Friday, July 16, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியம் கட்டுரையில் முரளிதரன், ஷேன் வார்ன் இருவரைப் பற்றிய ஒரு ஒப்பீடு.

3 comments:

  1. {வார்னோ, கிரிக்கெட் மைதானத்தில் குற்றம் சொல்ல முடியாதவர்.}

    தனது பந்துவீச்சு எடுபடாதபோது பல முறை அநாகரீகமாக ஷேர்ன் வார்னே நடந்துகொண்டுள்ளார். வினோத் காம்ப்ளியை மிக மோசமான வார்த்தைகளால் மைதானத்திலேயே திட்டினார் ஷேர்ன் வார்ன். (இந்தியத் தரப்பில் முதன்முறையாக வார்னேயின் பந்துவீச்சை துவம்சம் செய்தது காம்ப்ளிதான். அதுவரை அவரது பந்துவீச்சை யாரும் அத்தனை மோசமாக கபளீகரம் செய்ததில்லை. அதனால் பொறுமையிழந்து மோசமான வார்த்தைப் பிரயோகத்தை வார்னே பிரயோகித்தார்.) முரளி இதுவரை இப்படி நடந்துகொண்டதில்லை. வார்னே-முரளியில் எனக்குப் பிடித்தது முரளியே. நல்ல கட்டுரை பத்ரி. --பிரசன்னா

    ReplyDelete
  2. அப்பாடி! நன்றி பிரசன்னா. நான் தமிழோவியத்தில் எழுதும் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகளை யாருமே படிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

    ஒரு பின்னூட்டம் கிடையாது, அங்கும், இங்கும். அங்கு ஏதேனும் பின்னூட்டங்கள் இருக்கின்றனவா என்பதையும் காண முடியாத நிலை. அதனால் என்ன எழுதுவது, எழுதுவதா வேண்டாமா என்றுகூட மறுபரிசீலனை செய்து கொண்டிருந்தேன்.

    ஷேன் வார்ன் - மற்ற ஆஸ்திரேலியர்கள் அளவுக்கு sledge செய்கிறவர் அல்ல. மெக்ரா வைப் பார்த்தாலே தெரியும்.

    இருப்பினும் நான் சொன்னது sledging பற்றியல்ல. தன் அணிக்காரர்கள் மீதே கோபப்படுவது. முரளி தன் பந்தில் யாராவது எதையாவது விட்டுவிட்டால் திட்டித் தீர்த்து விடுவார். ஷேன் வார்ன் முகத்தில் அதிகபட்சமாக ஒரு புருவம் நெரிப்பு, அங்கலாய்ப்பு, மீண்டும் பந்துவீச்சைத் துவக்க ஆரம்பிப்பார். அதைத்தான் எடுத்துக்காட்ட விரும்பினேன்.

    ReplyDelete
  3. பத்ரி

    தங்களது கிரிக்கெட் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். தொடருங்கள்.

    நன்றி.
    செல்வா

    ReplyDelete