Wednesday, September 06, 2006

'கட்டாயத் தமிழ்' சட்டத்துக்கு எதிராக வழக்கு

Tamil Nadu Learning Act, 2006 [PDF File], சில மாதங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டது. இதன்படி இந்தக் கல்வியாண்டு தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக இருக்கும். இதுவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் State Board, Matriculation, Anglo-Indian அல்லது Oriental பாடத்திட்டங்கள்மூலம் கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மத்தியக் கல்வித்திட்டங்களான CBSE, ICSE ஆகியவைகீழ் இயங்கும் பள்ளிகளை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது.

இந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கக்கோரி கன்யாகுமரி மாவட்ட மலையாள சமாஜம் என்னும் அமைப்பு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தி ஹிந்து செய்தியிலிருந்து
According to him [Samajam president K. Chandra Sekhara Pillai], Section 3 (2) of the Act stipulates that Tamil and English must be taught compulsorily while students who do not have either Tamil or English as their mother tongue can study their mother tongue as an optional subject. "Which means that linguistic minorities cannot have their mother tongue as a medium of instruction," he said, and sought to declare the Act as unconstitutional.
இந்த வாதம் அபத்தமாகத் தோன்றுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சுட்டியில் சட்டத்தின் முழு வரைவு உள்ளது. அதிலிலிருந்து Section 3 (2) என்ன என்று பார்த்தால்
For the purpose of sub-section (1), the pattern of education shall be as follows:-

Part-I Tamil (Compulsory)
Part-II English (Compulsory)
Part-III Other subjects (Mathematics, Science, Social Science, etc.)
Part-IV Students who do not have either Tamil or English as their mother tongue can study their mother tongue as an optional subject.
முழுச்சட்டத்திலும் எங்குமே கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் எந்த மொழியில் சொல்லித்தரப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப்படவில்லை. மலையாள சமாஜம் விரும்பினால் மலையாள மொழியிலேயே இந்தப் பாடங்களைக் கற்றுத்தரலாம். மேலும் இந்த மாணவர்களுக்கு மலையாளத்தையும் ஒரு பாடமாகக் கற்றுத்தரலாம். இந்தச் சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையிலேயே மலையாள சமாஜத்துக்குக் குழப்பம் இருந்திருந்தால் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு ஒரு கடிதம் எழுதி பிற பாடங்களை (கணக்கு, அறிவியல்...) மலையாளத்திலோ அல்லது பிற மொழிகளிலோ கற்றுத்தருவதில் ஏதேனும் பிரச்னை உண்டா என்று கேட்டு, பதில் பெற்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதால் மலையாள சமாஜத்தின் அடிப்படை நோக்கம் தமிழ் என்னும் பாடத்தைப் பயிலாமல் இருக்கவேண்டும் என்பதே என்பது வெளிப்படையாகிறது.

விரைவில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

18 comments:

  1. இது அபத்தமானது மட்டுமல்ல ஆச்சரியகரமானதும் கோட. இங்கே பெங்களூரில் சென்ற மாதம்தான் இத்தகைய அரசு அறிவிப்பு ஒன்று பெரும் சர்ச்சையாகியது. அதாவது மாநில ஸ்டேட் போர்ட் பள்ளிகளில் கட்டாயமாக அனைத்துப் பாடங்களும் ஆரம்பப் பாடசாலைகளில் (ஒன்றுமுதல் ஐந்துவரை) கன்னட மீடியத்தில் தான் நடத்தப்படவேண்டும் என்பது பற்றி. இத்தகைய அரசாணை இங்கே உள்ளது. இப்படி அரசு அனுமதி பெற்ற ஆயிரக்கணக்கான பள்ளிகள் ஆங்கில மீடியத்திலேயே கற்றுக்கொடுப்பது அரசு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப் பட்டது. உடனே அரசு அப்பள்ளிகளுக்குக் கொடுக்கட்ட உரிமத்தை ரத்து செய்யும் எனப் பயமுறுத்தியது. பள்ளிகள் எதிர்க்குரல் எழுப்பியுள்ளன. என் கருத்துப்படி அரசு சரியான முடிவே எடுத்துள்ளது.
    தமிழகத்தில் நிலைமை தலைகீழ். தமிழில் யாரும் எதும் கற்கவேண்டும் என்றால் உடனே கோர்ட்!
    மானில முறைப் பள்ளிகளில் அந்தந்த மானில மொழிப் பாடமும், மீடியமும் கண்டிப்பாக அமல் படுத்தப் பட வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.
    சிபிஎஸ்ஈ, ஐஸீஎஸ்ஈ முறையில் படித்தாலும் இங்கே கன்னடம் மூன்றாவது மொழியாக கற்றே ஆகவேண்டும்.
    அருள்

    ReplyDelete
  2. ///
    விரைவில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்ப்போம்.
    ///

    எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  3. If my mother tongue is not Tamil
    can the state force me to study
    Tamil as a language.Hindi is the
    national language but it is not taught in govt and govt aided schools in Tamil Nadu.On one hand
    Tamils want to impose their mother
    tongue on non-tamils and on the
    other hand the refuse to accept
    Hindi.If imposition in the name
    of Hindi is bad, it is equally
    bad if Tamil is also imposed.

    ReplyDelete
  4. அருள் செல்வன் தகவலுக்கு நன்றி. ஆனால் பாருங்க அது கர்நாடக மாநிலம். அங்கே எப்படி வேண்டுமானாலும் சட்டம் போடலாம். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் செய்யக்கூடாது. ஏனென்றால் நாம் இந்தியர் :-)

    ReplyDelete
  5. //உண்மையிலேயே மலையாள சமாஜத்துக்குக் குழப்பம் இருந்திருந்தால் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு ஒரு கடிதம் எழுதி பிற பாடங்களை (கணக்கு, அறிவியல்...) மலையாளத்திலோ அல்லது பிற மொழிகளிலோ கற்றுத்தருவதில் ஏதேனும் பிரச்னை உண்டா என்று கேட்டு, பதில் பெற்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதால் மலையாள சமாஜத்தின் அடிப்படை நோக்கம் தமிழ் என்னும் பாடத்தைப் பயிலாமல் இருக்கவேண்டும் என்பதே என்பது வெளிப்படையாகிறது.//

    என்ன சொல்ல?! பத்ரி, நீங்கள் சொன்னது போல், உயர் நீதிமன்றம் இவ் வழக்கைத் தள்ளுபடி செய்யுமென்றே நானும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. அனைத்து மாணவரும் தமிழ் படிக்கவேண்டும் என்ற கொள்கை முடிவுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் இதுவரை இருந்துவந்தன.

    ஆனால், 2004 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த ஒரு முக்கியமான தீர்ப்பின்படி(உஷா மேத்தா வழக்கு) இனிமேல் இதை எதிர்க்க முடியாது என நினைக்கிறேன்.

    அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் கலைஞர் அரசு இச்சட்டத்தினை கொண்டுவந்தததே. இதுகூடத் தெரியாமல்/ஏற்றுக்கொள்ளாமல் மறுபடியும் நீதிமண்றத்தை நாடியுள்ளார்கள் என்றால் என்ன சொல்வது?

    ReplyDelete
  7. //Hindi is the
    national language but it is not taught in govt and govt aided schools in Tamil Nadu.//

    வழக்கமான அதே பல்லவி.

    அனானி,

    முதலில் Hindi is not the national language. Hindi is an official language என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை பற்றி வலைபதிவுகளில் ஏற்கனவே தேவையான அளவிற்கும் மேல் பேசியாகிவிட்டது.

    ReplyDelete
  8. பத்ரி,

    இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //Hindi is the
    national language but it is not taught in govt and govt aided schools in Tamil Nadu.//

    வழக்கமான அதே பல்லவி.

    அனானி,

    முதலில் Hindi is not the national language. Hindi is an official language என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை பற்றி வலைபதிவுகளில் ஏற்கனவே தேவையான அளவிற்கும் மேல் பேசியாகிவிட்டது.//

    Arunmozhi, Can you please tell more on this Hindi being an "Official" language and not "national" language? Would like to seriously know more on this. I have heard something on this but I dont understand this concept fully.

    ReplyDelete
  10. Tamil Nadu is a linguistically very heterogeneous state unlike Kerala. Therefore TN should give freedom to linguistic minorities. After all, that is what Tamils are fighting for in other places. Hindi may not be legally the official language, but is clearly the most important language in the Indian subcontinent. So special treatment for Hindi is required.

    ReplyDelete
  11. Whether Hindi is the official language or not, its imposition is
    bad.So is the imposition of Tamil
    on non-Tamil speakers.Let parents and children decide what languages they want to learn.Is the TN govt. willing to allow teaching of Hindi as an option in the govt. aided
    schools.Even if my mother tongue is
    Tamil the govt. should not force me
    to study that.
    Is the TN govt treating all those with Tamil as equals in education
    and employment.Is it not discriminating in terms of caste.
    Is not giving some more benefits
    than others.

    ReplyDelete
  12. Every state in this world wants its traditional language to be the linguafranca in its territory.

    Australia wants to continue as an English speaking nation forever.
    France wants to continue as an French speaking nation forever.
    Malaysia wants to continue as a Malay speaking nation forever.

    Likewise , nobody can demand in the US saying -
    "I want to have a govt school where English should NOT be taught.(even as a language)"

    Similarly TN has the right to maintain Tamil as the predominant "language of the land".
    To achieve this, everyone living in TN should know Tamil.

    By the same logic, Hindi has similar rights in its traditional Hindi-speaking areas (UP,Bihar,MP etc) BUT NOT in other Indian regions. Elsewhere it is only left to the option of the concerned states.

    India is a federation of voluntary states to form the Indian Union.
    This is the reason why Nehru didnt object TN not learning Hindi.

    But at the sametime, the state govt should provide necessary facilities to the minorites
    to learn their language in govt-run schools.

    The current legislation NOT ONLY provides for learning any mother tongue, it ALSO does NOT bar
    anyone to conduct the lessons in their language medium, as Badri pointed out.

    The "Anonymous" writer asks,

    "Is the TN govt. willing to allow teaching of Hindi as an option in the govt. aided schools ?"
    Yes, Hindi can be learnt in Govt/aided schools, ONLY IF your mother tongue is Hindi.

    Why Hindi is not taught to everyone ?
    Well, that depends on the policy of the govt.
    In democracy, Govt policies are to be viewed as reflecting the public opinion.

    Other question by the "Anonymous" goes,
    "Is the TN govt treating all those (who studied) Tamil as equals in education and employment ?..Is it not discriminating in terms of caste ?"
    is irrelevant to this discussion.

    I think, he believes that 'not learning Tamil' is a way of showing his resentment towards the perceived "discrimination in terms of caste ".

    For a person living in TN, learning Tamil is not a favour, it is rather obligatory.

    ReplyDelete
  13. Cyborg writes "India is a federation of voluntary states to form the Indian Union.
    This is the reason why Nehru didnt object TN not learning Hindi."

    No, India is not a federation of voluntary states. India is a union created after the exit of the British. The State of Tamil Nadu did not opt to join India. It was part of India de facto. Unlike USA, India is not a voluntary union, and without a civil war, no state can exit the union either. I know that D*K parties have been talking about a separate Tamil Nadu for decades - the only reason they didn't attempt to separate is that they know that it would take a war to do that.

    ReplyDelete
  14. Anonymous Mon Sep 11, 08:08:07 PM IST ,

    You are right..! There is still room for refinement in Indian constitution, so that all nationalities in the country FEEL HOME.. I too feel that D*K parties need to push towards this kind of federalism. Otherwise, India would end up becoming 'Hindu-Hindi' country at the expense of the freedom of various nationalities. Right now, I see atleast three nationalities, (Tamils & other 'Dravidians', Indian Muslims, & North-east Indians) that have difficulties identifying themselves with the so-called 'mainstream Indians'.

    ReplyDelete
  15. The problem in North-East is different.Muslims suffer from some
    imaginary problems.The so called
    dravida parties will never opt for a separate homeland as they have tasted power at centre and state.

    ReplyDelete
  16. I wrote: "No, India is not a federation of voluntary states. " when I replied to Cyborg. I think Cyborg interpreted my reply in a different way than that in which I intended.. I meant that Tamils will need to adjust to the rest of India, not the other way round, as Cyborg is implying.

    ReplyDelete
  17. பத்ரி,

    நான் பெங்களூரில் வஸிக்கிறேன். ஓரளவுக்கு பொதுஜனங்களோடு பழகியவன். இங்கே பல பள்ளிகள் "தமிழ் மீடியம்"தான்.

    இதில் படித்த பல கன்னடர்களுக்கு கன்னடத்தைவிட தமிழில்தான் பயிற்சி அதிகம்.

    நான் சொல்லும் பள்ளிகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி ராமதாஸின் பேரக்குழந்தைகள் போன்றவர்களோ, ஹிந்தியை சரளமாக பேசத்தெரிந்த கருணானிதி குடும்ப குழந்தைகள் படிக்கும் பள்ளிகளோ இல்லை. இவர்களது பேச்சை கேட்டு ஏமாறும் என் போன்ற ஏழைகள் படிக்கும் பள்ளிகள்.

    ReplyDelete
  18. கருணாநிதி ஒரு தமிழ் துரோகி
    CBSE/ICSE பள்ளிகள் மூலமாக இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கிறார்.
    கட்டாயத் தமிழ் மொழி சட்டம் காற்றோடு பறந்துவிட்டு CBSE/ICSE பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழை நீக்கி இந்தியை திணிக்கிறார் கருணாநிதி.

    தெலுங்கு கருணாநிதியின் தமிழ் வெறுப்பு அம்பலமாகிவிட்டது.

    ReplyDelete