காவிரி நதிநீர் ஆணையம் கொடுத்த தீர்ப்பை யாருமே ஏற்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. பகிர்ந்து வாழும் மனப்பான்மை தனி மனிதர்களுக்கு இடையே இருக்கக்கூடும். ஆனால் திடமான அரசியல் உறுதி இல்லாத மாநிலங்கள், கட்சிகள், தலைவர்களுக்கிடையே நதிநீரையோ அல்லது குறைவாக உள்ள வளங்களையோ பகிர்வது இயலாத காரியம் என்று தோன்றுகிறது.
சென்ற முறை போல் அல்லாமல் இம்முறை தமிழர்கள் தாக்கப்படுதல், கொலை என்றெல்லாம் கர்நாடகத்தில் நடக்கவில்லை என்பது ஆசுவாசம் தரும் செய்தி. ஆந்திராவிலிருந்தும் மஹாராஷ்டிரத்திலிருந்தும் காவல்துறையை வரவழைத்து அமைதி காக்கவேண்டிய நிலை கர்நாடக மாநிலத்தைத் தலைகுனியச் செய்யும் செய்தி. எந்தவிதமான பிரச்னைகள் இருந்தாலும் மொழிச் சிறுபான்மையினரின் இருப்பைக் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயலைச் செய்வதன்மூலம் கன்னடர்கள் தங்கள் அறவுணர்ச்சியையும் அறிவையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.
குறைதீர்ப்பு ஆயங்கள் வழங்கும் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்றும் இரண்டு பக்கங்களும் உறுதியளித்தால் அன்றி இதுபோன்ற டிரிப்யூனல்களை அமைப்பது உபயோகமற்றது என்றே தோன்றுகிறது.
-*-
நதிநீர்ப் பங்கீடு குறித்து கன்னட - தமிழ், தெலுங்கு - தமிழ், மலையாள - தமிழ் மக்களிடையே பிரச்னைகள் உள்ளன. ஆனால் இந்த மூன்றில் கன்னட - தமிழ் மக்களிடையேயான பிரச்னை ஆழமானது.
மலையாளமோ தெலுங்கோ தமிழ் மொழியுடன் போட்டிபோட, சண்டையிட முயற்சி செய்வதில்லை. ஆனால் தமிழ் 'செம்மொழி' என்று அறிவிப்பு வந்தவுடனேயே போட்டிபோட்டுக்கொண்டு கன்னடத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடகத்தில் எழுந்தது.
தமிழ் சினிமாப் படங்கள் தெலுங்கிலும் தெலுங்குப் படங்கள் தமிழிலும் மொழிமாற்றி, டப் செய்யப்பட்டு ஓடுவது சர்வசாதாரணம். கேரள மக்கள் தமிழ்ப் படங்களை விரும்பிப் பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு என்று ஒரு திரைப்பட பாரம்பரியம் உண்டு. ஆனால் தமிழ் சினிமா அவர்களை எந்தவிதமான நெருக்கடிக்கும் இழுத்துச் சென்றதில்லை.
கர்நாடகத்திலோ தமிழ் சினிமாவை (ஹிந்தி சினிமாகூட) காண்பிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. தமிழ் சினிமாவை டப் செய்து அங்கு திரையிட முடியாது. பல தமிழ்ப் படங்கள் மீண்டும் கன்னடத்தில் முழுவதுமாக உருவாக்கப்பட்டு ஓடும்.
கன்னட மக்கள் தங்கள் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து பெறுவதில் ஒற்றுமை காட்டுவதில்லை என்று நினைக்கிறார்கள். தமிழக அரசும் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன்மூலமாகத் தம் மாநிலத்துக்கு வேண்டியவற்றை சலுகையாகப் பெற்றுவிடுகிறார்கள் என்று கன்னட மக்கள் நினைக்கிறார்கள்.
காவிரிப் பிரச்னையை முன்னிட்டு 1991-ல் நடந்த கலவரத்தின்போது பல தமிழர்கள் கன்னட வெறியர்களால் கொல்லப்பட்டனர். பலர் உடைமைகளை இழந்தனர். அதன்பின் 2002-இல் உச்ச நீதிமன்ற ஆணைக்குப் பின்னும் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தது மட்டுமின்றி அப்பொழுதும் கலவரங்கள் ஏற்பட்டு தமிழ்ப் படங்கள் ஓடும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
1991-க்குப் பிறகு இந்தியாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி காரணமாக மக்களுக்கு ஓரளவுக்கு நாகரிக உணர்வு அதிகமாகியுள்ளது. ஆனாலும் உள்ளூரத் தேங்கிக் கிடக்கும் காட்டுத்தனம் தெருவில் தலைவிரித்தாடுகிறது. போக்குவரத்தை பாதிப்பது, பொதுச்சொத்துக்கும் தனிச்சொத்துக்கும் சேதம் விளைவிப்பது இன்றும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கு வாகனப் போக்குவரத்து, சரக்கு லாரிகள் செல்வது தடையில் உள்ளது. ஏதாவது பிரச்னை என்றால் தமிழ்ப் படங்கள், தொலைக்காட்சி சானல்கள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
இந்திய மாநிலங்களுக்கு இடையே எப்பொழுதும் பிரச்னைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்படும் வகையில் தீர்க்க வேண்டியுள்ளது.
கேரள தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே நீர்ப்பங்கீட்டுப் பிரச்னை எந்த அளவுக்கு இருந்தாலும் கேரளாவில் வாழும் தமிழ்ச் சிறுபான்மையினர்மீது அடிதடி தாக்குதல் ஏதும் நிகழ்வதில்லை. அதே நிலை கர்நாடகத்திலும் ஏற்பட வேண்டுமென்றால், கர்நாடக மக்கள் அதிகக் கல்வி அறிவு பெற மத்திய அரசு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யலாம். ஒரு சில மாநிலங்கள் காட்டுமிராண்டித்தனத்தில் மூழ்கிக் கிடக்கும்வரையில் இந்தியாவுக்கு முழுமையான கதிமோட்சம் கிடையாது.
Monday, February 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
Hi,
ReplyDeleteThis is well written, but there are petty generalisations all along, but that cannot be avoided when you are a observer and dont have absolutly no control things happening around.
Here is my thought:
Is this happening only in karnataka?
Did we not see a uprise in north FC studetns against reservations. Did we not see uprise in North and finally succeed also in getting their share in IIM's. Why is it happening like this..?
Whereever and whenever people start feeling that their rights are being taken away, they stage a protest!!
In both the cases, legally they are not right, but they thought that by overpowering they can win.
Why tamil nadu's peace is restored in most of the cases. Because, they are confused like me. I dont know whether it is generousness or foolishness. We can see many leaders in Tamilnadu who dont hav Tamil as mother tongue. We are like a people, who have been kept under Claws of dravidian parties and started believing, that we dont have anything to control and started accpeting things whatever happens to us.
In this case, my stand is the verdict is neutral and has maintained what was given in interim verdict. Both the state leaders know that it cannot get better. but they have their own opposition parties who are going to question them without any rationale and they are giving statements, so that the public is not swayed on the opposition side.
பத்ரி, என்ன சொல்றதுன்னே தெரியலை. இன்னிக்கு அதுவும் ஒரு வீக்கோட ஆரம்பநாளை பந்த் என்று அறிவித்ததால் எத்தனை சாப்ட்வேர் கம்பெனிகளுக்கும் எத்தனை மில்லியன் நஷ்டமோ தெரியலை.
ReplyDeleteஉண்மைதான் பிரச்சனை எதுவும் இல்லாமல் முடிந்துவிட்டது.
CNNIBNல் இன்று ஒரு செய்தி பார்த்தேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான நதிநீர்ப் பிரச்சனையில் உலகவங்கியின் ஆய்வாளர்கள் வந்து, பார்த்துவிட்டு அணைக்கட்டின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு(குறைந்த பட்சம்) சென்றார்கள் என்று. எனக்கு வேடிக்கையாகயிருந்தது.
எனக்கு நன்றாகத் தெரியும் ப்யாஸில்(vyas) ஒரு அணையை இந்தியா கட்டிவருகிறது. ஒரே காரணம் பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரின் அளவைத் தடுக்கத்தான் என்று டெல்லியில் இருக்கும் பொழுது அந்த அணைக்கட்டின் பொறுப்பில் இருக்கும் சில ப்ரஞ்சுக் காரர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன், எவ்வளவு உண்மையென்று தெரியாது.
ஆனால் இந்த உலக வங்கி சோதனை அதற்கானது அல்ல என்று நினைக்கிறேன் தெரியவில்லை.
இந்த இடுகைக்கான எதிர்ப்பை எங்கிருந்து தொடங்குவது என்று புரியவில்லை. ஒரு tamil supremacy complex மட்டுமே வெளிப்படுகிறது இவ்விடுகையில்.
ReplyDeleteதமிழகம் - கேரளம், தமிழகம் - ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்குகிடையேயான நதி நீர்ப் பங்கீட்டின் அளவு காவேரி நதி நீரை ஒப்பிடும் போது miniscule என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளவில்லை. ஒரு நகரின் மொத்த ஜனத்தொகையில் 25% வகிக்கும் ஒரு சிறுபான்மையினரால் அச்சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்களெல்லாம் ஏற்படக்கூடுமென்ற considerationகளுக்கெல்லாம் இடமேயில்லை. (சென்னையில் ஒரு வேற்று மொழிச் சிறுபான்மையினரின் விழுக்காடு ஒரு 5% அதிகரிக்குமானால், அப்போது ஏற்படக்கூடிய சமுதாய மாறுதல்களைப் பற்றியும், அவை எதிர்கொள்ளப்படும் விதத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.) குருட்டாம் போக்கில் ஒரு ஒப்பீடு செய்து, ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்தவருக்கு அறிவு / கல்வி / நாகரீகம் குறைவு என்று அகலமான ஒரு பிரஷ்ஷை வைத்துத் தீட்டி விட்டீர்கள். நீங்கள் உயர்த்திப் பேசும் கேரளத்திலோ, தமிழகத்திலோ, கலவரங்களே நிகழ்ந்ததில்லையா? தனிச்சொத்து / பொதுச்சொத்து சேதப்படுத்தப் பட்டதேயில்லையா? அப்படியென்றால் தயவு செய்து நீங்கள் கன்னடியருக்குப் பரிந்துரைக்கும் கல்விமயமாக்கல் / நாகரீகமயமாக்கல்களை தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் சேர்த்துப் பரிந்துரை செய்ய முடியுமா?
தமிழர்களுக்கு தங்கள் மொழி செம்மொழி என்று கருதிக்கொள்ள எவ்வளவு உரிமையுள்ளதோ, அதே அளவு கன்னடியருக்கும் தங்கள் மொழியைப் பற்றிக் கருதிக்கொள்ள உரிமையுள்ளது.
பெங்களூரில் எவ்வளவு வேற்று மொழிப்படங்கள் திரையிடப்படுகின்றன, அதே போல் சென்னையில் ஆங்கிலமல்லாத வேற்று மொழிப்படங்கள் எவ்வளவு திரையிடப்படுகின்றன போன்ற ஒப்பிடல்களைச் செய்து பார்க்க வேண்டும், ஒரு மாநிலத்தவரின் ஒட்டுமொத்த சகிப்புத்தனமையைப் பற்றி விமர்சிக்கும் முன்பு. (Hypothetical exercise: Let GoI announce a Hindi usage policy and let's see how well the hindi movies are tolerated in TN)
பி.கு - காவிரி நதி நீர் பிரச்சனையைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. கன்னடியர்களைப் பற்றிய உங்களது தொனியை மட்டுமே விமர்சித்திருக்கிறேன்.
Well Said Sir! During 1991, I was in Bangalore and had to walk about 8 KMs back to home one day. Dirty Hotels with closed shutters with political help were minting money from people. Unfortunate.
ReplyDeleteVattal Nagaraj and the Kannada Chaluvali Sanga, should be banned. I think he might be genuine interest person, but he lacks the generosity. His political will is strong! (getting him an MLA seat after 30 years of hard work!). So banning will create enough reasoning in their minds. People of Mandya waste 90 TMC water, by letting it flood farms to claim damages, without any real crop, thanks to Bangarappa. This is the fact. FREE MONEY! SR Bommai to Deva Gowda will not part with it. That is the issue. Captain GR Gopinath of Air Deccan fame too has made claims.
(I am a Kannadiga born in Tamilnadu, so practically I will choose a side of my domicle! No pun...)
இப்படி ஒரு மாநிலம் தீர்ப்பை மதிக்காமல் இருப்பதை நீதித்துறை எப்படி அனுமதிக்கிறது
ReplyDeleteVoW: தமிழகத்தில் நிச்சயமாக மொழிவெறி, மொழி உணர்வு அமைப்புகள் உள்ளன. ஆனால் தெருவில் இறங்கி சொத்துகளுக்கு நாசம் ஏற்படுத்தும் அளவுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லை.
ReplyDeleteஅதனால் தமிழர்கள் நாகரிகத்தின் உச்சகட்டம் என்று நான் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் முக்கியமான கட்சிகளுக்கு இடையேயான வன்மம் பிற மாநிலங்களைவிட அதிகம். அதனால் கட்சிகள் தங்கள் தலைவர்களுக்கு ஆபத்து என்று நினைத்தால் பஸ்ஸோடு மக்களைக் கொளுத்தத் தயங்கமாட்டார்கள் என்று காட்டியுள்ளனர்.
கேரளத்திலும் தமிழகத்திலும் மிக அதிகமான அளவு பிறமொழிச் சிறுபான்மையினர் இல்லை. ஆனால் சேதம் விளைவிக்க வேண்டும் என்றால் கன்னட எழுத்து எழுதியுள்ள கன்னட பஸ்களை எரிக்கலாம். கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களை எரிக்கலாம். இன்ஃபோசிஸ் நிறுவன அலுவலகங்கள்மீது கல்லெறிந்து தாக்கலாம்! (அதனை ஒரு கர்நாடக நிறுவனம் என்று நினைத்துக்கொண்டு!) அதெல்லாம் இங்கு நடக்கவில்லை. 1991-ல் தமிழர்கள் பெங்களூரில் கொல்லப்பட்டபோது தமிழகத்தில் எங்கு கன்னடம் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்று யாரும் தேடிக்கொண்டு ஓடிக் கொலைச்செயலில் இறங்கவில்லை.
நாகரிகம் நிச்சயம் தமிழகத்தில் அண்டை மாநிலத்தைவிட அதிகமாக உள்ளதாகத்தான் தெரிகிறது.
ஹிந்தித் திணிப்பு என்று வருவது வேறு. அரசிடமிருந்து வேற்று மொழி திணிக்கப்பட்டால் அதனை எதிர்ப்பது (நியாயமான முறையில்) மக்களின் உரிமை. கர்நாடகத்தில் இருக்கும் பள்ளிகளின் மொழிக்கொள்கை தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளின் மொழிக்கொள்கையைவிடக் கடினமானது. சொல்லப்போனால் தென்னிந்திய மாநிலங்களிலேயே மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க மொழிக்கொள்கை உடையது தமிழகம்தான்.
தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது மார்வாடிகள் கடன் கொடுக்கிறார்கள்; மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற புலம்பல் வரத்தான் செய்கிறது. அது வாய்மொழிப் புலம்பல் மட்டுமே. அடிதடியில் இறங்கி ஹிந்தி பேசுபவர்களைக் கொலை செய்ததில்லை.
தமிழகத்தில் ஹிந்தி, கன்னட, தெலுங்கு மொழித் திரைப்படங்களை வெளியிடுவதில் இதுவரையில் ஒரு பிரச்னை வந்ததில்லை. (ஹிந்திப் போராட்டத்தின்போது இருந்திருக்கலாம். எனக்குத் தெரியாது.) இன்றும்கூட புத்தம்புது ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலப் படங்கள் சென்னையில் ரிலீஸ் ஆகின்றன. பெங்களூரில் எம்மாதிரியான கடுமையான நெருக்கடிகள் தியேட்டர்காரர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
கேரளா - நிச்சயமாக தமிழகத்தைவிடவும் ஒருபடிமேலேதான் உள்ளது. கேரளாவில் உள்ள தமிழ்மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தவிதப் பிரச்னையும் வராது என்பது என் கருத்து. இதன் அடிநாதமாக நான் கல்வியறிவைத்தான் பார்க்கிறேன்.
நிச்சயமாக தமிழகத்துக்கும் கல்விக்கு நிதியை அதிகமாக ஒதுக்கவேண்டும். தமிழகத்திலும் சாதிப்பிரச்னைகள் பல மாவட்டங்களில் ஓங்கி இருக்கின்றன. கல்வியால் அதனையும் எதிர்கொள்ளமுடியும்.
Wel said Sir.
ReplyDeleteThere is no use of this Tribunal and all If the concerned party/parties are not obeying the verdict. Appeal, Re-appeal .... never ends. If "Nationalisation of River" will be a solution for this prob? Plese post ur view about Nationlisation of Rivers.
Bibin Chandra
Coimbatore
காவிரி நீர் தொடர்பான உங்களுடைய சமீபத்தியக் கட்டுரை ஒன்றைப் படித்தேன்.
ReplyDeleteஅதில் சில வரிகள் சினிமா உலகம் பற்றி இருந்தன. அதில் சில திருத்தங்கள்
உள்ளதாக நான் நினைக்கிறேன்.
# 'கேரள மக்கள் தமிழ்ப் படங்களை விரும்பிப் பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன்.'
* மலையாளப் படங்களுக்குச் சமமாக தமிழ்சினிமா மீதும் கேரள மக்களுக்கு
மோகம் உண்டு. ஆந்திரா போல அங்கு தமிழ் படங்கள் டப் செய்யப்படுவதில்லை.
அசல் தமிழ் படங்களே அங்கு ரிலீஸாகிப் பலத்த வரவேற்பைப் பெறுகின்றன.
கல்லூரி பெண்களிடையே தமிழ் நடிகர்கள் செல்வாக்கோடு உள்ளனர், குறிப்பாக
மாதவன், விஜய், அஜீத்.
சூர்யா டி.வியில் பல சந்தர்ப்பங்களில் தமிழ்ப் பாடல்கள் ஒளிபரப்புவதைக்
காணமுடியும். தமிழ், மலையாளம் என்று அவர்கள் பிரித்துப் பார்ப்பது
கிடையாது.
இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் மலையாள திரை உலகம்
கர்நாடகத்தின் பாணியை இப்போது பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஏதேதோ
காரணங்கள் சொல்லித் தமிழ் படங்கள் வெளியிடுவதற்கு அங்கு சில
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆதாரச் செய்தி -
http://sify.com/movies/malayalam/fullstory.php?id=14368852
# 'தமிழ் சினிமாப் படங்கள் தெலுங்கிலும் தெலுங்குப் படங்கள் தமிழிலும்
மொழிமாற்றி, டப் செய்யப்பட்டு ஓடுவது சர்வசாதாரணம். '
* தமிழ்நாட்டில் தெலுங்கு டப்பிங் படங்கள் ஓடுவதில்லை. ஆதலால் தெலுங்கு
டப்பிங் படங்களின் வரத்து தற்போது கணிசமான அளவில் குறைந்துவிட்டன.
உதயம், இதயத்தைத் திருடாதே, இதுதாண்டா போலீஸ், விஜயசாந்தி ஐ.பி.எஸ்
போன்றப் படங்களோடு இங்கு தெலுங்கு டப் படங்கள் மீதான மவுஸ்
குறைந்துவிட்டது. கடந்த பதினைந்து வருடங்களாக இதே நிலைமைதான். தமிழ்
நடிகர்கள் நடித்த தெலுங்குப் படங்கள் மட்டும் எப்பொழுதாவது தமிழில் டப்
செய்யப்படும். அதுவும் பைசா தேறாது.
Sa. Na. Kannan
//பெங்களூரில் எவ்வளவு வேற்று மொழிப்படங்கள் திரையிடப்படுகின்றன,//
ReplyDeleteOn the date of release or is there a time limit for this
What about in Chennai
Is it same or different
For Example if there is a Kannada Movie releasing on March one, when can that be shown in Chennai Thetres
When can a Tamil Movie releasing on March one shown in Bangalore theatres
Dr. Brunoவின் கேள்வி எனக்கானது என்று நினைத்து எழுதுகிறேன்:
ReplyDeleteதற்போதுள்ள நிலையின் படி, எந்த வேற்று மொழித் திரைப்படமும் அதன் முதல் நாளிலேயே பெங்களூரிலும் வெளியிடப்படலாம்.
முன்பு 12 வாரங்கள் தாமதித்து வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதற்கான காரணம், கர்நாடக மாநிலத்தில் கூட கன்னடப் படங்கள் ஓடுவதில்லை என்பதால் அவற்றை ஆதரிக்கும் வகையில், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அத்தகைய விதி அமலுக்கு வந்தது. இது பல துறைகளிலும் கடைப்பிடிக்கப்படும் protective measureஐப் போன்றதுதான். உ-ம், இன்றும் நமது ஊடகத் துறையிலோ, விவசாயத் துறையிலோ அந்நிய முதலீடு / இறக்குமதிகளுக்கு தடைகள் உள்ளன. இதனால், இந்தியர்கள் அனைவருமே காட்டுமிராண்டிகள் என்ற முடிவுக்கு அந்நியர்கள் வரலாம். ஆனால் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கான வலுவான காரணங்கள் நமக்குத்தான் புரியும்.
hai,
ReplyDeletei don't have tamil font. so i try to express my view in english.
i wish to comment on voice of wings. tamil people never think they are superior to others. the main cause of the problem is they pretend or they or generous. there should be some limit to everything.
kannadiga's know that nothing will happen to those kannadiga's who reside in TN. so they dare to do anything and they r behaving like pakistan govt. it might be becos of lack of education than tn, but its not the only reason, main reason is there is no unity between the politicians here to make a permenant solution, they haven't tried at all. before educating kannadiga's we have to educate our politicians, and for educated politicians we should teach ethics