ஒரு குடியரசுத் தலைவர், ஒரு மாநில ஆளுநர், ஒரு மொழி. சில சிந்தனைகள்.
முதலில் உத்தர பிரதேச மாநில ஆளுனர் டி.வி.ராஜேஷ்வர். ஓரிரு நாள்களுக்கு முன் காசியில் உள்ள சம்பூர்னானந்த் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பல்கலைக்கழக வேந்தரும் மாநில ஆளுநருமான ராஜேஷ்வர், "சமஸ்கிருதம் மட்டும் படித்துக் கொண்டிருந்தால் மாட்டு வண்டி யுகத்துக்குத்தான் செல்ல வேண்டும். சமஸ்கிருதத்தை இனியும் தேவபாஷை என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. சமஸ்கிருதம் படிப்பது போதாது, ஆங்கிலமும் அறிவியலும் வேலை வாய்ப்புக்கு அவசியம்" என்று சொல்லியுள்ளார்.
வெகுண்டு எழுந்த மாணவர்கள் அவர்மீது நாற்காலிகளையும் செருப்புகளையும் வீசி எறிந்துள்ளனர்.
சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில்போய் இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று சிலர் சொல்கின்றனர். பாஜக, வி.எச்.பி கோஷ்டியினர் ராஜேஷ்வர் பதவி விலகவேண்டும் என்று சொல்கின்றனர்.
எனக்கென்னவோ ராஜேஷ்வர் சரியாகத்தான் பேசியுள்ளதாகத் தோன்றுகிறது. எந்த இடத்தில் பேசவேண்டும், எதைப் பேசவேண்டும், எதைப் பேசக்கூடாது என்னும் வாதம் செல்லுபடியாகாது. மனத்தில் நினைத்திருப்பதை வெளிப்படையாக மாணவர்கள் மத்தியில் பேசியதில் தவறில்லை. ஆனால் அதற்கு மாணவர்களிடமிருந்து கிடைத்திருக்கும் எதிர்வினை மோசம். இந்த மாணவர்கள் மாட்டு வண்டி யுகத்துக்குத்தான் லாயக்கு என்று நினைக்கிறேன். ஒழுங்கான கல்வி அறிவு பெற்றிருந்தால் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டிருந்திருக்க மாட்டார்கள்.
மற்றுமோர் இடம், மற்றுமொருவர். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ குரு சார்வபவும சமஸ்கிருத வித்யாபீடத்தில் ஆற்றிய உரையில் சமஸ்கிருதத்தைப் பற்றி விதந்து ஓதியுள்ளார். (உரையின் தமிழாக்கம் ஜடாயு வலைப்பதிவில் உள்ளது.)
இந்தியாவில் வேறெந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் பரப்பப்படவேண்டும் என்று மத்திய மந்திரிகள் கூட்டங்களில் பேசுகிறார்கள்.
சமஸ்கிருதம் செத்த மொழி என்று சொல்வதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது. சில நூறு பேர்கள், அதுவும் பல்கலைக்கழக அளவில் கற்றுப் பேசும் ஒரு மொழி, வெகுமக்கள் மத்தியில் புழங்காத மொழி, செத்த மொழிதான். லத்தீன், பழைய கிரேக்கம் போன்று சமஸ்கிருதம் செத்த மொழிதான். இன்று வாழும் மொழிகள் உயிர்த்துடிப்புடன் கூடியவை. இன்றைய மக்களின் வாழ்க்கையை, நெருக்கடிகளை, சாதனைகளை, சாத்தியங்களை, சிந்தனைகளை, உணர்ச்சிகளை இன்று வாழும் மொழிகளால்தான் வெளிப்படுத்த முடியும்.
இதனால் சமஸ்கிருதம் தேவையில்லை; சமஸ்கிருத இலக்கியங்கள், எழுத்துகள் வீண் என்று நான் சொல்லவில்லை. சமஸ்கிருதம் மட்டுமன்றி உலகின் பண்டைய மொழிகளான பழைய கிரேக்கம், லத்தீன் ஆகியவையும் படிக்கப்பட வேண்டும். அந்த மொழிகளில் உள்ள சாஹித்யங்கள் ஆராயப்படவேண்டும். தரிசனங்கள், கண்டுபிடிப்புகள் மொழிமாற்றப்பட்டு வெகுமக்கள் மொழியில் கிடைக்கவேண்டும். அது போதும்.
சமஸ்கிருதத்தை எங்கும் நுழைத்து, பரப்புவதற்கென்று எக்கச்சக்கமாக நிதி ஒதுக்க அவசியமே கிடையாது. அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்.
சமஸ்கிருதம் தேவ பாஷை; சகல அறிவும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு மறைபொருளாக வேதங்களில் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது; சமஸ்கிருதம் மூலமாகவே கடவுளை அடையலாம் போன்ற கருத்துகளுக்கு இன்று பொதுமக்களிடமும் சரி, சான்றோரிடமும் சரி, எந்தவித ஆதரவும் கிடையாது. வேத கணிதம் என்றொரு 'புருடா' பல வருடங்களாக உலவி வந்த வண்ணம் உள்ளது. நடுவில், கணினி மொழிக்கு சமஸ்கிருதம்தான் மிகவும் உகந்த மொழி என்று ஒரு கருத்து ஆதாரமே இன்றி பரப்பப்பட்டது. மைக்ரோசாஃப்ட் பதறி அடித்துக்கொண்டு சமஸ்கிருதப் பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்தியதாகச் செய்திகள் ஏதும் கண்ணில் படவில்லை. இப்பொழுது குடியரசுத் தலைவர் சமஸ்கிருதம் குறியீட்டியல் துறையில் பயன்படுத்தப் படுவதாகச் சொல்லியுள்ளர். யாருக்காவது தெரியுமா எந்த வகையில் என்று?
மேற்படி நிகழ்ச்சி தொடர்பான படங்கள் குடியரசுத் தலைவரது இணையத்தளத்தில் இருந்தன. சின்னஞ்சிறு பையன்கள் தலையில் குடுமியுடன் காணப்படுகின்றனர். இதைப்போன்ற சமஸ்கிருத குருகுலங்கள் பலவற்றிலும் (பெரும்பாலும்) ஏழை பிராமணர்கள், ஏதோ சமஸ்கிருதப் படிப்புடன் மூன்று வேளை சோறும் இலவசமாகக் கிடைத்தால் நலம் என்று முடிவு செய்து தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றனர். இப்படிப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கை பற்றி எனக்கு பயமாக உள்ளது. ஆளுநர் ராஜேஷ்வர் சொன்னதுபோல இந்தக் குழந்தைகள் மாட்டுவண்டி யுகத்திலேயே தங்கிவிடலாம். நாளை வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவகையில் இதுவும் child abuse-தான்!
சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்கள், சுய நினைவுடன் பள்ளியில் ஒரு பாடமாக, கல்லூரியில் ஒரு தனிப்பாடமாக எடுத்துப் படித்தால், அது நியாயம். சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை எந்த அளவுக்கு உபயோகமான கல்வியை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்?
நான் தனித்தமிழ் கட்சி கிடையாது. சமஸ்கிருத எழுத்துக்களை விலக்க வேண்டும், எதற்கெடுத்தாலும் தமிழில் ஆழத் தோண்டி அடியிலிருந்து சொல்லைக் கண்டுபிடித்து, அது எத்தனைதான் கடினமாக இருந்தாலும் அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் ஒரு மொழியால் மாறும் காலத்துக்கேற்ப, நவீனச் சிந்தனைகளை எளிதாக வெளிப்படுத்த, அவற்றை முன்னெடுத்துச் செல்ல முடிய வேண்டும். தமிழுக்குத் தேவை சிந்தனை வளம்; வெறும் சொல் கொத்து அல்ல. தமிழில் சிந்தனை வளத்தைக் கொண்டுவருவதன்மூலம் வருங்காலத்துக்கும் அதனை நம்மோடே எடுத்துச் செல்லமுடியும். ஆனால் இன்றைய சமஸ்கிருதம் என்பது, என்றோ புழங்கி வந்த மொழியின் உறைந்த வடிவம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் போல வரலாற்றாசிரியர்கள் இந்த மொழியைத் தோண்டிப்பார்ப்பதன்மூலம் பழங்காலத்தைப் புரிந்துகொள்ளக்கூடும். அவ்வளவே.
பேனா மருத்துவமனை
6 hours ago
பத்ரி, நான் இவ்விசயத்தில் உங்களுடன் 99.999% ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteGood Post!
ReplyDelete>>>> சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை எந்த அளவுக்கு உபயோகமான
ReplyDeleteAnd the cat is out!
The hidden agenda behind this entire post could be summed up on this single line!!
:))
சமஸ்கிருத, தமிழ் பல்கலைகழகம் முதல் கொண்டு அனைத்து பழமையான விஷயங்களுமே குறுகிய நோக்கோடு பார்த்தால் Waste of Money தான். ஆனால் பழமையான பொக்கிஷங்களை பாதுகாக்க வேறு வழி இல்லை செலவு பார்க்க முடியாது. பல்கலைகழகங்கள் இருக்கும் பொழுதே இதை படிக்க ஆள் இல்லை, அதை மூடிவிட்டு விருப்பம் இருப்பவர்கள் தேவை என்றால் தனியாக படித்துக்கொள்ளட்டும் என்று மூட ஆரம்பித்தால் B.E Computer Science & IT மட்டுமே மிஞ்சும்.
ReplyDeleteசமஸ்கிருதம் ஒரு செத்தமொழி என்று ஒத்துக்கொள்ளும் பத்ரி அவர்களை நான் பாராட்டுகிறேன்!
ReplyDelete//சமஸ்கிருத, தமிழ் பல்கலைகழகம் முதல் கொண்டு அனைத்து பழமையான விஷயங்களுமே குறுகிய நோக்கோடு பார்த்தால் Waste of Money தான். ஆனால் பழமையான பொக்கிஷங்களை பாதுகாக்க வேறு வழி இல்லை செலவு பார்க்க முடியாது. பல்கலைகழகங்கள் இருக்கும் பொழுதே இதை படிக்க ஆள் இல்லை, அதை மூடிவிட்டு விருப்பம் இருப்பவர்கள் தேவை என்றால் தனியாக படித்துக்கொள்ளட்டும் என்று மூட ஆரம்பித்தால் B.E Computer Science & IT மட்டுமே மிஞ்சும். //
ReplyDeleteயோசிக்கவேண்டிய விஷயம்.
லொயோலாவில் கெமிஸ்ட்ரி விரிவுரையாளர் ஒருவர் சொல்வார், இலக்கியம் என்பதே வேஸ்ட் என்று.
அவருக்கு அறிவியல் மட்டுமே போதுமானதாம்.
பொருளாதார நோக்கத்தோடேயே எல்லாவற்றையும் பார்த்தால் பலதையும் இழக்க நேருமில்லையா?
One simple open question, will you answer stratight?
ReplyDelete"Will you condemn the child abuse in Madarasaas also in the same line?"
"If tomorrow if there is a market for Sanskrit for some reason wont you publish those books?"
It seems you are the master of all subjects and languages in this world, still you may not aware of some below basic facts.
The science of yoga meditation had been taught by the ancient, sages, gurus, yogis, through oral tradition for thousands of years, they were finally put to Sanskrit by Patanjali in 500 b.c.
Sanskrit is considered the mother of all higher languages. Sanskrit is the most precise, and therefore suitable language for computer software - a report in Forbes magazine, July 1987.
Ayurveda is the earliest school of medicine known to humans. Charaka, the father of medicine consolidated Ayurveda 2500 years ago.
In Siddhanta Siromani (Bhuvanakosam 6) Bhaskaracharya II described about gravity of earth about 400 years before Sir Isaac Newton. He also had some clear notions on differential calculus, and the Theory of Continued Fraction.
Theory of Continued Fraction was discovered by Bhaskaracharya II.
Indians discovered Arithmetic and Geometric progression. Arithmetic progression is explained in Yajurveda.
Govindaswamin discovered Newton Gauss Interpolation formula about 1800 years before Newton.
Vateswaracharya discovered Newton Gauss Backward Interpolation formula about 1000 years before Newton.
Parameswaracharya discovered Lhuiler’s formula about 400 years before Lhuiler.
Nilakanta discovered Newton’s Infinite Geometric Progression convergent series.
Positive and Negative numbers and their calculations were explained first by Brahmagupta in his book Brahmasputa Siddhanta.
Aryabhatta also propounded the Heliocentric theory of gravitation, thus predating Copernicus by almost one thousand years.
Madhavacharya discovered Taylor series of Sine and Cosine function about 250 years before Taylor.
Madhavacharya discovered Newton Power series.
Madhavacharya discovered Gregory Leibnitz series for the Inverse Tangent about 280 years before Gregory.
Madhavacharya discovered Leibnitz power series for pi about 300 years before Leibnitz.
Bhaskaracharya calculated the time taken by the earth to orbit the sun hundreds of years before the astronomer Smart. Time taken by earth to orbit the sun: (5th century) 365.258756484 days
Infinity was well known for ancient Indians. Bhaskaracharya II in Beejaganitha(stanza-20) has given clear explanation with examples for infinity
The value of "pi" was first calculated by Boudhayana, and he explained the concept of what is known as the Pythagorean Theorem. He discovered this in the 6th century long before the European mathematicians. This was ‘validated’ by British scholars in 1999.
Algebra, trigonometry and calculus came from India. Quadratic equations were propounded by Sridharacharya in the 11th century.
The largest numbers the Greeks and the Romans used were 106 whereas Hindus used numbers as big as 1053 with specific names as early as 5000 BC during the Vedic period. Even today, the largest used number is Tera: 1012.
Maharshi Sushruta is the father of surgery. 2600 years ago he and health scientists of his time conducted complicated surgeries like caesareans, cataract, artificial limbs, fractures, urinary stones and even plastic surgery.
Usage of anaesthesia was well known in ancient India. Over 125 surgical equipments were used.
Access to the Vedas is the greatest privilege this century may claim over all previous centuries. “
Victor Cousin,
French Philosopher
(1792-1867):
Albert Einstein
(1879 -1955):
“When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous.”
"We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made.“
Sir William Jones,
Jurist,
(1746-1794):
“…The Sanskrit language is of wonderful structure, more perfect than the Greek, more copious than the Latin and more exquisitely refined than either.
“... a stronger affinity than could possibly have been produced by accident; so strong, indeed, that no philologer could examine them all three, without first believing them to have sprung from some common source... ”
I guess people (including karuppu) failed to notice your subtle comparision of tamil, a 'living language', to a dead language such as sanskrit!
ReplyDeleteAnd therein lies your shrewdness!!
-a
Anon: You asked:
ReplyDeleteOne simple open question, will you answer stratight?
"Will you condemn the child abuse in Madarasaas also in the same line?"
My answer: Yes. I condemn child abuse in Madarasas. I find education in Madarasas, and all forms of religious education unacceptable. I have no fear in saying this.
"If tomorrow if there is a market for Sanskrit for some reason wont you publish those books?"
My answer: Yes, I will publish Sanskrit books even now, when there is no major market. Even if a minority of 23 people want the book, the technology allows us to publish such books, and I will get involved in the same.
My views are about what is good for the large majority of the people.
மிகவும் சரியாக சொன்னீர்கள் சிறில் அலெக்ஸ். அத்துடன் சமஸ்கிருதம் என்பது ஒரு குழுவினருக்கோ அல்லது ஒரு சாதியினருக்கோ அல்லது ஒரு பிரதேசத்துக்கோ சொந்தமான மொழி அன்று. சமஸ்கிருதத்தின் ஆகச்சிறந்த கவிஞன் காளிதாசன் ஒரு சூத்திரன். சமஸ்கிருதத்தின் ஆதிகவி ஒரு வனவாசி வேடரான இரத்தினாகரன் எனும் வால்மீகி முனிவர். அண்மைக்காலங்களில் சமஸ்கிருதத்தில் ஆழமான ஆன்மீக உண்மைகளை எளிய அழகிய சந்தங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீ நாராயணகுரு எனும் ஈழவ குலத்துதித்த மலையாள மண்ணின் மகான். எனவே சமஸ்கிருதம் நம் அனைவருக்குமே உகந்த ஒன்றாகும். பாணினியின் சமஸ்கிருத இலக்கணம் உலகின் முதல் 'செயற்கை மொழிக்கான' முயற்சியும் ஆகும்.மேலும் சமஸ்கிருதம் தேசிய ஒருமைப்பாட்டினுடையவும் மொழியாகும். பழைய தினமணிகதிரில் எவரெஸ்டில் ஏறிய பாரத பெண் தான் சமஸ்கிருத இலக்கியம் பயின்றதன் மூலமாக இமயமலை மீது அடங்காத ஈர்ப்பு ஏற்பட்டதாக எழுதியுள்ளார். எனது சொந்த அனுபவத்தில் மார்க்ஸிய கருத்தியலில் தோய்ந்த ஒரு நண்பன் ஆயுர்வேத கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்ற போது தீவிர பாரத தேசபக்தனாக மாறிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதியில் இரத்த தான முகாமில் கலந்துவிட்டு வந்த அவனைப் பார்த்து மலைத்து போய் 'எப்பவாக்கும் சகாவு ஸ்வயம்சேவக் ஆனது' என்று வினவிய போது சம்ஸ்கிருத இலக்கியங்களை படிக்க படிக்க பாரத தேசியத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் அவனது ஈர்ப்பு வளர்ந்து தன்னை சங்க சேவை பணிகளில் ஈடுபடுத்தியதாக அவன் கூறினான். சுனாமிக்கு மறுநாள் சேவாபாரதி மருத்துவ குழுவில் அவனும் இருந்தான். பெயர் டாக்டர்.லெனின்! சமஸ்கிருதம் தமிழுக்கோ இதர பிராந்திய மொழிகளுக்கோ எதிரியல்ல. அய்யன் காளி போன்ற சமூக போராட்டத்தின் மையக்கண்ணில் நின்று போராடியவர்களூக்கு அண்ணல் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட சமுதாய ஆன்மீக தலைவர்களுக்கு சமஸ்கிருதம் ஒரு சமுதாய போராட்ட கருவியாகவே தெரிந்திருக்கிறது. மாதா அமிர்தானந்த மயிக்கு அது தெரிந்திருக்கிறது. ஆனால் நுனிநாக்கு ஆங்கில அறிவுசீவிகளுக்கு, தலைமுறை தலைமுறையாய் அடுத்தவர் அறியாமையில் புளித்த ஏப்பம் விட்டு வாழ்ந்து இன்று மதச்சார்பின்மை என்கிற பெயரில் நியோ-மனுவாதம் பேசும் இரட்டைநாக்கு பிறவிகளுக்கு அது புரியாமல் போனதில் அதிசயமில்லை. ஐயா பத்ரி அவர்களே நீர் பேசாமல் இஸ்லாமுக்கும் ஜிகாதுக்கும் முஷாரஃப்புக்கும் கொள்கை பரப்பு செயலாளராக சம்பாதித்துக்கொண்டு இரும். அதில் ஆட்சேபனை இல்லை. அல்லது தேசபக்தர்கள் மத்தியில் கூட பச்சைபாம்பாக நுழைந்து அங்கேயே முஷாரஃப்புக்கு விளம்பரம் போடும். இந்த இழிதொழிலில் கூட ஆட்சேபிக்க எனக்கு ஏதுமில்லை. ஆனால் இதுநாள் வரை சமஸ்கிருதம் மறுக்கப்பட்ட எம் மக்களுக்கு இப்போதும் சமஸ்கிருதம் மறுத்திட ஒரு முற்போக்கு வேசம் போடுகிறீரே இந்த 'வேச'ம்தான் தேவையில்லை.
ReplyDeleteஅரவிந்தன் நீலகண்டன்
// லத்தீன், பழைய கிரேக்கம் போன்று சமஸ்கிருதம் செத்த மொழிதான். //
ReplyDeleteபத்ரி, இன்றைக்குக் கூட உருவாக்கப் படும் பல அறிவியல் கலைச் சொற்களுக்கு இந்தப் பழைய மொழிகள் தான் கைகொடுக்கின்றன?
நேனோ டெக்னாலஜியில் உள்ள nano எங்கிருந்து வருகிறது தெரியுமா? monolithic rocks என்ற பாறை வகையின் பொருள் தெரியுமா? அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா?
அணு, அண்டம், பிரபஞ்சம், கந்தகம் என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை?
// இன்றைய மக்களின் வாழ்க்கையை, நெருக்கடிகளை, சாதனைகளை, சாத்தியங்களை, சிந்தனைகளை, உணர்ச்சிகளை இன்று வாழும் மொழிகளால்தான் வெளிப்படுத்த முடியும். //
சரிதான், ஒத்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை விட்டு வெளியே இந்தியாவின் பல மாநிலங்களிலும் போய்ப் பார்த்ததுண்டா? அந்த மொழிகளில் உள்ள கலைச்சொற்கள் பற்றி கொஞ்சம் சிந்தித்தது உண்டா? அவற்றில் 95% சொற்கள் சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் தான். அது மட்டுமன்று இவற்றை ஆக்கிக் கொண்டிருப்பதில் பழை சம்ஸ்கிருத நூல்கள் பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் எவ்வளவு உதவுகின்றன என்று தெரியுமா?
உதாரணமாக Republic என்பதற்கான அழகான ஹிந்தி (மற்றும் பல இந்திய மொழிகளில் உள்ள) சொல் "கணதந்த்ர", இந்தச் சொல் நேரடியாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழியை செத்தமொழி என்று சொல்லி அதில் ஒரு குரூர சந்தோஷம் அடைவதாயிருந்தால் அடைந்து விட்டுப் போங்கள். ஆனால் அதனால் உண்மை மாறிவிடாது.
// இந்தியாவில் வேறெந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. //
// அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும். //
இது மிகவும் தவறான செய்து. மேலே சொன்னபடி எல்ல மொழிகளின் வளமைக்கும் சம்ஸ்கிருதக் கல்வியும், ஆராய்ச்சியும் துணைபுரிகிறது. அதனால், மத்திய அரசு ஓரளவு நிதியை ஒதுக்கி சம்ஸ்கிருதத்தை வளர்க்கிறது. அவ்வளவே.
// இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் பரப்பப்படவேண்டும் என்று மத்திய மந்திரிகள் கூட்டங்களில் பேசுகிறார்கள். //
ஆம். சம்ஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் சாதனம். பாரதியும், காந்தியும், விவேகானந்தரும், அரவிந்தரும் கூட இப்படித் தான் பேசினார்கள். இந்திய தேசியத்தின் சிற்பிகள் இவர்கள்.
// சமஸ்கிருதம் மூலமாகவே கடவுளை அடையலாம் போன்ற கருத்துகளுக்கு இன்று பொதுமக்களிடமும் சரி, சான்றோரிடமும் சரி, எந்தவித ஆதரவும் கிடையாது //
இன்றல்ல, பக்தி இயக்கம் தொடங்கிய 6-ஆம் நூற்றாண்டு முதலே ஆன்மிக, சமய உலகில் சம்ஸ்கிருதம் தான் தேவபாஷை என்ற கருத்து இல்லை. மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதரான துளசிதாசர் மக்களின் மொழியான "அவதீ" (ஹிந்தியின் ஒரு வடிவம்) தமது பக்திக் காவியத்தை எழுதியதே இதற்குச் சான்று. இந்த நூல் வட இந்தியா முழுவதும் வேதம் போல மதிக்கப் படுவது.
ஆனால், அறிவுத் துறைகளில் (மருத்துவம், ரசாயனம், கணிதம்..) சம்ஸ்கிருதம் தான் பொது மொழியாகப் புழங்கி வந்தது.
// இப்பொழுது குடியரசுத் தலைவர் சமஸ்கிருதம் குறியீட்டியல் துறையில் பயன்படுத்தப் படுவதாகச் சொல்லியுள்ளர். யாருக்காவது தெரியுமா எந்த வகையில் என்று? //
அறிவியல் துறையில் கலாம் அனுபவம் உள்ளவர். அவர் கூறியது சரியே. sanskrit + cryptology என்று கூகிள் இட்டுப் பாருங்கள், உண்மையிலேயே இது பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால். இதற்காக சம்ஸ்கிருதம் தான் இந்தத் துறையின் உயிர்நாடி என்றெல்லாம் சொல்ல வரவில்லை. குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் சம்ஸ்கிருத மொழி அமைப்பு, இலக்கணம் இவை பற்றிய கல்வி உதவுகிறது.
// நான் தனித்தமிழ் கட்சி கிடையாது. சமஸ்கிருத எழுத்துக்களை விலக்க வேண்டும், எதற்கெடுத்தாலும் தமிழில் ஆழத் தோண்டி அடியிலிருந்து சொல்லைக் கண்டுபிடித்து, அது எத்தனைதான் கடினமாக இருந்தாலும் அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லமாட்டேன் //
முற்றிலும் உடன்படுகிறேன்.
மார்க்சிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தில் கூட சம்ஸ்கிருதக் கல்வியின் முக்கியத் துவமும், தேவையும் உணரப் படுகிறது. (கொசுறு: மற்றெல்லா இந்திய மொழிகளையும் விட சம்ஸ்கிருதத்தின் பல கூறுகள் மிக அதிகமாகப் புழங்கும் மொழி வங்காளி).
உலகம் முழுவதும் பல அறிஞர்கள் இந்த மொழியைத் தேடிப் பிடித்துப் பயின்று வருகையில், இப்படி உங்களை சம்ஸ்கிருதம் பற்றி ஏளனம் செய்ய வைப்பது தமிழ் நாட்டு திராவிட அரசியல் தாக்கம் தான். இல்லை இந்த வெறிபிடித்த மொழிச் சூழலில் நான் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியமா?
சிறில் அலெக்ஸ், சந்தோஷ்: நான் சொன்னவற்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
ReplyDeleteசமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது என்று நான் சொல்ல்வில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாடமாக எடுத்து குருகுலமாகவோ அல்லது சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் அதைமட்டுமோ படிப்பதில் பிரயோஜனம் இல்லை என்றுதான் சொல்கிறேன். அதிலும் முக்கியமாக சமஸ்கிருதம் என்னும் மொழியை. ஏனெனில் அது வாழும் மொழியல்ல. அதில் யாரும் இனியும் புதிதாக எழுதப்போவதில்லை. இறவா புகழுடைய காவியங்களோ, கருத்துகளோ அந்த மொழியில் இனியும் எழுதப்படப் போவதில்லை.
ஏற்கெனவே இருக்கும் பழைய இலக்கியங்களை மீண்டும் ஆழப்படிக்கப் போகிறார்கள். அவ்வளவே. அதனால் சமஸ்கிருதம் என்பதைப் படிக்க சில வல்லுனர்கள் இருந்தால் போதும். அவர்களும் தாங்கள் படித்ததைப் பிற மொழிகளில் கொடுத்தால் போதுமானது. அந்த சாரத்தைப் படித்து பிற மக்கள் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
மற்றபடி சமஸ்கிருதம் மோசமான மொழி, சமஸ்கிருதம் கேவலமான மொழி என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆவேசத்தோடு என்னோடு சண்டைபோட யாராவது வந்தால் நான் அதற்கு பதில் சொல்லப்போவதில்லை. சமஸ்கிருதம் கணினிக்கு மிக முக்கியம், சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகளின் தாய், தந்தை, சித்தி என்றெல்லாம் சொல்பவர்களோடு என்னால் வாதிட முடியாது. அவற்றை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
ஐடி, அறிவியல் மட்டும்தான் படிக்கப்படவேண்டும் என்று நான் சொல்லவில்லை. நுண்கலைகளைப் படிப்பது அவசியம். தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் படிக்கலாம்.
பொதுக்களத்தில் நாட்டின் குடியரசுத் தலைவரும் ஒரு மாநிலத்தின் ஆளுநரும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதன்மீதான எனது கருத்துகள் சில. இதனை நாகரிகமாக அலசலாம்.
ஜடாயு, சமஸ்கிருதம் புழக்கத்தில் இல்லாத மொழி என்பதால்தான் 'செத்த மொழி' என்று சொன்னேன். இதில் உணர்ச்சிப் பெருக்குக்கு இடம் ஏதுமில்லை. சமஸ்கிருதம், லத்தீன் ஆகிய மொழிகள் புதிய சொற்களை உருவாக்க இடம் கொடுக்கின்றன. நல்லதுதான். அவ்வாறு உருவாக்கப்பட்ட புதுச்சொற்கள் புழங்குவது வாழும் மொழிகளில். சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த பல மொழிகள் மீண்டும் சமஸ்கிருதத்துக்கே சென்று தமக்குத் தேவையான சொற்களை உருவாக்குகின்றன. அதே நேரம் உலக மொழிகள் பலவும் தமக்குத் தேவையான புதிய சொற்களை சமஸ்கிருதக் கலப்பு ஏதுமின்றி உருவாக்குகின்றன. இதில் சமஸ்கிருதத்துக்கு என்று பெரும் சிறப்பு ஏதும் இருப்பதாகச் சொல்லமுடியாது அல்லவா?
ReplyDeleteஎனக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. எதைப்பற்றி எழுத, பேச விரும்புகிறேனோ அதைப்பற்றி வெளிப்படையாக எழுதுகிறேன். வலைப்பதிவின் நோக்கமே அதுதானே?
Its a Good Post !!!!
ReplyDeleteதமிழ், சமஸ்கிருதம் இந்த இரண்டு செம்மொழிகளில் ஒன்று இன்னும் வழக்கில் இருப்பதும், பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வின் மீது நேரடியாக வினைபுரிவதும் ஆகும். அத்தோடு மட்டுமல்லாமல் தமிழ் ஒரு தேசிய இனத்தின் மிகமுக்கிய அடையாளமாக விளங்குவதால் அது மொழி-தொடர்பாடலுக்கான கருவி என்ற நிலையையும் கடந்து விளங்குகிறது. இன்றும் மக்களின் வாழ்வின் பல கூறுகளோடு இயைந்த மொழி ஒன்று காலத்துக்குத் தகுந்தாற் போல திருத்தப்படவும், புதுப்பிக்கப்படவும் வேண்டும். அது மொழியின் பாற்பட்ட செயல் மட்டுமல்ல மாறாக ஒரு இனத்தின் அரசியல் உரிமையையும், அதிகாரத்தைப் பேணுவதற்கான வழியுமாகும். இந்நோக்கில் அம்மொழியைப்பற்றிய ஆய்வு, வளர்ச்சிக்கான திட்டங்கள், பல வாழும் மொழிகளுடன் இயைந்த முன்னேற்றம் இவைகள் அத்தியாவசியமானவை; அதற்காக பல்கலைக்கழகங்களும், ஆய்வகங்களும் ஏறபடுத்தப்படவேண்டியது அவசியம். அவ்வகையில் அறிவுத்துறைகளின் அத்தனை முன்னேற்றத்தையும் தனது தாய் மொழியில் மூலம் அறிந்துகொள்ள ஒரு தேசிய அரசு ஆவனசெய்யவேண்டும். அப்படியான நோக்கில் பல ஐரோப்பிய, ஏன் சில ஆசிய மொழிகள் (மலேய, சீன) கூட வளர்ச்சி பெறுகின்றன. இம்மொழிகளில் வளர்ச்சி அவ்வினங்களின் பொருளாதார, அரசியல் வலிமைக்கும், இருப்புக்கும் வேராக இருக்கும். இவ்வளர்ச்சியில் வேலைவாய்ப்புகளும் அடங்கும் (இதை நேரடியாக IT போன்ற தொழில்நுட்ப வேலைவாய்யுகளோடு ஒப்பிடமுடியாது; அதோடு அத்தனை மாணவர்கள் இத்துறைகளை படிப்பதும் இல்லை)
ReplyDeleteஆனால் சம்ஸ்கிருதத்தை இந்த நோக்கில் பார்க்கமுடியாது. சம்ஸ்கிருதம் அதன் பழமைக்கும், செறிவுக்கும் அதில் புதைந்திருக்கும் அறிவுச் சேகரத்துக்குமாக ஆய்வு செய்யப்பட வேண்டியது. இலக்கிய, தத்துவ விசாரம் போன்றைவும் இதனுள் அடங்கினாலும் இவைகள் மொழி-இன-அரசியல் வளர்ச்சி என்ற வகையிலானது அல்ல. ஏனெனில் அரசியல் என்ற தளத்தில் இயங்க இது ஒரு தரப்பு (எண்ணிக்கை, இன அடையாளம்) மக்களைக் கொண்டிருக்கவில்லை; அப்படி சமூக வாழ்வின் கூறாகவும் இல்லை. எனவே சம்ஸ்கிருதத்தைப் பற்றிய ஆய்வு என்பது தமிழ் ஆய்வு, வளர்ச்சி இவற்றோடு எல்லா தளங்களிலும் ஒப்பிடமுடியாதது.
இந்த சம்ஸ்கிருதம்-அன்று தேவ பாஷை- இன்று கம்பியூட்டர் மொழி. இந்தக் கற்பனைகளுக்கும், ராமர் பாலம்-நாசா கண்டுபிடிப்பு இவற்றுக்கும் பெரிய வேறுபாடில்லை. சம்ஸ்கிருதத்துக்கு செலவு செய்வதற்கு இப்படியெல்லாம் சொல்லாமல் அம்மொழியின் வேறு (உண்மை)காரணங்களை முன்னிருத்தினால் அதில் ஒரு நேர்மையாவது இருக்கும்.
//Sanskrit is considered the mother of all higher languages.//
ReplyDeleteI find the statement quite stupid and one dimensional.
தாஜ்மஹால், ஜும்மா மசூதி, மத்த கோவில்கள் எல்லாம் ஆதி காலத்தில் கட்டப்பட்டு, வீணா இடத்தை அடச்சிட்டு இருக்கு. யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. முக்கால் வாசி கோவிலுக்குள்ள யாருமே போகாம பாழாப் போய் தான் கிடக்கிறது. இந்த மாதிரி இடங்களையெல்லாம் இடித்து விட்டு ஐடி பார்க் கட்டி காசு பாருங்க மக்களே. இல்லேன்னா நீங்கெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு! ரொம்ம நல்ல இருக்குதுங்கண்ணா உங்க நியாயம்! பாரம்பரியமாவது, வரலாறாவது, வெங்காயமாவது....
ReplyDelete-- கருப்பு கண்ணாடி போட்ட குருட்டு அனானி, கருப்பு பாசறை, சிங்கை
பத்ரி,
ReplyDeleteதாங்கள் வேதபாட சாலைகள் தேவையில்லை என்று சொல்லவந்து சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களை சாடிவிட்டீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழ், சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் இருப்பது அம்மொழிகள் பற்றிய ஆராய்சிக்கு உதவும். எல்லா பல்கலைக்கழகங்களும் சமஸ்கிருதத்தை சொல்லிக்கொடுப்பது இப்போதே சாத்தியமில்லை. பிற்காலத்தில் அம்மொழி வல்லுனர்களே இல்லாமல் போய்விடலாம். இப்பொதே பிராமி போன்ற எழுத்துக்களை படிப்பதற்கும் ஆராய்வதற்கும் ஆளில்லை.
"பல்கலைக்கழக அளவில் சமஸ்கிருதம் படித்தால் வேலை கிடைக்காது" என்பதற்கும் "வரலாறு, கலை எல்லாம் படித்தால் வேலை கிடைக்காது. எதாவது கம்ப்யூட்டர் சம்பந்தமா படி" என்கிற தமிழ்நாட்டு மனப்பான்மைக்கும் பெரிய வித்தாசமில்லை.
இப்போதே தாம் தேர்ந்தெடுத்த புலத்தில் நான்காண்டு கல்லூரிப் படிப்பை வீணடித்துவிட்டு சம்பந்தமே இல்லாமல் 22 வயதில் "Hello world!" என்று புதிதாக நிரலாக்க ஆரம்பிக்கிறார்கள். "நமக்குப் பிடித்ததை ப் படிப்போம். அதைப் பயன்படுத்தி விருப்பமான பணி செய்வோம்" என்ற மனப்பான்மை வளர வேண்டும்.
பல்கலைக்கழக பட்டமளிப்பில் போய் நீங்கள் படித்தது உபயோகமற்றது என்று சொல்வது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. மேலும் ஆங்கிலம் படியுங்கள் என்று சொல்வது அவரின் அறிவு வரட்சியையே காட்டுகிறது.
-பாலாஜி.
what a shocking, too superficial, GENARALIZED post with sweeping statements from some one responsible like
ReplyDeleteMr.Badri
first let us clarify certain things:
1. People might have called sanskrit deva bhasha or some thing...let us leave all that....if they know the
setup of grammar and the construction, no one wil deny that its a well refined, perfect scientific language
2. That doesnt mean that other languages are bad. Tamil is a great language with rich literary heritage. No
doubt. Tamil has got its own value and greatness. Tamil donot require denigration of sanskrit to make it a
great language. By itself Tamil is a fine and resplendent language (this is not for you Mr.Badri, I am
addressing those who try this in comments)
3. Sanskrit should not be a preserve of one caste...but it has got this colour. Blind opposition to
sanskrit is due to the fact that its kinda identified as a brahminical language. True, may be brahmins over
a period of time tried to grab ownership. But, All castes have contributed to the development of the
language in the past. All caste people have right to be benefitted by this language.If you want to oppose
brahmins, oppose separately. please donot metaphorically oppose sanskrit with out understanding the
benefits of the language
4. Mr.Badri, you have made a sweeping statement that there were some failed loose attempts to project
sanskrit as a best language for computers.
It is not JALLIYADI. It is stila perfect language for computers
--------
Words in Sanskrit are instances of pre-defined classes, a concept that drives object oriented programming
[OOP] today. For example, in English 'cow' is a just a sound assigned to mean a particular animal. But if
you drill down the word 'gau' --Sanskrit for 'cow'-- you will arrive at a broad class 'gam' which means 'to
move. From these derive 'gamanam', 'gatih' etc which are variations of 'movement'. All words have this OOP
approach, except that defined classes in Sanskrit are so exhaustive that they cover the material and
abstract --indeed cosmic-- experiences known to man. So in Sanskrit the connection is more than
etymological.
It was Panini who formalised Sanskrit's grammer and usage about 2500 years ago. No new 'classes' have
needed to be added to it since then. "Panini should be thought of as the forerunner of the modern formal
language theory used to specify computer languages," say J J O'Connor and E F Robertson. Their article also
quotes: "Sanskrit's potential for scientific use was greatly enhanced as a result of the thorough
systemisation of its grammar by Panini. ... On the basis of just under 4000 sutras [rules expressed as
aphorisms ], he built virtually the whole structure of the Sanskrit language, whose general 'shape' hardly
changed for the next two thousand years."
Every 'philosophy' in Sanskrit is in fact a 'theory of everything'. [The many strands are synthesised in
Vedanta --Veda + anta--, which means the 'last word in Vedas'.] Mimamsa, which is a part of the Vedas, even
ignores the God idea. The reality as we know was not created by anyone --it always was--, but may be shaped
by everyone out of free will. Which is a way of saying --in OOP terms-- that you may not touch the mother
or core classes but may create any variety of instances of them. It is significant that no new 'classes'
have had to be created. It is not a 'language' as we know the term but the only front-end to a huge,
interlinked, analogue knowledge base. The current time in human history is ripe for India's young techno
wizards to turn to researching Mimamsa and developing the ultimate programming language around it; nay, an
operating system itself.
----------
for more please check http://www.goodnewsindia.com/index.php/Magazine/story/melkote-sanskrit-academy/P3/
*******************************
Mr.Badri, if you donot know clearly about some issues, please donot just like that pass opinions. You are
from IIT, You can even check up with some IIT professors regarding scientific validity of the language.
I am a regular reader of your blog and have enjoyed it. Today I am deeply shocked on reading the sweeping,
opinionated statements from some one like you, whom I really appreciate and respect.
This language might not offer food and employment now. But, that doesnt mean that we should mail the
coffin. Thats the problem of the dot com gen that sees everything in terms of IRR and ROI. More research is
needed to bring out some of the treasures this language can offer for humanity, which we have lost over a
period of time
I was able to find these blatant sweeping statements because I know little about real benefits of sanskrit.
Now, there are other subjects which I donot know much and which you are writing about. Now, its creating
doubts in me. I donot know whether you write with research, analysis and conviction or just like a fiction
!!!!
Sorry, Mr.Badri, it is deeply disappointing and sorry, its human nature, this is casting a shadow on
Kizhakku also !!!
for all readers my request is to leave out brahmins, god, religion issues of sanskrit and see it only as a
classical language. Then you'll really understand the greatness.
Again, I would like to reiterate that my love for Tamil is no less. Afterall, its tamil that helped me to
think...why...to even know a little of sanskrit. Engal vaazhvum, engal vaLamum mangaadha thamizh endru
sange muzhangu
my idea is just to request people to see issues without any bias
My sincere request to Mr.Badri is please donot make sweeping statements
--- Anbu Ilavendhan
anbu.iv at gmail
Ok, I get it.
ReplyDeleteஇதுலேயும் ஒரு சிக்கல் இருக்குது. இப்ப, தமிழ் லிட் படிச்சா என்ன பெருசா வேல கிடைக்கப்போகுதுங்க்கிற மாதிரியான கேள்வி இதுன்னு சொல்லலாமா?
Jadayu,
ReplyDeleteVery strong and crisp arguments. Just fabulous. Hats off!!!
And, Thanks Badri for kicking off an healthy discussion.
பத்ரி அழகிய பதிவு!
ReplyDeleteஉலகில் எந்த மொழியும் தேவ மொழி என்ற தனி அந்தஸ்து கொடுப்பது அறியாமை. உலகில் உள்ள அனைத்து மூல மொழிகளும் நம்மை படைத்த இறைவன் நமக்கு அருளியவையே! எனவே அனைத்து மொழிகளையும் ஒரே தரத்தில் வைத்தே பார்க்க வேண்டும்.
மதரஸாவைப் பற்றிய உங்கள் கருத்தையும் ஒத்துக் கொள்கிறேன். மதரஸாக்களில் உலகக் கல்வியும் போதிக்க வேண்டும் என்று தற்போது பெரும் போராட்டங்களே முஸ்லிம்களுக்குள் நடந்து வருகிறது. பல மத்ரஸாக்களில் ஆங்கிலம் கம்ப்யுட்டர் கல்வி, அறிவியல் கல்வி என்று உலகக் கல்வி தலைக்காட்டத் தொடங்கி விட்டது. இது தொடர வேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.
-SUVANAPPIRIYAN
Badri,
ReplyDeleteI disagree your views regarding the context of Governer's speech.
Being a representative of the Government he shouldn't have talked like some third person. If he is really interested in those views, in his capacity as Chancellor he should have tried to add some useful subject in curriculum. Or he should have taken steps to close such institution. For me it looks like blaming somebody as lame after breaking thier limbs.
Murali.
பாபா அம்பெத்கர் சொன்னார்.எப்பொழுதெல்லாம் ஏதாவது வேண்டுமென்றால் சூத்திரர்களைப் பயன் படுத்திக் கொள்வார்க்ள்.அப்ப்டித்தான் சூத்திரர்கள் வியாசர்.வால்மீகி.காளிதாசர் மாதிரி என்னையும் பயன்படுத்தினார்கள்.ஆனால் என்னுடைய கருத்துக்களுக்கு இடங்கொடுக்கவில்லை.இந்த அரசியல் சட்டத்தை எரிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்றார்.சமசுகிருதம் ஒரு சாதி மொழியாய் ஆக்கப்பட்டு விட்டதால்தான் புத்தர் பாலி மொழியில் தனது கொள்கைகளைப் பரப்பினார்.
ReplyDeleteவேத மொழியிலிருந்து சமசுகிரித{திருத்தப்பட்ட}மொழி வேதக்காரர்களின் மொழி ஆக்கப்பட்டு விட்டது.அதை மற்றவர்கள் கற்றுக் கொள்ளக்கூடாது என்று சொல்லி அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டன்ர்.
Both UP Gov Rajeshwar and Badri have sort of echoed Thomas Macaulay's sentiments :-) But I think they are both much better aware of the richness of India's literature and linguistic richness than Macaulay. Macaulay's speech (available on the web) is actually more humane and well-meaning than its given credit for and setting up English education has helped India more than hurt it, I think. English has replaced Latin in Europe, Sanskrit in India, and will probably replace Chinese in China and Arabic in the Islamic world as the dominant (but not exclusive) language of science and commerce. Please note that Newton wrote his "Principia" in Latin, but Adam Smith and Darwin wrote their theses in English (and English which is beyond the vocabulary of most English speakers today). My point is that languages evolve and change - even English may die or diminish substantially in the future.
ReplyDeleteI disagree that Sanskrit is dead. Its not growing, I agree and its diminishing year by year. I would say its dormant. Like the rebirth of Senthamizh thanks to the Dravidian movement (and a lot of Tamils who loved Tamil but not the Dravidian movement), and the rebirth of ancient Hebrew in Israel, Sanskrit may see a renaissance in the future.
As for Madrassas and Veda patasalas, poor kids will be sent anywhere they get food and some education. Both private and govt schools in India, English and vernacular, educate children poorly. But that's a separate debate.
Sanskrit is being used by millions of Hindus on a daily basis. Samskaras prescribed in dharma shastras starting from birth to death use mantras from this language. Besides nitya, naimittika, kamya, tantrika, and even some nishhiddha karmas are done in sanskrit. All yajnas/homas for devatas are done in sanskrit. So it is indeed a deva bhashha! Even inside TN, most puja-s and archana-s are done in Sanskrit. Not a day goes by for millions of hindus without uttering a sanskrit mantra or shloka. And you call this language is not in use!!
ReplyDeleteThis language and it is use is quite valuable to millions of hindus (read tax prayers). So what is wrong in my tax rupees going towards a cause I care about?
To call Sanskrit is dead is sheer ignorance, as it is contrary to the facts. Not to mention that being an aiyangar, you too must be using this language on a daily basis. This adds hypocrisy also to this mix.
//சமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது என்று நான் சொல்ல்வில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாடமாக எடுத்து குருகுலமாகவோ அல்லது சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் அதைமட்டுமோ படிப்பதில் பிரயோஜனம் இல்லை என்றுதான் சொல்கிறேன்.//
ReplyDeleteபிரயோஜனம் என்று எதை சொல்லுறீங்க பத்ரி. வேலை கிடைப்பதையா? மொழிகளும் கலைகளும் வேலை கிடைப்பதை தாண்டி வேறு விஷயங்களுக்காக படிப்பது. இப்படித்தான் பிரதிபலம் எதிர்பார்த்து இன்றைய மனிதன் அழித்த பண்டைய நாகரீகங்கள் ஏராளம். ஏகப்பட்ட மொழிகள், கலைகள் பிரயோஜனம் இல்லை என்று அழிக்கப்பட்டன. நான் சொன்ன மாதிரி இன்றைய சூழலில் கணினி துறை தவிர வேறு எது படித்தாலும் "so called" பிரயோஜனப்படாது எனவே எல்லா கல்லூரிகளையும் மூடிவிட்டு IT மற்றும் BPO துறை சார்ந்த கல்லூரிகளை மட்டுமே திறந்துவிடுவோமா? விவசாயத்தில் கூட லாபம் இல்லை சரி இது பிரயோஜனப்படாது என்று விட்டுவிடலாமா? அப்புறம் எல்லாரும் மல்டிவிடமின் மாத்திரைகள் சாப்பிட்டு தான் உயிர் வாழவேண்டும்.
//அதிலும் முக்கியமாக சமஸ்கிருதம் என்னும் மொழியை. ஏனெனில் அது வாழும் மொழியல்ல. அதில் யாரும் இனியும் புதிதாக எழுதப்போவதில்லை. இறவா புகழுடைய காவியங்களோ, கருத்துகளோ அந்த மொழியில் இனியும் எழுதப்படப் போவதில்லை.//
பிற்காலத்தில் இருப்பதை படிக்க ஆள் வேண்டும் இல்லையா? இது மாதிரியான பல்கலைகழகங்களை விட்டுவிட்டால் அதை கற்பிக்க கூட ஆள் இருக்க மாட்டாங்க.
//ஏற்கெனவே இருக்கும் பழைய இலக்கியங்களை மீண்டும் ஆழப்படிக்கப் போகிறார்கள்.//
படிப்பதை எல்லாரும் ஒரே மாதிரி செய்வார்கள் என்று சொல்ல முடியாது இல்லையா? ஒருவருக்கு தோன்றும் ஒரு கருத்து மற்றொருவருக்கு வேறு மாதிரி தோன்றும் இல்லையா? முதல் முறை படித்தவரைவிட அடுத்த முறை படிப்பவருக்கு வேறு எதாவது புதிய விஷயம் புரிய வாய்ப்பு இருக்கும் அல்லவா?
//அவ்வளவே. அதனால் சமஸ்கிருதம் என்பதைப் படிக்க சில வல்லுனர்கள் இருந்தால் போதும். அவர்களும் தாங்கள் படித்ததைப் பிற மொழிகளில் கொடுத்தால் போதுமானது. அந்த சாரத்தைப் படித்து பிற மக்கள் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.//
இது போன்ற சாரம் பிழியும் மேட்டரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நமக்கு தெரியாதது இல்ல சாரம் பிழியறேன் அப்படின்னு நம்ம ஆளுங்க தன்னோட கருத்தையும் சேர்த்து இல்ல புழிந்துவிடுவார்கள்.
//சமஸ்கிருதம் கணினிக்கு மிக முக்கியம், சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகளின் தாய், தந்தை, சித்தி என்றெல்லாம் சொல்பவர்களோடு என்னால் வாதிட முடியாது. அவற்றை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.//
இது எல்லாம் முட்டாள் தனமான வாதம் என்று நானும் ஒத்துக்கொள்கிறேன். அட்லீஸ்டு ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து முடிவு எடுக்கும் வரை.
//பொதுக்களத்தில் நாட்டின் குடியரசுத் தலைவரும் ஒரு மாநிலத்தின் ஆளுநரும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.//
அதை எங்க சொல்ல வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது இல்லையா? கொஞ்சம் கூட பொறுப்பு உணர்வே இல்லாமல். சம்ஸ்கிருத பட்டமளிப்பு நிகழ்ச்சியில் சென்று அவர்களை உற்சாக படுத்த வேண்டிய ஆளுனரே அவர்களின் உற்சாகத்தை குலைக்கும் படியான பேச்சுக்கள் தேவையா? யாரும் துணிந்து சமஸ்கிருதம் படிக்க முன் வராத நேரத்தில் படித்து அதில் பட்டம் பெற்று இருக்கும் இவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள் இல்லையா? பெற்றோர், மற்றவர்களின் கட்டாயத்துக்கு ஆளாகி IT படிக்காமல் பண்டைய மொழியையும், கலையையும் படிக்கும் இவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.
//இதனை நாகரிகமாக அலசலாம்.//
ஒத்துக்கொள்கிறேன் பத்ரி. என்னுடைய வாதங்கள் நாகரீகமானவை என்று நம்புகிறேன்.
We should appreciate those who learn languages (not only sanskrit), arts etc with interest
ReplyDeleteWhen the whole world is running behind money with dollar, IT and IIT dreams....it is these people who are capable of bringing a whiff of fresh air in otherwise mechanical and dull life.
Money is essential. But it is not the end
A business man like Badri, who casually criticize Maniratnam that he didnot tell fully about Ambani in Guru, but, when it comes to his own publication, bury his head like an ostrich and talk only the brighter part of Ambani
Armchair consultants without guts and spine will write anything so long it rings the cash register
Honesty should be there in thought, speech and deed
Sanskrit can now be learnt by anybody anywhere in the world via online
ReplyDeletelive video conferencing.
For more info: www.IndicUniversity .org or call (908) 229 0372 for more
info.
Regards,
Pankaj Jain
The Sanskrit Tradition: An Interview with Dr. Dean Brown, Prof. of Physics, U. of Hawaii, Manoa:
ReplyDeleteIt brings forward the interesting Eastern/Westen views of Professor Dean Brown, an eminent Theoretical Physicist (and Sanskrit Scholar, who has recently translated the Upanishads). The interview is really illuminating and connects two seemingly unrelated aspects of humanity - Sanskrit and Physics. Dr. Brown expresses that Sanskrit in fact is the mother of all European languages and the roots of many English words can be traced to Samskritam..including "human"!
http://www.dailymotion.com/video/x4ush_thinking-allowed-sanskrit-tradition
-- Bheem Bhat
//A business man like Badri, who casually criticize Maniratnam that he didnot tell fully about Ambani in Guru, but, when it comes to his own publication, bury his head like an ostrich and talk only the brighter part of Ambani//
ReplyDeleteஎங்கேயோ கேட்ட குரல்!!
ஓய் இவ்வாறு எல்லாம் எழுதினால் பா.ஜ.க. வணிகர் பிரிவிலிருந்து விலக்கி விடுவார்கள்.
ReplyDelete/இந்தியாவில் வேறெந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் பரப்பப்படவேண்டும் என்று மத்திய மந்திரிகள் கூட்டங்களில் பேசுகிறார்கள்.
ReplyDeleteசமஸ்கிருதம் செத்த மொழி என்று சொல்வதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது. சில நூறு பேர்கள், அதுவும் பல்கலைக்கழக அளவில் கற்றுப் பேசும் ஒரு மொழி, வெகுமக்கள் மத்தியில் புழங்காத மொழி, செத்த மொழிதான். லத்தீன், பழைய கிரேக்கம் போன்று சமஸ்கிருதம் செத்த மொழிதான். இன்று வாழும் மொழிகள் உயிர்த்துடிப்புடன் கூடியவை. இன்றைய மக்களின் வாழ்க்கையை, நெருக்கடிகளை, சாதனைகளை, சாத்தியங்களை, சிந்தனைகளை, உணர்ச்சிகளை இன்று வாழும் மொழிகளால்தான் வெளிப்படுத்த முடியும்.
இதனால் சமஸ்கிருதம் தேவையில்லை; சமஸ்கிருத இலக்கியங்கள், எழுத்துகள் வீண் என்று நான் சொல்லவில்லை. சமஸ்கிருதம் மட்டுமன்றி உலகின் பண்டைய மொழிகளான பழைய கிரேக்கம், லத்தீன் ஆகியவையும் படிக்கப்பட வேண்டும். அந்த மொழிகளில் உள்ள சாஹித்யங்கள் ஆராயப்படவேண்டும். தரிசனங்கள், கண்டுபிடிப்புகள் மொழிமாற்றப்பட்டு வெகுமக்கள் மொழியில் கிடைக்கவேண்டும். அது போதும்.
சமஸ்கிருதத்தை எங்கும் நுழைத்து, பரப்புவதற்கென்று எக்கச்சக்கமாக நிதி ஒதுக்க அவசியமே கிடையாது. அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்.
சமஸ்கிருதம் தேவ பாஷை; சகல அறிவும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு மறைபொருளாக வேதங்களில் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது; சமஸ்கிருதம் மூலமாகவே கடவுளை அடையலாம் போன்ற கருத்துகளுக்கு இன்று பொதுமக்களிடமும் சரி, சான்றோரிடமும் சரி, எந்தவித ஆதரவும் கிடையாது. வேத கணிதம் என்றொரு 'புருடா' பல வருடங்களாக உலவி வந்த வண்ணம் உள்ளது. நடுவில், கணினி மொழிக்கு சமஸ்கிருதம்தான் மிகவும் உகந்த மொழி என்று ஒரு கருத்து ஆதாரமே இன்றி பரப்பப்பட்டது. மைக்ரோசாஃப்ட் பதறி அடித்துக்கொண்டு சமஸ்கிருதப் பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்தியதாகச் செய்திகள் ஏதும் கண்ணில் படவில்லை. இப்பொழுது குடியரசுத் தலைவர் சமஸ்கிருதம் குறியீட்டியல் துறையில் பயன்படுத்தப் படுவதாகச் சொல்லியுள்ளர். யாருக்காவது தெரியுமா எந்த வகையில் என்று?///
பத்ரி உங்களது கருத்துக்களுடன் உடன்படுகிறேன். சம்ஸ்கிருதத்தின் வரலாறு அனைவருக்கும் ஓரளவு தெரிந்ததுதான். காதிலே காய்ச்சிய ஈயத்தை இவர்கள் மறுத்து பின்னூட்டமிட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழின் பெருமைகளை ஆயிரம் வருடம் மறைத்து வைத்து வரலாற்று சதி செய்தவர்களுக்கு சம்ஸ்கிருதம் ஒரு ஆதிக்க மொழியாக இங்கு செய்தவைகளை மறுத்து பொய் சொல்வது பெரிய விசயமல்ல.
ஆயினும் சில வரலாற்று உண்மைகளை ஒட்டு மொத்தமாக மறைத்து விட்டு அரை உண்மைகளின் அடிபப்டையில் ஜல்லியடிக்கிறார்கள் இவர்கள்.
ஆரியர் இந்தியாவிற்க்குள் நுழையும் பொழுது அவர்களின் மொழி என்பது எழுத்து நடை இல்லாத பேச்சு மொழியாக மட்டும் இருந்தது. எனவேதான் மத்திய ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்த ஆரியர்களின் மொழிக்கும் ஐரோப்பிய மொழிக்கும் சகல்விதமான ஒற்றுமைகளும் இருக்கின்றன். இது தவிர்த்து இங்கு உருவான மொழி குடும்பம் திராவிட மொழி குடும்பம்.... சம்ஸ்கிருதம் ஆதிக்க மொழியாக இருந்த காரண்த்தினால் அதனுடைய பாதிப்புகள் எல்லா இந்திய மொழிகளீலும் இருக்கின்றன.
ஆதிக்க மொழியாக இருந்ததாலும், வர்ண கோடுங்கோன்மையின் ஒரு கருவியாக இருந்ததாலும், பெரும்பான்மை மக்களின் அனுபவச் செழுமையையெல்லாம் தமது சம்ஸ்கிருத மொழியில் டாகுமென்ட் செய்து விட்டு இன்று அதை காரணம் காட்டியே பெருமை பேசுகிறார்கள் இவர்கள்.
இந்தியாவின் கண்டுபிடிப்புகள் குறித்து பெருமைகளை மொத்தத்திற்க்கும் இதன் மூலம் ஒற்றை அடையாளத்தை விட்டுச் செல்ல முனைகிறார்கள் இவர்கள். அந்த அடையாளத்துக்கான முக்கிய துருப்புச் சீட்டாக தேவ பாஷை இருப்பதனால்தான் அதனை செத்த பாஷை என்று சொன்னவுடன் துடித்துக் கொண்டு வருகிறார்கள்.
சம்ஸ்கிருதம் இந்திய வரலாறு முதலானவற்றை ஆய்வு செய்ப்வர்கள் கற்றுக் கொள்வதற்க்கான மொழி என்ற தகுதியை தவிர்த்து வேறு எதுவும் சிறப்பு அம்சங்களை இங்கும் கூட இவர்களால் பட்டியலிட முடியவில்லை. அதை விடுத்து பழங்கால இந்தியாவின் சாதனைகளை பட்டியலிடுகிறார்கள். அவற்றை யாரும் இங்கு மறுக்கவில்லையே?
அதனை சிரத்தையெடுத்து மக்கள் மொழியாக மாற்றுவது என்பது பார்ப்பன பயங்கரவாதிகளின் அரசியல் கனவுகளை நிறைவேற்றும் ஒரு திட்டத்தின் அங்கமே தவிர்த்து வேறல்ல. இதைவிட இந்திய மொழிகள், கலாச்சாரம், வரலாறு இவை குறித்து எல்லா சிறார்களும் கற்றுக் கொள்ள அரசு செலவு செய்வது குறைந்த பட்சம் தேசிய இனங்களிடையே பகை மூட்டி விளையாடும் தரகு அரசியல்வாதிகளிடமிருந்து மக்களை விழிப்புடன் காக்க பயன்படும்.
அசுரன்
Thiru Bathri Seshadri
ReplyDeleteNowadays Vedam & Sanskrit is been used as the material for the survival basis only in this materialistic world by all the society , so i feel no point arguing
i feel Beggars & Thief & Criminals etc etc are better person than the people who using the veda / sanskrit as their for the family and business
So as Human i would like to open the Veda / Sanskrit school for free in south east asia , how many of them can suppot not in terms of money only in terms of moral & physical support
Please mail me athilalitha@yahoo.com.sg
We can create the " Heaven In the Earth " no need to go to other planet to survive
nandri
Devarajan Prakash