Wednesday, September 12, 2012

உயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்?

முத்துக்கிருஷ்ணனின் புத்தகத்தில்,
உலகம் முழுவதும் யுரேனிய சுரங்கங்களில் வேலை செய்பவர்களில் 50% பேர் புற்றுநோய் தாக்கப்பட்டு இறந்துபோகின்றனர். ஆனால் இந்தியாவின் ஜாதுகுடாவில் 95% பேர் இந்தியாவை ஒளிரவைக்க மரணத்தை முத்தமிடுகின்றனர். (பக்கம் 20)
ஆதாரம் ஏதும் குறிப்பிடவில்லை. யுரேனியச் சுரங்கத்தில் கதிர்வீச்சு ரேடான் வாயு வெளியாகும். இதனால் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவும் சுரங்கத்தில் வேலை செய்பவர் புகை பிடிப்பவராகவும் இருக்கும்பட்சத்தில் புற்றுநோய் அதிகம் நிகழ்கிறது. உலகின் யுரேனியச் சுரங்கங்களில் ரேடான் வாயுவை வெளியேற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டு, பல்வேறு ஐ.நா அமைப்புகளின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் புற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை. 50% சாவு என்பது முழுப் பொய்.

நிற்க. சர்வதேசத் தரத்துடன் ஒப்பிடும்போது ஜாதுகுடாவில் நிலைமை மோசமாக இருக்கலாம். இந்திய தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கீழ்மட்ட ஊழியர்களை நடத்துவது சரியான முறையே அல்ல. அதுவும் படிக்காத, பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களை ஈ, எறும்பைப்போலத்தான் நடத்துவார்கள். ஆனாலும் 95% இறப்பு என்பதெல்லாம் சரியே அல்ல. இதற்கும் எந்த ஆதாரமும் சொல்லப்படவில்லை.

ஜாதுகுடா பற்றிய ஆவணப்படம் ஒன்றை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதனைப் பார்த்துவிட்டுப் பின்னர் அதைப்பற்றியும் எழுதுகிறேன்.

7 comments:

  1. சுரங்கம் என்றாலே ஆபத்தான வேலைதான். நிலக்கரி ஆகட்டும், அமெரிக்கா ஆகட்டும் எங்கும் பாதுகாப்பானதும், பத்திரமானதுமான சுரங்க வேலை என்பது கிடையாது.

    ReplyDelete
  2. நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் பலர் நுரையிரல் பாதிப்புக்கு ஆளாவது உலகம் அறியாததா? மொதளாளித்துவ நாடுகளில் பாதுகாப்பானதும், பத்திரமானதுமான சுரங்க வேலை என்பது கிடையாது என கூறும் தோழர்கள் சினாவில் பாதுகாப்பானதும், பத்திரமானதுமானது சுரங்க வேலை என்று கூற இயலுமா? அதனால் அனைத்து நிலக்கரி சுரங்கத்தினையும் முட சொல்வது சரியா? அதுபோல் சில அத்தியாவசிய தேவைக்கு யுரேனியச் சுரங்கத்தில் கதிர்வீச்சு ரேடான் வாயு வெளியாகும். இதனால் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவும் சுரங்கத்தில் வேலை செய்பவர் புகை பிடிப்பவராகவும் இருக்கும்பட்சத்தில் புற்றுநோய் அதிகம் நிகழ்கிறது. உலகின் யுரேனியச் சுரங்கங்களில் ரேடான் வாயுவை வெளியேற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டு, பல்வேறு ஐ.நா அமைப்புகளின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் புற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில் யுரேனியச் சுரங்கத்தினை திறக்கலாம்.

    ReplyDelete
  3. "யுரேனியச் சுரங்கத்தில் கதிர்வீச்சு ரேடான் வாயு வெளியாகும். இதனால் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவும் சுரங்கத்தில் வேலை செய்பவர் புகை பிடிப்பவராகவும் இருக்கும்பட்சத்தில் புற்றுநோய் அதிகம் நிகழ்கிறது. உலகின் யுரேனியச் சுரங்கங்களில் ரேடான் வாயுவை வெளியேற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டு, பல்வேறு ஐ.நா அமைப்புகளின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் புற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை"
    ஆபத்தான வேலைதான். நிலக்கரி சுரங்கம் என்றாலே, எங்கும் பாதுகாப்பானதும், பத்திரமானதுமான வேலை என்பது கிடையாது
    நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் பலர் நுரையிரல் பாதிப்பால் உயிர் இழப்பு காரணமாகிறது
    அனைத்து சுரங்கத்தினையும் முட முன்மாதிரியாக சீனா முன்வரவேண்டும் என தோழர்கள் கூவுவார்களா?

    ReplyDelete
  4. சினா செய்தாலும் தவறு தவறு தானே யாரும் அதனை நியாய படுத்த இயலாது, முத்துக்கிருஷ்ணன் இதற்கு முன்பு மிக விரிவாக சினா ஆப்பிரிக்க நாடுகளை எப்படி கடன் வலையில் சிக்க வைத்து அங்குள்ள இயற்கை வளங்களை வெட்டி எடுக்கிறது, கொஞ்சம் வாசித்து விட்டு உங்கள் தோழர் புராணத்தை பாடுங்கள்.

    ReplyDelete
  5. ஐயா பத்ரி அவர்களே, ஆதாரம் இல்லை ஆதாரம் இல்லை என இத்தனை முறை கூவுகிறீர்களே, முத்துக்கிருஷ்ணனின் நூலின் கடைசி மூன்று பக்கங்களில் குறிப்பிட்டுள்ள 'உதவிய நூல்கள் கட்டுரைகள்' என்பவை அனைத்தையும் சரிபார்த்து விட்டுத்தான் கூறுகிறீர்களா?

    ReplyDelete
  6. ஐயா Love Kills அவர்களே,

    முத்துகிருஷ்ணன் கொடுத்துள்ள 43 ஆதாரங்களில் (கடைசியில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ள டாக்டர்.ரமேஷ், கோபால் அவர்களது புத்தகங்களை ஆதாரங்கள் என்று கொள்ளவியலாது) யுரேனியம் சுரங்கங்களைப் பற்றிய ஆதாரங்களை பார்ப்போம்.

    எம். வி. ரமணா என்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் தொகுத்த ஒரு புத்தகத்தின் பெயர், “Prisoners of the Nuclear Dream” (http://books.google.ca/books/about/Prisoners_Of_The_Nuclear_Dream.html?id=73_zmsMEpLcC&redir_esc=y)
    முத்துகிருஷ்ணனின் 43 "ஆதாரங்களில்" பெரும்பாலானவை இந்த புத்தகத்திலுள்ள கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் முத்துகிருஷ்ணன் நேரடியாக இந்த புத்தகத்தை குறிப்பிடவில்லை.

    டவுண்-டு-எர்த் பத்திரிகையில் ஜூன் 15, 1999 அன்று வெளியான "எ டிஃபார்ம்ட் எக்ஸிஸ்டன்ஸ்" என்ற கட்டுரையில் ராவத்பாடவிலும், ஜாதுகுடாவிலும் கதிர்வீச்சினால் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதாக சங்கமித்ரா, சுரேந்திரா கடேகர் ஆகியோரது ஆய்வுகள் சொல்வதாக தெரிவிக்கிறது. அந்த கட்டுரையில் யுரேனியச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களில் 95% பேர் இறப்பதாக குறிப்பிடப்படவில்லை.
    A Deformed Existence,” Down to Earth (15 June 1999);( http://www.downtoearth.org.in/content/deformed-existence)

    அடுத்தது காப்பர் மற்றும் யுரேனிய சுரங்கப் பகுதிகளில் ரேடான் அளவு பற்றிய உண்மையான ஆயுவுக்கட்டுரை. தேபஷிஷ் சென்குப்தா, என்ற கரக்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் நிகழ்த்திய ஆய்வு அறிக்கை. யுரேனிய சுரங்கங்களுக்கு அருகில் ரேடான் கூடுதல் அளவில் உள்ளது என்று நிறுவியதுதான் இந்த ஆய்வின் முடிவு. இதிலும் யுரேனிய சுரங்கத் தொழிலாளார்களின் புற்றுநோய் குறித்து எந்த விவரமும் இல்லை.
    K. Singh, D. Sengupta and Rajendra Prasad, “Radon Exhalation Rate and Ura¬nium Estimation in Rock Samples from Bihar Uranium and Copper Mines using the SSNTD Technique,” Applied Radiation and Isotopes 51 (1999), pp. 107-113.
    (http://www.ncbi.nlm.nih.gov/pubmed/10376323)
    (தொடரும்)


    ReplyDelete
  7. முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ள 'உதவிய நூல்கள் / கட்டுரைகளில் 30வது கட்டுரை செப்டம்பர் 1999 ஆம் ஆண்டு Frontline இதழில் வெளியான கட்டுரை. இந்த கட்டுரையை அணு உலை எதிர்பாளார்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். ஜாதுகுடா யுரேனிய சுரங்கங்கள் எவ்வளவு தொழில்நுட்ப மேன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளன என்பதை பத்திரிகையாளர்கள் நேரில் கண்டு விரிவாக எழுதியுள்ள கட்டுரை இது. யூ.சி.ஐ.எல் நிறுவனத்தைப் பாராட்டித்தான் எழுதியிருக்கிறார்களே அன்றி வெறும் குறைகண்டு பிடித்து எழுதவில்லை.

    T. Subramaniam and Suhrid Sankar Chattopadhyay, “From Ore to Yellow Cake,” Frontline (10 September 1999), pp. 65-69.
    (http://www.frontlineonnet.com/fl1618/16180650.htm)

    ReplyDelete