அந்தப் பேச்சிலிருந்து சில புள்ளிவிவரங்கள்:
20ஆம் நூற்றாண்டில்தான் மக்கள் தொகை மாற்றங்களில் பல விசேஷங்கள் நடந்தேறியுள்ளன. அதாவது:
- உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட நான்கு மடங்கு ஆகியுள்ளது. 1900-ல் 1.6 பில்லியனாக இருந்தது 2000 தொடக்கத்தில் 6.1 பில்லியன் என்றாகியுள்ளது.
- வருடாந்திர மக்கள் தொகை அதிகரிப்பு மிக அதிகமாக இருந்தது 1969-ல். 2%. அதற்கு முன்னும் குறைவாக இருந்தது. அதற்குப் பின்னும் குறையத் தொடங்கியுள்ளது.
- 1987-ல் மக்கள் தொகை மிக அதிகமாக - 87 மில்லியன் - அதிகரித்தது. வேறெந்த வருடத்திலும் இந்த அளவு அதிகரித்ததில்லை.
- மிகக் குறைந்த காலத்தில் மக்கள் தொகை இரண்டு மடங்கானது. 1960-லிருந்து 1999-ல் மக்கள் தொகை 3 பில்லியனிலிருந்து 6 பில்லியன் ஆனது.
- மிகக்குறைந்த கால அளவில் ஒரு பில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பு ஏற்பட்டது: 1987-1999 காலத்தில் மக்கள் தொகை 5 பில்லியனிலிருந்து 6 பில்லியன் ஆனது.
இது இப்படியிருக்க, பல நாடுகளில் மக்கள்தொகை குறையத் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 61 நாடுகளில் fertility rate - அதாவது அந்த நாட்டில் சராசரியாக ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை - குறைந்து கொண்டே வருவதே இதற்குக் காரணம். ஒரு காலத்தில் 6 ஆக (அதாவது சராசரியாக ஒரு பெண் ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டிருந்தார்) இருந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து 2, 1.8 என்று ஆகியுள்ளது. Replacement fertility rate (RFR) - அதாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ள மக்கள் தொகை அதே அளவில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் சராசரியாக ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணிக்கை - 2.1+ ஆகும். இஸ்லாமிய நாடுகளான இரான், ட்யூனிசியா அகியவற்றில் இப்பொழுதைய RFR 2. மெக்சிகோ 2. அமெரிக்கா 2. சீனா 1.8.
இந்த நாடுகளில் பிற நாடுகளிலிருந்து யாரும் வராது போனால் (migration), மக்கள் தொகை இப்பொழுதிருப்பதை விடக் குறைந்து கொண்டே போகும்.
அமெரிக்காவில் மக்கள் தொகை அந்நியர் நாடு புகுவதனால் மட்டுமே அதிகரிக்கப் போகிறது.
உலகில் மக்கள் தொகை அதிகமாக உயர்ந்து வரும் ஆறு நாடுகள்: இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, பங்களாதேஷ், இந்தோனேசியா. இதில் சீனா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் ஏற்படும் மொத்த மக்கள் தொகைப் பெருக்கத்தை விட இந்திய மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக உள்ளது! ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள 25 நாடுகள் சேர்ந்து 2003-ல் அதிகரித்த மக்கள் தொகையை அதே வருடத்தின் முதல் ஆறு நாள்களில் இந்தியா தாண்டிவிட்டதாம்!
1950-ல் பாகிஸ்தானின் மக்கள் தொகை 50 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது 150 மில்லியன். 2050-ல் பாகிஸ்தான் உலகிலேயே நான்காவது மக்கள் தொகை மிகுந்த நாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. [1. இந்தியா 2. சீனா 3. அமெரிக்கா]
சில விசித்திரமான தகவல்கள்:
* 1950-ல் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை, ஐரோப்பாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்காக இருந்தது. இப்பொழுது இரண்டு கண்டங்களிலும் கிட்டத்தட்ட சம அளவு. 2050-லோ... ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை ஐரோப்பாவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்காக இருக்கும்!
* பாகிஸ்தான் - ரஷ்யா: மேலே சொன்னது போன்றே.
* மொராக்கோவின் மக்கள் தொகை ஸ்பெயின் தொகயைத் தாண்டும். பிலிப்பைன்ஸ் ஜப்பானைத் தாண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேலைத் தாண்டும்.
Support Ratio என்றொரு எண்ணிக்கை உண்டு. வயதானவர்களை வயது குறைந்தவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள் (support) என்பதனால் இதனை 'தாங்கல் விகிதம்' என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாட்டில் 15-64 வயதுள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதன் விகிதமே தாங்கல் விகிதம். அதாவது 15-64 வயதுள்ளவர்கள் உழைத்து அதனை வைத்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாங்குகின்றனர் என்றாகிறது. (15க்குக் கீழ்ப்பட்டவர்களை கவனித்துக் கொள்வது முதலீடு:-)
2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பாராம். சில நாடுகளை கவனிப்போம். சீனாவில் இப்பொழுதைய தாங்கல் விகிதம் 10. 65 வயதுக்கு மேல் இருப்பவர் ஒவ்வொருவருக்கும், 15-64-ல் 10 பேர் உள்ளனர். ஆனால் 2050-ல் இந்த விகிதம் 2.7 ஆகக் குறைந்து விடும்!
ஃப்ரான்ஸ் இப்பொழுது 4, 2050-ல் 2.1.
ஜெர்மனி இப்பொழுது 4, 2050-ல் 1.8.
கனடா இப்பொழுது 5, 2050-ல் 2.4.
அமெரிக்கா இப்பொழுது 5.5, 2050-ல் 2.7.
ஏன் இப்படி ஆகிறது? Mortality - சாவு குறைந்துள்ளது. மருத்துவ வசதிகள், குறைவான போர்கள் ஆகியவற்றால் மக்கள் நெடுங்காலம் வாழ்கிறார்கள் (life expectancy). சராசரி வாழும் காலம் 1900க்கு முன் 30 ஆக இருந்தது இப்பொழுது 60க்கு மேல். பல நாடுகளில் இது 70க்கும், 80க்கும் சென்றுள்ளது.
இதன் விளைவு என்ன? எங்கெல்லாம் சமூகப் பாதுகாப்பு முறை அமலில் உள்ளதோ (அதாவது முதியோர்களை அரசு ஓய்வூதியம் கொடுத்து ஒழுங்காக கவனித்துக் கொள்கிறதோ), அங்கெல்லாம் அரசு கீழுள்ள ஏதாவது ஒன்றையோ, அனைத்தையுமோ செய்தாக வேண்டும்.
1. ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல்
2. ஓய்வூதியத் தொகையைக் குறைத்தல்
3. இப்பொழுது வேலை செய்பவர்களிடமிருந்து பெறும் சோஷியல் செக்யூரிட்டி வரியை அதிகமாக்குதல்
தாங்கல் விகிதத்தை இப்பொழுதிருப்பதைப் போலவே 2050-லும் வைத்திருக்க வேண்டுமானால் சீனா ஓய்வு பெறும் வயதை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்? 78.7! ஆனால் இது சராசரி வாழும் காலத்தை விட அதிகம்! அதாவது சீனா தன் நாட்டு மக்களை சாகும் வரை உழைத்துக் கொண்டே இருங்கள் என்று சொல்ல வேண்டும்!
பிற நாடுகள் ஓய்வு பெறும் வயதை எப்படி அதிகரிக்க வேண்டும்? ஃப்ரான்ஸ் 74.6, ஜெர்மனி, இத்தாலி 76, கனடா 75, அமெரிக்கா 74!
===
வளர்ந்த நாடுகள் பிரச்னை வேறு, வளரும் நாடுகள் பிரச்னையோ வேறு. எக்கச்சக்கமாக மக்கள் தொகை பெருகும் நாடுகளில் உள்ள அரசுகள் அடிபப்டைக் கட்டுமானம் சரியாக இல்லாததால் தடுமாறுகிறார்கள்.
மக்கள் தொகை குறையும் நாடுகளுக்கு மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் கூட்டம் கூட்டமாக மக்களை அனுப்பினால் சமூக மாற்றங்கள் பல இருக்கும். இத்தாலியில் 2050-ல் பாதிப்பேர் இந்திய வம்சாவளியினர் என்றால் நினைத்துப் பாருங்களேன்?
ராகுல் காந்தி இரண்டு நாடுகளையும் சேர்த்து ஆளலாம்.
So u mean to say Rahul Gandhi is Italian or half-Italian (I mean not by birth (through his mom's country of birth but also in his feelings?)I really appreciate captilaistic america here. I am an Indian now. My wife is even an Indian now. Just because my daughter was born here, they call her an American. Dont know when our "progressive" Indians will get such an attitude. Sorry, I am not snapping at you personally. But only, criticising an attitude like this which is worse than that of BJP. Katudaithal enru kandathaiyum ularubavarkal irukirarkal. But, I hope I did the right katudaithal here. Please correct me if i am wrong. I am all ears (especiallly to a person like you whom I respect a lot) - Thanks and regards, PK Sivakumar
ReplyDeleteDear Sivakumar,
ReplyDeleteAfter reading the entire article, you have only this comment to make?
And dry humour is something you cannot understand?
I have no apologies to make.
--badri
Dear Badri,
ReplyDeleteThats a good question (i.e., you have only this comment to make?) I should have added that I am thankful for inroducing me to ITConversations.com and the statistics of that article. Thank you. Hope I answered that point here. Sorry if I have not mentioned it earlier.
If you want to classify your last statement under the catgegory of "dry humor", I will let you do so now, though as a reader, it did not come across to me so. However, I do believe people for what they say they are. So, I understand it as dry humor now (thanks to your clarification and also while blaming my so called dumb de-construction theories :-) ) . Will take your earlier (if any) or future (if any) writings of same meaning as "dry humor" too. (Is that a reasonable inference? Please let me know :-) ) However, I never asked for any apologies even if it meant otherwise. Everyone has a right to their own opinion. So, no apologies needed at anytime please!
Thanks and regards, (with lots of respect for your views and thoughts.) PK Sivakumar
> Just because my daughter was born here, they call her an American
ReplyDeleteSivakumar - it may be written in a piece of paper.. But it will do a great deal of good if you prepare your daughter to face the reality. America or Canada - there is no difference in this.
I know a pediatric neurosurgeon here - a third generation canadian of Indian ethinicity. He tells me tonnes of tales of discrimination (no, he is not someone who frets). He does not have anything to do with India - except his lineage and physical features that go with that. On the other hand, a ukranian illiterate who landed just three weeks ago sails smoothly (because of the color of his skin) until he opens his mouth.
Having accorded enough rights and credentials to Ms. Sonja - a little dry humour can be tolerated in the right spirit - IMHO. - Venkat
Brilliant site, will post my views 2-3 days later...am on the move now
ReplyDeleteBadri
ReplyDeleteThere are also some concrns with population. In US, afro Africans give birth to more children than Caucassians. If you ook at census data (census.gov) in many countries we have some unequal ratio from one or two community. It would have been interesting if they had touched upon this idea. With Br.Bush at the center with support for anti abortion etc the birth rate might go up.
2. In US, Baby boomers postponed to start a family as they were aggressively working and that is also a reason in addition to longevity to have more older people than youngsters. It is going to be a major problem in supporting these booming old age homes and live in nursing homes very soon.
3. Infant mortality is still high in some poverty striken countries and female infanticide, genocide(millions to world wide population) also add to the population mix.
4. I beleive in pharamceutical industries are working on a permanent contraceptive which they are planning on using women who are in rpison for drug use!!! to avoid unhealth children
5. According to Amerthya sen, population growth is very slow compared to the rate of our put (food as well as other commodities).
Population rate is coming down fast in some and slow in some other regions. He also feels that women have little decisional power in some societies due to social and economic handicaps, lack of adequate knowledge and ofcourse fatcors like cultural, religious factors. He feels the reason for high fertility rate in Pakistan than India is due to religious an dinadequate knowledge an dwomen suppression. I hope these aspects were toched upon at the meeting. If they do, will you please write on that too.
Padma Arvind
Badri
ReplyDeleteI did nto realize you got the # from Website. I thoguht you attended a meeting.
Sorry about that
Padma
கடுமையான எண்களை சுவையான ஒப்புநோக்கலால் பரிமாறிவிட்டீர்கள். நல்ல உருப்படியான தகவல்கள். நன்றி. ( ஜோஸஃப் ஷாமி க்குப் போகவேண்டியது இருந்தால் அனுப்பிவிடவும் :-D)
ReplyDelete-காசி
பத்ரி,
ReplyDeleteஇந்தியாவின் தாங்கல் விகிதம் என்ன என்பது பற்றி தகவல் எதுவும் இல்லையா? அது இருந்தால் இந்த கட்டுரையின் மதிப்பை இன்னும் நன்றாக உணர முடிந்திருக்கும். அது போலவே 'ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது' என்ற விஷயத்தில் - சமூக பாதுகாப்பு இல்லாத நிலையில் இந்தியர்கள் அவர்கள் ஆயுளைப் போல இன்னுமொருமுறை உழைக்க வேண்டியிருக்குமோ!? அதாவது சராசரி மனித வாழ்க்கை ஆண்டுகள் போல இன்னுமொருமுறை say 120 ஆண்டுகள். ITconversations.comஐ பார்க்க இயலவில்லை. அதனால், கிடைத்தால் யாராவது இந்தத் தகவலையும் உள்ளிடுங்களேன் - ஒருவேளை பத்ரிக்கு நேரமில்லாமல் இருப்பின்
- சந்திரன்
பத்ரி,
ReplyDeleteஇப்பொழுதுதான் , அனுமானுக்கு அப்பறம் படிக்க முடிந்தது. ஆகா ! ஆகா ! அற்புதமான தளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளீர்களே. இந்த மக்கள் தொகைப்பிரச்சினை குறித்து நிறைய முறை யோசித்ததுண்டு. எல்லாப்பிரச்சினைக்கும் காரணம் இந்த மக்கள் தொகைதான் என்று பல சமயங்களில் முடிவு கட்டிவிட்டு போனதுண்டு. ஆனாலும் இருக்கும் மக்கள் தொகைக்கும் , கொடுக்கப்படும் வசதிகளையும் கணக்கில் கொண்டும் பார்த்தால் , இந்தியாவை பாராட்டாமல் இருக்கமுடியாது என்ற ஞானம் சமீபத்தில் எப்படியோ வந்தது.
ரவி ஸ்ரினிவாஸ் திண்ணையில் சில் முக்கிய கட்டுரைகள் [மக்கள் தொகையும் V இயற்கை வளங்கள் ] எழுதினார். சுட்டி கிடைத்தால் இங்கு இணைக்கலாம். ஒரு ஒருவருடம் முன்னால் இருக்கும். இப்போ சுட்டி கிடைக்குமா என்று தெரியவில்லை
பத்ரி, இது ஒரு பார்வையை கொடுக்கும் என்பதால் இங்கு இடுகிறேன். [நேரடியாய் மக்கள்தொகை பற்றி இல்லையென்றாலும், இயற்கை வளங்கள் பற்றி பேசுகிறது, சம்பந்தப்பட்ட நூல்களை அறிமுகப்படுத்துகிறது. ] இது போலவே, திண்ணையில், ரவி ஸ்ரினிவாஸ் பக்கத்தி,சுற்றுச் சூழல் அரசியல் குறித்த பல அறிமுககட்டுரைகள் உள்ளன.
ReplyDeletehttp://www.thinnai.com/pl0615036.html