மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விடுத்த அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தவில்லை. [தி ஹிந்து செய்தி]
* வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது இந்த அறிக்கை ஏன் இப்பொழுது வெளியானது - என்று SFI வழக்கறிஞர் வைகை கேட்டார். அதற்கு பதிலாக இந்த அறிக்கையை வெளியிட ஜனவரி 2006-இலிருந்தே வேலை ஆரம்பித்துவிட்டது; UGC, AICTE இருவருடனும் ஆலோசனை செய்தே மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றார் UGC வழக்கறிஞர் சந்துரு.
* மத்திய அரசின் அறிக்கை முழுமையானதல்ல என்று நீதிபதிகள் கருத்து கூறினர். மேலும் AICTE ஓர் ஆலோசனை மன்றமாக இல்லாது கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஆணையமாக இருக்கவேண்டும் என்றும் தாங்கள் கருதுவதாகச் சொன்னார்கள். ("As the highest body having necessary expertise, the AICTE must have a mandatory and not advisory role.")
* மாணவர்களுக்கான வழக்கறிஞர்கள் வைகை, நளினி சிதம்பரம் இருவரும் மத்திய அரசின் அறிக்கை ஏற்புடையதல்ல என்றும் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்கள். அதைப்போலவே SRM நிகர்நிலை சார்பில் ஆஜரான ராஜீவ் தவானும் தாமும் இந்த அறிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
ஆக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த அறிக்கையின்மூலம் யாரையுமே சந்தோஷப்படுத்தவில்லை. பிரச்னையை மேலும் குழப்பியுள்ளார்கள். இதனால் நிச்சயமாக இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் வரை செல்லப்போகிறது.
இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 17 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment