உணவு பெரிய பிரச்னை இல்லை. பொதுச் சேவைகளைத் தருவதில் அரசு வெகுவாகப் பின்தங்கியுள்ளது என்றாலும் பிரச்னைகளைச் சமாளித்துவிட முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் பெருநகரங்களில் பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க அரசிகள் திட்டம் எதுவும் தீட்டுவதாகத் தெரியவில்லை.
மிகப் பெரிய சிக்கலே வீட்டு வாடகை. இதில்தான் அரசு மிகப்பெரும் கவனத்தைச் செலுத்தவேண்டும். உதாரணமாகச் சென்னையை எடுத்துக்கொண்டால், அரசு கீழ்க்கண்ட காரியத்தைச் செய்யலாம்.
சென்னையைச் சுற்றிப் பல துணை நகரங்களை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு துணை நகரத்திலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல சேர்த்து மொத்தமாக அதிகபட்சம் 10,000 வீடுகள் வரை மட்டுமே இருக்கலாம். அவற்றில் பாதி இடங்களைத் தனி நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, மீதி இடங்களில் குறைந்த விலை வீடுகளை அரசின் செலவில் கட்டவேண்டும். இதைக் கட்டித் தருவதும் தனியார்தான். இந்தக் கட்டுமானச் செலவு, நிலங்களைக் கையகப்படுத்தி அதிக விலைக்கு தனியார் டெவலப்பர்களிடம் விற்பனை செய்வதன்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடும். இந்த வீடுகளை அரசு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு மாத வாடகைக்குத் தரும். இந்த வீடுகளுக்கு எல்லாவித வசதிகளும் ஆரம்பத்திலேயே இருக்கும். சாக்கடை, கழிவுநீர், குடிநீர் இணைப்புகள், மின் இணைப்பு, இணைய இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு என அனைத்தையும் அந்தக் குடியிருப்புகளில் ஏற்படுத்திவிடலாம்.
600 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 1,500 (2013-ல்)
800 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,000
1,000 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,500
இந்த வீடுகளில் மக்கள் தங்குவது மட்டுமே அனுமதிக்கப்படும். தொழில்கள் செய்யக்கூடாது. அலுவலகங்களை நடத்தக்கூடாது. இந்தப் பகுதிகள் அனைத்தும் மெட்ரோ ரயில்கள் மூலம் இணைக்கப்படவேண்டும்.
இப்படி 30 கிளை நகரங்கள் தொடங்கப்பட்டால், மொத்தம் 3 லட்சம் வீடுகளை சென்னையைச் சுற்றி உருவாக்கலாம். அவற்றில் எளிதாக 12-15 லட்சம் மக்களைக் குடியேற்றலாம். வேண்டுமென்றால் அடுத்த வட்டத்தில் மேலும் 40-50 கிளை நகரங்களை உருவாக்கலாம். ஒரு கிளை நகரத்தில் அதிகபட்சம் 10,000 வீடுகள். இப்படி வட்டமாக விரிந்துகொண்டே போகும் நகரங்களை உருவாக்கிக்கொண்டே போகலாம். அவை உருவாக்கப்படும்போதே வேண்டிய அனைத்து வசதிகளும் கொண்ட சிறு நகரமாக, அவற்றுக்கான உள்ளாட்சி அமைப்புடனேயே அவை உருவாக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு கிளை நகரத்திலும் நூலகம், பூங்காக்கள், மருத்துவமனை, இரண்டு, மூன்று பள்ளிக்கூடங்கள், நகராட்சி அலுவலகங்கள், கடைகளுக்கான இடங்கள், சினிமா தியேட்டர், விளையாட்டு அரங்குகள், பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை இருக்கவேண்டும்.
இதேபோன்ற தேவைகள் கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களைச் சுற்றியும் ஏற்படவேண்டும். ஆனால் அவை இவ்வாறு பெரிதாக இருக்கவேண்டியதில்லை. 5,000 வீடுகள் கொண்டவையாக இருந்தாலே போதும். மாத வாடகையையும் மேலே சொன்னதிலிருந்து குறைத்துக்கொள்ளலாம். இந்த வருமானம் நேரடியாக அந்தச் சிறு நகராட்சிக்குச் சென்றுவிடும். இதனால் கணிசமான வருமானம் முதல் நாளிலிருந்தே அந்த நகராட்சிக்குக் கிடைத்துவிடும்.
அனைத்து வசதிகளும் உள்ள இம்மாதிரி நகரங்களில் வசிப்பதை மக்களும் பிரச்னையாகக் கருத மாட்டார்கள்.
மிகப் பெரிய சிக்கலே வீட்டு வாடகை. இதில்தான் அரசு மிகப்பெரும் கவனத்தைச் செலுத்தவேண்டும். உதாரணமாகச் சென்னையை எடுத்துக்கொண்டால், அரசு கீழ்க்கண்ட காரியத்தைச் செய்யலாம்.
சென்னையைச் சுற்றிப் பல துணை நகரங்களை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு துணை நகரத்திலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல சேர்த்து மொத்தமாக அதிகபட்சம் 10,000 வீடுகள் வரை மட்டுமே இருக்கலாம். அவற்றில் பாதி இடங்களைத் தனி நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, மீதி இடங்களில் குறைந்த விலை வீடுகளை அரசின் செலவில் கட்டவேண்டும். இதைக் கட்டித் தருவதும் தனியார்தான். இந்தக் கட்டுமானச் செலவு, நிலங்களைக் கையகப்படுத்தி அதிக விலைக்கு தனியார் டெவலப்பர்களிடம் விற்பனை செய்வதன்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடும். இந்த வீடுகளை அரசு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு மாத வாடகைக்குத் தரும். இந்த வீடுகளுக்கு எல்லாவித வசதிகளும் ஆரம்பத்திலேயே இருக்கும். சாக்கடை, கழிவுநீர், குடிநீர் இணைப்புகள், மின் இணைப்பு, இணைய இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு என அனைத்தையும் அந்தக் குடியிருப்புகளில் ஏற்படுத்திவிடலாம்.
600 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 1,500 (2013-ல்)
800 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,000
1,000 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,500
இந்த வீடுகளில் மக்கள் தங்குவது மட்டுமே அனுமதிக்கப்படும். தொழில்கள் செய்யக்கூடாது. அலுவலகங்களை நடத்தக்கூடாது. இந்தப் பகுதிகள் அனைத்தும் மெட்ரோ ரயில்கள் மூலம் இணைக்கப்படவேண்டும்.
இப்படி 30 கிளை நகரங்கள் தொடங்கப்பட்டால், மொத்தம் 3 லட்சம் வீடுகளை சென்னையைச் சுற்றி உருவாக்கலாம். அவற்றில் எளிதாக 12-15 லட்சம் மக்களைக் குடியேற்றலாம். வேண்டுமென்றால் அடுத்த வட்டத்தில் மேலும் 40-50 கிளை நகரங்களை உருவாக்கலாம். ஒரு கிளை நகரத்தில் அதிகபட்சம் 10,000 வீடுகள். இப்படி வட்டமாக விரிந்துகொண்டே போகும் நகரங்களை உருவாக்கிக்கொண்டே போகலாம். அவை உருவாக்கப்படும்போதே வேண்டிய அனைத்து வசதிகளும் கொண்ட சிறு நகரமாக, அவற்றுக்கான உள்ளாட்சி அமைப்புடனேயே அவை உருவாக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு கிளை நகரத்திலும் நூலகம், பூங்காக்கள், மருத்துவமனை, இரண்டு, மூன்று பள்ளிக்கூடங்கள், நகராட்சி அலுவலகங்கள், கடைகளுக்கான இடங்கள், சினிமா தியேட்டர், விளையாட்டு அரங்குகள், பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை இருக்கவேண்டும்.
இதேபோன்ற தேவைகள் கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களைச் சுற்றியும் ஏற்படவேண்டும். ஆனால் அவை இவ்வாறு பெரிதாக இருக்கவேண்டியதில்லை. 5,000 வீடுகள் கொண்டவையாக இருந்தாலே போதும். மாத வாடகையையும் மேலே சொன்னதிலிருந்து குறைத்துக்கொள்ளலாம். இந்த வருமானம் நேரடியாக அந்தச் சிறு நகராட்சிக்குச் சென்றுவிடும். இதனால் கணிசமான வருமானம் முதல் நாளிலிருந்தே அந்த நகராட்சிக்குக் கிடைத்துவிடும்.
அனைத்து வசதிகளும் உள்ள இம்மாதிரி நகரங்களில் வசிப்பதை மக்களும் பிரச்னையாகக் கருத மாட்டார்கள்.
ஒவ்வொரு நகரின் வளர்ச்சியும் அதன் வரலாற்றுத் தேவைகள், பாத்திரங்களுடேனேயே அமையும். சென்னையை எடுத்துக் கொண்டால் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் முக்கிய உற்பத்தி கேந்திரமாக செயலாற்றியது பின்னர் தொழில்மயமான சென்னையை உருவாக்குவதில் போய் முடிந்தது. கோவை, திருச்சி, தூத்துக்குடி இப்படி ஒவ்வொரு நகருக்கும் ஓர் தனி அடையாளம், வளர்ச்சிப் போக்கு உண்டு. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கும் பொருந்தும். ஆகையால் இப்படி திட்டமிட்ட மேம்பாட்டை இடைப்பட்ட காலத்தில் கொண்டு வருவது விரும்பத்தகாத விளைவுகளையே தரும்.
ReplyDeleteஇது அப்துல் கலாமிம் விசன் டாக்குமெண்ட் போல.. படிக்க நல்லா இருக்கும். ஆனா சாத்தியப்படாது.இன்றைய நிலையில் அரசியல் நடத்த பணம் ரியல் எஸ்டேட்டிலிருந்தும், அரசாங்க ஒப்பந்ததாரர்களிடமிருந்தும்தான் கிடைக்கிறது. அதன் மேல் யாரும் கை வைக்க துணிய மாட்டார்கள்.
ReplyDeleteஇதற்கு பதிலாக, எல்லா பெரிய பன்னாட்டுத் தொழிற்சாலைகளையும் சென்னைக்கு அருகிலேயே துவக்க அனுமதிப்பதை விட்டு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் துவக்க வைத்தாலேயே அந்தந்த மாவட்டங்களை விட்டு சென்னையை நோக்கி மக்கள் நகர்வதைக் கட்டுப் படுத்தலாம். ஓரளவு பிரச்சினைகளும் குறையும் அரசுக்கும் பெருமளவு சிரமங்கள் இருக்காது. இப்படி துணை நகரங்கள் அமைப்பதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. ஏராளமான விளைநிலங்கள் பாதிக்கப்படும்.
ReplyDeleteMy thoughts exactly. Just read your comment (after submitting my thoughts on similar lines). We have to do the right thing in distributing the development instead of encouraging a chennai centered policy
DeleteIsn't this more like socialist planning?
ReplyDeleteNo. City planning is well within government initiative. I am merely suggesting creating affordable housing for the poor. The rich and the middle class can buy their own property and build it as they please.
Deleteமிகக்குறைந்த பட்சம் இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எந்த பெரும் முதலீடு தேவைப்படும் தொழிலும் இல்லாமல் அதை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை நோக்கி கொண்டு செல்லவேண்டும். (கோவை, மதுரை, திருச்சி, கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களையும், தஞ்சை, தில்லை போன்ற மூன்றாம் நிலை நகரங்களையும் நாடுதல் நன்று) இதன் மூலம் அந்த நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் வளர்சி அடையும்.
ReplyDeleteஉதாரணமாக கணினி மற்றும் அது தொடர்பான சேவை நிறுவனங்களை சென்னையை விட்டே தூக்கினாலும் தப்பில்லை என்பேன் நான். தடையற்ற தரமான மின்சாரமும், தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்திக்கொடுத்தால் இவை தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் இயங்கலாம்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த பொது, ஊரிலிருந்து சென்னை (தி.நகர் பக்கம்) வந்தேன். யப்பா ... ஊருக்கு திரும்பி வரும் யோசனையை மறுபரிசீலனை செய்ய வைத்துவிடும் போலிருக்கிறது நம்மூரும் அதன் போக்குவரத்தும்.
சரியான சாலை வசதிகள் இல்லாமல் இவ்வளவு வாகன பெருக்கத்துக்கு எப்படி அனுமதி கொடுக்கிறார்கள் என்றே புரியவில்லை.
மக்கள் ஏன் பெருநகரங்களை நோக்கி போறாங்கன்னு யோசிச்சு பார்க்கூட விருப்பம் இல்லையா என்ன??? எல்லா மாவட்டத்தியேயும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி 15-25 கிமீ க்குள்ளே வேலைக்கு போயிட்டு திரும்பி வருகிற அளவுக்கு இருந்தா ஏன் நகரத்துக்கு வர்றாங்க???
ReplyDeleteநீங்க சொல்லுறது ரஷ்யாவில ஒரு நதிய திரும்பின மாதிரி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் ....;-(
Divert new capital investment to other districts, develop ports and airports in tier 2 cities, creating tax free zones in remote places can do the magic automatically. The demand and supply in chennai is skewed because of more people coming into chennai every year for jobs. Almost all engineering colleges in state pushing people to chennai and the number of colleges keep increasing. Anyways we have the worst citi planners in the entire world... This thought came to my mind when I was searching for the missing 50 feet in the 100 feet road near Vadapalani...
ReplyDeleteGood Idea... Implementable one also... Just think of Maraimalai Nagar township and also in Bangalore Yelahanka New Town, Kengeri suburb. etc. Karnataka was following this model atleast in the past.
ReplyDeleteநிலங்களைக் கையகப்படுத்தி அதிக விலைக்கு தனியார் டெவலப்பர்களிடம் விற்பனை செய்வதன்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடும். இந்த வீடுகளை அரசு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு மாத வாடகைக்குத் தரும்.
ReplyDeleteஇது சட்டப்படி தவறு.அரசு குறைந்த விலைக்கு கையகபடுத்தி பின் அதிக விலைக்கு தனியாருக்கு விற்க முடியாது.
கையகப்படுத்த பொது நலம் சார்ந்த காரணம் தேவை.அதிக நிலம் இருந்தால் லேன்ட் சிலிங் act மூலம் கையகப்படுத்தலாம்.
பாதிக்கப்படும் மக்கள் அனைவரும் சட்டத்தின் கீழ் போராட முடியும் என்ற நிலை இப்போது வந்து விட்டது.அரசு கையகப்படுத்தும் முயற்சிகளின் போது அவர்கள் சார்பாக/அவர்களோடு போராட அரசியல் கட்சிகளும் தயங்காது.
இப்போது அரசிடம் இருக்கும் இடங்களில் இந்த குடியிருப்புகளை கட்டுவது சாத்தியம்.சென்னையில் இருந்து சிறைசாலை புழலுக்கு மாறியது போல ,பல அரசு கட்டிடங்களை ,அலுவகங்களை செங்கல்பெட்டுக்கு அருகில் மாற்றலாம்.
மத்திய அரசின் கீழ் இருக்கும் இடங்கள்,ரயில்வே விடம் உள்ள இடங்களை பெற்று கொண்டு பதிலாக சற்று தொலைவில் அவர்களுக்கு மாற்று இடங்கள் தரலாம்.இப்போது பெரிதாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு உள்ளேயே மூன்று லட்சம் வீடுகள் கட்டும் அளவிற்கு இடங்கள் உண்டு
ஆனால் வீடுகளை வாடகைக்கு விடுவது,வாடகை வசூலிப்பது இயலாத காரியம்.வாடகை கட்டாதே,நாங்கள் வந்தால் வாடகை மொத்தமும் தள்ளுபடி செய்யபடும் போன்ற முழக்கங்களும்.அரசுக்கு ஏன் கட்ட வேண்டும் என்ற குழு மனப்பான்மையும் வாடகை வசூலிப்பதை மிகவும் கடினமாக்கி விடும்
சமத்துவபுரத்தில் தருவது போல வீடுகளை விற்க கூடாது,உள்வாடகை விட்டால் பறிமுதல் செய்யப்படும் என்ற நிபந்தனைகளோடு இலவசமாக பெண்களின் பெயரில் தரலாம்.கைம்பெண்கள்,unorganised செக்டர் இல் (வீட்டு வேலை செய்யும் பெண்கள்,சித்தாள் வேலை செய்யும் பெண்கள்,5000 ரூபாய்க்கு குறைவான சம்பளம் வரும் பணிகளில் வேலை செய்யும் பெண்கள் )பணி புரியும்,பணியில் இறந்தவர்களின் குடும்பங்கள்,மாற்று திறநாளிகளின் குடும்பங்கள் போன்றோருக்கு வீடுகளை தரலாம்.
வருமானம் தரும் வழி இருந்தால் மக்கள் மெட்ரோ நோக்கி படை எடுக்க மாட்டார்கள் எனபது சரியான கூற்று அல்ல.சென்னையில் வசிப்பவர் துபாய்/போஸ்டன் சென்று வேலை செய்ய விரும்புவது இங்கு வாய்ப்பு இல்லாததாலா .பல சிறிய நகரங்களை பெரிய நகரங்கள் ஆக்க முயற்சிக்கலாம்.பெருங்களதூரில் இருக்கும் தனி வீட்டை விற்று விட்டு நங்கநல்லூர்,சைதாபேட்டையில் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு தாவுபவர்களை எப்படி தடுக்க முடியும்.மக்கள் எந்த காரணத்தால் குறிப்பிட்ட பகுதிகளை விரும்புகிறார்கள் என்று கண்டு பிடிப்பது இயலாத ஒன்று.
கடலூர் ,தூத்துக்குடியை சார்ந்தவர் வெளிநாட்டில் வேலை செய்தாலும் அவர்கள் ஊரில் வீடு கட்டுவதை விட ,வீடு வாங்க நினைப்பது சென்னையில் தான்.
பல வெளி மாநிலங்களை சார்ந்தவர்களும் இப்போது சென்னையில் வீடு வாங்க மிகவும் ஆர்வம் கொண்டு உள்ளனர்.குறிபிடத்தக்க அளவில் வாங்கியும் உள்ளனர்.
நிறுவனங்கள் அனைத்தும் கோர்டேர்ஸ் கட்ட வேண்டும்.பெரும்பாலான கடைநிலை ஊழியர்களுக்கு கோர்டேர்ஸ் தர வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தாலும் பல ஆயிரம் வீடுகள் கிடைக்கும்.கொர்டர்ஸ் கட்டும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள்,வருமான வரி குறிப்புகள் போன்றவற்றை தந்து ஊக்கபடுத்தலாம்
பெரும் சூழியல் பாதிப்பு நேராமல், சம்பந்தப்பட்ட இடத்தின் பூகோள ரீதியான பொருளாதார அடிப்படையை சீரழிக்காமல் (உதாரணம் டெல்டா மாவட்டங்களில் விவசாயம்) இது போன்ற மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாய் எப்படி செயல்படுத்துவது என்று ஆய்வதுதான் தேவையும் நிதர்சனமுமே ஒழிய, இப்படியே எல்லாவற்றுக்கும் முடியாது, கூடாது என்று முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தால் "வெளங்கிடும்".
Deleteபெரும்பாலான மக்கள் சென்னை நோக்கி வருவது வேலை வாய்ப்பு மற்றும் வசதி வாய்ப்புகள் குறித்தான எதிர்பார்ப்பால்தான். மேலும் வேலை தேடி வருபவர்களுள் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களுள் வேலை கிடைக்க ஆசைப்படுவதும் இயல்பே. உதாரணத்துக்கு கணினித்துறையில் உள்ளவர்கள் இன்போசிஸ், ஐ.பி.எம்., ஆரகிள் போன்ற நிறுவனத்தில் வேலை கிடைக்க ஆசைப்படுவது. இது போன்ற ஆசைகள் பேரு நகரங்களில் மட்டும்தான் சாத்தியப்படும். காரணம் இது போன்ற பெருநிறுவனங்கள் மாநகரத்தில் மட்டுமே இருப்பதால்.
மக்கள் மென்மேலும் சென்னையிலயே வீடு வாங்க ஆசைப்படுகிறார்கள் என்றால் அதற்குக்காரணம் இதே படை எடுப்புதான். மேலும் மேலும் மக்கள் மாநகரங்களில் குவியக்குவிய வீடுகளின் தேவை அதிகமாகிறது, விளைவாக விலை மென் மேலும் உயர்ந்து கொண்டேஏஏஏஏஏஏ போகிறது.
சொல்லப்போனால் இவை நடுத்தர நகரங்களுக்கு செல்வதன் மூலம் அவர்களுக்கான செலவை குறைக்கலாம். நிலம், அலுவலகத்துக்கான செலவு, கொடுக்க வேண்டிய சம்பளம் போன்றவை கணிசமாக குறையும்.
சென்னை போன்ற பெருநிறுவனங்களில் இருக்கும் பெரும்பாலான வசதிகள் இருக்கும் பட்சத்தில் கணிசமான மக்கள் சென்னைக்கு படை எடுப்பதை குறைக்கலாம் என்பது என் வலுவான எண்ணம்.
நான் படித்த கணினி படிப்புக்கும் என் திறமையை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளும் (சாலை, போக்குவரத்து, குடிநீர், வீடு, தடையற்ற மின்சாரம், தகவல் தொழில் நுட்ப வசதி இன்ன பிற) நல்ல கேளிக்கை வசதிகளும், மேம்பட்ட சமூக பாதுகாப்பும் இருப்பின் நான் எங்கள் மயிலாடுதுறையை விட்டு சென்னைக்கு வர யோசிக்க மாட்டேனா என்ன ?
மற்ற தேசங்களில் இது போன்ற பிரச்சினை இந்த அளவுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.
உலகம் முழுவதும் இதே பிரச்சினை தான் சார்.
ReplyDeleteமூன்று லட்சம் வீடுகள் இப்போது இருக்கும் நகரத்தின் உள்ளேயே கட்டலாம் என்று தானே சொன்னேன்.ராமாபுரத்தில் என் தம்பி குடி இருக்கும் 300 மேற்றே நீளம் இருக்கும் கலசாத்தம்மன் கோவில் தெருவில் மட்டும் ஆயிரம் வீடுகள்.அங்கு காலியாக இருந்த ஒரு பகுதியில் மட்டும் இப்போது 1000 வீடுகள் வர போகிறதாம்.மோட்சம் திரை அரங்கு அருகில் உள்ள சில ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பும் பல நூறு வீடுகளை கொண்டது.இவை அனைத்தும் மூன்று பெட்ரூம்,பென்ட் ஹவுஸ்,கார் நிறுத்த தனியிடங்கள் போன்ற வசதியான வீடுகளை பெரும்பான்மையாக கொண்டவை . ஒரு பெட்ரூம் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்றால் இந்த சில ஏக்கர்களில் இரண்டு மடங்கு வீடுகளை கட்டலாம்.
இது போன்ற gated குடியிருப்புகள் கண்டிப்பாக குறிப்பிட்ட சதவீதத்தில் செர்வன்ட் கோட்டர்ஸ் கட்ட வேண்டும் என்ற விதிமுறை வைக்கலாம்.கட்டுமான பணி நிறுவனங்களும் அவர்கள் ஊழியர்கள் தங்க வீடுகள் உருவாக்க வேண்டும் என்றும் வைக்கலாம்.அதிக லாபம் வரும் தனியார் நிறுவனங்களில் பணி புரிய அரசு வீடு கட்டி தர வேண்டும் எனபது ஞாயமா
வேலைக்கான சம்பளத்தில் ஒரு பகுதியாக வீடு தர முடியுமே தவிர ,அரசு வீடுகள் கட்டி வாடகை வசூலிப்பது எனபது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.நகராட்சியின் கீழ் உள்ள கடைகளில் வாடகை செலுத்த முடியாதவர்களை காலி செய்வதை போல வீடு வாடகை தர முடியாதவர்களை அரசு காலி செய்ய முடியாது.
இப்போது அரசு பணி இடங்கள்பெருமளவு தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.எந்த வித சலுகைகளும் இல்லாத தொகுப்பூதிய பணியாளர்களுக்கு கோர்டேர்ஸ் வழங்க வேண்டும் என்பதை நடைமுறைபடுத்தலாம்.
vivasayam appo enga panrathaam?? oru township vantha evaluvu fertilize land venakum theriyuma..intha idea theriyamala, tokyo, seoul, london, chicago and newyork ellam makkal thikkai athigama iruku,,,
ReplyDeletedEAR bADRI
ReplyDeleteTHIS TYPE OF DEVELOPING AFFORDABLE RESIDENTIAL AREAS WAS UNDERTAKEN DURING THE CONRESS PARTY RULE WITH LEADERS WHO WERE FAR SIGHTED. EVEN AFTER DMK WAS ELECTED ,THEY DEVELOPED ANNANAGAR. BUT AFTERWARDS,THE KAZHAKA AATCI NEVER THOUGHT OF DEVELOPING RESIDENTIAL TOWNSHIPS IN MADRAS(CHENNAI)TO SERVE THEIR OWN VESTED INTERESTS. NOW IT IS BECOMING A DIFFICULT PROPOSAL BECAUSE OF LAND ACQUISITION PROBLEMS AND POLITICKING BY OPPOSITION PARTIES.WHAT WITH COURT GRANTING STAYS AT THE DROP OF A HAT ,IT IS DIFFICULT TO IMPLEMENT,THOUGH GOVERNMENT IS MEANT FOR SUCH A JOB ONLY. WE CAN ONLY RESIGN TO OUR FATE.
Interesting thought. Planned cities like Singapore operate somewhat similarly.
ReplyDelete(1) A mass rapid transport system connects all such places.
(2) Residential buildings are close to such MRTS
(3)Libraries, shopping malls, schools, cinema, hospitals etc. are available in every such locality.
In essence, every such locality is to a large extent self sufficient.
Unfortunately, as sensible as this idea is, the chances of such ideas getting implemented in India are close to zilch.
The political machinery is one large economic rent seeking group and it is in their interest to maintain the status quo.
Wrong approach. TN is growing chennai centered and other places are kind of neglected. Instead of building satellite cities the need of the hour is distribute the population across the state. Otherwise it is time for Telugana. A city like Coimbatore with over 2 million population doesn't have a suburban commuter service or mass rapid transportation system. Shame on us
ReplyDelete