இரண்டு ஆண்டுகளுக்கு முன், மலையாளத்திலிருந்து தமிழுக்கு, தொடர்ச்சியாக நல்ல புத்தகங்களை, நல்லபடியாக மொழிபெயர்க்கவேண்டும் என்ற திட்டத்தை கிழக்கு பதிப்பகம் தொடங்கியது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறவில்லை. ஆல்ஃபா, சூஃபி சொன்ன கதை, பாண்டவபுரம், வைக்கம் முகமது பஷீர் (வாழ்க்கை வரலாறு) ஆகிய நான்கு மட்டுமே வந்தன.
இப்பொழுது சென்னை புத்தகக் கண்காட்சியின்போது ஐந்து புத்தகங்கள் வெளியாக உள்ளன. அவை:
1. புத்தபதம். எழுத்தாளர் ரவீந்திரன். மொழிமாற்றம் ருத்ர. துளசிதாஸ். புத்தர் பயணம் செய்த வழியில் அமைந்துள்ள புத்த ஆலயங்களுக்கெல்லாம் சென்று அந்த நகரங்களில் வாழும் மக்களின் பிரச்னைகளையும் சேர்த்து விளக்கும் நூல் இது.
2. காலச்சிற்பியின் கைகளில். எழுத்தாளர் வல்ஸலன் வாதுஸ்ஸேரி. மொழிமாற்றம் தி.சு.சதாசிவம். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். பல்வேறு அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட சமூகம் எத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யும் நாவல்.
3. தேடித்தேடி. எழுத்தாளர் ஸாரா ஜோசப். மொழிமாற்றம் தி.சு.சதாசிவம். திருச்சூரில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை எழுத்தில் பிரதிபலிக்கும் நாவல் இது. மாத்ருபூமியில் ‘ஒதப்பு’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த நாவல்.
4. உயிர்ப் புத்தகம். எழுத்தாளர் ஸி.வி.பாலகிருஷ்ணன். மொழிமாற்றம் வை.கிருஷ்ணமூர்த்தி. நாவல். மலையாளத்தின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர் பாலகிருஷ்ணன். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
5. வைசாகன் சிறுகதைகள். மொழிமாற்றம் டி.எம்.ரகுராம். மத்தியதர மக்களின் வாழ்க்கையை மிகவும் அழகான ஓவியமாகத் தீட்டியிருக்கும் வைசாகன் கேரளத்தின் மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளர். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
முந்தைய பதிவு: தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு
கவளம்
9 hours ago
உங்கள் பதிப்பகத்தில் பேப்பர் மற்றும் பைண்டிங் தரத்தை உயர்த்தினால் சந்தோசபடுவேன்,
ReplyDeleteமனிதனும் மர்மங்களும் என்ற புத்தகம் தனி தனி பபெரக வந்து விட்டது, கண்டிப்பாக பைண்டிங் கோளாறாக தான் இருக்கும், கவனிக்கவும்
நன்றி
எனது ப்ளாக்
வால்பையன்
Sarah has received Kalaignar Karunanidhi award this year. She is in Chennai now for receiving the award.
ReplyDelete