Wednesday, January 05, 2005

ஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005

சென்னையில் பிறந்த மலையாளி, வட இந்தியப் பெயரை வைத்துக்கொண்டவர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நம் அண்டை நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தவர். ஓய்வு பெற்ற பின்னர், 2002இல் காங்கிரஸ் இணைந்து, மன்மோகன் சிங் பிரதமரானதும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவி வகித்தவர். ஜே.என்.தீட்சித், ஜனவரி 3, 2005 அன்று மாரடைப்பால் காலமானார்.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் தீட்சித்துக்கு முக்கியப் பங்கு உண்டு. தனது கடைசி வேலையில், சீனா, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். இந்திரா காந்தி காலத்தில் 1971-ல் பங்களாதேஷ் பிறந்தபோது அந்நாட்டிற்கான இந்தியாவின் முதல் தூதராக இருந்தார். ராஜீவ் காந்தி காலத்தில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியபோது இலங்கைக்கான இந்தியாவின் தூதராக இருந்தார்.

வி.பி.சிங் (, சந்திரசேகர்) காலத்தில் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரானார். கடைசியாக, ஓய்வு பெறுவதற்கு முன்னர், நரசிம்ம ராவ் காலத்தில் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தவர்.

அதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி எழுதினார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ரீடிஃப்.காம், ஃப்ரண்ட்லைன் போன்ற இதழ்களில் இவரது பத்தி தொடர்ச்சியாக வந்தது.

ராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கையை உருவாக்குவதில் தீட்சித் முக்கியப் பங்கு வகித்தார். தீட்சித் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கடுமையாக எதிர்த்தவர்/எதிர்ப்பவர்களில் ஒருவர். ராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கைகளை உருவாக்குவதில் அப்பொழுது நட்வர் சிங், எம்.கே.நாராயணன் ஆகியோரும் பங்கு வகித்தனர். [நட்வர் சிங் அப்பொழுது ராஜீவின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். நாராயணன் ஐ.பி உளவுத்துறைத் தலைவராக இருந்தார். இன்று நட்வர் சிங் வெளியுறவுத் துறை கேபினெட் அமைச்சர், நாராயணன் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர்; தீட்சித் மறைவுக்குப் பிறகு இப்பொழுதைக்கு தாற்காலிக தே.பா.ஆ கூட.]

தீட்சித் இந்தியாவின் நலனைக் கருத்தில் வைத்தே எப்பொழுதும் இயங்கி வந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இலங்கை பிரச்னையைப் பொறுத்தமட்டில் ராஜீவ் காந்தி முரட்டுத்தனமாகவும், ஆழமாகவும் இந்தப் பிரச்னையில் காலை விடுவதற்கும், அதே சமயம் விடுதலைப் புலிகளைக் குறைவாக மதிப்பிட வைத்ததற்கும் தீட்சித்தும் ஒரு முக்கியக் காரணமாவார். (மிகப்பெரிய குற்றவாளி ஜெனரல் கே.சுந்தர்ஜி... "இரண்டே வாரங்களில் விடுதலைப் புலிகளை நொறுக்கி விடுவோம்" என்றவர்.)

தீட்சித், இலங்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சரியான முறையில் அளவிட்டிருந்தால், இலங்கை அரசியல்வாதிகளை சரியாக எடை போட்டிருந்தால், ராஜீவ் காந்திக்கு சரியான ஆலோசனையைக் கொடுத்திருக்கலாம். இந்தியா சரியான முறையில் தலையிட்டிருந்தால், இன்று இலங்கைப் பிரச்னை இவ்வளவு மோசமானதாக இல்லாதிருக்கலாம்.

இலங்கையின் பல்வேறு மக்கள் தீட்சித்தின் நண்பராக இல்லாவிட்டாலும், பங்களாதேஷ் மக்கள் தீட்சித்தைப் பாசத்துடன் பார்க்கின்றனர். பாகிஸ்தான் தீட்சித்திடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தது. மிகக் குறுகிய காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நல்ல பெயரைப் பெற்றவர் தீட்சித். அவரது இழப்பு மன்மோகன் சிங்குக்குப் பேரிழப்புதான். சீக்கிரத்தில் ஈடுகட்டமுடியாத இழப்பு. மன்மோகன் சிங் வேறொருவரைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படுவார்.

தீட்சித் ஆங்கிலத்தில் சில புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், இலங்கை பிரச்னை பற்றி, பாகிஸ்தானுடனான சண்டை, சமாதானம் பற்றி, ஆப்கானிஸ்தான், அது தொடர்பாக நடந்த 9/11 தாக்குதல் பற்றி என்று முக்கியமான விஷயங்களைத் தன் அனுபவத்தின் பார்வையில் எழுதியுள்ளார். முக்கியமாகப் படிக்க வேண்டியது, இவரது "Assignment Colombo" எனும் புத்தகம்.

தீட்சித், தே.பா.ஆ ஆக நியமனம் ஆனவுடன் நான் எழுதிய பதிவு

6 comments:

  1. எவ்வளவு சொன்னாலும் எனக்கு அவரின் மேல் பற்றுதல் வரவில்லை. இலங்கை பிரச்சனை காரணமாக இருக்கலாம். ராஜீவ்காந்தி மேல் சிங்கள சிப்பாய் துப்பாக்கியால் தாக்கியதற்க்கு, மிக முக்கியமான காரணம் ஜே.என்.தீட்ஷித். In spite of all, May his soul Rest in Peace

    ReplyDelete
  2. The problem with Munshi Paramu Pillai Jaganthan Narayanan - Mani - JN Dixit - born into a middle class tharavadu in Adoor and after his father's demise moved to Sabarmathi Ashram where his mother remarried an UP wallah Dikshit, is that he clearly lacked empathy in understanding the complex ethnic issues down south and across the straits with his mind trained to act like a typical north indian - dismissing all those at the other side of the vindhyas as a bunch of secretariat pen pusher 'madrasis' with limited intelligence. Though Mani's wife is a Tamilian, it appears he nurtured the bias throughout his life.

    Yesterday's The Hindu has this interesting tribute to JND by Gopal Gandhi, the newly appointed Governor of West Bengal (who was his successor in Colombo as Indian ambassador).

    Gopal writes -


    You see," he told Norwegian peace-makers working on Sri Lanka, "I remember too much to expect certain people to change but if you think some change is taking place, let me wish your optimism the best of luck."

    Born to one culture and fostered by another, Mani could think like a Keralite and speak like an Allahabadi. He could cerebrate as one from the south of the Vindhyas and articulate as one from the Gangetic plains.

    (I disagree with this - his cerebral process had nothing south indian in it - era.mu).

    As one of his successors in the High Commission of India in Colombo, I would like to say a word about his role as India's envoy in Sri Lanka. It was common to the point of being trite to say that Mani was not the Indian High Commissioner in Colombo but Viceroy

    The article can be spotted at http://www.hindu.com/2005/01/05/stories/2005010505321100.htm


    rgds,
    era.mu

    By: era.murukan

    ReplyDelete
  3. முருகன் அவர்களே உங்கள் வலைப்பூவின் சுட்டியைச் சொடுக்கினால் "This page cannot be published "என்று அறிவிப்பு வருகிறது. சரியானச் சுட்டியைத் தர இயலுமா?
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By: Dondu

    ReplyDelete
  4. ராகவன்: முருகனுக்கு வலைப்பதிவு ஏதும் கிடையாது.

    ReplyDelete
  5. Àòâ ºÀ¡‰. ¿¡í¸û ¦ºö §ÅñÊ Ţ„Âò¨¾ ¿£í¸û ¦ºöРŢðÊ÷¸û. ¦ƒÂ¸¡ó¾ý Å¢„Âõ¾¡ý.´Õ ¾¦ÄªÓ¨ÈìÌ ¦¾Ç¢¨Å ¦¸¡Îò¾Å÷ ¦ƒÂ¸¡ó¾ý.þÉ¢ ±ÆОüÌ ´ýÚÁ¢ø¨Ä§Â¡ ±ýÚ ¿¡õ ±ÆÐõ§À¡Ð ´Õ ¸Äì¸ò¨¾ ¯Õš츢ÂÅ÷.´Õ ÍÂõÒ.«Åá þýÚ þôÀÊ ±ýÚ º¢Ä Å¢„Âí¸Ç¢ø ¿õ¨Á ÌÆôô¸¢È¡÷.ŧ¡¾¢¸õ ¾ó¾ ÀìÌÅÁ¡ ? «øÄÐ «Å÷ ¸üÚì ¦¸¡Îò¾¾¢ý ÓÄÁ¡¸ ¿¡õ «¨¼ó¾ ÁÉ Ó¾¢Ã¢îº¢Â¡ ? ¸¡Äõ¾¡ý À¾¢ø ¦º¡øħÅñÎõ.þýÛõ §Àͧšõ.

    ¸¡Áõ ÀüÈ¢ ¿¢¨È §À͸¢È¡÷¸û.investigative journalism ±ýÀРܼ ¸¡Áõ º¡÷ó¾ topicality ¬¸¢Å¢ð¼Ð. Àò¾¢Ã¢¨¸¸û Àò¾¢Ã¢¨¸Â¡Ç÷¸ÄÇ¢¼Á¢ÕóÐ §À¡ö Ţ𼧾¡ ±ýÚ ¿¢¨É츢§Èý. ¬É¡Ä ¡÷ Àò¾¢Ã¢¨¸Â¡Çý ? ±ý¸¢È §¸ûÅ¢Ôõ ±Æ¸¢ÈÐ. º¢É¢Á¡Å¢ìÌû ѨÆ ´Õ À¡ÄÁ¡¸ Àò¾¢Ã¢¨¸¨Â ÀÂýÀÎòÐÀÅ÷¾¡ý Àò¾¢Ã¢¨¸Â¡Çá ? ¿¢¨È §Â¡º¢ì¸ §ÅñÎõ. þó¾ì §¸ûÅ¢ §¸ð¼¾É¡ø ±ý Á£Ð §¸ûÅ¢ ±ÆÄ¡õ. À¢ýÉÉ¢ ¦¾Ã¢ó¾Å÷¸Ç¡¸ þÕó¾¡ø ? «§É¸Á¡¸ á¸Å¨Éò ¾Å¢Ã þ¾¢ø ±ý ÌÈ¢òÐ §¸ûÅ¢ ±ÆôÀ¢É¡ø.ºó§¾¡„ôÀΧÅý.

    ;¡í¸ý

    By: sudhangan

    ReplyDelete
  6. பத்ரி சபாஷ். நாங்கள் செய்ய வேண்டிய விஷயத்தை நீங்கள் செய்து விட்டிர்கள். ஜெயகாந்தன் விஷயம்தான்.ஒரு தலௌமுறைக்கு தெளிவை கொடுத்தவர் ஜெயகாந்தன்.இனி எழதுவதற்கு ஒன்றுமில்லையோ என்று நாம் எழதும்போது ஒரு கலக்கத்தை உருவாக்கியவர்.ஒரு சுயம்பு.அவரா இன்று இப்படி என்று சில விஷயங்களில் நம்மை குழப்ப்கிறார்.வயோதிகம் தந்த பக்குவமா ? அல்லது அவர் கற்றுக் கொடுத்ததின் முலமாக நாம் அடைந்த மன முதிரிச்சியா ? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.இன்னும் பேசுவோம்.

    காமம் பற்றி நிறைய பேசுகிறார்கள்.investigative journalism என்பது கூட காமம் சார்ந்த topicality ஆகிவிட்டது. பத்திரிகைகள் பத்திரிகையாளர்கலளிடமிருந்து போய் விட்டதோ என்று நினைக்கிறேன். ஆனால யார் பத்திரிகையாளன் ? என்கிற கேள்வியும் எழகிறது. சினிமாவிக்குள் நுழைய ஒரு பாலமாக பத்திரிகையை பயன்படுத்துபவர்தான் பத்திரிகையாளரா ? நிறைய யோசிக்க வேண்டும். இந்தக் கேள்வி கேட்டதனால் என் மீது கேள்வி எழலாம். பின்னனி தெரிந்தவர்களாக இருந்தால்? அனேகமாக ராகவனைத் தவிர இதில் என் குறித்து கேள்வி எழப்பினால்.சந்தோஷப்படுவேன்.

    சுதாங்கன்

    ReplyDelete