Friday, January 18, 2008

தமிழ் ஒலிப்புத்தகங்கள் - Audible.com

நியூ ஹொரைசன் மீடியாவின் கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்களை இப்போது Audible.com மூலம் இணையம் வழியாகவே இறக்கிக்கொள்ளமுடியும். இன்று காலை பார்த்ததில் 28 ஒலிப் புத்தகங்கள் இருந்தன. அடுத்த சில நாள்களில் எங்களுடைய 60-க்கும் மேற்பட்ட ஒலிப்புத்தகங்கள் ஏற்றப்பட்டுவிடும்.

Audible.com தளத்திலிருந்து ஒலிப்புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முதலில் அந்தத் தளத்தில் உறுப்பினராகவேண்டும். உங்களது உறுப்பினர் கணக்குக்கு ஏற்றவாறு ஒலிப்புத்தகங்கள் பல்வேறு விலைகளில் அங்கே கிடைக்கின்றன.

கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்கள் வேண்டுவோர் ‘tamil' என்ற குறிச்சொல்லைக் கொடுத்து தேடி, வேண்டியவற்றை (பணம் கொடுத்து) டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

முன்னணி தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பத்து ஆடியோ புத்தகங்களாக வெளியிட்டிருந்தோம். அவை இன்னமும் ஏற்றப்படவில்லை. வந்ததும் தகவல் கொடுக்கிறேன்.

இந்த வசதி இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

7 comments:

  1. பர வெட்டியாக இருப்பதால் ஒரு ஏழெட்டு சாம்பிள் கேட்டுப் பார்த்தேன். வித்தியாசமான அனுபவம்.

    பரபரப்பில்லாத மத்தியான வேளை ரேடியோ கேட்பது போன்ற ஃபீலிங் ஏற்பட்டது :-). அதும் ஒரு சாம்பிளுக்கு இடையிலே ' நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது கிழக்குப் பதிப்பகத்தின் ஒலிப்புத்தகம்.... டொட்டொடொய்ங்க்..' என்று சிக்னேச்சர் ட்யூன் :-) . அயல்நாட்டில் இருக்கிற, பயணங்களில் புத்தகங்களைக் 'கேட்டு'ப் பழகியவர்களூக்கு உபயோகமாக இருக்கலாம்.

    நம்ம ஊர்ல ஒலிப்புத்தகங்களுக்கு எல்லாம் வரவேற்பிருக்கிறதா? ஒரு க்யூரியாசிட்டிதான்..டேக்ஸ் ப்ராப்ளம் எல்லாம் வராது என்றால் சொல்லவும் :-)

    ReplyDelete
  2. நன்றி பத்ரி! முதலில் “வந்தார்கள் வென்றார்கள்” வாங்கிக் கேட்கலாம் என்றுள்ளேன்.

    அயல் நாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகளில் பலர், பல நேரங்களில் தமிழில் பேசக் கூச்சப்படுகின்றனர் (accent பற்றிய பயம்). அவர்களின் கூச்சம் போக இந்த ஒலிப்புத்தகங்கள் உதவியாக இருக்கும். குழந்தைகளுக்கான புத்தகங்கள் எதுவும் ஒலி வடிவில் அளிக்கவுள்ளீர்களா?

    ReplyDelete
  3. பிரகாஷ்: ஒலிப்புத்தகங்களுக்கான வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஜனவரி 2007-ல் அறிமுகப்படுத்தினோம். இப்போது ஜனவரி 2008-ல் மேலும் பல புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். இதுவரை இந்தியாவில் வெறும் சிடிக்களாக மட்டுமே விற்றுவருகிறோம். அதற்கே விற்பனை உள்ளது. இப்போது ஆன்லைன் டவுன்லோடபில் ஃபார்மட் என்பதால் மேலும் அதிகமாக விற்பனை ஆகும். அடுத்து ‘கிரி டிரேடிங்'கின் ADD Kiosk வழியாகவும் கிடைக்கும். அடுத்த சில வருடங்களில் ஆடியோ புத்தகம் மிகப்பலரைச் சென்றடையும்.

    எங்களுடைய அச்சுப் புத்தகங்களை விடக் குறைவான விற்பனைதான். ஆனாலும் விற்பனையில் நஷ்டம் ஏற்படுத்துவதில்லை.

    ReplyDelete
  4. SK: குழந்தைகளுக்கான கதைகள் சில ரெகார்ட் செய்துள்ளோம். விரைவில் ஆடியோ புத்தகங்களாக வெளியாகும்.

    ReplyDelete
  5. பத்ரி,

    Audible.com-மின் DRM protection தலைவலியாக உள்ளதே! எனது பழைய MP3-CD player-இல் கேட்க CD-யில் ஏற்றிக்கொள்ளலாம் என்று பார்த்தால் MP3-யாக மாற்ற விட மாட்டேன் என்கிறது! முழுப் புத்தகத்தையும் (12 மணி நேர Audio) 12 CD-க்களாக மாற்ற பொறுமை இல்லை. ஏதேனும் மாற்று வழி இருந்தால் நல்லது. இனி வெளியிடவிருக்கும் புத்தகங்களையாவது MP3 வடிவில் இறக்க முடிந்தால் உபயோகமாக இருக்கும். காமதேனு.காமில் ஏன் MP3-க்களை விற்கக்கூடாது?

    நன்றி.

    -SK

    ReplyDelete
  6. SK: நாங்கள் சிடியாக விற்பது எம்.பி3 வடிவில்தான் உள்ளது. ஆனால் இணையத்தில் நேரடியாக விற்பதற்கு சில நுட்ப மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதனால்தான் ஆடிபிள் வழியாக அவர்களது டி.ஆர்.எம்மைப் பயன்படுத்தி விற்கிறோம். இணையத்தில் நேரடியாக எம்.பி3 ஃபார்மட்டில் விற்கும் முறையைக் கொண்டுவரும்போது தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  7. //எங்களுடைய அச்சுப் புத்தகங்களை விடக் குறைவான விற்பனைதான். ஆனாலும் விற்பனையில் நஷ்டம் ஏற்படுத்துவதில்லை.//

    ஒலிப் புத்தகங்கள் நம் நேரத்தை வெகுவாக மிச்சப் படுத்தும். அதே சமயம் ஒலிப் புத்தகங்கள் ஒரு சிலவற்றிற்குத் தான் ஏற்புடையதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஒரு புத்தகத்தை நாமே படிப்பதற்கும் அடுத்தவர் படிக்க கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? கதைப் புத்தகங்களை ஒலி வடிவில் கேட்டு ரசிக்கலாம், ஆனால் கட்டுரை, சிந்தனை புத்தகங்களை நம் மனதால் அல்லவா நமக்கு சொல்லிக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete