குயவர் சக்கரத்தில் சிறு மண்பாண்டங்கள்
பல வண்ணங்களிலும், எண்ணங்களிலும் குட்டிப் பானைகள்
முகத்தை ஆடாது அசையாது வைத்திருந்தால், தாளிலும் அப்படியே வரும்
இப்பொழுது யார்தான் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து கைக்கு இட்டுக்கொள்கிறார்கள்?
ஒரு கையால் மட்டுமல்ல; இரு கைகளாலும் படுவேகமாகச் சுற்றப்படும் முறுக்குகள்
ஒரு நிமிடத்தில் பத்து மினி ஜாங்கிரிகள் ரெடி!
இதைத்தவிர புத்தகக் கடைகள் (நாங்கள் நடத்தியது)... ஏற்கெனவே புத்தகக் கண்காட்சி பற்றி நிறையவே எழுதிக்கொண்டிருப்பதனால் மேற்கொண்டு அதைப்பற்றி இங்கு எதையும் எழுதப்போவதில்லை.
தினமும் கோவிலுக்கு வரும் கூட்டம், மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையை பார்த்து வந்த கூட்டம் என்று மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.
சென்னை என்பது பல சிறு நகரங்கள் ஒன்றுசேர்ந்த இடம். திருவல்லிக்கேணிக்கும் மைலாப்பூருக்கும் பல்வேறு வித்தியாசங்கள். மைலாப்பூருக்கும், கோபாலபுரத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள். இப்படி ஒவ்வொரு இடமும் தத்தம் மக்களுக்காகக் கொண்டாட, ஒரு திருவிழாவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் சிறு சிறு கிராமங்களிலும் இதுபோன்று நடக்கும். இதாகாவில் வருடா வருடம் இதாகா ஃபெஸ்டிவல் என்று நடக்கும். அதைப்போல சென்னையில் ஒவ்வொரு திக்கிலும் திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்.
அருமையான பதிவு. I missed it because of preoccupation
ReplyDeleteஅமெரிக்கா, இதாகாவிலும் இது மாதிரி இரண்டு கைகளிலும் முருக்கு மற்றும் ஜாங்கிரி தயாரிப்பார்களா என்ன??
ReplyDeleteBy: PeyarEnnaVendiKidakku