Sunday, January 30, 2005

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா?

சில நாள்களுக்கு முன்னர் கிறித்துவ சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டுப்பேரவை ஒன்று தி ஹிந்து(வில் என நினைக்கிறேன்) செய்தித்தாளில் ஒரு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை எடுத்திருந்தது.

அதில் பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு தேவைதானா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.

ஆண்டுக்கு இந்தியா முழுமையிலும் 70,000 பொறியியல் கல்லூரி இடங்கள் வீணாகப் போகின்றன (அதாவது படிக்க ஆள் கிடையாது) என்றும், அதில் 20,000 இடங்கள் தமிழகத்தில் என்றும் விவரங்கள் இருந்தன. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் இரண்டும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்று அறிவித்துள்ளன என்றும் இந்த விளம்பரம் சொல்லியது. (உண்மையா? எனக்குத் தெரிந்தவரை கர்நாடகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)

சென்ற வருடம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கும் தமிழக அரசுக்கும் பெரும் போராட்டம் நடந்தது. தமிழக அரசு சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவது, அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முனைந்தது.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் பாதி இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள்தான் தேர்வு பெறுவார்கள். அதைத்தவிர மீதிப் பாதி இடங்கள் management quota என்று சொல்லப்படுவது. இந்த இடங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு வழியாகத்தான் மாணவர்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றது தமிழக அரசு. சுயநிதி கல்லூரிகள் இதனை எதிர்த்தன. நீதிமன்றங்கள் வரை சென்று போராடின. அதையடுத்து நீதிமன்றங்கள் இந்தக் கல்லூரிகள் தாங்களாகவே சேர்ந்து ஒரு நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்று அறிவித்தன.

இரண்டு வருடங்கள் முன்னால் வரை எந்த எதிர்ப்பும் காட்டாத சுயநிதி கல்லூரிகள், ஏன் இப்பொழுது அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டும்? காரணம் எளிது. நான்கு வருடங்களுக்கு முன்புவரையில் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை, இருக்கும் இடங்களை விட அதிகமாக இருந்தது. கூரைக் கொட்டகையில் நடத்தும் மாட்டுத்தொழுவக் கல்லூரிகளுக்கும் போய் படிக்க மாணவர்கள் ஆசைப்பட்டனர். ரசீது வாங்காது, ஆயிரக்கணக்கில் காசும் கொடுத்தனர். (நல்ல பிரிவு - கணினித்துறை, மின்னணுவியல் - என்றால் capitation fee ரூ. 2 லட்சம் வரை போகலாம்.) ஆனால் கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட கல்லூரிகள், இடங்கள், ஆனால் படிக்க மாணவர்கள்தான் இல்லை.

பலர் இந்த "டுபாக்கூர்" கல்லூரிகளில் படிக்காமல், காசு அதிகமானாலும் தேவலாம் என்று வெளிநாடுகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் பொறியியல் கல்லூரிகள் இந்தியாவில் தீவிரமாக ஆள் பிடிக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இப்பொழுது கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். நுழைவுத்தேர்வு எப்பொழுது தேவைப்படும்? Demand இல்லாத நிலையில், supply அதிகமாக இருக்கும் நிலையில் வடிகட்டல் தேவைதானா? தேவையில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

அரசு தன் கல்லூரிகளில் தகுதியுடையவர்கள்தான் படிக்க வரவேண்டும் என்று நினைத்தால் அதற்கென நுழைவுத்தேர்வு நடத்தலாம். ஆனால் எல்லாக் கல்லூரிகளும் நுழைவுத்தேர்வில் தகுதிபெறுபவர்களுக்குத்தான் கல்லூரிகளில் இடம் என்று சொல்வது அவசியமற்றது.

அதேபோலவே சுயநிதி கல்லூரிகளில் சிலவும் தமக்கென தகுதி அடிபப்டையில் எந்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய சில நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம். அல்லது அமெரிக்காவில் நடப்பது போல ஒரே நுழைவுத் தேர்வில் (யாரோ ஒருவரை வைத்து நடத்தி) எடுக்கும் மதிப்பெண்களை முன்வைத்துத் தேர்ந்தெடுக்கலாம்.

8 comments:

  1. இது சரியல்ல.

    ஏற்கனவே சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கையால், பொறியயல் கல்வியின் தரமே தாழ்ந்து வ்ட்டது. இப்போது நுழைவுத் தேர்வையும் ரத்து செய்தால், பிறகு நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.

    எந்தெந்த சுயநிதி கல்லூரிகள் நிழைவுத்தேவு வேண்டாம் என சொல்கிறதோ, அவற்றுக்கு AICTE அங்கீகாரம் கிடையாதென சொல்லி விடலாம்.

    தவிரவும், மானவர்கள் இல்லாமல் ஈயடிக்கும் கல்லூரிகள், அதற்கு காரணம் என்ன என்று பார்க்க முனைய வேண்டும். சென்னை SRM, crescent, JPR. sivakasi mepco போன்ற கல்லூரிகளில் கூட ஈயடிக்கிறதா என்ன..??

    கல்லூரியின் தரம் நிருப்பிக்கப்பட்டிருந்தால், கண்டிபாக மாணவர்கள் சேர விரும்புவார்கள்.இதி ராமதாஸ் ஐயா வேறு சேர்ந்து கொண்டு, குழம்பிய குட்டையை இன்னமும் குழப்புகிறார். எத்த்னை லகரங்கள் கை மாறியதோ..??

    ReplyDelete
  2. Entrance exams should be conducted. Atleast that will make people to think twice before they choose Engineering.

    If the number of colleges are more than we require, one way they can imporve their standards by reducing number of students per discipline. This way, professors/lecturers can spend quality time with the less number of students than getting irritated with the cattle barn-like class rooms.

    Ofcourse the government has to fix the number of students, because self-financing colleges are never going to accept to the less students which are cash cows.

    However, as long as the self financing colleges not meeting even the basic standards of Engineering fields, the students' standards are not going to improve.


    By: Raj Chandra

    ReplyDelete
  3. இந்தப் பொறியியல் கல்லூரிகளின் தரத்தைப் பரிசீலித்து சான்றிதழ் தருவது AICTE - மத்திய அரசு நிறுவனம்.

    ஒரு கல்லூரி மோசமானதாக இருக்கிறது என்று தெரிய வரும்போது அந்தக் கல்லூரியை விடுத்து நல்ல கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்றுவிடுவார்கள். டார்வின் கொள்கை - Natural Selection - இங்கு வேலை செய்யும்.

    அதே போல சில நல்ல கல்லூரிகளாவது நல்ல ஆசிரியர்களைக் கொண்டுவந்து கல்வியின் தரத்தை உயர்த்துவார்கள்.

    எனவே நாம் இப்பொழுது கவலைப்படவேண்டியது - வெறும் பாஸ் மார்க் வாங்கிய ஒருவர் பொறியியல் படிக்க ஆசைப்பட்டால் அவரைப் படிக்க அனுமதிக்கலாமா, கூடாதா என்பது மட்டும்தான்.

    என் கருத்து - தேவையான இடங்கள் இருக்கின்றன எனும்போது அனுமதிப்போமே? தவறில்லை என்பதே.

    ReplyDelete
  4. http://etamil.blogspot.com/2004/11/blog-post_12.html

    என்னுடைய ஊட்டங்கள்: E - T a m i l : நவ. 12; நன்றி.

    By: பாலாஜி சுப்ரா

    ReplyDelete
  5. For the students who cannot able to pass the entrance examination,the government can conduct alternate form of entrance examination which measures the creative ability of the studetns.
    By this ,the government can filter qualified students for engineering who cannot otherwise compete with other students in regular entrance examination.

    By: jay

    ReplyDelete
  6. +2 மற்றும் இஞ்சினியரிங் இல்லாத பி.எஸ்ஸி,பி.பி.ஏ, பி.காம் படித்தாலே கால்செண்டர் அல்லது பி.பி.ஓ நிறுவனங்களில் மாதம் 15ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் நிலை உள்ள நிலையில் பலரும் இன்சினியரிங் 4 ஆண்டுகள் படித்து (முதலில் அட்மிஷன்) பின் வேலை தேடும் எண்ணத்தில் இல்லாத ஒரு நிலையே உருவாகி வருகிறது என கேள்விப்படுகிறேன். சில கால்செண்டர்கள் +2 படித்தவர்களைக் கூட சேர்த்துக்கொள்கிறதாம்.
    - அலெக்ஸ்

    By: Alex Pandian

    ReplyDelete
  7. ஸ்டர்'உக்கு வழ்துகல் :-)

    By: Muthu

    ReplyDelete
  8. sorry i didnt see the transulation box. It screwed my "Vazththu" :-(

    By: Muthu

    ReplyDelete