இது ஒரு விளம்பரம்.
சென்னை, மைலாப்பூரில் வித்லோகா என்னும் எங்களது புத்தகக் கடை ஒன்று உள்ளது.
* பெரும்பாலும் தமிழ்ப் புத்தகங்கள், கொஞ்சம் ஆங்கிலப் புத்தகங்கள்.
* முற்றிலும் குளிரூட்டப்பட்ட கடை.
* உள்ளே உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க, படிக்க நாற்காலிகள்.
* குளிர்ந்த குடிநீர்.
* உள்ளேயே கழிப்பறை வசதி!
* wi-fi இணைய வசதி. உங்கள் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வந்தால் சுகமாக உட்கார்ந்து இணையத்தில் உலாவலாம். இலவசமாக.
* மடிக்கணினி இல்லாதவர்கள், கடையில் இருக்கும் ஒரு கணினியில் வேண்டுமென்றால் உலாவலாம். இலவசமாக.
* வாரத்தில் ஏழு நாள்களும் திறந்து இருக்கும். காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை.
இனிமையாகப் பொழுதைப் போக்க விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் வித்லோகா வரலாம். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!
முகவரி :
வித்லோகா
புது எண். 238, பழைய எண். 187, ராபியா கட்டடம்
பீமசேனா கார்டன் தெரு
ராயப்பேட்டா ஹை ரோடை ஒட்டி, நோக்கியா ஷோரூம் அருகில்
மைலாப்பூர்
சென்னை 600 004
தொ.பே: 4231-2803/05
பி.கு: தமிழ் வலைப்பதிவுலகை சமீப காலமாகக் கலக்கிக் கொண்டிருக்கும் பாலபாரதி இங்குதான் இருக்கிறார்.
ஐந்து புத்தகங்கள் – 9
2 hours ago
Barnes&Noble style??
ReplyDeleteVazhththukkaL!!!
..aadhi
அட, பாலபாரதி இவர்தானா? நான் ஒரு நாலஞ்சுதரம், இவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.... ஆனால், புகைப்படத்தில் இருந்து கண்டு கொள்ள முடியவில்லை..
ReplyDeleteசரி, புக்லாண்ட்ஸ் மாதிரி, மோர் எல்லாம் தருவீங்களா?
சிங்கப்பூர் நூல் நிலையங்களில் இத்தகைய வசதியை உண்டு. சென்னையில் அதேபொல் தருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
மெலும்
கிழக்கு பதிப்பக நூல்கள் சிங்கபூர் நூல் நிலையத்தில் இல்லை ஏன்?
பத்ரி அவர்களே,
ReplyDeleteஅடுத்த முறை நான் வருவேன்,புத்தகம் வாங்க அல்ல.
ஒசி,ஏசி காத்த வாங்க.
முகு,கடலூர்
நல்லா இருக்குங்க புத்தகக்கடை. இங்கேதான் நானும் பாலபாரதியைச் சந்தித்தேன்.
ReplyDeleteஉள்ளே புத்தகங்களை விலை போட யூனிக்கோடு தமிழில் ஒரு நிரலையும் பார்த்து அசந்தேன்.
ஞாயிறன்றும் இரவு வரை திறந்திருப்பதற்கு நன்றி. அடுத்த முறை விசிட் அடிக்கும்போது உட்கார்ந்து நூலகம் போல் பயன்படுத்த வேண்டியதுதான் பாக்கி :-)
ReplyDeleteஅன்புள்ள பத்ரி,
ReplyDeleteநானும் பினாத்தல் சுரேஷ் மற்றும் பாலபாரதியை வித்லோகா புத்தகக் கடையில்தான் சந்தித்தேன். தங்கள் வித்லோகா, ஹிக்கின்பாதம்ஸ் / லேண்ட்மார்க் அளவு புகழ்பெற வாழ்த்துகிறேன்.
சீரிய அரிய முயற்சி.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.
பத்ரி,
ReplyDeleteஞாயிறன்றும் கடை திறந்து வைத்திருப்பது புத்தகப் பிரியர்களுக்கு சிறப்பான, வசதியான விஷயம். தங்கள் கடையின் வேலை நேரமும் மிக மிக வசதியான ஒன்று. பெங்களூரிலும் எல்லா நாள்களிலும் செயல்படும் ஒரு புத்தகக் கடை இருக்கிறது (அங்கு தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை). மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் ஞாயிறன்றும் புத்தகக் கடை செயல்படாதா என நினைத்திருக்கிறேன். விரைவில் மதுரையிலும் தங்கள் கிளையைத் திறக்க என் எண்ணங்கள் !
பத்ரி,
ReplyDeleteவித்லோகா நல்ல முயற்சி. கடைக்குச் சென்று வந்தவள் என்ற முறையில், என் பரிந்துரை:
மடிக்கணினி பயன்படுத்த இன்னும் அதிக வசதியான நாற்காலிகளும் மேஜைகளும் இருந்தால் நன்றாக இருக்கும்..
தமிழ் மற்றும் ஆங்கிலக் குறும்படங்களும் பார்த்ததாக நினைவு.. அதையும் சொல்லி இருக்கலாமே...
//கிழக்கு பதிப்பக நூல்கள் சிங்கபூர் நூல் நிலையத்தில் இல்லை ஏன்? //
ReplyDeleteஅகிலன் இதை உங்களுக்கு யார் சொன்னது.ஆதவனின் தொகுப்பு,அசோகமித்திரன் கட்டுரைகள் முதல் சொக்கன்,ராம்கி சோம வள்ளியப்பன் எழுதியது வரை அத்தனை கிழக்கு பதிப்பக புத்தகங்களும் சிங்கப்பூர் நூலகத்தில் உண்டு.நீங்கள் நூலகத்தைச் சொல்கிறீர்களா?புத்தகக் கடையைச் சொல்கிறீர்களா?
பத்ரி உங்களிடம் இருக்கும் குறும்படங்களின் பட்டியலை எனக்கு அனுப்பி வைப்பீர்களா?இந்திய மொழிகளில் வெளியாகிய Classic படங்கள் உங்கள் கடையில் கிடைக்கின்றனவா?
பத்ரி,
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றிகள்.
உங்களின் கடைக்கு இணையத்தளம் இருக்கிறதா? என்னென்ன தமிழ்ப்புத்தகங்கள் உங்கள் கடையில் இருக்கிறதென்பதை நான் எப்படி அறிந்து கொள்ளலாம்?
very nice to hear.
ReplyDeleteஈழநாதன், புகித் மேரா நூல் நிலையத்தில் தான் தேடினேன், நிங்கள் எந்த நூல் நிலையதில் கிழக்கு பதிப்பக நூல்களை
ReplyDeleteஅகிலன்
ReplyDeleteபெரும்பான்மையான தமிழ் நூல்கள் பின்வரும் நூலகங்களில் கிடைக்கும் woodlands,ang mo kio,jurong east.and main library(victoria st).நான் அனேகமான கிழக்கு புத்தகங்களை ang mo kio நூலகத்திலும் பிரதான நூலகத்திலும் பார்த்திருக்கிறேன்
வாழ்த்துகள் பத்ரி
ReplyDeleteவித்லோகாவும் வளர்ச்சியடையட்டும்
இத்தனை வசதி செய்கிறீர்களென்றால்
அங்கே இருந்து நூலகம் போல் அமர்ந்து ரெபரென்ஸ் எடுத்துச் செல்லவும் அனுமதிப்பீர்களா:-)
வாழ்த்துக்கள் பத்ரி..
ReplyDeleteநான் ஒருமுறை வந்துள்ளேன்...
ReplyDeleteகடை நல்லா இருந்தது.. மேலும் மேலும், புத்தகங்கள் பெருகட்டும், கடையும் வளரட்டும்( கடை கொஞ்சம் விரிவடைய வேண்டும் என்பதைத்தான் சொல்கிறேன்).
வாழ்த்துக்கள்..
பத்ரி,
ReplyDeleteநல்ல திரைப்பட ஸிடிக்களையும் விற்பனை செய்யலாமே?
நண்பர் தங்கமணி Spring, Summer, Fall, Winter என்கின்ற படத்தை பற்றி எழுதினார். அந்த படம் இங்கே கிடைக்கவில்லை. நான் பார்க்க நினைத்து, பார்க்க முடியாத படங்கள் பல.
ஆன்லைன் மூலம் வாங்க முடியும் என்றால் இன்னும் ஸ்லாக்கியம்.
சரி, வித்லேகாவின் இணைய முகவரி என்ன? ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கலாமா?
(செந்தழல் ரவி சொல்லியிருந்தாலும், மீண்டும் கேட்கிறேன்.)
http://www.vidloka.in/ என்னும் முகவரி மூலம் புத்தகங்களை இணையம் வழியாக வாங்கலாம்.
ReplyDeleteகுறும்படங்கள் etc. இப்பொழுதைக்கு குறும்படங்கள் நிறைய இல்லை. ஆனால் இன்னமும் ஒரு மாத காலத்துக்குள் நிறைய குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவை கிடைக்குமாறு செய்துவிட்டு தகவல் தருகிறேன்.
ReplyDeleteVIDHLOKA-VUKKU VAAZHTHUKKAL BADRI. KOODIYA SEEKKIRAM VARUKIREN.
ReplyDeleteவாழ்த்து(க்)கள் பத்ரி.
ReplyDelete'அடுத்தமுறை' லிஸ்ட்டில் எழுதிவச்சுக்கிட்டேன்.
//நல்ல திரைப்பட ஸிடிக்களையும் விற்பனை செய்யலாமே?//
ReplyDeleteநண்பர் ம்யூஸின் அறிவுறையை கேட்டு திருட்டு விஸிடிக்கள் எதையும் விற்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்