Monday, July 10, 2006

கண்டதேவி தேர் இழுப்பு

ரமணியின் அழகான நிரலியின்மூலம் என் கடந்த ஆண்டுப் பதிவுகளை ஒருசேரப் பார்க்கமுடிகிறது.

இன்றைய முக்கியச் செய்தி கண்டதேவி தேர்த் தெருவிழா. சென்ற ஆண்டு நடந்ததிலிருந்து இந்த ஆண்டு என்ன முன்னேற்றம் என்று பார்த்தேன். சென்ற ஆண்டு 24 தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அது 25-ஆக உயர்த்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மேற்கொண்டு 10 தலித்கள் பார்வையாளராக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல தலித் தலைவர்கள் - திருமாவளவன், கிருஷ்ணசாமி உட்பட - கைது செய்யப்பட்டு கண்டதேவிக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.

6 comments:

  1. திரு பத்ரி,
    நான் கூட இது பற்றி ஒரு சின்ன கவிதையை போட்டு இருக்கிறேன்.

    கண்டதே(வி) காட்சி

    அன்று
    ஊர் கூடுவதற்காக
    இழுபட்ட தேர்கள்
    இன்று
    தேர்கள் கூடுவதால்
    ஊர்கள் இழுபடுகின்றன
    வீன்
    வம்புக்காகவும்,
    வீம்புக்காகவும் !

    ReplyDelete
  2. அட அதுக்குள்ள டெம்ப்ளேட்டில் Archive Browser சேத்துட்டீங்களா? நன்றி.

    ReplyDelete
  3. பத்ரி,
    வணக்கம்.
    சாதி வேற்றுமையின்றி அனைவரும் எந்த ஆலயத்திற்குள் செல்லவும் இறை பணி செய்யவும் வழி வகுக்க வேண்டும். சைவசமயத்தில் சாதி வேறுபாடுகள் இல்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமமே.

    ReplyDelete
  4. பாஷாஇந்தியா.காம் நடத்தியப் போட்டியில் தமிழில் உங்கள் பிளாக் தான் வெற்றி பெற்றிருக்கிறது.... வாழ்த்துக்கள்... எனக்கு இப்போது தான் தெரியும்...

    http://www.bhashaindia.com/Contests/IBA/Winners.aspx

    ReplyDelete
  5. தேர் இழுப்பதில் என்ன 24 25 பேர் எல்லாம். விருப்பப் படுவர் அனைவரும் சேர்ந்து இழுத்தால்தானே தேர் நகரும்.

    ReplyDelete
  6. //சென்ற ஆண்டு 24 தலித்கள் தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அது 25-ஆக உயர்த்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. //
    நல்ல முன்னேற்றம் தான்.
    கேவலமாக உள்ளது

    ReplyDelete