செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுரையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தேன்.
வரும் சனி, ஞாயிறுடன் கண்காட்சி முடிவடைகிறது. அந்த இரண்டு நாள்களிலும் நான் மதுரையில் 'கிழக்கு பதிப்பகம்' ஸ்டாலில் (எண் 52, 53) இருப்பேன். சென்றுவந்ததும் மதுரை கண்காட்சியைப் பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட் தருகிறேன்.
தென் தமிழ்நாட்டில் புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் சில இதழியல் மாணவர்கள் வட தமிழக மாவட்டங்களில் கருத்துக்கணிப்பு நடத்தி சில தகவல்களைச் சேகரித்துள்ளனர் என்று இன்றைய தி ஹிந்து செய்தித்தாளில் வந்துள்ளது. அதன் சாரம்:
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 329 பேர்களிடம் நடத்திய கணிப்பு.
* 50%-த்தினர் ஆங்கிலத்தில் படிக்க விரும்புகிறார்கள்.
* 40%-த்தினர் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்க விரும்புகின்றனர். 40% கடைகளுக்குச் சென்று வாங்குகின்றனர்.
* புத்தகம் வாங்கத் தூண்டுபவை - இதழ்களில் வரும் புத்தக விமரிசனங்கள், பிறரது பரிந்துரைகள், எழுத்தாளரின் புகழ்.
* 20% தன்னம்பிக்கை, ஆளுமை வளர்ச்சி தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிக்கின்றனர். 25% பொழுதுபோக்கு தொடர்பான புத்தகங்களைப் படிக்கின்றனர்.
முழுமையான அறிக்கை கிடைத்தால்தான் இந்தக் கணிப்பு எவ்வளவு உபயோகமானது என்று புரிந்துகொள்ள முடியும்.
எதற்குரியது நம் வாழ்க்கை?
8 hours ago
இப்போது தான் மதுரை புத்தகக் கண்காட்சியிலிருந்து வருகின்றேன்...
ReplyDeleteஏகப்பட்ட தமிழ் புத்தகங்கள் மட்டுமே...ஆங்கிலப் புத்தகங்கள் வெகு சொற்பமே...
உங்கள் கிழக்கு பதிப்பக ஸ்டாலிலிருந்து 3 புத்தகங்கள் வாங்கினேன்...பாரா வின் நிலமெல்லாம் ரத்தம், ஹெஸ்பல்லா, சொக்கனின் ஹமாஸ்.
மற்றபடி கண்காட்சியில் பார்க்கும் இடமெல்லாம் கார்ல் மார்க்ஸ் போஸ்டர், அவர் சித்தாந்தங்கள், மாவோ, சே குவேரா, புத்தகங்கள் .. (ஒரு வித மகிழ்ச்சியே இதில்...dead ideology living in books and libraries!!)
கல்கியின் படைப்புகள்...தனியிடம் 150 முதல் 350 ரூ வரை உள்ள பொன்னியில் செல்வன்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்...!!
06.09.2006 அன்று மதியம் 1மணி அளவில் நம் நண்பர் தருமியை அவரில்லத்தில் முதன்முதலில் சந்தித்து உரையாடிவிட்டு மதியம் 2மணிக்குப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.
ReplyDeleteஏகப்பட்ட தமிழ்ப் பொத்தகங்கள் காணப்பட்டாலும் பயனுள்ள பொத்தகங்கள் வெகு சிலவே. மற்றவைகள், மனிதனின் அறியாமையை(மூட நம்பிக்கைகளை)த் (சோதிடம், எண்கணிதம், சித்தர்களின் மந்திரம்)தூண்டும் தலைப்பில் உள்ளவையே.
சித்தர் பாடல்கள் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு சித்தர் எழுதிய பாடல்களின் மூலம் மட்டும் தனித்தனியே அச்சிட்டு அவைகள் காசாக்கப்படுகின்றன. உரையுடன் கூடியவையைக் காணமுடியவில்லை.
திருமந்திர விருந்து, திருமந்திரத் தொகுப்பு.... இன்னும் பலபெயர்களில் எழுதப்பட்டுள்ள பொத்தகங்களில் சித்தர்களின் இரகசியப்பூட்டுக்களை உடைத்து உண்மைப் பொருள் கூறப்படவில்லை. எல்லாம் மேம்போக்காக எழுதப்பட்ட நூல்கள்.
கிழக்குப் பதிப்பகத்தின் பிரிவிலிருந்து "நிலமெல்லாம் (இ)ரத்தம்" வாங்கினேன்.
ஆங்கிலப் படைப்புக்களைப் பார்க்கவில்லை. ஏனெனில் ஆங்கிலம் அவ்வளவாக வராது(தெரியாது!).
கல்கி,சண்டில்யன் ஆகியோரின் கதைப்பொத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. இன்னும் பலர் எழுதிய முல்லா கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை இராமன் கதைகள்... ஏராளம்.
இரவு எட்டு மணிவரை சுற்றியதில் இவ்வளவுதான் காணமுடிந்தது.
நான் வாங்கிய பொத்தகங்கள்:
1. சதகத் திரட்டு
2.குமரமலை பிள்ளைத்தமிழ்
3.பெரிய புராணக் கதைகள்(இல்லாளுக்காக)
4.நிலமெல்லாம் ரத்தம்.
5.சில பதிப்பகங்களின் விலைப் பட்டியல்.
ஒட்டு மொத்தத்தில் "பயனுள்ள பொழுது"
இன்று சன் டிவியில் இது பற்றிய செய்தி தொகுப்பு வந்தது..
ReplyDeleteசென்ற திங்கள் மற்றும் செவ்வாய் (4 மற்றும் 5 செப்டம்பர்) இரண்டு நாட்களும் மதுரை புத்தக கண்காட்சி சென்று சுமார் 3500 மதிப்பிலான புத்தகங்களை வாங்கினேன். பெரும்பாலான கடைகளில் (விகடன், நக்கீரன், Hindu உட்பட)வெறும் 10% மற்றுமே தள்ளுபடி தருகிறார்கள். கடைகளுக்கு தரும் 20% தந்தால் நல்லது. ஒரு எழுத்தாளன் (6 Medical Books)மற்றும் ஒரு புத்தகத்தை சுயமாக பதிப்பித்தவன் என்ற முறையில் இது மிகவும் கம்மி. மருத்துவம் சார்ந்த BI (Jaypee) கடையில் 25% முதல் 33% வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது
ReplyDeleteஉங்கள் கடையின் விலைப்பட்டியல் வித்தியாசமான முயற்சி. நன்றாக உள்ளது. மற்றவர்களிடமிருந்து தனித்து முத்திரை பதிக்க முயல்வது (மற்றுமொரு உதாரணம் T-Shirt) ஆரோக்கியமான முயற்சி
நாளை மறுபடியும் மதுரை வருகிறேன். மாலை முடிந்தால் சந்திக்கலாம்.