இன்று காலை செய்தித்தாள்கள் அறிவித்தன. தமிழகத்தில் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படும். இன்று மனைவியை சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்விக்கான நேரடி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். இன்றுதான் இந்த ஆண்டுக்கான பாடங்கள் ஆரம்பிப்பதாக இருந்தன. அதுவும் கிடையாது என்று அறிவித்தனர்.
தமிழக அரசுக்கு பயம். உளவுத் தகவல் வந்திருக்கவேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒருவிதக் கொந்தளிப்பு கடந்த சில வாரங்களாகவே இருந்து வந்துள்ளது. இது ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் மட்டுமே என்று சொல்வது மதியீனம். அந்த அளவுக்கு, இந்தக் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் வலுவானவை கிடையாது. பல ஊர்களிலும் கல்லூரி மாணவர்கள் பாடங்களைப் புறக்கணித்து, தெருவுக்கு வந்துள்ளனர். பல ஊர்களிலும் வக்கீல்களும் இதேபோல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இவை எதுவும் அரசியல் தலைமையின்கீழ் நேர்த்தியாக நடைமுறைத்தப்பட்ட போராட்டங்கள் கிடையாது; spontaneous-ஆக நடப்பதுதான் என்பது என் கருத்து.
இதில் முத்துக்குமார் தீக்குளிப்பு நிஜமாகவே கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது உண்மை. ஊடகங்களை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. இதுநாள் வரையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்றால், “புலி என்று சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள்” என்ற அபத்தமான அச்சம் தமிழக மக்களிடம் இருந்தது. ஆனால், இப்போது மக்கள் அந்தக் கட்டத்தைக் கடந்துவிட்டார்கள்.
போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளுக்கு உடனடி நிவாரணத்தைத் தரலாம். அது நல்லதா, கெட்டதா, இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்றெல்லாம் தமிழர்கள், இந்தியர்கள் யோசிக்கவேண்டிய தருணம் இதுவல்ல. நம் நாட்டுக்கு அருகில் லட்சக்கணக்கான மனிதர்கள் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில் குண்டுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டுள்ளனர். இதில் இலங்கை ராணுவத்தையும் விடுதலைப் புலிகளையும் மாறி மாறி, பிறகு குற்றம் சொல்லலாம். முதல் தேவை மக்கள் படுகொலையை நிறுத்துவது.
Collateral damage என்ற பெயரில் நடக்கும் படுகொலைகள் போதும். கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்து, மாணவர்கள் கொந்தளிப்பை அடக்கிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதற்குமுன், அம்மாதிரியான சிந்தனையைக் கொண்டிருந்த கட்சிகள், கண்காணாமல் போயுள்ளன.
இந்தியா நினைத்தால், இலங்கை போரை நிறுத்திவிடுமா என்று சிலர் கேட்கிறார்கள். அதை அடுத்து பார்ப்போம். இந்தியா மனதுவைத்து, போரை நிறுத்து என்று கேட்டு, இலங்கை மறுத்தால், அப்போது என்ன செய்வது என்று யோசிக்கலாம். இதுவரையில் இந்தியா அதைச் செய்யவில்லையே? தமிழக அரசும் அதைக் கேட்கவில்லையே? அதுதானே தமிழக மக்கள் பலரின் ஆதங்கத்துக்கும் காரணம்? முத்துக்குமார் தீக்குளிப்புக்கும் காரணம்?
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
புலிகளுடன் அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தியா இலங்கையிடம் கேட்டுக்கொண்டு இலங்கையில் வாழும் எல்லா தமிழ் மக்களையும் புலிகளிடம் கொடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். பிரபாகர்னின் கீழ் இருக்கும் போராளிகள் விடுதலை வீரர்கள். அவர்கள் ஈழத்தவரின் விடுதலைக்காக ஓயாது உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு இலங்கை ஈழத்தையும் ஈழத்தவர்களையும் கொடுக்க எல்லாவிதமான உதவிகளும் செய்யவேண்டும். எந்த ஈழத்தவராவது பிரபாகரனை விட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்திடம் வந்தால் அவர் கைது செய்யப்பட்டு பிரபாகரனிடம் ஒப்படைக்கவேண்டும். கருணா, டக்ளஸ் ஆகியோரை கைது செய்து பிரபாகரனிடம் ஒப்படைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, சந்திரிகா, ராஜபக்ச ஆகியோரின் உறவினர்களாக இருக்கும் தமிழர்களையும் இதே போல கைது செய்து பிரபாகரனிடம் ஒப்படைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கை தமிழர்களும் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களும் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பல்கலைக்கழகங்களிலும் மற்ற வேலைகளிலும் இருக்கும் எல்லா ஈழத்தமிழர்களும் கட்டாயமாக அந்தந்த நாட்டினரால் வேலை பிடுங்கப்பட்டு பிரபாகரனிடம் அனுப்பி வைக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
ReplyDeleteஅதே போல மும்பையில் பயங்கரவாதம் செய்த பயங்கரவாதிகளுடனும் இந்திய அரசு போரிட்டு அவர்களை கொன்றதை கண்டிக்கிறேன். அவர்களுடன் அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும். அவர்கள் இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பினால் அதனை அவர்களுக்கு செய்து தரவேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானின் அடிமை நாடாக ஆக்க விரும்பினால், அதற்கும் அவர்கள் கோரிக்கை படி நடந்து பாகிஸ்தானின் அடிமை நாடாக எழுதித்தரவேண்டும். அவர்களை கொல்லக்க்கூடாது. அது இஸ்லாமியர்களது உரிமைகளை பறிப்பதாகும். எவ்வளவு சிறிய சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதால், இந்தியாவிலுள்ள எல்லா சமூகத்தினருக்கும் தனி நாடு கொடுக்க ஆவன செய்யவேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் தனி நாடு கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் வாழும் கன்னடத்தினருக்கு தனி நாடு கொடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் வாழும் வன்னியர்களுக்கு தனி நாடு கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் கோமுட்டி செட்டிகளுக்கும் தனி நாடு கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் இலப்பை முஸ்லீம்களுக்கு தனி நாடு கொடுக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் வாழும் உருது பேசும் முஸ்லீம்களுக்கு தனி நாடு கொடுக்கப்படவேண்டும். தமுமுகவுக்கு ஒரு தனி நாடும், தவ்ஹீத் ஜமாத்துக்கு ஒரு தனி நாடும் கொடுக்கப்படவேண்டும்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அவர்கள் அப்பாவிகளை கொல்வது பற்றி யாரும் பேசக்கூடாது. உரிமைப்போராட்டத்தில் அப்படி சில கொலைகள் நடப்பது இயல்பானதுதான் என்று எல்லோரும் பேசவேண்டும். அவ்வாறு கொலைகள் செய்வது தவறு என்று பேசுபவர்கள் உடனே கொளுத்தி கொல்லப்படவேண்டும். இல்லையேல் முத்துக்குமார் போல இஸ்லாமியர்களும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். ஆனால், எந்த உரிமைப்போராளிகளையும் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ கொல்லக்கூடாது, அவர்கள் பொதுமக்களையும் கொல்லக்கூடாது. அது மிகவும் தவறானதாகும் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.
புலிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் ஆகியோர் இந்திய போர்வீரர்களையும் இலங்கை போர்வீரர்களையும் போலீஸையும் அப்பாவி பொதுமக்களையும் கொல்ல எல்லா உரிமையும் உள்ளது என்பதை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன்.
வாழ்க புலிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நக்ஸைலைட்டுகள்.
ஒழிக அரசாங்கம், ஒழிக பொதுமக்கள்
இந்தியா நினைத்தால், இலங்கை போரை நிறுத்திவிடுமா என்று சிலர் கேட்கிறார்கள்.//
ReplyDeleteஇப்போ இலங்கையே நினைத்தாலும் இந்தியா போரை நிறுத்தாது என்ற யதார்த்தத்தை ஏன் புரிய முடியவில்லை?
Leadership while governing is about taking the long view and communicating it in a politically effective manner to its people. On this issue, the Indian governments (both state and central) have (correctly, in my opinion) taken the long view but have failed miserably in communicating it effectively to its people.
ReplyDeleteYou are right in saying that the situation in TN is in a state of boil; the angry people have been further enraged by the self-immolation incident. TN govt is correctly scared about the situation. There is nothing wrong about that, nothing to be shameful about.
I agree with Srikanth. Both the govt. are taking longterm view. In an emotionally charged atmosphere, they have failed to communicate properly. This situation has arisen due to ambivalnt position of state govt. in initial stages. They should have catagorically said that they are trying to neutralise LTTE.Every politician knew about it but played with people's sentiments for their own gains.
ReplyDeleteAtleast the present uprising should sanitise TN politics.
TN govt has done the right thing by closing colleges and hostels. We know what kind of propaganda the LTTE stooges will indulge in and around the campuses. It is very important to protect impressionable minds from these terrorist stooges.
ReplyDeleteஎல்.டி.டி.இ ஒரு பயங்கரவாத இயக்கம் என்று 16,000 பேர் தெருவுக்கு வந்து கோஷம் எழுப்பியுள்ளார்கள். யார் அவர்கள்? சோவை படிக்கும் வாசகர்களா? தமிழ் நாட்டில் வாழும் தமிழ் எதிரிகளா? ஜெயலலிதா கட்சிக்காரர்களா?
ReplyDeleteஇல்லை. இலங்கைத் தமிழர்கள்.
கேடயங்களாக வைத்துக்கொள்ள பொதுமக்களைக் கடத்திச் சென்றுள்ள விடுதலைப் புலிகள், அவர்களை விடுவிக்கவேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால், ஆயுதம் ஏந்தாத அப்பாவி பொதுமக்கள் அழிந்தாலும் பரவாயில்லை. தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதுவதும், பேசுவதும், புத்தகம் வெளியிடுவதுமாகச் சிலர் இருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், பத்ரி?
விடுதலைப் புலிகள், அப்பாவித் தமிழர்களைப் பகடைகளாக, தங்களுடைய பாதுகாப்பு அரண்களாக வைத்திருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. அப்படிச் செய்யும் புலிகள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
ReplyDeleteThe pretension that LTTE is holding civilians is false. Lack of real information on the ceylon issue is the main problem. The civilians are kinsman of the LTTE fighters who are fighting or have fought and died. Most of the tamils in these areas support LTTE. Even in 2005 elections in North ceylon, tamil MPs who have won consistently, are supporters of LTTE. In addition, if you survey ceylon tamils (in and out of ceylon) LTTE will emerge as a sole representative (exactly like how Hamas was successful in Palestine). I've personaly seen the recent protest in London (and other EU countries) where the majority of Ceylon tamils live. Most of them I met, believe that LTTE are the only one who can protect them against srilankan troops. The propaganda against LTTE is mainly by srilankan and our indian intelligence. When you assess history in the real chronological sense, you can then understand why and how LTTE type of independence movements choose extremist response. Only when there is relative peace, other political organisations will emerge from within the tamil people and will continue to thrive. You must also note that during in the 1990's and 2002-2005 ceasefire, they were able to establish civilan administration. For those who are keeping a longish view! in a suitable circumstances like that happened in East Timor, Kosova, Cuba, Ireland, or even USA, Tamil Eelam will also become an independant nation.
ReplyDelete1) 'India should not intervene because srilanka is a soverign nation' - Agree, they should stop funding, sending troops and guiding the srilankan government in this war.
2) '16000 srilankan tamils marched against LTTE' in Jaffna - you may have forgotten to notice that ten or twenty times more Eelam tamil refugees worldwide marched against srilankan government and also note that there are more than 100,000 people in Jaffna alone. They all support LTTE whether you like it or not. I suppose you have not spoken with tamils or visited Jaffna yourself. Jaffna is an open prison - food, medicine or any other goods are rationed and anyone expressing free opinion are killed by govt troops.
3) Most fellow Indians in the blogs do not understand the situation because they have not seen or spoken with suffering ceylon tamils. As Noam Chomsky described 'indoctrinated minds'.
sl army chief statement is saying only 1000 ltte are there . civillians are 2.5 laks or 1.2 lakhs .by un and army .civillians known they will die if the live there because of army boming by tanks and air striks. and now the question . any best psycologist will accept will accept this .1000 it preventing 2.5 or1.2 lakhs in this sitivation and important thing is ltte is fighting against 50,000 sl army persons. and any army will use tanks airforce navy and 50000 army men to kill 1000 so called terrarist
ReplyDelete//...இதுநாள் வரையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்றால், “புலி என்று சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள்” என்ற அபத்தமான அச்சம் தமிழக மக்களிடம் இருந்தது....//
ReplyDeleteதமிழக மக்கள் அல்லை கருணாநிதி என்று சொல்லுங்கள்!
சுழியம்,
//..எல்.டி.டி.இ ஒரு பயங்கரவாத இயக்கம் என்று 16,000 பேர் தெருவுக்கு வந்து கோஷம் எழுப்பியுள்ளார்கள். யார் அவர்கள்? ..//
நீங்கள் யாழ்ப்பானத்தில் நடந்த ஊர்வலத்தை தானே சொல்கிறீர்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது உறவினர் இதைச்சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார். யாழ்ப்பானத்தில் இராணுவமும் ஈபிடிபி யும் வந்து அறிவித்தல் விடுப்பார்கள் வேலையற்றவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று. பின்னர் ஈபிடிபியின் அலுவலகமான ஸ்ரீதர் படமாளிகைக்கு வரும்படியும் அங்கு நியமனப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும். பின்னர் எல்லோருடைய புகைப்படங்களும் வீடியோவும் எடுக்கப்படும். அதன்பின்னர் ஊர்வலம்...புலிஎதிர்ப்பு கோசம்...இன்னும் பல!
அறுபதுகளில் இளைஞர்களின் எழுச்சியை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, பதவிக்கு வந்த சில மாதங்களில், மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என விதிமுறைகளை இயற்றியது. ஆட்சியின் இனிப்பில் யதார்த்தம் கசக்க தான் செய்யும். ஆனால் தீயை வெறும் போர்வையால் அணைக்க முடியாது. இன்று பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள் என்பது கடைசி செய்தி.
ReplyDeleteGiving our voice and support to SL Tamils is must. We should send lots of aid for the innocent SL Tamil people suffering because of war.But closing our Educational Institutions indefinitely is a disaster. Emotions are running high and TN Students are becoming the victims of LTTE propaganda. This is not going to help the innocent SL Tamils in anyway and SL govt would be happy to find TN people putting mud on their own head by destroying their own property and education.
ReplyDelete