் தப்பில்லையா அல்லது தப்பா, அணு உலை வந்தால் அங்குள்ள மக்கள் உயிரே போய்விடும் என்பது உண்மையா மோசடியா என்பன போன்ற நேரடியான கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லும் கட்டுரையை நீங்கள் எழுதுவதுதான்.
ReplyDeleteஇதையெல்லாம் எழுதி மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? அறிவியல் நிலைப்பாட்டிலிருந்தும் தரவுகளிலிருந்தும் எழுதினால் நாளைக்கு உண்மை நிலைக்கலாம்.
Deleteஇதில் அரசுத் தரப்பின்மீது எனக்கு மிக அதிகக் கோபம் இருக்கிறது. போராட்டக்காரர்களைத் தன்மையுடன் அணுகி, பொதுமக்களுக்கு விளக்கங்களைக் கொடுத்து நியாயமாக நடந்துகொண்டிருந்தால் தார்மிகம் அவர்களிடம் இருக்கும். முரட்டுத்தனம், மூடுமந்திரம், பிடிவாதம் இதுமட்டும்தான் அரசிடம் உள்ளது.
அரசு முதலில் கள ஆய்வு அறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை ஆகியவற்றை இணையத்தில் வெளியிட வேண்டும். அப்படிச் செய்யவேண்டும் என்பது சட்டப்படியான தேவை. இதைச் செய்யாமல் வெறுமனே 'அணு உலை பாதுகாப்பானதுதான்' என்ற ஒற்றை வரியை மீண்டும் மீண்டும் சொல்வதில் அர்த்தமே இல்லை.
Deleteசரவணன்
அடிப்படை பிரச்சினை அணு உலை பாதுகாப்பு ஆனதா இல்லை பாதுகாப்பு இல்லாததா எனபது அல்ல
ReplyDeleteஎங்களுக்கு வேண்டாம் என்று ஒதுக்கும் உரிமை மக்களுக்கு உண்டா இல்லையா எனபது தான்
கான்சருக்கு chemotherapy எடுத்தால் முடி எல்லாம் கொட்டி விடும்,அறுவை சிகிச்சை செய்தால் இறப்பதற்கு ஒரு சதவீத வாய்ப்பு ஆனால் குணமாவதற்கு 99 சதவீத வாய்ப்பு இருந்தாலும் , இரண்டையும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சாய் பாபா ஆஸ்ரமதிற்கு செல்லும் உரிமை,அல்லது ஆயுர்வேத மருத்துவம் செய்து கொள்ளும் உரிமை நோயாளிக்கு உண்டா இல்லையா
அதே தான் இதுவும்.எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் உரிமை மக்களுக்கு உண்டு.
நாய்க்கடிக்கு முன்பு இருந்த ஊசியில் ஆயிரத்தில் ஒருத்தருக்கு பக்கவாதம் வர வாய்ப்புண்டு.மிகவும் விலை குறைவானது ,ஆனால் அதை போல பல மடங்கு விலை அதிகமுள்ள ஊசி தானே இப்போது பயன்படுத்தபடுகிறது.
இருவது ரூபாயில் ஊசி போட முடியும் ஆனால் ஏன் 2000 ரூபாய் ஊசி போடப்படுகிறது அது ஏன்
சோலார் அதிக காசாகும் எனபது ஒரு பொருட்டாக பேசப்படுவது ஆச்சரியம் தான்
மருத்துவ துறையை மாற்றியமைத்த பென்சில்லின் போட்டால் நூற்றில் ஒருவருக்கு ஒவ்வோமை வந்து உயிருக்கே கூட ஆபத்தாகலாம்.அதனால் ஒரு ரூபாய்க்கு கிடைக்க கூடிய அதை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை(வேறு வழி இல்லை என்றால் தான் கையெழுத்து எல்லாம் வாங்கி கொண்டு,அதன் ஒவ்வோமை வாய்ப்புகளை பற்றி விளக்கிய பிறகு).மாறாக 400 ரூபாய் மருந்து தான் பயன்படுத்தபடுகிறது
24 மணி நேர மின்சாரம் எனபது அடிப்படை தேவைகளில் ஒன்று என்று நினைப்பதே தவறு தான்.அது மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது
அத்தியாவசிய இடங்களான பொருட்கள் கெடாமல் இருக்க குளிரூட்டும் இடங்கள்,மருத்துவமனைகள் ,பொது மக்கள் கூடும் ரயில் நிலையங்கள்,விமான நிலையங்கள்,தொழில் நிறுவனங்கள் தவிர்த்து மக்கள் மின்வெட்டிற்கு பழகி கொள்வது அவர்களுக்கும் நல்லது சுற்று சூழலுக்கும் நல்லது
இன்னொன்று, இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது கனநீர் ஆபத்தானதா இல்லையா என்பதல்ல - ஒரு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி வாளியில் மொண்டுகொள்கிற அளவுக்கு எவ்வளவு அலட்சியமாகவும், பாதுகாப்பின்றியும் அதை வைத்திருந்தார்கள் என்பதே அதைவிட முக்கியமாகப் பார்க்கவேண்டிய விஷயம். இதே அலட்சியமும், மெத்தனமும் அணுக்கழிவுகளைக் கையாளுவதிலும் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ReplyDelete40 பேர் இறந்த பிறகே ஒரு பட்டாசுத் தொழிற்சாலை விதிமுறைகளைப் பின்பற்றாமல் காலம்காலமாக இயங்கிவந்தது தெரியவருகிறது; ஒரு சிறுவன் பலியான பிறகுதான் அனுமதியில்லாமல் ஒரு பள்ளி நீச்சல்குளம் வைத்திருந்தது தெரிகிறது; ஒரு சிறுமி இறந்த பிறகுதான் பள்ளிப் பேருந்து ஓட்டையுடனேயே ஓடிவந்தது தெரிகிறது. இதேபோல உலை உருகிய பின்னரே அதை அணைக்கப் போதுமான நல்ல தண்ணீர் இல்லை என்றோ அல்லது இப்படியான வேறு விஷயமோ தெரியவந்தால் என்ன ஆவது?
அணு உலையைப் முழுப் பாதுகாப்போடு நடத்துவது சாத்தியமே என்று ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும், நிச்சயம் இந்தியாவில், நமது இரத்தத்தில் ஊறிய அலட்சிய மனோபாவத்துக்கு, கண்டிப்பாக ஒத்துவராது!
சரவணன்
சரியான தெளிவான கருத்து
மிக மிக குறைந்த அளவிலான அணுகழிவுகளை அலட்சியமாக டெல்லி பலகலைக்கழகம் கையாண்ட நிகழ்வு
http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Delhi-university-probed-over-radioactive-waste/Article1-537681.aspx
Delhi University (DU) buried radioactive material on its campus, amidst an escalating scandal over its handling of toxic waste. Police on Thursday blamed DU for dumping an irradiation machine containing
related stories
* UN atomic agency probing radiation leak
* DU rejects claims of uranium being 'dumped' in the campus
* IAEA asks India to account for radioactive material accident
* DU's Cobalt mess-up just one of 16 cases in India
* DU teachers demand VC's resignation over toxic cobalt
radioactive Cobalt-60, which ended up in scrapyard in New Delhi, where it killed a 35-year-old worker and put seven others in hospital.
இதே கூடங்குளத்தில் பத்து புலிகள் இருந்திருந்தால் புலியை பாதுகாக்கிறேன் என்று அனைத்து ஆலைகளையும் உச்ச நீதிமன்றம் மூடி விடும்
இருப்பது மனிதர்கள் என்பதால் சிலர் செத்தால் என்ன பெரிய நட்டம் என்ற மனநிலை முக்கால்வாசி மனிதர்களுக்கு உள்ளது
பூவண்ணன், புலியை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? இந்தியாவில் வெறும் 1500 புலிகளே எஞ்சியிருக்கும் நிலையில் இருப்பவற்றை எப்பாடுபட்டாவது காக்க வேண்டிய அவசர அவசியம் உள்ளது. இப்படியும் கேட்கலாமே - சரணாலயங்களில் டூரிஸ்டுகளை நம்பி வியாபாரம் செய்பவர்கள், டிரைவர்கள் நடத்தும் போராட்டத்தை மட்டும் அரசியல்வாதிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஆதரிப்பது ஏன்? இடிந்தகரை மக்களிடம் மட்டும் 'உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது, எனவே போராட்டத்தை நிறுத்துங்கள்,' என்று அதே அரசியல்வாதிகள் சொல்வது ஏன்?
Deleteசரவணன்
சரவணன் பல அரிய தவளை இனங்கள் கூட தான் அருகி அழிந்து வருகின்றன
Deleteஅவற்றை ஜூவில் வைத்து பாதுகாத்து பெருக்குங்கள்
புலிக்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் துன்புறுத்தபடுவதை நேரடியாக பார்த்தவன் நான்
ஜிம் corbett பூங்காவில் சில நாட்கள் வனத்துறை அதிகாரியுடன் தங்கி இருக்கிறேன்
அவர் போன்ற அதிகாரிகளில் வந்குஜ்ஜர் எனப்படும் காடுகளில் வசிக்கும் சமூகம் இருக்கும் வரை புலிகளை காப்பாற்ற முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் அதிகம்
காடுகளுக்குள் இடம் மாறி வசிப்பவர்கள் அவர்கள்.அவர்களுக்கு ரிஷிகேஷ் நதி ஓரத்தில் சில எதற்கும் உதவாத இடங்களை ஒதுக்கி கொடுத்து விட்டு போக சொல்லி துன்புறுத்தும் வேலைகள் பல ஆண்டுகளாக நடக்கிறது
அவர்களில் சிலருக்கு பாஸ் கொடுத்து விட்டு அது இருந்தால் தான் நடமாட முடியும் என்று விதிகளை ஏற்படுத்தி விட்டார்கள்.அந்த பாஸ் வாங்குவதையும் குதிரை கொம்பு ஆக்கி விட்டார்கள்
விடிகாலையில் ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் பல கால்நடைகளுடன் காட்டில் செல்வதை பார்க்கலாம்.அப்படியே பழகியவர்கள் அவர்கள்
அவர்களை துன்புறுத்த தான் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பயன்படுகின்றன
மக்களை விட இங்கு புலிகளுக்கு தான் மதிப்பு
புலிக்காக வருத்தப்படும் உள்ளங்கள் இங்கே அணு உலைக்காக குதிப்பது தான் விசித்திரம்
இப்போது அந்தமான் தீவில் நாலே நாலு வெள்ளை புலிகள் இருப்பது தெரிந்தால் அங்கிருக்கும் பழங்குடிகளை காலி செய்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகள் நடப்பது சரியா
புலி கொட்டை நோய்களை குணமாக்கும் என்று அவன் நம்பினால் அவனை சுட்டாவது புலியை காப்பாற்றுவோம் ஆனால் மாட்டு மூத்திரம் நல்லது என்ற சிலர் நம்பிக்கைகாக பல கோடியை இறைத்து ஆராய்ச்சி செய்வோம்.இது தான் இந்திய சனநாயகம்
ஹரன், பத்ரி எழுதுவது சரியே. இங்கு படித்தவர்களுக்குக் கூட இது குறித்த அறிவு இல்லை என்பதால், அறிவியல் பூர்வமாக பாடம் எடுப்பதில் தவறில்லை. அறிவியல் கட்டுரைகள் போரடிக்குதோ..... அரசு சார்பாக இதைச் செய்வோம், இதை செய்து தர முடியாது என பத்ரி எப்படி சொல்ல முடியும்? ஆகையால், பத்ரி யுரேனியும் பற்றியும், nuclear enegry பற்றியும் அவசியம் எழுத வேண்டும். அது nuclear energy பற்றி போலி பரப்புரை செய்பவர்களை அடையாளம் காணவாவது உதவும்.
ReplyDeleteசேசாத்திாிகள் எழுத ஆரம்பித்தால் அது அறிவியல்புா்வமானது! அணுஉலை எவ்வளவு ஆபத்தானது என்று எவ்வளவு அறிவியல்ாீதியான புத்தகங்களும் கட்டுரைகளும் வந்திருக்கிறது அதுவெல்லாம் தொியாத இந்த Anonymous களுக்கு சேசாத்திாிகள் எழுதுவதில் மட்டும் அறிவியல் பீறிட்டுக் கிளம்புதாக்கும். இம்புட்டு நாளும் இந்த அறிவு ஊத்து எங்க அமுங்கி கிடந்தது. எப்பவெல்லாம் விளிம்புநிலை மக்கள் போராட ஆரம்பிக்கிறாங்களோ அப்பவெல்லாம் இந்த சேசாத்திாிகளுக்கு பொசுபொசுன்னு கிளம்பிவிடும். முத்துகிட்டிணனும், ஞாநியும் பொஸ்தகம் எழுதி எம்புட்டு நாளாச்சு? எல்லாம் பொச்சுக்காப்பு. மீன்பிடிக்கிற பயலுகலெல்லாம் போராடுறானுகளேன்னு. இன்னும் பாடம் நடத்துற இடத்திலேயே இருக்காம கீழ ஒக்காந்து கேக்கவும் கத்துக்கங்க. இல்லைன்னா சொல்லிக்கொடுப்போம்.
ReplyDelete