Sunday, July 17, 2005

ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்ட சுபா சுந்தரம் - புகைப்படப் பத்திரிகையாளர் - நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்பு துலக்கியது பற்றி ஒரு விசிடி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. K.ரகோத்தமன் - Chief Investigating Officer - இந்தப் படக் குறுந்தட்டை உருவாக்கியிருக்கிறார். எங்கு கிடைக்கிறது போன்ற தகவல்கள் இல்லை. கிடைத்ததும், பார்த்ததும், இதைப்பற்றி எழுதுகிறேன்.

ராஜீவ் கொலை வழக்கு பற்றி கார்த்திகேயன் எழுதிய புத்தகம் பற்றிய என் முந்தைய பதிவு

சுப்ரமணியம் சுவாமி எழுதிய (தமிழாக்கம்: சுதாங்கன்) "ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகத்தைப் பற்றிய என் பதிவுகள்: ஒன்று | இரண்டு

2 comments:

  1. செய்திதாளில் காணவில்லை ஒரு கொலைக்குடந்தையாக இருந்தவரின் மரணத்தை தெரிந்து கொண்டேன்
    cd கிடைக்குமிடத்தை எனக்கும் சொல்லுங்களேன்
    நன்றி
    என்னார்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete