கொல்கொத்தா செக்ஸ் தொழிலாளர்களின் குழந்தைகள் பற்றி ஸானா பிரிஸ்கி என்ற அமெரிக்கப் பெண் ஓர் ஆவணப்படம் எடுத்துள்ளார். "Born into Brothels" என்று பெயர். இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆவணப்படங்களில் இதுவும் ஒன்று. ஸானாவின் பேட்டி இன்று பிபிசி தொலைக்காட்சியில் வெளியானது.
ஸானா முதலில் கொல்கொத்தா வந்தது செக்ஸ் தொழிலாளர்களைப் பற்றி சில புகைப்படங்கள் எடுக்க. பின் அங்குள்ள குழந்தைகளுடன் பழக ஆரம்பித்திருக்கிறார். அவர்களுக்கு தன் கையில் இருந்த கேமராவின் மீதான ஆர்வத்தைக் கண்டு அவர்களிடம் தன் கேமராவைக் கொடுத்து போட்டோக்கள் எடுக்க வைத்துள்ளார். பின் அந்தப் படங்களை ஓர் exhibition-ஆக வைத்துள்ளார். படமெடுப்பதால் அந்தக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கண்டு, இவர்களை வைத்து ஓர் ஆவணப்படம் செய்ய வேண்டி, அமெரிக்கா போய் ஒரு விடியோ கேமராவைத் தூக்கிக் கொண்டு மீண்டும் கொல்கொத்தா வந்துவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக செக்ஸ் தொழிலாளர்கள் குழந்தைகளுக்காக ஓர் அறக்கட்டளை அமைத்து (Kids with Cameras) இந்தக் குழந்தைகளுக்கு கலைகள் கற்பிப்பது, கல்வியின் பால் இழுத்து வருவது ஆகியவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். 2006-ல் ஒரு பள்ளிக்கூடமும் கட்டப்படும் என்று சொன்னார்.
கூகிளில் தேடும்போது இந்தப் படம் பற்றி சில விமர்சனங்கள் கிடைத்தன. [ஒன்று | இரண்டு | மூன்று]
அந்தேரியில் மூன்று தினங்கள்…
7 hours ago
இந்த படத்தினைப் பற்றி என்க்குவ்ரம் ஒரு தொழில்நுட்ப இதழில் படித்திருக்கிறேன். சில கையடக்கமான கேமராக்களைக் கொண்டு, சிறுவர்களிடம் கொடுத்து, புகைப்படமும், சலனப்படமும் எடுக்க கற்றுக்கொடுத்து, அதன்மூலம் எடுக்கப்பட்ட விசயங்களை தொகுத்து அளிக்கப்பட்ட படம்.
ReplyDeleteஇரண்டொரு நாட்களில் விரிவாக எழுதுகிறேன்.
///இதன் தொடர்ச்சியாக செக்ஸ் தொழிலாளர்கள் குழந்தைகளுக்காக ஓர் அறக்கட்டளை அமைத்து (Kids with Cameras) இந்தக் குழந்தைகளுக்கு கலைகள் கற்பிப்பது, கல்வியின் பால் இழுத்து வருவது ஆகியவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். 2006-ல் ஒரு பள்ளிக்கூடமும் கட்டப்படும் என்று சொன்னார்.///ஸானாவின் பணி மிகவும் வரவேற்கத் தக்கது. தகவலைத் தந்ததற்கு நன்றி.
ReplyDeleteநட்புடன்
சந்திரவதனா
I watched the movie at http://www.filmforum.com/films/born.htm . The film makers (Zana & Ross) had come there that day. She explained how she started to live in Calcutta red light district, and how she wanted to help the kids there. Zana, a photographer, teaches the kids photography, and helps them get education using the funds generated from the exhibition of photographs taken by the kids themselves. The kids in the movie were great!. The movie is on, about and by those kids. What Zana had done in Calcutta is very commendable, especially in the view of current focus on AIDS in India and its spread by unprotected commercial sex. Access to people there is by itself a amazing accomplishment.
ReplyDeletehttp://www.sathish.org/2005/02/born-into-brothels-documentary/
Sathish
இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை மிகவும் சாதாரணமாகத்தான் அஃதாவது மற்ற குழந்தைகளை போலத்தான் அமைத்துக் கொள்கின்றார்கள். சில சமயம் அவர்களுக்குள் தோன்றும் ஏமாற்றங்கள் கோபங்களாகவும் மறுத்தல்கள் மூலமாகவும் வெளிப்படுகின்றன. ஆனாலும், இவர்கள் எந்த பிராயசையுமின்றி பொதுவான குழந்தை உணர்வு ஓடைக்குள் நுழைந்து விடுகின்றனர். இது எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் சொல்ல இயலுகின்றது.
ReplyDeleteஅப்புறம் //படமெடுப்பதால் அந்தக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கண்டு//
இந்த வரிகளின் உண்மையையும் உணர்ந்துள்ளேன். இப்பதிவுக்கு நன்றிகள்.
அன்புடன்
பாலாஜி-பாரி
paari.wpblogs.com
பி.கு: பின்னூட்டம் கொடுப்பவரின் பெயர் அடிக்க தனியான பெட்டி தெரிவதில்லை. ஆகையால் அது அனானிமஸ் கமெண்ட் ஆகி விடுகின்றது. முடியும் போது கவனிக்கவும். நன்றி.