Friday, February 13, 2009

NHM இணையப் புத்தகக்கடையில் இனி தபால் செலவு கிடையாது*

இணையத்தில் புத்தகம் வாங்குவதில் பலருக்கும் உள்ள பெரும் பிரச்னை, புத்தகத்தை அனுப்புவதற்கான தபால் செலவு.

சென்னையிலிருந்து நாங்கள் புத்தகத்தை அனுப்புவதில், சென்னைக்கு ஒரு செலவு, சென்னைக்கு வெளியே தமிழகத்துக்கு ஒரு செலவு, இந்தியாவின் பிற இடங்களுக்கு ஒரு செலவு. மஹாராஷ்டிராவில் அல்லது டில்லியில் அல்லது அசோமில் இருப்பவர்கள் இதனாலேயே அதிகம் புத்தகங்கள் வாங்குவதில்லையோ என்றுகூட நான் நினைப்பதுண்டு.

புத்தகம் ரூ. 60, தபால் செலவு ரூ. 25 என்றால், வாங்கும் யாருமே கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் விபிபி போன்ற முறையிலும் பிரச்னை. குறைந்தது ஒரு புத்தகத்தை அனுப்புவதற்குக்கூட ரூ. 25 அதிகம் செலவாகிறது.

இதற்காக, ஒரு புது முறையைப் புகுத்தியுள்ளோம். இந்தியாவின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, குறைந்தபட்சம் ரூ. 250-க்குப் புத்தகம் வாங்குபவர்களுக்கு, தபால் செலவு முழுவதும் எங்கள் பொறுப்பு. (* ரூ. 250-க்குக்கீழ் வாங்கினால் தபால் செலவு உண்டு என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.)

இந்த முறையை இரண்டு நாள்களுக்குமுன் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

NHM புத்தகங்களை வாங்குவதற்கான முகவரி: http://www.nhm.in/ அல்லது http://www.nhm.in/shop/

இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு இதே வசதியைத் தரமுடியாத நிலையில் உள்ளோம். ஆனால், அவர்களுக்கும் தபால் செலவை வெகுவாகக் குறைத்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள்.

21 comments:

  1. வாழ்த்துக்கள் பத்ரி!
    இது நிச்சயம் ஒரு முக்கியமான முடிவுதான்!
    ஒரு வாடிக்கையாளனான எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியே!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  2. அப்படியே வெளிநாட்டுக்கும் அனுப்புற வசதிய கொண்டு வாங்க பத்ரி!

    ReplyDelete
  3. வெளியூர்காரர்களுக்கு நல்ல செய்தி பத்ரி.

    வாழ்த்துக்கள்.

    "மாயவலை" வந்துவிட்டதா..??

    என்ன மாயமா இருக்கே..??

    ReplyDelete
  4. மாயவலை வந்துவிட்டது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்:-) சாரி... முன்னமே பதில் சொல்ல மறந்துவிட்டேன்.

    ReplyDelete
  5. ஐரோப்பாலேந்து ஆர்டர் பண்ணினா
    airpost
    surface
    போஸ்ட் வந்துசேர கிட்டத்தட்ட எவ்வளவு நாள் ஆகும்ன்னு ஒரு guideline கொடுத்தா வசதியா இருக்கும். offcourse, i know that you can't really tell the exact no of days but still it would help us to decide the mode if you can enquire and let us know approximately the number of days it takes.

    ReplyDelete
  6. //இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு இதே வசதியைத் தரமுடியாத நிலையில் உள்ளோம்//

    :-((


    //ஆனால், அவர்களுக்கும் தபால் செலவை வெகுவாகக் குறைத்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள். //

    பார்க்கிறேன்... :-))

    ReplyDelete
  7. புத்தக விற்பனை 'தபால்' என்று சரிந்துவிடாமல் இருக்கத் தபால் செலவை நீக்கியுள்ளீர்கள். நல்ல முயற்சி.

    ReplyDelete
  8. உண்மையில், பல நல்ல புத்தகங்களை வாசகர் கையில் சேர்க்க வேண்டும் என்றி எண்ணத்தில் நூதனமான முயற்சிகளை கி.ப மேற்கொண்டு வருகிறது. வாழ்த்துகள்.

    - சென்னைத்தமிழன்

    ReplyDelete
  9. கிழக்குப்பதிப்பகத்தின் 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' பத்தகத்தின் விமர்சனம் எனது வலைப்பூவில் பதிந்துள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படிக்கவும்.

    --
    சென்னைத்தமிழன்
    please visit www.ammaappaanbu.blogspot.com

    ReplyDelete
  10. மணிகண்டன், கடல் வழியாக புத்தகம் அனுப்பும் முறை இந்திய அஞ்சல் துறையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. 1.1.2009முதல் இதனை ரத்து செய்திருக்கிறார்கள். இதனால் வான் அஞ்சலில் மட்டுமே அனுப்ப இயலும். வான் அஞ்சலில் 15லிருந்து 30 நாள்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கலாம். அதற்கு முன்னரும் கிடைக்கலாம். அதற்குப் பின்னரும் கிடைக்கலாம். :-)

    ReplyDelete
  11. பத்ரி:சில வருடம் முன் கிழக்கு மட்டும் அல்லாமல் அனைத்துப் புத்தங்களும் காமதேனுவில் வாங்க முடிந்தது.அந்த வசதி நிறுத்தப்பட்டதில் வறுத்தமே. ஒரே இடத்தில் வாங்கினால் ஒரே தபால் செலவுதான்.அதனால் ஆங்கிலப் புத்தங்களோடு சேர்த்து கிழக்கின் புத்தகங்களும் இண்டியாபிளாசாவில் வாங்க வேண்டியுள்ளது. அங்கேயும் நான் வாங்க நினைக்கும் கிழக்கின் அனைத்துப் புத்தகங்களும் இல்லை :(.இப்போது வேறு பதிப்பகப் புத்தகங்களை ஒரு இடத்திலும்..ஆங்கிலப் புத்தகங்கள் இண்டியாபிளாசாவிலும்..கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களை ஒரு இடத்திலும் வாங்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  12. When we select he courier.Can you provide the tracking details?I already ordered anyway.

    Thanks
    Senthil

    ReplyDelete
  13. Additionally you can try what Amazon.com has done with its prime.

    ReplyDelete
  14. இலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!
    http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_14.html

    ReplyDelete
  15. Correct, sometime back in nhm.in, selected books for Rs.2000, after seeing shipment charges, dropped the plan.

    ReplyDelete
  16. Mr. Badri : Just read LTTE book written by maruthan. Excellent book. I have asked my friends at Norway to purchase LTTE copies for distribution and propaganda purposes. Maruthan is rightly supporting the tamil cause. Heard it was banned in India for short time. Alas! Such books are the need of the time. Jacob/Norway

    ReplyDelete
  17. Is it possible to download the Audio book from online?.

    Thanks
    Senthil

    ReplyDelete
  18. Senthil
    Try Audible.com to buy audio books online!

    Regards
    Venkat

    ReplyDelete
  19. பிரசன்னா சார், ரொம்ப நன்றி.

    ReplyDelete
  20. // இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு இதே வசதியைத் தரமுடியாத நிலையில் உள்ளோம். ஆனால், அவர்களுக்கும் தபால் செலவை வெகுவாகக் குறைத்துள்ளோம்.//

    நண்பனுக்கு இரண்டு புத்தகம் அனுப்பலாம்னு கொரியல கேட்டா 700 சொன்னாங்க.நம்ம சாதா போஸ்டல 450Rs.ஆனா புத்த்கத்தோட மொத்தவிலை 210 ருபாய்.
    என்னத்த சொல்ல
    இலவசம் வேண்டாம் கொஞ்சம் செலவு கம்மியாவுர மாதிரி பாருங்க போதும்.

    ReplyDelete
  21. i tried to use my Bank Account tis failure .

    HDFC bank link was changed kindly check.FInally i was used my CC

    Thanks
    K

    ReplyDelete