Sunday, January 09, 2005

புத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று

காட்சியின் முதல் நாள் (என்று சொல்லலாம்).

சந்தித்தது: இணைய நண்பர்கள் பலரையும். பிரபஞ்சன், சா.கந்தசாமி, பாக்கியம் ராமசாமி (அ) ஜ.ரா.சுந்தரேசன், இரா.முருகன், சுதாங்கன், சோம.வள்ளியப்பன், சொக்கன், இன்னமும் பலர்.

வாசகர்கள் பலரும் சுதாங்கன், வள்ளியப்பன், சொக்கன் புத்தகங்களில் கையெழுத்து வாங்கி கொண்டிருந்தனர்.

பல வாசகர்கள் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை முன்னதாகவே தயார் செய்துகொண்டு வந்திருந்தனர். டக்-டக்கெனறு வேண்டிய கடைகளுக்குச் சென்றனர். தமக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் வாங்கினர். வேறு எதிலும் நேரத்தைச் செலவிடவில்லை.

இராம.கி காலையிலேயே வந்திருந்தார். பொறுமையாகச் சுற்றிக் கொண்டிருந்தார். கடைசியாக எங்கள் கடைக்கு வந்து வாங்கிய புத்தகம் முருகனின் அரசூர் வம்சம்.

கையில் கேம்கார்டருடன் ஒரு பகுதிக் கடைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். தீம்தரிகிட ஞாநி கடைக்குச் சென்று அவரைப் பிடித்தேன். எப்பொழுதும் போல அவரது ஸ்டாலில் வாக்கெடுப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். இம்முறை சங்கராச்சாரியார் கைது சரியா, தவறா என்பதும், மற்றொரு கேள்வியும். வாக்கெடுப்பு படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது.

"சார், உங்கள் நெடுநாள் வாசகன் பத்ரி சேஷாத்ரி"
"தெரியுமே! ஆனால் இப்பொழுது நீங்கள் பதிப்பாளர். என்னைப் பேட்டியெடுக்க வந்திருக்கும் உங்களை நான் பேட்டியெடுக்கலாமா?"

என் கேமராவை வாங்கி, என்னையே சில கேள்விகள் கேட்டார். சொன்னேன். அனைத்தும் என் கேமராவில் பதிவானது. பொறுமையாக ஒருநாள் இணையத்தில் போடுகிறேன்.

புத்தகக் கண்காட்சியில் இரண்டே இரண்டு கடைகளில் இருந்தவர்கள்தான் சீருடை அணிந்து வந்தவர்கள். திராவிடர் கழகப் பதிப்பகத்தில் அனைவரும் கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டி. கிழக்கு பதிப்பகத்தில் அனைவரும் வெள்ளை டி-ஷர்ட், அதில் கிழக்கு பதிப்பகம் லோகோ முன்னும் பின்னும். எங்கிருந்து பார்த்தாலும் உடனே அடையாளம் காண முடியும்!

3 comments:

  1. //இம்முறை சங்கராச்சாரியார் கைது சரியா, தவறா என்பதும், மற்றொரு கேள்வியும். வாக்கெடுப்பு படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது.//
    அது சரி...மக்கள் என்ன சொன்னாலும், 'முடிவு' சரி என்று தான் வெளியிடப்படப்போகிறது! இதற்கு எதற்கு வெட்டியாக ஒரு வாக்கெட்டுப்பு?!

    - ஞாநியின் நெருங்கிய நண்பன் :)

    ReplyDelete
  2. மேலே சொன்னது எனது 'சொந்தக்கருத்து' தான்...! வலைப்பதிவாளர்கள் அனைவருமே நமக்கு 'நெருங்கிய' நண்பர்கள் என்ற உரிமையில் தான் 'ஞாநியின் நெருங்கிய நண்பன்' என்று குறிப்பிட்டுக் கொண்டேன்... இதை தவறாக யாரும் எடுத்துக் கொண்டால் தெரிவிக்கவும்... உடனே வாபஸ் பெற்றுக் கொள்வேன்! :)

    ReplyDelete
  3. நான்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். அந்தக் கேள்வி: "சங்கர மடத்தை காப்பாற்ற வேண்டுமா?" ஆம்/இல்லை.

    (அப்படித்தான் நினைக்கிறேன்...)

    ReplyDelete