Thursday, February 03, 2005

Mr. and Mrs. ஐன்ஸ்டீன்

"ஹார்வர்ட் முதல் உசிலம்பட்டி வரையில்" என்ற தலைப்பில் இன்றைய தினமணி நடுப்பக்கக் கட்டுரை ஒன்றில் ஆசிரியர் உ. நிர்மலா ராணி இவ்வாறு எழுதுகிறார்:
ஐன்ஸ்டீனுக்கு பின்னே திருமதி ஐன்ஸ்டீன்: சர்வதேச அரங்கிலும் இதே நிலைதான்! காலம் - இடம் - பொதுத்தொடர்பு என்ற தத்துவத்திற்காக நோபெல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஆய்வுக் கட்டுரையில் பெரும் பங்கு அவருடைய மனைவியைச் சார்ந்தது என்பதும் அந்தக் காலத்தில் பெண்ணின் பெயரில் அனுப்பப்படும் கட்டுரைகள் ஒதுக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தால் ஐன்ஸ்டீன் பெயரில் அனுப்பப்பட்டு பரிசும் பெற்றன என்பதும் சில வருடங்களுக்கு முன்புதான் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிய வந்தது.
இது எந்த அளவுக்கு உண்மை? இங்கு மற்றுமொரு மறைமுகக் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. தன் மனைவியின் ஆராய்ச்சியை தனதென்று சொல்லி ஐன்ஸ்டீன் பேரும், புகழும், பரிசும் பெற்றுவிட்டார் என்பதே அது. கட்டுரையாளர் ஆதாரம் எதையும் சுட்டாமல், "தெரிய வந்தது" என்று பொத்தாம்பொதுவாக இப்படி எழுதியிருக்கக் கூடாது. இந்தக் கேள்வியை இயற்பியல்.ஆர்க் தளத்தில் வைக்கிறேன். வெங்கட்டும், பிறரும் பதில் சொல்லட்டும்.

10 comments:

  1. This link has a few details badri.
    http://home.comcast.net/~xtxinc/mileva.htm

    Looks like the controversy has been going on for years

    ReplyDelete
  2. இந்த விவாகாரன் எனக்கு புதிது! உண்மையாய் இருக்க வாய்பில்லை என்றே நம்புகிறேன். எனினும் உறுதியாய் தெரியாது.

    ஆனால் ஐன்ஸ்டீனின் முடிவுகள்(இன் பின்னுள்ள கணித அடிப்படைகள்) ஹில்பர்ட் போன்ற கணித மேதைகளுக்கு முன்பே தெரியும் என்றும், அதை ஒரு அறிவியல் தளத்தில் முன்வைத்ததால் ஐன்ஸ்டீன் மட்டும் உலக புகழ் பெற்றார் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் மோசடி என்று எதுவும் கூறமுடியாது. அறிவு துறை மேதமையும், பிரபலமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

    ReplyDelete
  3. திணமணி கட்டுரையையும் செந்தில் அளித்த சுட்டிக்கும் போய் படித்தேன். திணமணி கட்டுரை ஒரு தேவையான அரோக்கியமான கட்டுரை என்று தோன்றுகிரது. http://home.comcast.net/~xtxinc/mileva.htm ஐ பார்த்தபின் அவர் ஆதாரமில்லாமல் பேசவில்லை என்றே தெரிகிரது. ஆயினும் உண்மை குறித்து குழப்பமாகவே தெரிகிறது. தெளிவக்கி கொள்ள முடியுமா என்பதும் தெளிவில்லை. வெங்கட் என்ன சொல்கிறார் என்று பார்போம்.

    ReplyDelete
  4. ஐன்ஸ்டீனின் முதல் மனைவியின் பெயர் மிலிவா (Mileva Einstein-Maric). இருவரும் ஜூரிச்சில் உள்ள ஒரே கல்லூரியில் (Federal Polytechnic School) ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் போது காதல் அரும்பி மணம் செய்து கொண்டவர்கள்.
    அந்த காலகட்டத்தில், ஐன்ஸ்டீன், ரிலேட்டிவிட்டி தியரியைக் கண்டுபிடிக்க உதவிய பரிசாதனைகள் பற்றி, கடிதங்கள் மூலம் மிலிவாவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கடிதங்களில் " நம் பரிசோதனைகள்" "நம் கண்டு பிடிப்புகள்" "நம் தத்துவம்" என்றென்லாம் குறிப்பிடுவதைக் கொண்டு ரிலேட்டிவிட்டி தியரி பரிசோதனைகளில் மிலிவாவும் முக்கியப் பங்கு வகித்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.

    ஆபிரகாம் ஜோஃப் (Abraham Joffe) என்ற ரஷ்ய விஞ்ஞானியின் நினைவலைகள் நூலாக வந்திருக்கின்றன. ஐன்ஸ்டீனின் தத்துவங்களின் மூலக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிடும் வாய்ப்புப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். அந்தப் பிரதிகளில் ஐன்ஸ்டீன் மார்ட்டிஸ் என்ற பெயரிலேயே கட்டுரைகள் இருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். மாரிக் என்ற ஹங்கேரிய பெயரைத்தான் மார்ட்டிஸ் என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பதை ஜோஃப் புரிந்து கொள்ளாமல் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றும் மார்டிஸ் என்ற மாரிக் ஐன்ஸ்டீனின் மனைவி மிலிவாதான் என்றும் இப்போது சிலர் வாதிடுகிறார்கள்.

    ஐன்ஸ்டீன் மனைவியை மிகவும் மோசமாக நடத்தினார் என்பது பெண்ணியல் வாதிகள் நெடு நாட்களாகக் கூறி வரும் குற்றச்சாட்டு. 1914ல் ஐன்ஸ்டீனும் மிலிவாவும் பிரிந்து விட்டார்கள். ஐன்ஸ்டீன் அவரையும் குழந்தைகளையும் அநாதரவாக விட்டுச் சென்று விட்டதால், அவர் தன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு வேலைகளை மேற் கொள்ள வேண்டி வந்தது அதன் காரணமாக அவர் அறிவியல் துறையில் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது என்றும் சொல்லப்படுவது உண்டு.

    இது பற்றியெல்லாம் 90 களிலேயே அமெரிக்கப் பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டதுண்டு. 1990ம் ஆண்டு எகானமிஸ்ட் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கிடைத்தால் இந்தப் பதிவில் இடுகிறேன்.

    அண்மையில் Mrs. Einstein என்ற ஒரு நாவல் வந்திருக்கிறது. Anna McGrail என்பவர் எழுதிய நாவல். ஐன்ஸ்டீனுக்கும் அவரது காதலிக்கும் திருமணத்திற்கு முன் பிறந்த ஒரு பென் குழந்தை, ஹங்கேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் தத்துக் கொடுக்கப்படுவதாகம் அந்தப் பெண் வளர்ந்து, ஐன்ஸ்டீனை அவரது இயற்பியல் துறையிலேயே பழி வாங்குவதாகவும் கதை. சுவாரஸ்யமான நாவல்.

    தினமணி கட்டுரையை எழுதியிருப்பவர் மார்க்சிஸ்ட் தம்பதிகள் உமாநாத்- பாப்பா உமாநாத் தம்பதிகளின் மகள். ஜுனியர் விகடனில் மாணவ நிருபராக இருந்தவர். இப்போது சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.

    ReplyDelete
  5. while I was doing the course on contemporary issues of women, I had read many papers supporting this concept! I had faced many such suggesttions as well both in India as well as in USA to submit grant applications in Men's name!!!! It did not surprise me when I read those papers in a male dominated world where all rules are made by those men to see any such thing.
    When I get a chance I will site those references so others can read!!!

    By: Padma Arvind

    ReplyDelete
  6. Padma,

    I have also heard such things. Even in France, where liberated women seems to have lived even in 18th century, such things happened. One women mathematician (sorry I don't remember the name, don't mind if it can be interpreted as my men syndrome) was writng papers in a male name for a long time.

    You should write about your experince in detail somewhere. Thanks!

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Sorry for giving all wrong info. what I was talking with my bad memory power is ...

    "One such woman was Sophie Germain, daughter of a middle class French family. The key to Germain's education was her father's rather extensive library, which contained books on a wide range of subjects. Germain was inspired by an essay that detailed how Archimedes had been so involved in a geometry problem that he had failed to notice invading Romans and was subsequently speared to death. "Germain concluded that if somebody could be so consumed by a geometry problem that it could lead to their death, then mathematics must be the most captivating subject in the world" (Singh 103). Consequently, while the rest of her country was consumed with revolution, Germain spent many nights studying math problems by the light of candles, despite her parents' efforts to stop her. Later, Germain resorted to adopting the identity "Monsieur LeBlanc" to obtain notes and submit papers to the male-only École Polytechnic. In 1801, out of fear of rejection, she used the name again when writing to ask Gauss' advice about her theories on Fermat's Last Theorem. The credit for her discoveries might have belonged forever to "Le Blanc" had not French troops invaded Gauss' hometown (107). Germain used her influence to ensure his safety, and Gauss then learned her identity. He continued to communicate with her, despite her sex, and with his encouragement, Germain went on to make many contributions to both mathematics and physics."

    http://www.students.bucknell.edu/mpavlac/

    ReplyDelete
  9. PBS had an excellent documentary on her sometime back:
    http://www.pbs.org/opb/einsteinswife/

    By: Vasee

    ReplyDelete
  10. பத்ரி - இரண்டு நாட்களாக வேலைப்பளு. இதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதத் துவங்கியிருக்கிறேன்.

    http://iyarpiyal.org/?item=20

    By: வெங்கட்

    ReplyDelete