இன்றைய 'தி ஹிந்து'வில் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை, தமிழக வழக்கறிஞர்களின் போராட்டத்தால் (அதைத் தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகள் எழுப்பிய சத்தத்தால்) திடீரென நிறுத்தி வைத்தது பற்றி ஒரு கருத்துப் பத்தி வந்துள்ளது. தமிழகத்தில் நடந்த போராட்டத்தால் ஒருவகையில் இந்தியாவுக்கு நன்மைதான். ஏன் பிற மாநிலங்களில் போராட்டம் இவ்வளவு வலுவாக இல்லை என்று புரியவில்லை. நல்லவேளையாக தமிழக கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் இந்தச் சட்டத் திருத்தம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நான் ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியிருந்த சிலவற்றைப் பற்றி விளக்குகிறார் சித்தார்த் நாராயண். அத்துடன் இன்னமும் சில புது விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். இதைப்பற்றிய எனது புரிதல் குறைவுதான். வலைப்பதிவுலக வக்கீல்கள் இதைப்பற்றி மேலும் விளக்கினால் நல்லது.
வெண்முரசு 75, புதுவையில் நான்
6 hours ago
நல்ல, தெளிவான கட்டுரை. சுட்டிக்கு நன்றி. ஆயினும், சித்தார்த்தின் கட்டுரை, குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு சாதமாக உள்ளவற்றை ஏற்றுக் கொள்ளலாம், பாதகமாக உள்ளவற்றை நீக்கி விடலாம் என்ற தொனியில் உள்ளது. போலீஸ், Prosecution, அரசாங்கம் ஆகியவற்றின் மேல் சமுதாயத்தில் உள்ள (well-earned)அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாகவே உள்ளது. காவல்துறை மீதும், நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இருந்தால், Anticipatory Bail என்பதே எதற்காக? :-(
ReplyDelete