Monday, February 07, 2005

விளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்

இன்று காலை ஜெயா டிவி காலைமலர் நிகழ்ச்சியின்போது தேவிதார் இ.ஆ.ப என்னும் தமிழக விளையாட்டு ஆணையச் செயலர் பேட்டி பார்த்தேன். அதில் தமிழக அரசு தமிழ் நாட்டில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுப்பினை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பற்றிப் பேசினார்.

தங்கள் இணையத்தளத்தின் முகவரியையும் கொடுத்தார்: www.sportsinfotn.com

தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 42,000 பள்ளிகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுத்த School Mail என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் தத்தம் பகுதிகளில் என்னென்ன விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் விளக்கினார்.

No comments:

Post a Comment