இராக்கில் மூன்று இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். இவர்கள் ஒரு குவைத்திய நிறுவனத்தின் வேலை செய்கிறார்கள். இந்த நிறுவனம் இராக்கை விட்டு வெளியேறாவிட்டால் பிணையாகக் கொண்டுவந்துள்ள இந்தியர்களை 'கச்சக்' செய்து விடுவோம் என்று பயமுறுத்துகின்றனர் தீவிரவாதிகள்.
இந்த விஷயத்தில் இந்திய அரசை நாம் குற்றம் சொல்லமுடியாது. மேற்படி இந்தியர்கள் அனைவரும் தாங்களாகவேதான் இராக்கில் வேலை தேடிக்கொண்டு சென்றுள்ளனர். இராக் மோசமான நிலையில் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவின் நிக்கோலாஸ் பெர்க் என்பவரும், கொரியாவின் கிம் சுன் என்பவரும் இதுவரை தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு தலை கொய்யப்பட்டுள்ளனர்.
அந்த இடத்தை விட்டு பல காத தூரம் விலகியிருப்பதுதானே சரியானது?
Kuwait and Gulf Link Transport என்னும் நிறுவனத்தில் லாரி ஓட்டுபவர்களான மூன்று இந்தியர்கள், மூன்று கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு எகிப்தியர் - ஆக ஏழு பேர்கள் - புதன் அன்று 'கறுப்புக்கொடியேந்துவோர்' எனப்பெயரிட்ட இயக்கத்தைச் சேர்ந்தோரால் கடத்தப்பட்டனர்.
இந்திய அரசு நேரடியாக இராக்கில் இயங்கவில்லை. அமெரிக்கா போல பெரும்படையையோ, கொரியாவைப் போல போரிடாப் படைகளையோ அனுப்பவில்லை. இராக்கிற்கு வேலைக்குச் செல்லவேண்டாம் என்று இந்தியர்களையும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வீரர்களை விடுவிக்கவென்று பிணைப்பணம் எதையும் தீவிரவாதிகள் கேட்கவில்லை. ஆக இந்திய அரசால் செய்யக்கூடியது எதுவுமே கிடையாது. குவைத்தி நிறுவனத்தின் அதிபர் இராக்கை விட்டு விலக முடிவி செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது நடக்காவிட்டால், சனி தொடங்கி (இன்று முதல்) ஒவ்வொருவராக தலை கொய்யப்படுவர் என்று கறுப்புக்கொடியேந்துவோர் மிரட்டியுள்ளனர்.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இராக்கில் எகிப்திய இராஜதந்திரி ஒருவர் இன்று கடத்தப்பட்டுள்ளார்.
இராக் பக்கம் நம் ஆட்கள் இப்பொழுது தலைவைத்துக்கூடப் படுக்கவேண்டாமே?
கவளம்
8 hours ago
No comments:
Post a Comment